Tuesday, March 16, 2010

காதல் கவிதைகள் - வா.மு.கோமு

என்னைக் கிள்ளி
எடுத்து
உன் கூந்தலில்
சூடிப்போ!

*************************************************************
நீ எல்லாவற்றையும்
மறைக்கிறாய்.
என்னையும் உன்னுள்.

*************************************************************
ஒவ்வொரு பார்வையிலும்
ஓராயிரம் ரகசியத்தை
உன் விழிகள் சொல்கின்றன.
-சும்மாதான் பார்த்தேன்
என்கிறாய்!என்னையே உன்
பார்வையால் விழுங்கிவிட்டு.

****************************************************************
உன் கடிதங்களை
எதிர்பார்ப்பது கூட
வழக்கமாகி விட்டது.
எப்பொழுதும் நீ
கடிதம் எழுதாத போதும்.

******************************************************************
எனக்கு பிடிக்காததையே
செய்யும்
எனக்குப் பிடித்தமானவள் நீ.

*******************************************************************
உனக்கே என்னை
தெரியவில்லை எனில்
யாருக்குத் தெரிந்து
என்ன பயன்?

**************************************************************
நீ தான் சொன்னாய்
நீ என்னில் பாதி என.
தவறு சகி
நான் உன்னுள் முழுமை.

***************************************************************
என்னை மறந்து விட்டீர்களா? என்கிறாய்.
மறக்கவில்லை.
ஞாபகத்திலிருந்து அடித்திருக்கிறேன்.
மறப்பதற்கான முயற்சியா? என்கிறாய்.
முயற்சியல்ல சோதனை
வெற்றி பெறுவீரா? என்கிறாய்.
உன்னால் முடிந்திருந்தால், என்கிறேன்.

*****************************************************************
எப்போதும் போல் வசந்தம் வருகிறது
பூமி குளிர்கிறது
நீயும் நானும் வேறுவேறு பக்கம்
சுவாசித்தும்.

*****************************************************************
ஆறாதிருந்த ரணத்தின் மேல்
கனல் கக்கும் வேல்
எய்தவள் நீயும் சுகமற்றிருக்க !

*****************************************************************
அன்பை விதைத்து விட்டு
அறுவடை சமயத்தில்
பைபை சொன்னவள் நீ.

*****************************************************************

எனது பிரியத்தின் மீது
மிகப்பெரிய முற்றுப்புள்ளியை
வைத்தவள் நீ!

*****************************************************************
நாவுகள் நிஜம் பேசுமென்பது
நம்பத்தகுந்ததல்ல என்பதை
மறுபடியும் நிரூபணம் செய்தவள் நீ !

******************************************************************

21 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அசத்தல்..:))

அடிக்கடி இப்படி(யும்) போடுங்க..:))

Madurai Saravanan said...

கவிதை அருமை. காதல் ரசம் பொழிகிறது..வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை மிக அருமை.. வாழ்த்துக்கள்.

Chitra said...

எப்போதும் போல் வசந்தம் வருகிறது
பூமி குளிர்கிறது
நீயும் நானும் வேறுவேறு பக்கம்
சுவாசித்தும்.


........... Life goes on!
Very nice ones.

புலவன் புலிகேசி said...

//நீ தான் சொன்னாய்
நீ என்னில் பாதி என.
தவறு சகி
நான் உன்னுள் முழுமை//

இது நச்...

சைவகொத்துப்பரோட்டா said...

காதல் சொல்லிய விதம் நன்றாக இருக்கிறது.

மயில்ராவணன் said...

@ ஷங்கர்
கண்டிப்பாக போட்ருவோம்.நன்றி கவிஞரே..

@ மதுரை சரவணன்
ஆமாம்.ஏமாற்றத்தின் வலியும் நிறையா இருக்கு.

@ ஸ்டார்ஜன்
நன்றி நண்பரே.

@ சித்ரா
எனக்கு மிகவும் பிடித்த கவிதையும் அதுதான்.

@ புலவன் புலிகேசி
மிகக்குறைந்த வரிகளில் வீரியமிக்க கவிதைகள் கவிஞரே!

@ சைவக்கொத்துப்புரோட்டா
ஆமாம நண்பரே...நன்றி

Anonymous said...

வாவ்..அருமையான கவிதை வரிகள். மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் ஜனரஞ்சக வரிகள்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

வரிகள் மிக அருமை இனிமை
வாமு கோமு அசப்பில் இளமைக்கால் பூவிலங்கு மோகன் போல இருக்கிறார்:)

Sabarinathan Arthanari said...

நல்ல கவிதைகள்

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Mehar said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

A.சிவசங்கர் said...

அசத்தி விட்டிர்கள்

காதல் காதல் பொங்கி வழிகிறது

மயில்ராவணன் said...

@ அடலேறு
நன்றி நண்பரே..

@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
ஆமாம் அந்த போட்டோ எடுத்து 3 வருஷம் ஆச்சு.

@ சபரிநாதன் அர்த்தநாரி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@ சிவசங்கர்
ரொம்ப நன்றி வருகைக்கு.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

கவிதை அருமை.

thenammailakshmanan said...

எப்போதும் போல் வசந்தம் வருகிறது
பூமி குளிர்கிறது
நீயும் நானும் வேறுவேறு பக்கம்
சுவாசித்தும்.//

இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் மயில் ராவணன்

மயில்ராவணன் said...

@ கனவுகளின் காதலன்
நன்றி நண்பரே...

மயில்ராவணன் said...

@ தேனம்மைலெட்சுமணன்
ரொம்ப நன்றி.

Sivaji Sankar said...

//நாவுகள் நிஜம் பேசுமென்பது
நம்பத்தகுந்ததல்ல என்பதை
மறுபடியும் நிரூபணம் செய்தவள் நீ !//

:) Vry Good. :)

c said...

very nice love poems

"உழவன்" "Uzhavan" said...

முதல் கவிதையே சூப்பர்..

Selvam Muniyandi said...

இதயத்தில் இருக்கும் அவளுடன் அதிகம் பேசி பேசி
இந்த ஞாயிற்றுக்கிழமை இரவு "நீயா நானா" நிகழ்ச்சி என் தொலைகாட்சியில் பார்க்கவில்லை
அதற்க்கு பதிலாக என் இதய மேடையில் "நீயா நானா" நடக்கிறது

Want more check this out: http://alanselvam.blogspot.com/