Wednesday, June 16, 2010
அகநாழிகை - படைப்பிலக்கியத்தின் தனித்துவக்குரல்
அகநாழிகை ஜூன் இதழ் வழமை போலவே நல்ல காத்திரமாக வந்துள்ளது. வாசுவின் தலையங்கமே நமக்கு பல விசயங்களை சொல்லாமல் சொல்லி செல்கின்றது.ரொம்ப அருமையா சில வார்த்தைகளில் சுருக்கென சொல்லுகிறார்.யோசித்துப் பார்த்தால் மிகச்சரியாகவே படும். என்னதான் நாமெல்லாம் பெரிய அறிவுஜீவின்னு வெளம்பரப் படுத்திக்கொண்டாலும் ஊடகங்களுக்கு எவ்வளவு தூரம் அடிமையாக வாழ்கிறோமென்கிற ஆதங்கம் அவர் எழுத்தில் தெரிகிறது.
நான் பலதடவை அவர்கிட்டே சண்டை போட்டிருக்கிறேன்,’யுவர் மேக்கசைன் இஸ் ஃபுல்லி லோடட்னு’.அது நூற்றுக்குநூறு உண்மை. இன்று பெரிய இலக்கிய பத்திரிக்கைகள் என பீத்திக்கொள்ளும் பத்திரிக்கைகள் கூட ஒரு பேட்டி, ஒரு பெருங்கதை, 2 அல்லது 3 சிறுகதை, வாசகர் கடிதம் என்றளவிலேயே இருக்கின்றன.
ஆனால் நீங்கள் ‘அகநாழிகை’ வாசகாராயின் உங்களுக்கு நல்லாவே தெரியும் எத்தனை நேர்காணல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் தாங்கி வருகின்றனவென்று. ஒரு இதழ் அதுவும் இலக்கிய சிற்றிதழ் நடத்துவது எவ்வளவு கஷ்டம், எத்தனை நடைமுறை சிக்கல்கள் உள என்பது 25 ஆண்டுகளாக ஒரு மாதம் கூட விடுபடாமல் தஞ்சையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘சுந்தரசுகன்’ இதழாசிரியர் சுகனின் நண்பன் என்ற முறையில் நன்றாகவே தெரியும்.
சரி... எதுக்கு இவ்வளவு பெரிய பில்டப். காசு சம்பாரிக்க முடியாதுன்னா எவனாச்சும் பத்திரிக்கை நடத்துவானா? ஆளப் பாருன்னு.. நீங்க கேக்குறது எனக்கு கேட்கிறது.சத்தியமாக இல்லை. இதழ் நடத்துவது என்பது ஒருவித சந்தோஷம்,திருப்தி,போதை. ஒரு நல்ல பதிவு போட்டாலே எவ்ளோ சந்தோசப்படுறோம் நாம. சிற்றிதழ் கொண்டு வருவது அதையும் தாண்டிய ஒரு பரவசம் அளிக்கும் நண்பர்களே.
ஒரு தனிமனிதனின் உழைப்பு போதாது. ஒரு குழுவின் உழைப்பு முழுவதுமாக உட்கொள்ளும் மாய வேலை இதழ்பணி. ‘வலைப்பூ’ இருக்கு, ஏகப்பட்ட நல்லது, கெட்டது இணையத்துல இருக்கு..எதுக்கு சார் பத்திரிக்கை யெல்லாம் னு கேட்கிறீர்களா?
விடை எளிது தோழர்களே- உங்கள் எழுத்துக்களை உங்க கவிதையை, கதையை பிரிண்ட் அவுட் எடுத்து படித்து பாருங்கள், நீங்கள் உங்க எழுத்தோடு இன்னும் நெருக்கமாகிவீர்கள். அதுவே புத்தகமாக பார்த்தீர்களென்றால் அம்மகிழ்ச்சி பன்மடங்காகும்.(இதுதாண்ணே பலபேரு புக் போடுறேன்னு திரியுறாங்க! நல்ல விசயம்..தானே)
இப்ப என்ன திடீரென்று ‘அகநாழிகை’ மேல் அக்கறை என்றால் .... ஒன்றுமில்லை. மனசுல தோணுச்சு. பல நல்ல பத்திரிக்கை வந்த கொஞ்ச காலத்துலயே மக்களின் ஆதரவின்றி,சரியான நேரத்தில் ஆதரிக்காததால் காணாமல் போயிருக்கின்றன. இதுவும் அதுமாதிரி ஆகிவிடக்கூடாது என்ற ஆசை,பயம்.
ஒன்றை மட்டும் மறுபடியும் மறுபடியும் தெளிவாக்க விரும்புகிறேன் - ‘சிறுபத்திரிக்கை மட்டும் நடத்தி யாராலும் பணம் சம்பாதித்து விடமுடியாது, எனவே நீங்கள் ‘அகநாழிகை’ வாசித்து பயன்பெறுங்கள்’. அவரின் முயற்சிக்கு என்றென்றும் வாழ்த்துக்கள்.
அகநாழிகை சந்தா செலுத்த / புரவலராக இணைய / பதிப்பக வெளியீடுகளை பெற : ICICI வங்கிக் கணக்கு எண்.155501500097 - P.VASUDEVAN, Madurantakam Branch புத்தகங்களை வாங்க
தொடர்பு கொள்க : aganazhigai@gmail.com / +91 999 454 1010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அகநாழிகையின் ஆரம்ப இதழ்கள் வாசித்து இருக்கிறேன். காலச்சுவடுவும், உயிர்மையும் சற்று நீர்த்துப் போகின்ற போது அகநாழிகையின் வருகை அவசியமானதாகவே உணர்கிறேன். blogger ல் எனது 'ப்ரோஃபைலிலும்' அகநாழிகை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
அருமையாக எழுதி இருக்கிறீர்கள்..... உங்களுக்கு, பாராட்டுக்கள்!
அகநாழிகை, மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
புரியுது மக்கா,
மிக அவசியமான பதிவு தான் இது,
திரு.வாசுதேவனுக்கு பாராட்டுக்கள்.
சந்தாதாரர் ஆகிடுவோம், அட்டைப்படம் போட்டிருக்கலாம்ல?
சித்ரசுகன்,பேரே நல்லாருக்கு,
எப்புடி இப்புடி உங்களுக்குபெரியாளுங்க சகவாசம் ஏற்பட்டுச்சின்னு ஒரு பதிவு போடனும் பிளீஸ்.
ஆமா!அது சரி ஏன் தமிலிஷ்ல அப்படி கண்ணை மட்டும் போட்டு ஒரு போட்டொ?.
அட்டென்ஷன் சீக்கிங்!!!?:)
இந்த ப்ரிண்ட் எடுத்து படிச்சு பாக்க்ற மேட்டர் மிக புதுசு,உடனே பாக்குறேன்.
ஆமென்
நண்பரே,
இலைமறைகாயாக இருக்கும் ஒரு தரமான இதழ் குறித்து உங்களின் பகிர்வு சிறப்பாக இருக்கிறது. அகநாழிகை வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
அகநாழிகை பொன் வாசுதேவனுடன், திருவண்ணாமலையில் ஒருமுறை சாருவுடன் சென்றபோது, பவாவின் வீட்டில் உரையாடியிருக்கிறேன்.. ஆனால், அது அவருக்கே நினைவிருக்குமா என்று தெரியாது ;-)
நல்ல பதிவு மயிலு.. மத்தபடி,
//ஆமா!அது சரி ஏன் தமிலிஷ்ல அப்படி கண்ணை மட்டும் போட்டு ஒரு போட்டொ?.
அட்டென்ஷன் சீக்கிங்!!!?://
அதே டவுட்டுதான் எனக்கும் !! ;-)
நன்றி!!
அருமையான பகிர்வுங்க.
//ஒரு தனிமனிதனின் உழைப்பு போதாது. ஒரு குழுவின் உழைப்பு முழுவதுமாக உட்கொள்ளும் மாய வேலை இதழ்பணி.//
வாஸ்தவம். வாழ்த்துகள் வாசு!
மிக்க நன்றி நண்பா
- பொன்.வாசுதேவன்
நன்றி,,,
இது ஓகே அடுத்து நம்ம கருந்தேள் மற்றும் கார்த்திகேயன் அவர்களுக்காக சரோஜா தேவி பத்திரிகையை பற்றி எழுதவும் ..
Post a Comment