Monday, June 7, 2010

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்

                                                   -மயில்ராவணன்

                          இருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க பெண்கள் எல்லாம் பதினாறு வயது பெண்களின் உடல் வாகைப் பார்த்து பெருமூச்சுதான் விடவேண்டும். ஆகவே பதினாறுகள் நிற்கும் பஸ்நிறுத்தத்தை இருபத்திஇரண்டுகள் தவிர்த்து வேறு நிறுத்தத்திற்கு சென்று விடுவார்கள். முகம் ஒடுங்கிப்போன இருபத்தி இரண்டு பார்ப்பதற்கு முப்பது போன்று தோற்றமளித்தது. என் பார்வையை அது சட்டை செய்யவில்லை. கிட்டே நெருங்கி வந்து மணி 
என்ன என்றது!


                       நானோ வேறு ஏதோ ஞாபகத்தில் நாலே முக்காலோ கிளாக் என்றேன். சார் நான் கேட்டது டைம்! என்றது மீண்டும். சாரி மேடம்...ஐந்தேமுக்கால் என்றேன். தேங்க்ஸ் என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு நின்றது. இதற்கு சிரிப்பு வேறு க்லோஸப் விளம்பரப்பெண் போல!


பஸ் நிறுத்தத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டது. காலேஜ் பையன்கள் ஒரே ஒரு லாங்சைஸ் நோட்டை கையில் பிடித்து விரலில் வைத்து பம்பரம் போல சுற்றிக் கொண்டு வந்தார்கள்.இருபத்தி இரண்டு என் அருகிலேயே பஸ்சுக்காக காத்திருந்தது!


’ம்மா சுமதி, அன்று உனக்குப் பிறந்தநாள்...நான் உனக்காக குங்குமச்சிமிழ் பரிசு குடுத்தேனம்மா... நீயும் அதை வாங்கீட்டு கோடி நட்சத்திரம் ஒண்ணா சேந்தாப்ல ஹ்ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரிச்சியேம்மா...உன்னால அந்த குங்குமச்சிமிழுக்கு அழகு வந்ததா? இல்ல அந்த குங்குமச்சிமிழாலே உனக்கு அழகு வந்துச்சாம்மா? அம்மா...சுமதி? என்று சிவாஜி போல ஒருவன் வசனம் பேச, என் அருகில் நின்ற பெண் சுமதி போலிருக்கிறது. உதடுகள் பிதுங்க என்னைப் பார்த்தாள். 


                       நான் என்ன சிம்புவா? சும்மா சம்மு சம்மு சம்மு சம்மாணம் பண்ணிடுவேன்னு வசனம் பேச? இல்லை ரப்பர் பாண்ட் எடுத்து சர்சர் என்று தலைக்கு போட்டு விரல் காட்டி கார் மீது கால் வைத்து ஏறி அவர்களை மிதிக்க? நிழற்குடையில் அமர்ந்திருந்த பிச்சைக்காரன் ரஜினி மாதிரி ஹஹ்ஹா!ஹா! என்று சிரித்தான். நான் நினைத்ததை கண்டு கொண்டானோ? 
பையன்கள் பஸ்சுக்காக காத்திராமல் அகன்றார்கள். சுமதி அமைதியானாள்.


எனக்கு திடீரென சிந்தனை தறிகெட்டு ஓடியது!பாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தேன். மதியம் ஆபிஸ் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று பதமான மடக்கு சூரிக்கத்தி வாங்கினேன். பத்திரமாக இருந்தது. கடையில் விதவிதமான கத்திகள் மாடலை காண்பித்தார்கள். எல்லாம் வெங்காயம் நறுக்குவதற்காத்தான் என்று அவன் நினைத்திருக்க கூடும்.ஆனால் நான் வெங்காயம், மிளகாய் நறுக்க வாங்கவில்லை! இன்று ரத்தமில்லா கொலை ஒன்றுசெய்யபோகிறேன். ஆமாம். அந்த கொலையை நான் செய்வதற்காக யோசித்தபோதே என் முகம் விகாரமாகி விட்டதாம்.


                      ஆபிஸில் ஷாலினி, நைட்டு தூக்கமில்லையா மயில்? விடிய விடியவா ப்ளாக் எழுதுறீங்க? பேய் மாதிரி முழிக்கிறீங்க? என்று கிண்டலடித்தாள்! ஆனால் அவள் முகம் தான் தூங்கா முகம் போல இருந்தது!


நான் பஸ்ஸிற்கு காத்திராமல் நடையிட்டேன். சுமதி, சார் நடந்தேவா என்றாள். அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் காவு கேட்கும்பேய்களையும், குறுக்கிட்ட பூதங்களையும் கைகளால் அப்புறப் படுத்தி விட்டு வீடு நோக்கி நடந்தேன்.


நான் வீடு வந்த சமயம் உள்ளே..அனுஷ்காவின் கொஞ்சும் குரல் வீட்டினுள் கேட்டது!” சொல்லுடா குட்டி... அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா! இலையில் சோறு போட்டு!” என்று! எனக்கா வந்தது கோபம்! 


                      “அனு” என்றேன். அப்பா வந்துட்டார்டா கண்ணா! சமர்த்தா படுத்திரு” என்ற குரல் கதவுக்கு அருகாமை கேட்டது! அவள் கதவை திறந்தாள். நான் உள்ளே சென்றேன். சனியன் படுத்திருக்குது பார்! கறுவினேன்.


வாழ்வில் எப்போதும் சந்தர்ப்பங்கள்தான் முந்திக் கொள்கின்றன. நாம் தான் தயாராக எப்போதும் இருப்பதில்லை, என்று வேறு மனம் கூறியது. அனுஷ்கா எனக்கு காபி கலந்து கொடுத்தாள். நான் லுங்கியை அணிந்து கொண்டே வாங்கிக் கொண்டேன். பக்கத்து வீட்டிலிருந்து குட்டிப்பெண் ஓடி வந்து அனுவை, அம்மா கூப்பிடுது என்று அழைத்துப் போனாள். நான் தயார் ஆனேன். பாண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து விரித்தேன். 


                         ஷோபாவுக்கு விரைந்தேன். சதக்...சதக்.. ஸ்பிரிங் ஒருபக்கம் தெரித்தது! அது அழகான உடையணிந்த ஃபாரின் பெண் பொம்மை! பை ஒன்றினுள் பிய்த்து திணித்தேன். வீட்டின் பின்புறம் சென்று பையோடு சாக்கடையில் வீசினேன். அப்பாடா! காபியை எடுத்துக் கொண்டு ஷோபாவில் நிம்மதியாய் அமர்ந்தேன். ஒரு மூன்று வாரமாக மனைவியை கொஞ்சவே விடாத சனியனை ஒழித்தாயிற்று! 


                        இவள் அக்கா ஃபாரினில் இருந்து வாங்கி வந்து கொடுத்த குட்டிச் சாத்தான் அது! எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாகிறது,குழந்தை இல்லை என்றால் பொம்மை வாங்கி வந்து கொடுத்தா கிண்டல் பண்ணுவாள்? இவள் அவளுக்கும் மேல்! முத்தம் கொடுக்கலாம் என்றால் குழந்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கிறதாம்! இவளுக்கும் குழந்தை பைத்தியம் பிடித்து பொம்மையை குழந்தையாக்கி விட்டாள். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர்! பாட்டு வேறு!


சரி போகட்டும்! விசயம் என்னவாயிற்று என்கிறீர்களா? மங்கிய பூஜ்ய வாட்ஸ் பல்பு போல ஒளி மங்கிய என் மனைவியின் முகம் காண ஒரு மாதம் சிரமம் தான் எனக்கு! ஆனால் காட் புண்ணியத்தில் அவள் வயிற்றில் இந்த மாதம் டிக் டிக் அடித்து கொண்டிருக்கிறது! இப்போது இருவர் முகத்திலும் 1000 வாட்ஸ் பல்பு ஒளிர்கிறது!


ஒன்று போனால் தான் ஒன்று வரும்.
மூதேவி போனால் தான் ஸ்ரீதேவி வருவாள்!
டிவிஎஸ் போனால் தான் மாருதி வரும்!
டூப்ளிகேட் போனால் தான் ஒரிஜினல் வரும்!

17 comments:

Chitra said...

Twinkle twinkle star story. :-)
nice.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//ஒன்று போனால் தான் ஒன்று வரும்.
மூதேவி போனால் தான் ஸ்ரீதேவி வருவாள்!
டிவிஎஸ் போனால் தான் மாருதி வரும்!
டூப்ளிகேட் போனால் தான் ஒரிஜினல் வரும்!//

சாமி பன்ச் டயலாக் எல்லாம் சொல்லுது.

===
செம ஸ்டைலான புனைவு நண்பா.
ஒரிஜினல் பேரோடயே களமிரங்கிட்டீர்?

கிருஷ்ணமூர்த்தி said...

சுஜாதா பாணி ரொம்பவுமே பாதித்திருக்கிறது போல :-)))

கதை மிகவும் நன்றாக இருக்கிறது! இன்னும் கொஞ்சம் வார்த்தைகளுக்கு மெருகூட்டி பாருங்கள்!

ஒன்று போனால் இன்னொன்று வரும் என்று கடைசி நான்கு வரிகளில் சொல்லியிருப்பதையே டெவலப் செய்தால் ஒரு நாவலே எழுதுவிடுவீர்கள் போலத் தெரிகிறதே!

செ.சரவணக்குமார் said...

சூப்பர் நடை மயில்.

நிறைய எழுதுங்க நண்பா.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஜூப்பருங்கோவ்!! :-)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஜூப்பருங்கோவ்!! :-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

//ஒன்று போனால் தான் ஒன்று வரும்.
மூதேவி போனால் தான் ஸ்ரீதேவி வருவாள்!
டிவிஎஸ் போனால் தான் மாருதி வரும்!
டூப்ளிகேட் போனால் தான் ஒரிஜினல் வரும்//

இதுல எதுவும் ட்ரிப்பிள் மீனிங் இல்லையே ??? ;-)

வெல்கம் பேக் !! வெல்கம் ஃப்ரண்ட்.. வெல்கம் டாப்.. வெல்கம் பாட்டம் ! ;-)

மயில்ராவணன் said...

@ சித்ரா
வருகைக்கு நன்றிங்க.

@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
இதுவும் புனைவுதாண்ணே!

@ கிருஷ்ணமூர்த்தி
ரொம்ப நன்றி சார். சுஜாதா எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர்.

@ சரவணக்குமார்.செ
வாங்க.நல்லா இருக்கீயளா?

மயில்ராவணன் said...

@ ஷங்கர்
புதுவீட்டுக்கு வாழ்த்துக்கள்.

@ கருந்தேள்
நன்றி ராஜேஷ்.

மணிஜீ...... said...

ஆளை மறந்துட்ட போல

butterfly Surya said...

ஆஹா.. சாமியோவ்... சூப்பர்.

அமைதிச்சாரல் said...

கதை நல்லாருக்கு :-)

மயில்ராவணன் said...

@ மணிஜீ
உங்களோடு பழகிய ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்க இயலுமாண்ணே..

மயில்ராவணன் said...

@ பட்டர்ஃப்ளை சூர்யா
நன்றி சார்.

@ அமைதிச்சாரல்
நன்றிங்க.

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

Your comments are highly appreciated. Thanks

shortfilmindia.com said...

மயில் அப்ப இத்தனை நாள் பொம்மையினால் தானா..? :)

கேபிள் சங்கர்

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

கலக்குகிறீர்கள். தொடருங்கள் உங்கள் அட்டகாசமான எழுத்துக்களை.