Monday, March 23, 2009

எல்லோருக்கும் நமஸ்காரம்...


Blog’ போட்டாச்சி....ஏதாவது எழுதலாமுனு உக்காந்தேன்....’அம்பட்டன் ஊட்ல மசிரிக்கு பஞ்சமான்ற’ மாதிரி எங்கூட்ல பேப்பர், பேனாக்கு பஞ்சமே இருக்காது..ஆனா பாருங்க நேத்து எழுத பேப்பரே கெடைக்கல, அப்புறம் பழய நோட்டுபொய்தவத்துல படக்கினு நாலு தாளப்பிச்சி பேனாவையும் நீக்கிட்டு குந்துனா என்னா எழுதுறதுனு மண்டைக்குள்ள
இடி இடிக்குது....
காதல் கீதல்னு ஏதாச்சும் பற்றி பத்தி எழுதலாம்ண்டா பெரிய அழுவாச்சி காவியமாயிப் போயிரும்.அம்புட்டும் ஒன்சைடு ஆம்லெட் மாதிரி ஒருதலைக்காதல்.....கவிதையும் இருநூறு கிலோமீட்டர் தூரத்திலய நிக்கும்...ஆனா நான் படிச்ச நல்ல கவிதைகள் எம்பட வலைப்பதிவுல நிரம்ப பார்க்கலாம்... பொறந்த இடம், படிச்ச காலேஜி பத்தி எழுதலாம்..ஆனால் அங்க புடுங்கன ஆணியெல்லாமே வேஸ்ட் ஆணிங்கிறதால அந்த பகுதி ஒத்து.....

ப.பி (படிச்சதில பிடிச்சது) , பா.பி (பார்த்ததில பிடிச்சது) , கே.பி (கேட்டதில பிடிச்சது) அப்பிடினு ஜல்லியடிக்கத் தனித்திறமை வேனும்.... வாசிக்கக் கூட்டம் வேனும். பொறவு என்னத்த எழுவுறது? ஏதாச்சும் மனசுக்கு பிடிச்சத, தெரிஞ்ச மனுஷமாருங்களைப் பத்தி பதிவு பண்ணப்போறேன். (வெளங்குனுச்சு...... அவிக நல்லவிக, இவிக கெட்டவிகனு அவுக்க போரீகளான்னு கேக்குறது காதுல விழுது....) அப்பிடி எல்லாம் இந்த டமில் கூறும் நல்லுலகத்தை விட்டுருவேனா?
எனக்கு நண்பர்கள் வட்டம் கொஞ்சம் பெருசு....அதனாலேயே பிரச்சனைகளும், ....‘ வாத்தியார் புள்ள மக்குனு’ யாரோ சொன்னத நிரூபிச்சவுக நாங்க..! எல்.கே.ஜி லேருந்து பத்தாப்பு வரை பர்ஸ்ட் ரேங்கு. . . . அதுக்கப்புறம் எல்லாமே ராங்கு......!?.அதுக்கப்புறமும் ஒரு கான்வென்ட் சாரி சாரி காலேசிலப் படிச்சு பட்டம் வாங்குனா என் தந்தை முதுகலையும் அவத்திக்குள்ளயே படிச்சாத்தான் பணம் கட்டுவேன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாப்ல. . . . மறுக்கா ரெண்டு வருஷம் தஞ்சாவூர்லயே படிச்சுப்போட்டாச்சு.

அப்பாடி ‘இடைவேளை’ போட்டாச்சு.... பொட்டிப்படுக்கைய கட்டிக்கிட்டு சிங்காரச்சென்னைக்கு ரெயிலேறியாச்சு. அமெரிக்காவுல ரெட்டைக்கோபுரத்தில குண்ட போட்டாங்கன்னு சொல்லி எங்கள (2002ல படிப்பு முடிச்ச நல்விங்க!!) எந்த கம்பெனியும் உள்ளே சேர்க்கல.....என்னடா இது அதிர்ஷ்டம் கூரியர்ல வந்தா தரித்திறியம் தந்தில வருதேனு நெனைச்சுக்குனு ஊட்டிக்கு வேலைக்கு போனேன்..... அப்புறம் ஒரு வருஷம் இன்பமா ஒடிச்சி.....இப்போ சென்னைல மென்பொருள் கம்பெனில துன்பமாப் போவுது. . . ஸ்டாப். . .
மயில்ராவணன்...

1 comment:

க ரா said...

மாம்ஸ் அறிமுகம் நன்று :)