Sunday, August 29, 2010

கோமு ட்விட்ஸ்

                                                                                                                                             1.130pm
இப்படி தண்ணியப் போட்டுட்டு வந்தீங்கன்னா உங்களுக்குன்னு இருக்கிற பேர் ரிப்பேர் ஆயிடும் நண்பரே! கண்காட்சியை முடிச்சுட்டு வெளியே போய் சரகு அடிக்கனும் என்று பாசமழை பொழிந்தார் ’புலம்’ லோகு! மாரியம்மன் பொங்கல்,மாகாளியாத்தா, கருப்பண்ணசாமி, அண்ணமார், பத்திரகாளி பொங்கல் விசேசமே விசேசம்!கிங்பிசர் கூலிங்கா மூனு ஊத்துனதுல கொஞ்சம் கிறுகிறுப்பு. உடு நண்பா! இனிமேட்டு கண்காட்சி பக்கம் தலை வச்சுப் படுக்கலே! தின்னூறு,சந்தனம்,செவப்பெல்லாம் பூசிறாய்ங்கெ!Life is Beautiful.
                                                                                                                                             1.140pm
பொடனியில் வளர்த்த மயிரை வெட்டியாகி விட்டது!மினிஸ்டர் வேச்சி,சட்டை மூன்று செட் எடுத்துக் கொள்ளலாமா! என்று நண்பரைக் கேட்டேன் இன்னும் Five years போகட்டும் என்கிறார்!  முடி போச்சே!
1:145 pm
என்னைக் கவர்ந்த என் கதை! சாமி மேல மண்டு உட்டுட்டு ஓடுது பாரு அந்த முட்டா....தி நாய்! தொறத்தி அடிச்சி கொல்லுங்கடா!
                                                                                   
1:149 pm
செலவுக்கு என்று ஏகப்பட்ட காசுகள் இருந்தது!சரி எடைக்கு பத்து கிலோ புத்தகம் போடலாம் என்று பழைய ட்ரங் பெட்டியை இறக்கினேன். சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் .. தூசி தட்டினேன்...என்ன!1988லேயே இந்த புத்தகம் விற்பனைக்கு கிடைச்சாசா?!
1:159 pm
என்ன வாழ்க்கை இது? பத்து கிலோமீட்டர் தாண்டி வந்து கிங்பிசர் பியர் கேட்டால் லெகர் இருக்கிறது என்கிறார்கள்! அதற்கு எதற்கு எழுபது ரூபா? சோடா குடிச்சுக்கலாமே! என்ன கெவர்மண்ட்டு? என்னா பாஸ்மார்க்கு? பூட்டுங்கடா!என்றேன் கோபத்தில்! உடனே பூட்டிவிட்டார்கள்! அன்று மாலை டாஸ்மார்க்கு ஊழியர்கள் ஸ்ட்ரைக்காம்!பின்ன நான் பூட்டச் சொன்னதுக்கா பூட்டுறாங்கெ! எல்லாரும் இன்னிக்கு ஒரு நாளாச்சும் தண்ணி போடாமப் போய் படுத்து தூங்குங்க! என்று வந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தேன் வயிற்றெரிச்சலில்!
                                                                                                                                       1:210 pm
மூன்று மாத காலமாக ஒரு பத்தாம் வகுப்பு மாணவி எனக்கு காதலியாய் நடிக்கிறாள்.அவளின் வருகை நேரம் நான் கவர்மெண்ட் கடைக்கு காசு நீட்டப் போகும் நேரமும் மாலை 6.10. ஒரு நாள் தாமதமாக வருவாள் போல! சந்திப்பே அரிதாகி விடுகிறது! ஒரு ஏழெட்டு முறை அவள் விழிகளில் நான் பைக்கில் கடந்து போகையில் விசாரித்தாள்! நேற்று அவள் வருவதை காலையில் கண்டதும் வண்டியை நிறுத்தி வராத போனில் பேசினேன்! தின்றுவிடுவது போல பார்த்தபடி வந்து என்னைக் கடந்தாள்!திரும்பி பார்க்கிறாளா? என்று பார்த்தேன். பார்த்துதான் போனாள்.


                                                                                                                                        1:220 pm
உசுரே போகுதே! உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில! மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேட்கிறேன் மனசைத் தாடி என் மனிக்குயிலே
அக்கினிப் பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு தவிக்குதடி! இந்த கறுப்பி 
ஒரு நாளைக்கு இல்லினாலும் ஒரு நாளைக்கி டிபன் போசியில மாட்டுக்கறி கொண்டாந்து சாப்புடு தங்கம்னு ஊட்டி விடப் போறா...நானும் சப்புக்கொட்டிதிங்கத்தான் போறேன்!
 இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே?
 அடி தேக்கு மரக்காடு பெருசுதான்..சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்!
1:230 pm
இன்னியோட சரி!நாளையில இருந்து குடி நமக்கு ஆவாது! சோறு எறங்க மாட்டுது!ஆமா! இந்தக்குடி நம்மளை முடிச்சுப்போடும்! இல்லைன்னா ஒன்னு பண்ணலாம்! வாரத்துல ஒரு நாள் மட்டும் வச்சுக்கலாம். கறி எடுத்துட்டு வந்து ஊட்டுலயே தின்னுட்டு குடிச்சுக்கலாம். இந்தக் குடி ஆவாது! சரி நாளைக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு போன் பண்றேன்.நண்பர்களிடம் விடை பெற்றேன்.

Tuesday, August 17, 2010

ட்விட்டர்!!! அப்படின்னா ஆப்ரேஷனா?

                                                                  வா.மு.கோமு
2010 ஆகஸ்ட் 14.சனி 1:55 PM



உயர்ந்த மனிதன் தன் ஆத்மவை மிதிக்கிறான்.பாகிஸ்தான்வாசிகளுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்.ஸ்வாமி,அம்பாள் பூத, அன்ன வாகனங்களில் திருவீதி எழுந்தருளல்


ஆணை என்றொரு திரைப்படத்தை சன் டிவியில் மதியம் ஒரு மணி செய்தி வரை காட்டினார்கள்.ஆ என்று திறந்த வாய் மூடாமல் பார்த்தேன்.அர்ஜூன் பறந்து பறந்து நிறையப் பேரை சுட்டு வீழ்த்தினார்.வாயிற்குள் மூன்று ஈக்கள் நுழைந்து பார்த்து விட்டு குகை 
மூடப்பட்டு விடுமோ என்ற பயத்தில் வெளியேறின.அர்ஜூன் குழந்தையை காப்பாற்றி அதன் தாயிடம் ஒப்படைத்த பிறகு படம் இனிதே நிறைவுற்றது! நான் ஜெண்டுபாம் தேடினேன்.

1:63 AM
“நீ தின்னுட்டு இருக்கிற ஊறுகாயில துளி பிதுக்கி நக்கத் தருவியா?”
“நான் ஏன் என் ஊறுகாயை உனக்கு நக்கத் தரணும்?”
“இல்ல அம்மா சொல்லியிருக்காங்க...எந்த ஒரு நல்ல காரியம் செய்யுறாதுக்கு முன்னாடி ஊறுகாய் நக்கிக்கோணும்னு”
“சரி இந்தா....நக்கிக்கோ,ஆமா இப்போ என்ன நல்ல காரியம் பண்ண யோசிச்சிருக்கே?”
“உன்னை தூக்கிட்டு ஒதுக்கமான ஒரு பகுதிக்கு போலாம்னு”
எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் முன்னால் ஜனனி ஊறுகாய் நக்கிட்டு காரியத்த ஆரம்பிங்க.
1:73 PM
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை கழிவுநீரால் நிலத்தடி நீர், மற்றும் மண் பாதிப்பு.மக்கள் பரிதவிப்பு.நிலம் வைத்திருப்போர் எல்லோரும் மூங்கில் பயிர் செய்யுங்கள். மூங்கில் ஐந்து வருடங்களில் மண்ணை நச்சுத்தன்மையிலிருந்து காப்பாற்ருகிறது. இது அரிவியல் உண்மை.ஈரோடு மாவட்ட ஆட்சியர் வரப்பாளையம் மனுநீதி நாளில் அறிவிப்பு.
1:82 PM
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 575 பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.இதிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் சுமார் 50ஏக்கர் நிலத்தில் குழி தோண்டி புதைத்தும்,சிலவற்றை எரித்தும் நச்சுக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.Deep Blue Sea.


1:90 PM
நச்சுக்கழிவுகள் குழி தோண்டி புதைக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கலெக்டர் சுடலைக்கண்ணனிடம் மனு கொடுத்தார் MLA பொன்னுத்துரை. இத்திட்டத்தினால் சென்னிமலை பகுதியில் நிலத்தடிநீர் பாதிப்படையும். சுற்றுப்புற சூழல்
 கெடும்.சுமார் 2லட்சம் மக்கள் பாதிப்படைவர்.எனவே மக்கள் நலம் கருதி திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.No Mans Land.


1:99 PM
ஈரோடு புத்தக கண்காட்சியில் புத்தகங்களை பொட்டணம் கட்டி வெளிவந்தபின் நானும் நண்பரும் கம்மங்கூல் சாப்பிட தீர்மானித்தோம்.நண்பர் மயிலுக்கு அல்சர்.மிளகாய் கடித்து கூல் சாப்பிடாமல் அன்னாசி கடித்து குடித்தார். நானோ உப்பு,மோர் கலந்த பச்சை மிளகாய் கடித்து குடித்தேன்.வவுறு புண்ணாப் போயிடுங்க என்றார்.யதேச்சையாய் ஒரு கருநாய் எங்கள் அருகே வந்தது முகம்பார்த்தது.”அப்புறம் ரெண்டு பேரும் எங்கே இந்தப் பக்கம்” என்றது!Enter the dragon.


1:103 PM
பட்டுக்கோட்டை பிரபாகரின் வல்லமை தாரோயோ,தொட்டால் தொடரும்,ஆரம்பத்தில் அப்படித்தான்,பிரியா கல்யாணாராமனின் ப்ளஸ் 1, ஜாக்கிரதை வயது 16 என்று நண்பர் பிரதீப்பிடம் வாங்கினவற்றை வரிசைப்படுத்தினேன்.தூரமாப் போய்யா என்றார்.உபரியாக
வா.மு.கோமு இலக்கியத்திற்கு குட்பை சொல்லிவிட்டார் என்று  அவர் வலைதளத்தில் எழுதுவேன் என்றார்.தேங்க்யூ தோழா! Return of the dragon.


1:110 PM
உயிர்மை ஸ்டாலில் உயிர்மை எஜமானரை தரிசிக்க முடிந்தது.அவருக்கு அலைபேசி வந்து கொண்டே இருந்தது! அலைபேசியை வாய் அருகே வைத்துப் பேசியும் பின்னர் காதுக்கும் ”எந்ந்ந்ந்தீராஆ” போல் செய்தார்.இப்படி பேசுஅவர்களில் எனக்கு தெரிந்து இவர் 937வது நபர்.


1:121 PM
உன்னதம் ஸ்டாலில் கொவ்தமசித்தார்த்தன் தன் வழக்கமான சிரிப்பலைகளோடு இருந்தார். வாங்க தோழர் என்றார்.எனக்கு உடனே ஓடிவிடலாமா என்றிருந்தது! தோழர் என்ற ஒற்றை சொல் சாகும்வரை என்னை பேய் போல் மிரட்டுகிறது(ம்)!The Entity                                                                                                                                                                -தொடரும்.....

Monday, August 16, 2010

மனுசன தான் மறந்துட்டோம்..பாவம்...பறவைகள் என்ன செய்யும்?

Petition to Re-consider the Construction of the Proposed 500-Bed Hospital in the Vicinity of the Guindy National Park


The Madras Naturalists' Society is a non-profit, voluntary, non-governmental organisation established in the year 1978 to create environmental awareness and spread the message of nature conservation among members and the general public, especially the youth.


We have seen reports in the press about a proposal to build a 500-bed Hospital in the Raj Bhavan campus, in the vicinity of Guindy National Park. Together, Raj Bhavan and Guindy National Park hold one of the last remnants of the tropical dry evergreen forest, unique to the east coast of India. This Forest is home to over 130 species of birds, 350 species of plants, 60 kinds of butterflies and many mammals, including the endangered Blackbuck. There are very few populations of the Blackbuck left in Tamil Nadu.


We are strongly convinced that the proposed Hospital will vitiate the flora and fauna of this Forest since a hospital means inevitable light, noise, hazardous waste, pollution and diseases. The Hospital will also draw a huge quantity of precious groundwater, which is indispensable to both the fauna and the flora in the Forest.
A Forest like the Guindy National Park in the midst of a metropolitan city is unique and one of its kind in the whole world.


We therefore fervently appeal to you to reconsider putting into effect the construction of the proposed Hospital in the vicinity of the Guindy National Park, and thus save this prestigious heritage that Chennai has and is so proud of.


Thank you.
Members of the Madras Naturalists' Society


Thanks:
Madras Naturalist Society
http://blackbuck.org.in/

ஏற்கனவே நாம பல பறவைகளை, பறவைகள் சரணாலயத்துலதான் பாத்துக்கிட்டு இருக்கோம்.மிக அருமையான பள்ளிக்கரணை நீர்ப்பகுதி நாசமா போயிக்கிட்டிருக்கு. அடுத்து கிண்டி, ஐ ஐ டி இப்படி எல்லா எடத்துலயும் நல்லா பெருசு பெருசா கட்டடம் கட்டுங்க சாமிகளா!! மொத்தமா பறவையினத்தையே அழிச்சிப்புடலாம். நாமெல்லாம் யாரு? ஒரு மனித இனம் அழிஞ்சத பத்தியே கவலைபடாம ‘எந்திர்ர்ர்ர்ரான்னு பாடிக்கிட்டிருக்கிறவங்கதானே’...பறவையாம்....இயற்கையாம் !! சரி நானு போய் புள்ளகுட்டிய படிக்கவைக்கிறேன்.

Thursday, August 5, 2010

ஆனந்த விகடன்ல கோமுவின் இன்னிங்க்ஸ் ஸ்டார்ட்

                    வாமுகோமுவின் மற்றுமொரு சிறுகதை இந்த வார (11.08.10)'ஆனந்த விகடனில்' பக்கம் எண் 70 ல் வந்துள்ளது. ரொம்ப சந்தோசம். தடி தடியா எளக்கிய புக் எழுதி அத ஆரு வெளியிடுவாங்களோன்னு தேவுடு காத்துக்கிட்டு இருக்காம் சட்டுபுட்டுனு இந்த மாதிரி நாலு கத எழுதி அத பத்திரிக்கைகளுக்கு தாட்டி வுட்டு , காசு வந்துச்சா, சந்தோசமா செலவு பண்ணுனமான்னு இருக்கலாம். பரவயில்லை இனி கோமு பொழச்சிக்குவாரு. 


                 சுஜாதா எடத்தை ஆரு புடிக்கிறதுன்னு ஜெமோக்கும், தகதிமிதாவுக்கும் போட்டின்னு யாரோ பேசிக்கிட்டாங்க அங்கிட்டு கே.கே நகர் பக்கத்துல.... எனக்கென்னவோ அது அவிங்க ரெண்டு பேருக்கும் இல்லைங்கிற மாதிரிதேன் தெரியிது. எதுக்கும் ‘பால்’கிட்ட கேக்கச் சொல்லி நண்பர்கிட்ட சொல்லி இருக்கேன்.


 டிஸ்கி:


         நண்பர் வா.மு,கோமுவின் ‘அழுவாச்சி வருதுங் சாமி’ - சுகன் வெளியீடாக வந்த சிறுகதைத் தொகுப்பு. நல்ல பல சிறுகதைகள் கொண்டது.எங்கிட்ட 8 புத்தகங்கள் இருக்கு. விலை:50ரூ தான். வேண்டுவோர் இமெயில்ல தொடர்பு கொள்ளவும்.நன்றிங்க..