Tuesday, February 9, 2010

படிச்சா புரிகின்ற கவிதைகள்......வா.மு.கோமு

அந்தத்துக்கனாங்குருவி மேல்
அளவு கடந்த காதல் எனக்கு.
உன் வீடு உன்மனம் போலவே
அழகானதென நண்பர்கள்
சொல்கிறார்களே...
கூட்டிப் போயேன் என்றேன்.
பின்னொரு நாளில்-
ஜன்னல் வழியே தன்
திருமண அழைப்பிதழை
போட்டுச் சென்றது அது !
இனி குருவி கூடு போனாலென்ன ?
காடு போனாலென்ன ?
காத்திருந்தேன் ஜன்னலில்
அடுத்த குருவிக்காய் !
***************************************************
மங்காங்காட்டு கெணத்துல
தண்ணியில்லாத போது
பக்கத்தூட்டு அம்முணி
வுழுந்தபோது வேடிக்கை
பார்த்தது பதினெட்டு பேரு.
அதே கெணத்துல
அவ புள்ளை சரஸா வுழுந்தப்போ
வேடிக்க பார்த்தது
இரவத்தி அஞ்சு பேரு.
நானு உழுந்தபோது ?
எனக்குத்தா நீச்ச தெரியுமே!
நனைஞ்சு வந்தேன்.
ஏழு பேரு ரோட்டுல பார்த்தாங்க.

***************************************************

கண்ணுக்கு எட்டியது வரை 
கெழக்கால கோடியில
விநாயகர் கல்லு
மேற்கால கோடியில
சரோசா வீடு.
தெக்கால கோடியில
திரும்பிப் பார்க்க முடியல.
வடக்கால கோடியில
ரயில்வே ரோடு
இதையெல்லாம் படுத்துட்டே
வேடிக்கை பார்த்துட்டு நானு.

***************************************************

மாயமுமில்லே !
சிகரெட் நுனி
கோபப்படப் போகிறது.
எங்கே யாராச்சிம்
வத்திப் பெட்டி குடுங்க !

***************************************************

அந்த பூமட்டும்
வாசமடிக்காம இருந்திருந்தா
நா ஏன் அதைப் போயி கிள்ளுறேன் ?
நீ மட்டும் சிரிக்காமப்
போயிருந்தா  நா ஏன் இப்புடி
கவிதை எழுதீட்டு இருக்கோனும்?
இப்புடி எல்லாம் நடக்கலீன்னா
கிரீஸ் கழுவீட்டு...
பிளேட் கழுவீட்டு...
பஞ்சர் ஒட்டீட்டு...
இப்புடி ஏதாவது ஒன்னுதான
பண்ணீட்டு இருப்பேன்!

***************************************************

ஒடக்கானை கல் விட்டெறி
பனைநீர்ச் சட்டிக்கும் கல்விட்டெறி
குரைத்து ஓடும் நாயையும்
விட்டுவிடாதே!-கல்விட்டெறி.
சண்டைக்காரனின் மண்டையை உடை.
பம்மிப் பம்மிப் பின்வாசல் வழி போ.
திருஷ்டி சுற்றும் அம்மாவுகு
அமைதியா குந்தி உட்காரு.
முதுகில் போட்டா ரெண்டு வாங்கிக்க.
கருவாட்டு வத்தக் குழம்போட
கூலு குடிச்சுப் போட்டு
பள்ளியோடத்து புஸ்தவத்த
தலைக்கு கொடுத்து
கால் நீட்டித் தூங்கு !
கனவுல அஞ்சாங்கிளாசு
அம்சா வந்தாலும் வருவா !
கூட்டிட்டு போயி ஒரு பாட்டு பாடு.
அனுபவிடா ராசா !
***************************************************
டிஸ்கி:
இவைகளும் நமது வலைப்பூவுக்காக வா.மு.கோமு இயற்றிய கவிதைகளே..............................

14 comments:

Paleo God said...

வரிகள் எல்லாம் மண் வாசனையா இருக்கு..:))

எறும்பு said...

Paasatha kaatiaachu

கருந்தேள் கண்ணாயிரம் said...

உண்மையாவே படிச்சா புரியற கவிதைகள் தான் . . ரொம்ப நல்லா இருக்கு . .இன்னும் நிறைய போடுங்க. . :-) . .அப்படியே சாந்தாமணி பத்தி ஒரு விமர்சனம் எழுதலாமில்ல . . என்ன நான் சொல்றது . . .

மரா said...

@ ஷங்கர்
அதுதான் கோமுவின் தனித்தன்மை. நன்றி.

@ எறும்பு
ரொம்ப நன்றி நண்பரே.

மரா said...

@ கருந்தேள் கண்ணாயிரம்
வாங்க தேளு. சீக்கிரம் போட்ருவோம்ணே!

அண்ணாமலையான் said...

யெப்பா படிச்சா புரியற மாதிரி கவிதன்னு ஒன்னு இருக்கா? ஆனா இதெல்லாம் சூப்பரா புரியுது.. நல்லா இருக்கு..

Unknown said...

படிச்சோன்ன புரிஞ்சிடுச்சு..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப அருமையான கவிதை வரிகள்

நல்லாருக்கு கிராமிய மணம் ...

வாழ்த்துக்கள்

மரா said...

@ அண்ணாமலையான்
அதாண்ணே இது.வருகைக்கு ரொம்ப நன்றி.

மரா said...

@ பேநா மூடி
வாங்க பாஸ்.நானும் தஞ்சாவூர் P.R.College தயாரிப்பு தான்.

@ ஸ்டார்ஜன்
நன்றி தோழரே. உங்க கல்லூரி விழா இனிதே முடிந்ததா?

geethappriyan said...

தலைப்புக்கேத்த கவிதைகள் தான்.ரம்மியம்,ஃபார்மாலிட்டி டன்

மரா said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
வாங்க பாஸ்.நன்றி.

kailash,hyderabad said...

vanthaachu.ottukal pottachu.

kavithail anaiththum elimaiyaga padiththavudan puriyumbati romba nalaa irukku.

மரா said...

@ kailash
ரொம்ப நன்றி கைலாஷ்.