”ஆழத்திலிருந்த அனலொன்று” சிறுகதை வித்தியாசமான யோசிப்பு. வழக்கமான மறுவாசிப்புச் சிறுகதையல்ல இது. எதிர்யோசிப்புச் சிறுகதை.ராகுல்ஜியின் ’வால்கா முதல் கங்கை’ வரை நூலை வாசித்த அனுபவம் உள்ளவர்களுக்கும், வேட்டைச் சமூகத்தில் தாய்
வழிச் சமூகம் இருந்ததை அறிந்தவர்களுக்கும், தாயே தலைவியாக திகழ்ந்த இனக்குழுமச் சமூகம் இருந்தது என்பதையும் அதையெல்லாம் கடந்துதான் பொருளுடமைச் சமூகமும், ஆணாதிக்கச் சமூகமும் வந்தது என்கிற
மனிதகுல வரலாறு கற்றோருக்கும் இந்த சிறுகதையை உணர்ந்து உள் வாங்குவது இயலும். மற்றொர்க்கு இது ஓர் அபத்தக் கற்பனையாகத் தோன்றலாம். உண்மையில் அபூர்வமான- அற்புதமான-கற்பனை.
தீப்பிரவேசம் என்ற ராமாயணக் காட்சியை தலைகீழாகப் புரட்டிப் போட்ட
கற்பனை. ராமன் மண்டோதரியின் வனத்தில் சிறை வைக்கப்பட, போரினால் மீட்டெடுத்த சீதை தீப்பிரவேசத்தின் போது மானுடத் தீர்ப்பு சொல்கிற தாய்மைப் பண்பு. மனிதப்பண்பு மிக்க தீர்ப்பெழுதுகிற உணர் பண்புச் சிறுகதை.
-மேலான்மை பொன்னுச்சாமி
புத்தகத்தின் விலை: 80ரூ
புத்தகம் கிடைக்குமிடம்: அம்மாவீடு,
சி-46 இரண்டாம் தெரு,
முனிசிபல் காலனி,
தஞ்சாவூர்- 613 007
செல்: 94423 46334
soundarasugan@gmail.com mayilravanan@gmail.com
3 comments:
அய்யா... நான் வால்கா முதல் கங்கை புத்தகமெல்லாம் வாசித்ததேயில்லை. நான் வாசித்ததெல்லாம் முத்தாரம் & வண்ணத்திரை மட்டுமே.. எனக்கு இது புரியுமா? - ஏழைத் தமிழன்
வாங்கி வெச்சிருங்க மாம்ஸ்.. வந்து வாங்கிக்கிறேன்..
---
அய்யா... நான் வால்கா முதல் கங்கை புத்தகமெல்லாம் வாசித்ததேயில்லை. நான் வாசித்ததெல்லாம் முத்தாரம் & வண்ணத்திரை மட்டுமே.. எனக்கு இது புரியுமா? - ஏழைத் தமிழன்
---
ஆரு அது ஏழைத் தமிழன்..
ஆஹா ... நீங்க தானா மரா... என் கவிதைகளுக்குப் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி மரா...
சுகனின் "ஆழத்திலிருந்த அனலொன்று" தொகுப்பு ரொம்ப நல்லா இருக்குங்க....கட்டாயம் படிங்க.....
Post a Comment