Wednesday, March 10, 2010

வெவ்வெவ்வே

                                                         -மயில்ராவணன்
“ரஞ்சிதாவுக்குத் தான் காதல்ங்ற விசயமே பிடிக்காதுன்னு தெரியும்ல பார்வதி.நீ ஏன் அவகிட்ட திரும்ப திரும்ப அதைப்பத்தியே பேசிக்கிட்டுருக்கே? பார் அழறா பார்..அழாத ரஞ்சிதாக் கண்ணு....அவளை அடிச்சுடலாம்..? என்று நான் “ரஞ்சிதாவின் முதுகைத் தொட்டேன்.

“நீ ஏண்டி சுகந்தி அவளை தேற்றிட்டு இருக்கே? பெருசா காலேஜ் வந்து BA எடுத்துட்டா...முதல் வருஷமே இவளை நாம வீட்டுக்கு அனுப்பி இருக்கனும்.நம்ம ரூம்ல இந்த சாமியார் சனியனை ஹாஸ்டல் வார்டன் குண்டம்மா போட்டு உட்டுட்டா!
எந்நேரமும் சாமிபடத்துக்கு ஊதுபத்தி, சூடம் காட்டிட்டு...
போகச்சொல்லு சுகந்தி அவளை ஏதாச்சும் சாமிமடத்துக்கு” என்று கத்தினாள் பார்வதி.

“நீ பேசாம இருடி பார்வதி..ரூம்க்கு இவளை மாதிரியும் ஒருத்தி வேணும். உனக்கு விசயம் தெரியுமா பார்வதி... இன்னிக்கி என் ஆளு மாயாஜால் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்தான். ’The Queen"ன்னு ஒரு காதல் படம் டயானாவ பத்தி எடுத்தது.கூட்டமே இல்லை..என் ஆளு என் உதட்டை....! என்றபோது ’ஙேஏஏஏஏ’ என்று ரஞ்சிதா ஆரம்பித்தாள். காதுகளைப் பொத்திக் கொண்டாள்.தலையணையை தூக்கி பார்வதி மீது வீசினாள்.


”முழுசா கேளு ரஞ்சிதா...ஙேங்ஙேன்னா விட்டுடுவமா? “
        “ஐ அப்புறம் என்னாச்சு சுகந்தி?” என்று கிட்டே வந்தாள் பார்வதி.
        “அந்த உதடுகள் இருக்கே....யப்பா” என்று நான் மேலே பார்க்க...
        “கொன்னுட்டேடி ய்யோ அப்புறம்?” என்றாள் பார்வதி..ரஞ்சிதா காதுகளைப் பொத்திக் கொண்டு கட்டிலில் குப்புற சாய்ந்தாள்.


எப்போதும் ரஞ்சிதாவை நாங்கள் இப்படித்தான் செய்வோம்.எங்களுக்கு சினிமா கூட்டிப் போகும் காதலர்களே கிடையாது.சும்மா வேடிக்கைப் பேச்சுதான் ஹாஸ்டல் ரூமில். ரஞ்சிதாவுக்கு விளையாட்டு என்பதே தெரியாது! காதல் என்றோ,ஆண்கள் என்றோ பேசினாலே பிடிப்பதில்லை!அழுது ஆர்ப்பாட்டம் போடுவாள்.


”பாவம் இன்னைக்கு இத்தோட விட்டுடலாமா பார்வது?” என்று கண் அடித்தபடி கேட்டேன்.
”என்னோட ஆள் இன்னிக்கு என்கிட்ட ஈவ்னிங் பண்ணின குறும்பை உன்கிட்ட சொல்லவே இல்லையே...நீ கேளேன்” என்றாள்.
”ஐயோ நான் மாட்டேன் சாமி” என்று கத்திக்கொண்டு காதுகளை பொத்தியபடி ரஞ்சிதாவுக்கு அருகாமையில் குப்புற விழுந்தேன்.
”வெவ்வெவ்வெவ்வெ” என்று என்னைப் பார்த்து பழிப்பு காட்டினாள் பார்வதி.
இதில் பாருங்கள் --
அடுத்த நாள் காலையில் எங்களுக்கு நம்பவே முடியாத செய்தியை பக்கத்து அறைக்காரத் தோழிகள் சொல்லிப் போனார்கள்.பார்வதி அதிர்ச்சியில் சிலை மாதிரி நின்றாள்.எனக்கே விசயம் அப்படித்தான் இருந்தது!
”ரஞ்சிதா வாட்ச்மேன் நித்யானந்தத்தோடு ஓடிப்போய் விட்டாளாம் இரவில்”.

25 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

ஹைய்யோ....ஹைய்யோ..... கலக்கல் அப்பு :))

செ.சரவணக்குமார் said...

ரைட்டு தல‌.

ச.முத்துவேல் said...

send it to ananda vikadan, kumudam like magazines for one page story. Definitely will publish.

தண்டோரா ...... said...

உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே..ரஞ்சிதா வாந்தி எடுக்கிறா!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரஞ்சிதா பலே ஆளுதான்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஏனுங்கண்ணா வெந்த புண்ணுன்னும் பார்க்காம இப்படி வேலை பாய்ச்சுறீங்களே?
ஹாஹாஹா
தயவு செஞ்சு அந்த விளம்பரப்பலகையை எடுங்கஜி.ரொம்ப ஓவராயிருக்கு.
அப்புறம் நான் என் சைட்டில்எடுத்துடுவேன்.ஆமா.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ஓட்டுக்கள் போட்டாச்சுங்கண்ணா

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

தயவுசெஞ்சு அந்த விளம்பரத்தை எடுங்க மேடி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

வெந்த புண்ணுன்னும் பாக்காம வேல பாய்ச்சுறீஙகளேண்ணா?

மயில்ராவணன் said...

@ சைவகொத்துப்பரோட்டா
நன்றி நண்பரே

@ செ.சரவணக்குமார்
நன்றி. வீட்டில் அனைவரும் நலமா?

மயில்ராவணன் said...

@ ச.முத்துவேல்
கண்டிப்பாக அனுப்பிடுறேன் கொஞ்ச நாளுக்கு அப்புறம்..நன்றி மாதவன்.

@ தண்டோரா
இது அந்த ரஞ்சிதா இல்லை..... :)

@ ஸ்டார்ஜன்
வருகைக்கு நன்றி.

@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
ஒட்டகம் வாங்கியாராம போய்ட்டீங்கன்னா?அதுக்குத்தேன் இம்புட்டு பாசம்....

ஜெட்லி said...

ரைட்டு....! :))

கருந்தேள் கண்ணாயிரம் said...

நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு . . .சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு . . ஹீ ஹீ . . சரக்கு ஃபுல்லா போய்க்கினு இருக்கு . . அந்த நேரத்துல பார்த்தா இப்புடி ஒரு பதிவு . . . :-) ஹிக் . ஹிக் . . சூப்பரு !

Chitra said...

very funny! :-)

kailash,hyderabad said...

நல்லாருக்கு.
வா.மு.கோமு வை எழுத சொல்லுங்க. முக்கியமான நேரத்தில எங்க போயிட்டார் ?.

ஹாலிவுட் பாலா said...

இதனால் அறியப் படும் நீதி யாதெனில்???!!!!!!!!! :) :)

சங்கர் said...

ஏம்ப்பா, பார்வதி சுகந்தின்னு நாலெழுத்து தோழிகள் மட்டும் தான் உண்டா? ரெண்டெழுத்துல யாரும் இல்லியா :))

மோனி said...

இதனால் அறியப் படும் நீதி யாதெனில்???!!!!!!!!! :) :)

உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே..ரஞ்சிதா வாந்தி எடுக்கிறா!!

என்ன ஒரு நீதி...!

வாய்ப்பாடி குமார் said...

அப்புறம் எங்க ஓடிப் போனீங்க , அதான் போன் ரெண்டு நாளா சுவிட்ச் ஆப்பா?
வாமுகோமு வேற ஆளைக்காணோம் , ஒரு அறிவிப்பப் போடு நெட்டுல அப்படின்னு சொன்னாரு. இதுதான் மேட்டரா ! ரஞ்சிதா நல்ல அழகா?

thenammailakshmanan said...

மயில் ராவணன் உங்களாலதான் இப்படி சிரிக்கவைக்கும்படி எழுத முடியும் ...ஆமா வாமு கோமு எங்கே ..?உங்களுக்கு மிக சரளமா வருது நகைச்சுவை...

மயில்ராவணன் said...

@ ஜெட்லி
நன்றி

@ கருந்தேள் கண்ணாயிரம்
உங்க பாசம்தான் நண்பரே எனக்கு கிக்.

@ சித்ரா
நன்றி

@ கைலாஷ்
நன்றி. கோமு அமெரிக்கா போயிருக்கிறார். அடுத்த மாதம் வருகிறார்....

மயில்ராவணன் said...

@ ஹாலிவுட் பாலா
நன்றி.

@ சங்கர்
இப்படில்லாமா கேள்வி கேக்குறது?

@ மோனி
நன்றி முதல் வருகைக்கு.

@ தேனம்மைலெட்சுமணன்
நகைச்சுவையால் தான் நாம் இன்னும் மனிதர்களாக இருக்கிறோம்னு நெனைக்கிறேன்.

மயில்ராவணன் said...

ஒண்ணுமில்லைங்க...என் செல்பேசி காணாமப்போயிருச்சி....அதான் பிரச்சனை

வாய்ப்பாடி குமார் said...

அய்யா , வாமுகோமு உங்களைக் கூப்பிடச்சொன்னார்.

உங்க செல் காணாம போனாலும் உங்களோட போலிஸ் மொபைலருந்து கூப்பிடச்சொன்னாரு.

நம்பர் வேணுமின்னா நம்ம வாமுகோமு பிளாக்கில இருக்குது , கொஞ்சம் பாருங்க.

சசிகுமார் said...

ரஞ்சிதாவ கொஞ்சம் விடுங்க தல பாவம் அந்த பொண்ணு.