Tuesday, August 23, 2011

கருணை புரிய தருணமிதுவே!


 வணக்கம். நான் உங்கள் பாசத்துக்குரிய மயில்ராவணன் பேசுகிறேன். ஒரு உதவி.
தெருக்கூத்து கலைஞர்களுக்கு 'Mobile, Portable Stage' ஒன்று தயார் செய்து தரலாமென்று நண்பர் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் பிரியப்படுகிறார். போலவே அவர்களைப் பற்றிய குறும்படமும் தயார் செய்யணும்னு சொல்றார். ஹரி ரொம்ப காலமாகவே தெருக்கூத்து கலைஞர்களுக்காகவே கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர். எனக்கு கடந்த 5 வருஷமா நல்லாவே தெரியும் அவரை. அதனால் உங்களால முடிஞ்ச தொகையை அனுப்பி உதவுங்க


அம்மாபேட்டை கணேசன் அவர்களை வைத்து எடுக்கும் ஆவணப்படத்திற்கு விதைத்தவசம் என்று தலைப்பிட்டிருக்கிறேன். நேற்று நானும் தனபாலும் கால்கட்டு அவிழ்க்க அந்தியூர் சென்று வந்தவரை பார்த்து வரலாம் என்று போயிருந்தோம். செல்லச்சொக்கு போட்டிருந்தார், கால் வலி தாளாமாட்டாதவராய். கொஞ்சம் மனவருத்தமும் கூட... பக்கத்து வீட்டு அம்மையிடம் சோமாரக் கெழமையென்ன படம் புடிக்க சீனீமாக்கார பசங்க வராங்க என்று பெருமை பீற்றிக் கொண்டார் போல . அந்த அம்மைக்கு கொஞ்சம் வாய் சாஸ்தி. கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வையிங்கறாப்பல இருக்கப்பட்ட மொகரக்கட்டைங்கள வுட்டுட்டு இந்த நடையழகனத்தாம் படம் புடிக்க வர்றாங்களா? என்று ஏவிடியம் பேசிவிட்டாளாம். எலும்பு கூடி நட வந்து நானும் வேசம் போட்டு ஆடறனோ இல்லியோ லட்சம் உரூவா செலவானாலும் போச்சாது! எம்மூஞ்சி எதுனாச்சிம் உள்ளூரூரு சினிமாக்கொட்டாயில தெரியாட்டி போவுது கலைஞரு குடுத்த பொட்டியில வர்ற மாதிரியாச்சும் ஒரு ஏப்பாடு பண்டிவுடு என்றவரை கண்கரிக்க பார்த்திருந்தேன். கோரியபடிக்கு ஒரு சில இடங்களில் உதவிக்கரம் நீண்டிருக்கிறது. கையிருப்பு போக நிதியாதாரம் இன்னும் தேவையிருக்கிறது. அந்த ஏழைக்கலைஞனின் ஆவலை நிறைவேற்ற அன்பர்களே 
ஆவணப்பட த்திற்கு பண உதவி செய்வதைக் குறித்து மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள் .


கண்ணனாக கனகராஜ் வாத்தியாரும் துரியனாக அம்மாபேட்டை கணேசன் அவர்களும் சந்திக்கும் காட்சி.
அபிமன்னன் சுந்தரி கல்யாணம் : கூத்து.


உதவி செய்ய தொடர்புக்கு: ஹரிகிருஷ்ணன் - 9894605371


M.Harikrishnan,
Account no: 534323956
Indian Bank,
Mecheri. 636451

Micr Code : 636019092
IFSC Code: IDIB000M025


உதவி செய்ய நினைப்பவர்கள் மேற்கண்ட இந்தியன் வங்கி எண்ணுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டுகிறேன். ICICI அல்லது HDFC அக்கவுண்ட் வேண்டுவோர்க்கு என் அக்கவுண்ட் விவரங்கள் தனிமெயிலில் அனுப்பி வைக்கிறேன்.


பின்குறிப்பு:
   உதவியவர்கள் எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்தால் நான் ஹரிகிருஷ்ணனிடன் சொல்லிடறேன். எல்லோர்க்கும் நன்றி.

2 comments:

Chitra said...

வணக்கம், சார். பதிவில் எழுத்துக்கள் மிகவும் பொடிதாக இருப்பதால், வாசிக்க சிரமமாக இருக்கிறது. பலரை சென்றடைய வேண்டிய செய்தி என்பதால், தெரியப்படுத்தினேன்.

யோகி ஸ்ரீராமானந்த குரு said...

அய்யா.. மயிலு.. நல்லாதானே இருந்தீய? இப்டி எலக்கியவாதிகளோட சேர்ந்து கெட்டுப் போய்டீயலே.

என்ன எழவ எழுதியிருக்கீங்கன்னு ஒன்னியும் புர்ல.