Thursday, August 5, 2010

ஆனந்த விகடன்ல கோமுவின் இன்னிங்க்ஸ் ஸ்டார்ட்

                    வாமுகோமுவின் மற்றுமொரு சிறுகதை இந்த வார (11.08.10)'ஆனந்த விகடனில்' பக்கம் எண் 70 ல் வந்துள்ளது. ரொம்ப சந்தோசம். தடி தடியா எளக்கிய புக் எழுதி அத ஆரு வெளியிடுவாங்களோன்னு தேவுடு காத்துக்கிட்டு இருக்காம் சட்டுபுட்டுனு இந்த மாதிரி நாலு கத எழுதி அத பத்திரிக்கைகளுக்கு தாட்டி வுட்டு , காசு வந்துச்சா, சந்தோசமா செலவு பண்ணுனமான்னு இருக்கலாம். பரவயில்லை இனி கோமு பொழச்சிக்குவாரு. 


                 சுஜாதா எடத்தை ஆரு புடிக்கிறதுன்னு ஜெமோக்கும், தகதிமிதாவுக்கும் போட்டின்னு யாரோ பேசிக்கிட்டாங்க அங்கிட்டு கே.கே நகர் பக்கத்துல.... எனக்கென்னவோ அது அவிங்க ரெண்டு பேருக்கும் இல்லைங்கிற மாதிரிதேன் தெரியிது. எதுக்கும் ‘பால்’கிட்ட கேக்கச் சொல்லி நண்பர்கிட்ட சொல்லி இருக்கேன்.


 டிஸ்கி:


         நண்பர் வா.மு,கோமுவின் ‘அழுவாச்சி வருதுங் சாமி’ - சுகன் வெளியீடாக வந்த சிறுகதைத் தொகுப்பு. நல்ல பல சிறுகதைகள் கொண்டது.எங்கிட்ட 8 புத்தகங்கள் இருக்கு. விலை:50ரூ தான். வேண்டுவோர் இமெயில்ல தொடர்பு கொள்ளவும்.நன்றிங்க..

24 comments:

King Viswa said...

இன்னமும் விகடன் பார்க்கவில்லை. வாமுகோமு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எறும்பு said...

// நல்ல பல சிறுகதைகள் கொண்டது.எங்கிட்ட 8 புத்தகங்கள் இருக்கு//

இது matter. உடனே எனக்கு ஒரு புக் அனுப்பி வைங்க. உங்களை போல தீவிர இலக்கியவாதிகள் இலவசமாய் புத்தகங்கள் வழங்கி வருவது சிறப்பு. இலக்கியம் நீண்ட நாட்கள் உயிர் வாழும்.

எறும்பு said...

//King Viswa said...

இன்னமும் விகடன் பார்க்கவில்லை.//

விகடன பாத்துடாலும்
:)

geethappriyan said...

//இன்னமும் விகடன் பார்க்கவில்லை. வாமுகோமு அவர்களுக்கு வாழ்த்துக்கள். //
ரிப்பீட்டு

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் !

vijayan said...

வா.மு.வின் பெயரை விகடனில் பார்த்ததும் சிறிது ஆச்சரியம்தான்,ஏனெனில் அவரின் எல்லா படைப்பையும் படித்தவன் என்ற முறையில் ,விகடன் அவரை எப்படி எதிர்கொள்கிறது அல்லது இவர் எப்படி விகடனை எதிர்கொள்கிறார் என்று.அவர் வாசகர்களுக்கு நான் சொல்வது புரியும்.மிகவும் அழகாக கதை வந்திருக்கிறது.வாழ்த்துக்கள் கோமு.

கருந்தேள் கண்ணாயிரம் said...

//சுஜாதா எடத்தை ஆரு புடிக்கிறதுன்னு ஜெமோக்கும், தகதிமிதாவுக்கும் போட்டின்னு யாரோ பேசிக்கிட்டாங்க அங்கிட்டு கே.கே நகர் பக்கத்துல.... எனக்கென்னவோ அது அவிங்க ரெண்டு பேருக்கும் இல்லைங்கிற மாதிரிதேன் தெரியிது//

இது எதுக்கு தேவையே இல்லாம ஒரு பிட்டு ? கோமுவப்பத்தி எளுதுனா அவரப்பத்தி மட்டும் எளுதவேண்டியதுதான.. எதுக்கு இந்த தேவையில்லாத விஷயமெல்லாம்?

சுஜாதாவோட எடத்த புடிக்குறதுல ஜெயமோகனா? இதுதான் பெரிய காமெடி ;-) சுஜாதா எண்ணிக்குமே ஆர்எஸ்எஸ் கட்டுரைகள் எளுதுனதில்லையே? அப்புறம் எப்புடி அதுல ஜெயமோகன் பேரு வரலாம்? :-)

பதிவோட தலைப்பப் பார்த்தா, கோமு விகடன்ல எளுதுனது விளம்பரப்படுத்தியே ஆகணும்ற மாதிரி இருக்குதே ;-) அதுலயும், அவரு இன்னிங்ஸ் ஸ்டார்ட்ன்னா? வாராவாரம் இனி எழுதுவாரா? கேட்டு சொல்லுங்க அவருகிட்ட ;)

க ரா said...

கதை நல்லா இருந்தது மயில்..

மரா said...

@ கிங் விஸ்வா
வருகைக்கு நன்றி.

மரா said...

@ எறும்பு
//. உங்களை போல தீவிர இலக்கியவாதிகள் இலவசமாய் புத்தகங்கள் வழங்கி வருவது சிறப்பு.//

இது எங்க? ஆகா...... அண்ணே.. கையில காசு வாயில தோசை. :)

மரா said...

@ எறும்பு
விகடன் வேஸ்ட்தான். இப்ப தான ஒலகப்புகழ் எழுத்தாளர்கள்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாங்கள்ல...இனிமே ஜூப்பரா இருக்கும்.

மரா said...

@ கீதப்பிரியன்
ரொம்ப நன்றி வருகைக்கு.

மரா said...

@ பனித்துளி சங்கர்
நன்றி கவிஞரே.

மரா said...

@ பனித்துளி சங்கர்
நன்றி கவிஞரே.

மரா said...

@ விஜயன்

ரொம்ப சந்தோசம் உங்க வருகைக்கு.

மரா said...

@ விஜயன்

ரொம்ப சந்தோசம் உங்க வருகைக்கு.

மரா said...

@ கருந்தேள் கண்ணாயிரம்
// இது எதுக்கு தேவையே இல்லாம ஒரு பிட்டு ? கோமுவப்பத்தி எளுதுனா அவரப்பத்தி மட்டும் எளுதவேண்டியதுதான.. எதுக்கு இந்த தேவையில்லாத விஷயமெல்லாம்? //

அண்ணே ஊருக்குள்ள பேசிக்கிட்டத தாண்ணே எழுதினே?

மரா said...

// பதிவோட தலைப்பப் பார்த்தா, கோமு விகடன்ல எளுதுனது விளம்பரப்படுத்தியே ஆகணும்ற மாதிரி இருக்குதே ;-) //

அதே அதே. ஏதோ நம்மால முடிஞ்சது.

மரா said...

/ அதுலயும், அவரு இன்னிங்ஸ் ஸ்டார்ட்ன்னா? வாராவாரம் இனி எழுதுவாரா? கேட்டு சொல்லுங்க அவருகிட்ட ;)//

ஹி ஹி.தொடரா எழுதலையாம். ஆனா இனி அடிக்கடி அவர் சிறுகதை வரும்னு சொன்னாரு.

மரா said...

/ அதுலயும், அவரு இன்னிங்ஸ் ஸ்டார்ட்ன்னா? வாராவாரம் இனி எழுதுவாரா? கேட்டு சொல்லுங்க அவருகிட்ட ;)//

ஹி ஹி.தொடரா எழுதலையாம். ஆனா இனி அடிக்கடி அவர் சிறுகதை வரும்னு சொன்னாரு.

மரா said...

@ இரா.கண்ணன்
நன்றி நன்றி.

Madumitha said...

எனக்கு ஒரு புத்தகம் அனுப்புங்கோ.
முகவரி சொன்னால் பணம் அனுப்புகிறேன்.

sakiarun@gmail.com

பாலா said...

உஜிலாதேவியின் ப்லாகில் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

http://ujiladevi.blogspot.com/2010/08/blog-post_10.html

pichaikaaran said...

நீங்க எந்த ஊருண்ணே . நேர்ல சந்திச்சு புக் வாங்கிக்றேன்