----மயில்ராவணண் ------
கதை கேட்டு , கதை படிச்சி, கதை சொல்லி வளந்தவங்க நம்ப சனங்க. அதுக்கு தக்கன இந்த ராசா ராணி கதைங்க நம்ளோட ஊரு பக்கம் ஜாஸ்தி. நம்ம சரக்க அதுலயே ஆரம்பிக்கலாமுனு ஒரு நெனப்பு. முன்னயே சொன்ன மாதிரி எங்கப்பார கத சொல்ல சொல்லி விடிய விடிய கேக்களாம். நானொரு கதை நாட்டுப்புறகத எழுதிப்போட்டிருக்கேன். படிச்சிப் பாத்துப்புட்டு ஒரு வாய் பேசுனீங்கன்னா வக்கனையா இருக்கும். செரி கதக்குள்ற போவோம்.....

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். ரொம்ப நல்ல மனுசன். வேட்டைக்குப் போறதில
ரொம்ப இஷ்டம். இரண்டு வாரத்துக்கு ஒருக்கா வில் அம்ப தூக்கிக்கினு கெளம்பிருவாராம்.
அந்த ராஜாவுக்கு ஒரு சாபம் இருந்தது. அது என்னன்னா நம்ம சிரிப்பு நடிகர் விவேக்கு ஒரு படத்துல விலங்குகள் பேசுறது எல்லாம் அவர் காதுல விழும் அதே மாதிரி நம்ம ராஜாவுக்கும் பறவைகள், விலங்குகள் பேசுறது எல்லாம் அவருக்கு விளங்கும், ஆனால் அதை வெளியே யாருகிட்டயாவது சொன்னாருன்னா அடுத்த நிமிஷம் மண்டை சுக்குநூறா வெடிச்சிரும்.
ஒருக்கா அப்பிடி காட்டுக்கு வேட்டைக்கு போகும்போது ராணியையும் கூட்டிக்கிட்டு
போனாராம். வேட்டையாடுற மும்முரத்தில பொழுது சாய்ந்ததை ரெண்டு பேருமே கவனிக்கல. சரி அது ஒரு பிரச்சனையானு அங்கேயே ஒரு குடில் கட்டி ராத்திரி தங்கினார்கள்.
ஆளுக்கு ஒரு கட்டில் போட்டு படுத்திருந்தாங்க. நடுராத்திரி 12 மணியிருக்கும், சிற்றெறும்புக்கூட்டம் ஒன்னு சாரை சாரையாக அந்தப்பக்கம் சென்றது. ராஜா படுத்திருந்த
கட்டில் காலில் முட்டி முதல்ல போன எறும்பு நின்றுச்சு. அது “வக்காளி ராஜா கட்டில
நடுவுல போட்டு படுத்திருக்கான்”னு சொன்னுச்சாம். அதுக்கு அதோட ப்ரெண்ட் எறும்பு
“ ஒரு முட்டு முட்டி தள்ளிவிட்டுவிட்டு போய்கிட்டேயிரு ”னு சொன்னுச்சாம்.
இதைக்கேட்டுக்கினு படுத்திருந்த ராஜா உடனே எழுந்து அவர் கட்டிலைக் கொஞ்சம்
தள்ளி போட்டுக்கொண்டாராம். அதைப் பார்த்துவிட்டு மற்றொரு எறும்பு “ராஜாவே பயந்து
நமக்கு வழி விட்டுட்டாராரு பாரு” னு சொன்னுச்சாம். இதைக்கேட்டு ராஜா வாய்விட்டு சிரிச்சுட்டாராம். (அங்கேதான் ஸ்டோரில டிவிஸ்ட் வெச்சிருக்கோம்!!)
அடுத்த வினாடி ராணி எழுந்து சம்மணக்கால் போட்டு உக்காந்துக்கிட்டு “ என்றா மாப்ள இந்நேரத்தில யாரு உன் சின்னவூட்ட நெனச்சுதான சிரிச்ச?னு கேட்டாளாம்.அதுக்கு ராஜா
ராணி பொம்பளையாச்சே . . . . விடுவாளா? “இந்த நிமிஷமே சொல்றா புருஷான்”னு
பிரச்சனைப் பண்ண ஆரம்பிச்சிட்டாளாம். இரவு மணி 2 ஆச்சு..5 ஆயிருச்சு..
திரும்பத்திரும்ப அதேக் கேள்வியேக் கேட்டுக்கொண்டிருந்தாளாம்.என்னடா இது,
” மலந்தின்ன வந்த நாயி மானியக்கடிச்சாப்ல”னு நெனைச்சுக்கிட்டு “ இதோ பாருடி நான்
உண்மையானக் காரணத்தைச் சொன்னால், என் தலை வெடிச்சு சிதறிடும்..
பரவாயில்லையா?”னுக் கேட்டாராம். அதுக்கு ரானி “நீ செத்தாலும் பரவாயில்லை, ஏன் சிரிச்சேனு சொல்லு” என்றாள்.
ராஜா விதி வலியதுன்னு நெனைச்சுக்கிட்டு சின்ன சுள்ளிகள்,விறகு, காய்ந்த சருகு எல்லாம் பொறுக்கியெடுத்து சிதை மாதிரி தயார் செய்து நடுவில் சென்று உட்கார்ந்தாராம்....
அந்தக் குடிசைக்குப் பக்கத்தில் ஒரு பாழுங்கிணறு இருந்தது. அதனருகே ஒரு ஜோடி செம்மறியாடு மேய்ந்து கொண்டிருந்தது. அதில் பெண்ணாடு உள்ளே எட்டிப்பார்த்து,” என்னங்க கிணத்துக்குள்ளாற நல்ல பச்சைப்புள்ளாயிருக்கு, நிறைய இருக்கு பறிச்சிக் கொடுங்க” என்று சொன்னது. ஆணாடு எட்டிப்பார்த்துவிட்டு, “ ஏண்டி வனம் பூரா எவ்ளோ புல்லிருக்கு, வா அதையெல்லாம் போய் சாப்பிடலாம். இதைப்பறிக்கும்போது கிணத்துக்குள்ளாற விழுந்தாலும் விழுந்துடுவேன்....மேலே எறிவரவும் வழி இல்லை, உள்ளேயேக் கிடந்து சாக வேண்டியதுதான்” என்று சொன்னது.
அதைக்கேட்ட பெண்ணாடு “எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை, அந்தப்புல்லுதான் வேணும்” என்றது. ஒரு நிமிடந்தான் தாமதம்....ஆணாடு சினத்துடன் “ஏண்டி அந்தப்புல்ல பறிக்கப்போயி என்னுயிரேப் போனாலும் போயிருமினு சொல்றேன், அதக்காதுல வாங்காம ...அந்தப் புல்லுதான் வேனுங்கிற..என்னை என்ன பொண்டாட்டி பேச்சைக் கேட்டு உயிரை விடப்போறானே அந்த முட்டாப்பய ராஜான்னு நெனைச்சியா?”னு கேட்டுக்கிட்டே ரெண்டு முட்டு முட்டுச்சாம் சரியானபடிக்கு..பெண்ணாடு ஒட்டம் எடுத்திருச்சாம்.
அதைக்கேட்ட ராஜாக்கு அப்பதான் புத்தி வந்துச்சாம், “ எவ்ளோப் பெரிய தவறு செய்ய இருந்தோம்....ஆட்டுகுட்டிக்கு இருந்த அறிவுகூட நமக்கு இல்லையே”னு சொல்லிகிட்டே ராணிக்கு ரெண்டு குடுத்தாராம் செவில்ல....சிவ சிவா....

2 comments:
Super..
thnx!!
இந்த கதையோட முடிவில என்ன தெரியுதுன்னா நீங்க ஒரு ஆணியவாதின்னு :)
Post a Comment