இவரு நம்ம தோழர் மற்றபடி எந்த சங்கத்திலயும் இல்ல. ரொம்ப நல்லபய ...வயசுக்கு மீறின பொறுமை,தெளிவு எல்லாமுண்டு..என்ன 12மணிநேரம் போதாது தம்பி தூங்குனா...'அமர்க்களம்' அஜித் கணக்கா யாராவது எழுப்புனா பறந்து பறந்து திட்டுவாப்ள....அம்புட்டுதேன்....மண்டய உடைச்சி மூளையப் பிராண்டுற மேட்டரெல்லாம் எழுதுவாப்டி.....போய்ப்பாருங்க அவிங்க ஏரியாவுக்கு.........
http://Gokul.tech.officelive.com
Thursday, March 26, 2009
ராசாவும் ராசாபொண்டாட்டியும்
----மயில்ராவணண் ------
கதை கேட்டு , கதை படிச்சி, கதை சொல்லி வளந்தவங்க நம்ப சனங்க. அதுக்கு தக்கன இந்த ராசா ராணி கதைங்க நம்ளோட ஊரு பக்கம் ஜாஸ்தி. நம்ம சரக்க அதுலயே ஆரம்பிக்கலாமுனு ஒரு நெனப்பு. முன்னயே சொன்ன மாதிரி எங்கப்பார கத சொல்ல சொல்லி விடிய விடிய கேக்களாம். நானொரு கதை நாட்டுப்புறகத எழுதிப்போட்டிருக்கேன். படிச்சிப் பாத்துப்புட்டு ஒரு வாய் பேசுனீங்கன்னா வக்கனையா இருக்கும். செரி கதக்குள்ற போவோம்.....

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். ரொம்ப நல்ல மனுசன். வேட்டைக்குப் போறதில
ரொம்ப இஷ்டம். இரண்டு வாரத்துக்கு ஒருக்கா வில் அம்ப தூக்கிக்கினு கெளம்பிருவாராம்.
அந்த ராஜாவுக்கு ஒரு சாபம் இருந்தது. அது என்னன்னா நம்ம சிரிப்பு நடிகர் விவேக்கு ஒரு படத்துல விலங்குகள் பேசுறது எல்லாம் அவர் காதுல விழும் அதே மாதிரி நம்ம ராஜாவுக்கும் பறவைகள், விலங்குகள் பேசுறது எல்லாம் அவருக்கு விளங்கும், ஆனால் அதை வெளியே யாருகிட்டயாவது சொன்னாருன்னா அடுத்த நிமிஷம் மண்டை சுக்குநூறா வெடிச்சிரும்.
ஒருக்கா அப்பிடி காட்டுக்கு வேட்டைக்கு போகும்போது ராணியையும் கூட்டிக்கிட்டு
போனாராம். வேட்டையாடுற மும்முரத்தில பொழுது சாய்ந்ததை ரெண்டு பேருமே கவனிக்கல. சரி அது ஒரு பிரச்சனையானு அங்கேயே ஒரு குடில் கட்டி ராத்திரி தங்கினார்கள்.
ஆளுக்கு ஒரு கட்டில் போட்டு படுத்திருந்தாங்க. நடுராத்திரி 12 மணியிருக்கும், சிற்றெறும்புக்கூட்டம் ஒன்னு சாரை சாரையாக அந்தப்பக்கம் சென்றது. ராஜா படுத்திருந்த
கட்டில் காலில் முட்டி முதல்ல போன எறும்பு நின்றுச்சு. அது “வக்காளி ராஜா கட்டில
நடுவுல போட்டு படுத்திருக்கான்”னு சொன்னுச்சாம். அதுக்கு அதோட ப்ரெண்ட் எறும்பு
“ ஒரு முட்டு முட்டி தள்ளிவிட்டுவிட்டு போய்கிட்டேயிரு ”னு சொன்னுச்சாம்.
இதைக்கேட்டுக்கினு படுத்திருந்த ராஜா உடனே எழுந்து அவர் கட்டிலைக் கொஞ்சம்
தள்ளி போட்டுக்கொண்டாராம். அதைப் பார்த்துவிட்டு மற்றொரு எறும்பு “ராஜாவே பயந்து
நமக்கு வழி விட்டுட்டாராரு பாரு” னு சொன்னுச்சாம். இதைக்கேட்டு ராஜா வாய்விட்டு சிரிச்சுட்டாராம். (அங்கேதான் ஸ்டோரில டிவிஸ்ட் வெச்சிருக்கோம்!!)
அடுத்த வினாடி ராணி எழுந்து சம்மணக்கால் போட்டு உக்காந்துக்கிட்டு “ என்றா மாப்ள இந்நேரத்தில யாரு உன் சின்னவூட்ட நெனச்சுதான சிரிச்ச?னு கேட்டாளாம்.அதுக்கு ராஜா
ராணி பொம்பளையாச்சே . . . . விடுவாளா? “இந்த நிமிஷமே சொல்றா புருஷான்”னு
பிரச்சனைப் பண்ண ஆரம்பிச்சிட்டாளாம். இரவு மணி 2 ஆச்சு..5 ஆயிருச்சு..
திரும்பத்திரும்ப அதேக் கேள்வியேக் கேட்டுக்கொண்டிருந்தாளாம்.என்னடா இது,
” மலந்தின்ன வந்த நாயி மானியக்கடிச்சாப்ல”னு நெனைச்சுக்கிட்டு “ இதோ பாருடி நான்
உண்மையானக் காரணத்தைச் சொன்னால், என் தலை வெடிச்சு சிதறிடும்..
பரவாயில்லையா?”னுக் கேட்டாராம். அதுக்கு ரானி “நீ செத்தாலும் பரவாயில்லை, ஏன் சிரிச்சேனு சொல்லு” என்றாள்.
ராஜா விதி வலியதுன்னு நெனைச்சுக்கிட்டு சின்ன சுள்ளிகள்,விறகு, காய்ந்த சருகு எல்லாம் பொறுக்கியெடுத்து சிதை மாதிரி தயார் செய்து நடுவில் சென்று உட்கார்ந்தாராம்....
அந்தக் குடிசைக்குப் பக்கத்தில் ஒரு பாழுங்கிணறு இருந்தது. அதனருகே ஒரு ஜோடி செம்மறியாடு மேய்ந்து கொண்டிருந்தது. அதில் பெண்ணாடு உள்ளே எட்டிப்பார்த்து,” என்னங்க கிணத்துக்குள்ளாற நல்ல பச்சைப்புள்ளாயிருக்கு, நிறைய இருக்கு பறிச்சிக் கொடுங்க” என்று சொன்னது. ஆணாடு எட்டிப்பார்த்துவிட்டு, “ ஏண்டி வனம் பூரா எவ்ளோ புல்லிருக்கு, வா அதையெல்லாம் போய் சாப்பிடலாம். இதைப்பறிக்கும்போது கிணத்துக்குள்ளாற விழுந்தாலும் விழுந்துடுவேன்....மேலே எறிவரவும் வழி இல்லை, உள்ளேயேக் கிடந்து சாக வேண்டியதுதான்” என்று சொன்னது.
அதைக்கேட்ட பெண்ணாடு “எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை, அந்தப்புல்லுதான் வேணும்” என்றது. ஒரு நிமிடந்தான் தாமதம்....ஆணாடு சினத்துடன் “ஏண்டி அந்தப்புல்ல பறிக்கப்போயி என்னுயிரேப் போனாலும் போயிருமினு சொல்றேன், அதக்காதுல வாங்காம ...அந்தப் புல்லுதான் வேனுங்கிற..என்னை என்ன பொண்டாட்டி பேச்சைக் கேட்டு உயிரை விடப்போறானே அந்த முட்டாப்பய ராஜான்னு நெனைச்சியா?”னு கேட்டுக்கிட்டே ரெண்டு முட்டு முட்டுச்சாம் சரியானபடிக்கு..பெண்ணாடு ஒட்டம் எடுத்திருச்சாம்.
அதைக்கேட்ட ராஜாக்கு அப்பதான் புத்தி வந்துச்சாம், “ எவ்ளோப் பெரிய தவறு செய்ய இருந்தோம்....ஆட்டுகுட்டிக்கு இருந்த அறிவுகூட நமக்கு இல்லையே”னு சொல்லிகிட்டே ராணிக்கு ரெண்டு குடுத்தாராம் செவில்ல....சிவ சிவா....

Monday, March 23, 2009
Eternal Love
இலக்கியத்துக்கும் எனக்கும் தீராக்காதல், காரணம் எங்கப்பா. எங்க அப்பாரு ஒரு அறிவுஜீவி..அடிப்படையில் அவர் ஒரு கம்யூனிஸ்ட்....இளமைக்காலங்களில் ரொம்ப தீவிரவமாக கட்சிப்பணிகளிலெல்லாம் ஈடுபட்டிருந்துருக்காரு. வயசாக ஆக வெவரம் ஆயிட்டாரு( திராவிட கட்சில இணைச்சிக்கிட்டாரு !!!!).நிறையப் புத்தகங்கள் படிப்பார், அதனூடாக சிந்திப்பார்.. என்னுடைய ஹீரோ, பிலாசபர், ப்ரெண்ட், கடவுள் எல்லாம் எல்லாமே எங்கப்பாதான். அதனாலேயே என்னவோ ‘வாரணம் ஆயிரம்’ படம் என்னை வெகுவாக கவர்ந்தது.
இன்னொரு முக்கியமான விசயம் எங்கவூடு பூரா புத்தகங்களா இருக்கும். பலதரப்பட்ட பொய்தவங்களும் இருக்கும் ‘கனையாழி’ பழைய இதழ்கள் பைண்ட் பண்ணி வெச்சிருப்பாரு, ‘தாமரை’ இதழ்கள், ருஷ்ய மொழிபெயர்ப்புகள், நாவல்கள், சிறுகதைகள் இப்பிடி நிரம்பக் காணலாம்.
எனக்கு இப்பவும் என்ன பயம்னா- எங்கப்பா என்னய வளர்த்த அளவிற்கு நான் எம்புள்ளைகளை வளர்க்க முடியுமானுதான். ?!! எங்கப்பா அடிக்கடி சொல்ற வார்த்த “ கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை”. அவர் இளம்வயசில செலவுக்கு காசில்லாம ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு. அதனாலேயே நான் கேட்டது எல்லாம் , சில சமயம் கேட்காததுங்கூட வாங்கிக் குடுப்பாரு. எங்கூர்ல தீவாளி, பொங்கலுக்கெல்லாம் சபாரி சூட் போட்டுக் கொண்டாடுறவங்கெ நானும் என் தம்பியுந்தான்.
எங்கப்பாவைப் பத்தி எழுதனும்னா தனியா ஒரு ‘ப்ளாக்’ போடலாம். . . . அவ்ளோ விசயங்கள் இருக்கு ’அப்பா காவியம்’னு தனியா ஒரு பதிவு(நாவல்) எழுதனும்னு மனசுல ரொம்ப நாளா ஒரு அவா.....’எடெர்னல் டிசைர்’ இருக்கு.
வரும் நாட்களில் என்னோட நண்பர்களோட படா படைப்புகள போட்டு தம்பட்டம் அடிச்சி தமிழுலகத்துக்கு சேவை செய்யலாம்னு இருக்கோம். . . இன்ஷா அல்லா....

எல்லோருக்கும் நமஸ்காரம்...
‘Blog’ போட்டாச்சி....ஏதாவது எழுதலாமுனு உக்காந்தேன்....’அம்பட்டன் ஊட்ல மசிரிக்கு பஞ்சமான்ற’ மாதிரி எங்கூட்ல பேப்பர், பேனாக்கு பஞ்சமே இருக்காது..ஆனா பாருங்க நேத்து எழுத பேப்பரே கெடைக்கல, அப்புறம் பழய நோட்டுபொய்தவத்துல படக்கினு நாலு தாளப்பிச்சி பேனாவையும் நீக்கிட்டு குந்துனா என்னா எழுதுறதுனு மண்டைக்குள்ள
இடி இடிக்குது....
காதல் கீதல்னு ஏதாச்சும் பற்றி பத்தி எழுதலாம்ண்டா பெரிய அழுவாச்சி காவியமாயிப் போயிரும்.அம்புட்டும் ஒன்சைடு ஆம்லெட் மாதிரி ஒருதலைக்காதல்.....கவிதையும் இருநூறு கிலோமீட்டர் தூரத்திலய நிக்கும்...ஆனா நான் படிச்ச நல்ல கவிதைகள் எம்பட வலைப்பதிவுல நிரம்ப பார்க்கலாம்... பொறந்த இடம், படிச்ச காலேஜி பத்தி எழுதலாம்..ஆனால் அங்க புடுங்கன ஆணியெல்லாமே வேஸ்ட் ஆணிங்கிறதால அந்த பகுதி ஒத்து.....
ப.பி (படிச்சதில பிடிச்சது) , பா.பி (பார்த்ததில பிடிச்சது) , கே.பி (கேட்டதில பிடிச்சது) அப்பிடினு ஜல்லியடிக்கத் தனித்திறமை வேனும்.... வாசிக்கக் கூட்டம் வேனும். பொறவு என்னத்த எழுவுறது? ஏதாச்சும் மனசுக்கு பிடிச்சத, தெரிஞ்ச மனுஷமாருங்களைப் பத்தி பதிவு பண்ணப்போறேன். (வெளங்குனுச்சு...... அவிக நல்லவிக, இவிக கெட்டவிகனு அவுக்க போரீகளான்னு கேக்குறது காதுல விழுது....) அப்பிடி எல்லாம் இந்த டமில் கூறும் நல்லுலகத்தை விட்டுருவேனா?
எனக்கு நண்பர்கள் வட்டம் கொஞ்சம் பெருசு....அதனாலேயே பிரச்சனைகளும், ....‘ வாத்தியார் புள்ள மக்குனு’ யாரோ சொன்னத நிரூபிச்சவுக நாங்க..! எல்.கே.ஜி லேருந்து பத்தாப்பு வரை பர்ஸ்ட் ரேங்கு. . . . அதுக்கப்புறம் எல்லாமே ராங்கு......!?.அதுக்கப்புறமும் ஒரு கான்வென்ட் சாரி சாரி காலேசிலப் படிச்சு பட்டம் வாங்குனா என் தந்தை முதுகலையும் அவத்திக்குள்ளயே படிச்சாத்தான் பணம் கட்டுவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாப்ல. . . . மறுக்கா ரெண்டு வருஷம் தஞ்சாவூர்லயே படிச்சுப்போட்டாச்சு.
அப்பாடி ‘இடைவேளை’ போட்டாச்சு.... பொட்டிப்படுக்கைய கட்டிக்கிட்டு சிங்காரச்சென்னைக்கு ரெயிலேறியாச்சு. அமெரிக்காவுல ரெட்டைக்கோபுரத்தில குண்ட போட்டாங்கன்னு சொல்லி எங்கள (2002ல படிப்பு முடிச்ச நல்விங்க!!) எந்த கம்பெனியும் உள்ளே சேர்க்கல.....என்னடா இது அதிர்ஷ்டம் கூரியர்ல வந்தா தரித்திறியம் தந்தில வருதேனு நெனைச்சுக்குனு ஊட்டிக்கு வேலைக்கு போனேன்..... அப்புறம் ஒரு வருஷம் இன்பமா ஒடிச்சி.....இப்போ சென்னைல மென்பொருள் கம்பெனில துன்பமாப் போவுது. . . ஸ்டாப். . .
மயில்ராவணன்...
Subscribe to:
Posts (Atom)