Thursday, May 13, 2010

இசை சுனாமி சாருவுக்கு - S.சுதர்சன்


                   ஒருவரை குறை சொல்வது வழமையாக 
இன்னொருவருக்கு அல்வா சாப்பிடுவது போல . மாற்றுக்கருத்துக்கு எப்போதும் பிரபலம் உண்டு என தெரிந்த சிலர் செய்யும் வேலைகள் , அதுவும் பிரபல எழுத்தாளர்கள் செய்வது தாங்க முடியல்ல . இப்பிடி தான் பிரபலம் ஆகி இருப்பாங்க போல இருக்கு !! . இது வரை சிலருடைய கேவலமான கருத்துக்கு( மன்னிக்கவும் சாடலுக்கு ) எதிர்பதிவு போட்டாலே பிடிக்காது காரணம் அது மேலும் அவர்களது கருத்தையும் அவர்களையும் பிரபலமாக்கும் என்பது எனது கருத்து .  ஆனாலும் இந்த எழுத்தாளர்(தனிப்பட்ட கருத்து எழுதுபவர் ) ஏற்கனவே பிர(ரா)பலம் !!. தவறான கருத்தும் ரசனையாளர்களை சென்றடையலாம் . நிச்சயமாக இதற்கு பதில் எழுதியே ஆக வேண்டும் என்று எழுதும் பதிவு .

இது அவரை சாடும் பதிவல்ல . அவர் பதிவை பற்றியே பதில் எழுதியிருக்கிறேன் . அதுவும் இசையை பற்றி கதைச்சிட்டார் . இதுக்கு மேலயும் பொறுமையா இருக்க முடியேல்ல . மனுஷன் விட்டா ஒபாமா , அப்துல் கலாமுக்கே கடிதம் எழுதுவார் போல .



கீழே உள்ள பதிவை வாசித்துவிட்டு எனது பதிவை தொடருங்கள் . முதலில் இதை வாசிக்கவும் .
சாரு நிவேதிதாவின் பதிவு 
ஒரு கால கட்டத்தில் இளையராஜாவின் இசை அதன் சத்தை  இழந்து வெறும் சத்தமாக மாறிய போது நீங்களும் இளையராஜாவைப் போல் பென்ஷன் வாங்குவோர் பட்டியலில் சேர்ந்து விடுவீர்களோ என்று நினைத்தேன்.  

           இளையராஜா இசை பற்றி என்ன சேர் தெரியும். அவருடைய பாட்டில் நவீன காலத்துக்கு ஏற்றது போல பேஸ் கூடியது . அதை தான் சத்தம் என்கிறீர்களோ   ? ஏன் காதலுக்கு மரியாதை , கண்ணுக்குள் நிலவு, ஹேராம்  பாட்டெல்லாம் கேட்கவில்லையோ ? ரகுமானுக்கு பிந்திய காலத்தில் வந்தவையே அவை . இளையராஜா நவீன காலத்துக்கு மாற முயற்ச்சி செய்திருப்பது இந்த பாடல்கள் கேட்டால் தெரியும் . வேணாம் இளையராஜா பற்றி போனால் எழுதி  கொண்டே போவேன் . ரகுமான் விஷயத்துக்கு வருவோம் .

உங்களிடமிருந்துதான் தன்னடக்கம் என்ற பண்பைக் கற்றேன்.
      உண்மையாவா சார் ? ரகுமான் தன்னை பற்றி தானே புகழுவதில்லை. தெரியும் தானே சார் ?

நான் கடப்பா சென்று பெட்டா தர்காவில் அடங்கியிருக்கும் ஔலியாவை தரிசித்து வந்தேன்

        யாராவது கேட்டாங்களா இப்ப. அப்போ நித்தியானந்தா நிலைமை? 


இரண்டு ஆண்டுகள் கழித்து  தமிழில் முதல்முதலாக வந்த ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் உங்கள் இசை மிகவும் பலவீனமாக இருந்தது.  ரோஸானா என்ற பாடலைத் தவிர மற்ற பாடல்கள் கேட்கும்படியாகவே இல்லை.

         ஹோசானா பாடல் சாதாரண ரசனையாளர்களுக்கும் பிடிக்கும் பாடல் தான் .நீங்கள் ஷாஜியின் பதிவில் இருக்கும் கருத்தை அப்பிடியே பிரதி பலித்திருப்பது போல தெரிகிறதே ? உங்களுக்கு பிடித்தவர் தான் . முதல்ல நீங்க போய் பாட்டை கேட்டு விட்டு வந்து எழுதுங்கள் .

        விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் கொஞ்சம் உயர்தரம் . ரசனையுடன் கேட்டாலே அனைத்து பாடல்களும் தரம் . கொஞ்சம்  உயர் தரத்தில் கொடுக்கப்பட்ட பாடல்களே உங்களுக்கு விளங்கவில்லையே !! இதிலை உலகத்தரம் வேணுமாம் .. (லொள்ள பாரு )

அனைத்தும் பல்லவி சரணம்  என்ற சாதாரண தமிழ் இசை முறையை மாற்றி அமைத்த பாடல்கள் .

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற கார்த்திக் பாடிய பாடல் தனியே கிட்டாரின் திறமை . ரகுமான் இசையை இம்ப்ரோவயிஸ் பண்ணுவதில் வல்லவர் .  கோட்ஸ் மாற்றம் அருமை . ஜாய்ஸ் வகை .

அன்பில் அவன் என்ற பாடல் டெக்னோ இசையை கொண்டது . டெக்னோ இசை ரசிகர்களுக்கு பிடிக்கும் அதுவும் கோரசுடன் அருமையாக இருக்கும் . ரகுமானின் சவுண்ட் இஞ்சினியர் புகுந்து விளையாடி இருப்பார் .

கண்ணுக்குள் கண்ணை  கீஸ் , கிடார் , வயலினின் பயன்பாடு . என தனியே வேண்டும் என்றாலும் பதிவு போடலாம் .

ஆரோமலே  என்ற பாடல் ரொக்கும் நமது இசையும் கலந்த பாடல். இவ்வாறான பாடலை மலயாள இசை அமைப்பாளர்கள் உருவாக்குவதே கடினம் . உயர்ச்தாயியில் பாட வைத்து கிடார் இசையையும் எமது இசையையும் கலந்திருப்பார் . 

விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் விமர்சனமாக இந்த பதிவு அமையக்கூடாது  என்பதால் சுருக்கமாக வழங்கியுள்ளேன் .  பாடல் விமர்சனப்பதிவு(பழைய பதிவு  )  கிளிக்         

ரகுமானுக்கெண்டு ஒரு தனி பாணி உண்டு . அவரை அவர் பாதையில் செல்ல விடுங்கள். மற்றவர்களால் ரகுமானை போலவோ அல்லது ரகுமானால் மற்றவர்கள் போலவோ இசை அமைக்க முடியாது . உலக அரங்கில் நமது இசையை அரங்கேற்ற முயற்ச்சிக்கும் அவர்களிடம் நீங்கள் புத்தகத்தில் மட்டுமே  படித்த உலக இசை அமைப்பாளர்களை உதாரணம் காட்டுவது என்ன நியாயம். 

ரகுமான் திருக்குறளை அறிமுகப்படுத்தி இருப்பார் மன்னிப்பாயாவில் , இளையராஜா தேவாரத்தை அறிமுகப்படுத்தி இருப்பார் தளபதி பட பாடலில் . இருவரும் எமது இசையையும் மேலைத்தேய இசையையும் கலந்து கொடுப்பதில் வல்லவர்கள் . அவர்கள் நோக்கமும் வேறு .

   ’பெஹனே தே’ பாடலின் கடைசியில் வரும் கோரஸ் சகிக்க முடியாததாக இருந்தது.  இதே போன்ற ஒரு கோரஸை ’குலால்’ படத்தின் ’ஆரம்ப்’ என்ற பாடலில் நீங்கள் கேட்கலாம்.

        குலால் திரைப்பட ஆரப் பாட்டில் இதே போல கோரஸ் கேக்கவில்லையே. தேவையிலாமல் ஒப்பிட வேண்டாம் . அத்தகைய இசை குலால் படத்திற்க்கு தேவைப்பட்டிருக்கலாம் . ராவணா கதைக்கு இப்படியான இசை தேவைப்பட்டிருக்கலாம் . குழல் இசையில் அரச கால வாத்திய பயன்பாடு இருக்கும் . இது நவீன கால ராவணன் ,இதற்கு தேவைப்பட்டிருக்காது .
பியுஷ் மிஸ்ரா , விஷால் பரத்வாஜ் போன்றோரின் பாணி வேறு , தயவு செய்து ஒப்பீட்டை நிறுத்துங்கள் . ரகுமானுக்கு தெரியாத இசையோ அல்லது இசை அமைப்பாளர்களோ உங்களுக்கு தெரியும்  என்று எண்ணம் போல. என்ன கொடுமை ? 

 ராவணில் நீங்கள் மிக பலவீனமான ஆட்டத்தை ஆடியிருக்கிறீர்கள்.


ஆகா. இவருக்கு யாராவது வூபர் செட் வாங்கி குடுங்கப்பா . ஏதோ ரேடியோவிலை கேட்டிட்டு  வந்து எழுதிறார் போல . ரகுமானின் சவுண்ட் என்ஜினியரை  மறந்திட்டீங்க  போல . போய் ஹோம் தியேட்டர் இல்லாட்டி தரமான சத்தத்தில் கேளுங்க . நீங்க எந்த வகை பாட்டுகளை நல்ல பாடல்கள் என்கிறீர்கள் என்று தெரியவில்லை . பேஸ் கூடிய பாடல்கள் சரியில்லை என்கிறீர்கள் போல .கூடுதலாக ரகுமானின்  திறன் பாடகர்களை சரியாக பயன்படுத்துவார் . இசையை விடுத்து . கட்டா கட்ட வும் பீரா பிராவும் கேட்டதில்லையோ ? டிம்பெர்லான் போன்றோரின் இசையில் வித்தியாசமான சத்தங்கள் பின்னணியில் இருக்கும் . பிண்ணனியில் ஒலிக்கும் சிறு சிறு சத்தங்கள் தான் ரகுமானின் பலமும் .
பியுஷ் மித்ரா புகழ் பாடும் நீங்கள் லகான் பாடல்கள் கேட்டதில்லையோ ? லகான் பாடல்களில் புரட்சியுடன் கண்ணீரும் வரும் .




உங்களுடைய திறமை வெளிப்பட தமிழை விட இந்தி சினிமா அதிக இடம் கொடுத்தது

இவ்வாறு தரம் குறைந்த விமர்சனங்களை பண்ணினால் எப்படி வரவேற்பு கிடைக்கும்.
விண்ணை தாண்டி வருவாயா அனைத்து பாடல்களும் ரகுமான் தமிழுக்கு வழங்கியது . இப்போது என்ன செய்கிறீர்கள் சேர் . ஒரு வேளை இப்படியான எழுத்தாளர்கள் ஹிந்தியில் இல்லை போல. 

ஷாப் ஹாஸ்னி (அல்ஜீரியா), நான்ஸி அஜ்ரம் (லெபனான்), ரிக்கார்தோ மொந்தனர் (அர்ஜெண்டினா), பின் நவீனத்துவ இசைக்கு ஐயானிஸ் ஸெனகிஸ் (க்ரீஸ்) 

இவங்கட பாடல் எல்லாம் உண்மையிலேயே நீங்கள் கேட்டிருக்கிறேர்களா ? ஏதாவது புத்தகத்தில் இருந்து சுட்டதா ? அவர்கள் டிராக் வேறு . ரகுமான் ரகுமான் தான் .ரகுமானாகவே  இருக்க விடுங்கள் .

படிப்படியாக தனக்கென்று ஒரு பாணியை உருவாக்க ரகுமானுக்கு தெரியும் . சாதரணமாக கோட்ஸ்  மாற்றி இம்ப்ரோவிசிங் பாடல்களே விளங்கவில்லை . இதிலை எங்கிருந்து இவங்க இசை உங்களுக்கு விளங்க போகுது எண்டு தெரியேல்ல.

ரகுமான் அடிக்கடி சொல்லும் ஒன்று இசைக்குள் இறங்குங்கள் அப்போது தான் எவளவு பெரிய கடல் என்று தெரியும். நான் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன் என்றார். மற்றும் மேலைத்தேய படங்களில் பின்னணி இசை வேறு பாடல்கள் இசைக்கு வேறு இசையமைப்பாளர்  ஒரு படத்துக்கு பின்னணி இசை போடும் நேரத்துக்கு 4 பட பாடல்கள் போடலாம் என்பார் . அவளத்துக்கு பின்னணி இசை முக்கியத்துவம் பற்றி கூறியிருப்பார் . தமிழ்சினிமா அப்படியா?       
   -S.சுதர்சன்

டிஸ்கி:
    
    நண்பர் சுதர்சனின் வலைப்பூ பக்கம் சென்றேன். இப்பதிவு நல்ல கருத்துச்செறிவாக இருந்தது. வழமைபோல தெரியாத விடயங்களையேப் பேசும் எழுத்தாளர் தகதிமிதாவுக்கு நல்ல பல விளக்கங்கள் கொடுத்துள்ளார். நண்பர் சுதர்சன் கல்லூரி மாணவர், நல்ல பல விடயங்களை எழுதுபவர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள் .



23 comments:

Paleo God said...

:)

சைவகொத்துப்பரோட்டா said...

சுதர்சனுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Unknown said...

Aama.. Olaga tharam vaindha isai appudinna ennanga.. Puriyadha per ullavanga podrathaa?.. #doubt

ஜெய் said...

இதைப்படித்துவிட்டு, சாருவுக்கே மெயில் அனுப்பிவிட்டேன்..(நாம சொல்லி கேட்க மாட்டார்னு தெரியும்.. இருந்தாலும் எதிர்ப்பைக்காட்டணும் இல்ல)

அந்த மெயில் இங்கெ..

வணக்கம் சாரு..

உங்களின் இந்தப்பதிவை படித்தேன்..http://charuonline.com/blog/?p=479

இந்திய திரை இசையைப் பொருத்தவரை, இதையே எதிர்பார்க்கின்றனர்.
1. கேட்டவுடன் ஹிட் ஆகும் பாடலாக இருக்கவேண்டும்.
2. கேட்க இனிமையாக இருக்க வேண்டும்.
3. மெலடி, ஃபாஸ்ட் பீட் என வகை வகையாக இருக்க வேண்டும்.

ரோஜா, பம்பாய், உயிரே, முதல்வன், அலைபாயுதே போன்ற பாடல்கள் இந்தவகை.. மிக எளிமையானவை.. கேட்ட முதல்முறையே பிடிக்கும் வகை.. பாடல்கள் கேட்க எப்போதும் இனிமையாக இருக்கும்... (இவை அனைத்தும் எனக்கும் பிடித்தவைதான்)

ஆனால், ரஹ்மான் இசைத்த, Taal, Bombay Dreams, லகான், ஸ்வதேஷ், ஜோதா அக்பர், குரு, Slumdog Millionaire, ADA, Connections, Couples Retreat, ராவணன் போன்றவை வேறு வகை...
1. முதல்முறை கேட்டவுடன் பிடிக்காது.. (இங்கேயே பலபேர் கேட்பதை நிறுத்திவிட்டு பாட்டு சரியில்லை என புலம்புகின்றனர்)
2. முதலில் ரொம்ப பிடிக்கும் ஃபாஸ்ட் பீட் பாடல்கள், பின்னர் அவ்வளவாக பிடிக்காது.. இவை விள்ம்பரத்திறக்காக உபயோகப் படித்தப்படுகின்றன. (உதா. Shakalakka Baby from Mudhalavan, azeemo shah from jodhaa akbar, or recently, Veera in Raavanan)
3. பலநாள் கேட்டபின் பிடிக்கும் பிடிக்கும் பாடல்கள், காலத்திற்கும் நெஞ்சில் நிற்கும். (உதா. kurukku siruththavale in mudhalvan, mann mohanaa from jodhaa akbar, usire pogudhe from raavanan) ஒவ்வொரு படத்துக்கும் இப்படி பல பாடல்களை சொல்லலாம்.

ரஹ்மான் இசையில் வேறு உயரத்துக்கு சென்றுவிட்டார். (ஆஸ்கர் மற்றும் பல விருதுகளை வைத்து சொல்லவில்லை) சாதாரண இசை ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்..

எப்படி சாதாரண கமர்ஷியல் படங்களை விரும்பும் பலரால் உலக இயக்குனர்களான குப்ரிக், ஸ்கார்ஸெஸ், அகிரா குரசோவா போன்றவர்களின் படங்களை புரிந்து கொள்ள முடியவில்லையோ அப்படி..
எப்படி சாதாரண மக்களால், பல கலைஞர்கள் புகழும் மோனோலிசா ஓவியத்தை புரிந்துகொள்ள முடியவில்லையோ அப்படி.. (இது என்னையும் சேர்த்து)
எப்படி சாதாரண் வாசகனால், சுஜாதாவின் ஆ, விரும்பி சொன்ன பொய்கள் போன்ற நாவல்களின் அறபுதத்தை புரிந்து கொள்ளமுடியவில்லையோ அப்படி..
என் நண்பன் தமிழின் மிகச்சிறந்த படம் சிவாஜிதான் என்கிறான்.. அவனுக்கு, அன்பே சிவம், நாயகன், மஹாநதி போன்ற படங்கள் போர்... அப்படிதான் இருக்கிறது பலபேர் ரஹ்மானின் சமீபத்திய இசையை புரிந்து கொள்ளாமல் பேசுவது..

பலருக்கு புரியாத இசையை ஏன் இசைக்க வேண்டும் என கேட்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.. ஏனெனில், அதே கேள்வியை, உலகின் தலைசிறந்த ஓவியர்களிடமும், எழுத்தாளர்களிடமும், இயக்குனர்களிடமும், இசையமைப்பாளர்களிட்மும் கேட்க வேண்டி இருக்கும்..

-ஜெய்.

வால்பையன் said...

எனக்கு இம்புட்டு அறிவு கிடையாதுங்கண்ணா!

geethappriyan said...
This comment has been removed by the author.
VISA said...

இசையை பொறுத்தவரை நான் ஒரு சாதாரண ரசிகன்.
ஆனால் சிலரின் விமர்சனங்கள் சில நேரம் எரிச்சலூட்டுகின்றன.

உதாரணமாக உயிர்மையில் ஷாஜியின் கட்டுரையில், அவர் வி.தா.வ. பாடல்கள் கேட்கவில்லை என்றும்,
பிறகு யாரோ இவரை வற்புறுத்தி கேட்க வைத்ததாகவும், கேட்டபிறகு பாடல்கள் அவ்வளவாக சரியில்லை என்று
விமர்சனம் எழுதியிருந்தார்.
அதே பாணியில் தான் சாருவும் எழுதியிருப்பார்.

அதாவது எல்லோரும் கேட்க அலையும் ஒரு இசையை யாரோ வற்புறுத்தியதால் கேட்டேன் என்ற அலட்சியத்தையும் , மேதாவித்தனத்தையும்
வெளிப்படுத்துவதன் அவசியம் என்ன?

AND

இசை வேறு. திரை இசை வேறு.
திரை இசையை அதன் அளவுகோளில் விமர்சிப்பது தான் அழகு.
வெறும் வாத்தியங்கள் ஏற்படுத்தும் ஒலியின் மிக அருமையான கலவையை விட திரை இசையில் வெளிப்படும் கிரியேட்டிவிட்டி மிக அவசியம்.
சும்மா எல்லாம் பாட்டு போட்டுட முடியாது.

புரியுறவங்களுக்கு புரியும்.

koothanalluran said...

பொறை தின்பவரிடம் பட்டர் பஃப் சாப்பிட்டுருக்கிறாயா என்பதும்
கதம்ப சோறு சாப்பிட்டவனிடம் காஷ்மீர் புலாவ் சாப்பிடு என்பதும்
சுக்கு காபி குடிப்பவனிடம் கப்புச்சினோ குடி என்பதும்

ஒப்பாகுமா ?

Jackiesekar said...

அந்தாளுக்கு யாராவது ஜேப்பியார் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வாங்கி குடுங்கையா..அப்போ தான் பொறுமல் அடங்கும்.--//

கார்த்தியின் கோவத்தை ரசித்தேன்..

எறும்பு said...

எங்கியோ புகையிர வாசனை அடிக்குது?
;)

கருந்தேள் கண்ணாயிரம் said...

:) இதில் சுதர்சன் சொல்லியுள்ள கருத்துகள், ஒரு பரபரப்பில், சாரு கட்டுரையைப் பார்த்தவுடனே எதிர்வினை புரிந்தே ஆகவேண்டும் என்ற அவசரத்தில் எழுதியுள்ளவை என்று தெரிகிறது . . அதுவும், இளையராஜா, ரஹ்மான், கமல் இத்யாதி வகையறாக்களை விமர்சனம் செய்து ஒரு வார்த்தை எழுதிவிட்டாலும், நம் ஆட்கள் பொங்கியெழுந்து சண்டைக்கு வந்து விடுவார்கள் என்பதற்கு இக்கட்டுரை ஒரு உதாரணம். . :-)

நிற்க. ராவணன் இசை மிகப் பலவீனமாக உள்ளது என்பதை, இசை வெளிவந்தவுடன் கேட்டு எனது ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளேன். அது மிகச் சராசரியான இசைதான் என்பது என் கருத்துமாகும். .

வெல் . . இதைத்தவிர, இப்பதிவைக் குறித்துச் சொல்ல ஏதுமில்லை நண்பா . . :-)

karthic said...

truly Awesome Maestro

சுதர்ஷன் said...

நன்றி நண்பர் மயில் ராவணன் . நண்பர்களுக்கு நன்றி .

கருந்தேள் கண்ணாயிரம்
//இளையராஜா, ரஹ்மான், கமல் இத்யாதி வகையறாக்களை விமர்சனம் செய்து ஒரு வார்த்தை எழுதிவிட்டாலும், நம் ஆட்கள் பொங்கியெழுந்து சண்டைக்கு வந்து விடுவார்கள் என்பதற்கு இக்கட்டுரை ஒரு உதாரணம்//. .

அவர்களை இசையிலோ நடிப்பிலோ குறை கூறும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை . ஒரு வேளை சாருவுக்கு( இசை மேதை ) இருக்கலாம் அல்லது உங்களுக்கு இருக்கலாம் . ராவணன் பாடல்கள் பற்றிய உங்கள் விமர்சனம் வாசிக்க விரும்புகிறேன் . விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லையே ? . தனிப்பட்ட ரீதியில் ரகுமானை சாடி உலக இசை மேதைகளுடன் ஒப்பிட்டு எழுதியதையே நான் குறை கூறுகிறேன் . முழுமையாக வாசித்து விட்டு மீண்டும் பின்னூட்டம் இடுங்கள் . அவர் சரியான விதத்தில் எழுதியிருந்தால் நிச்சயம் மதித்திருப்பேன் .

சுதர்ஷன் said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா
【♫ஷங்கர்..】,

பேநா மூடி said...
//Aama.. Olaga tharam vaindha isai appudinna ennanga.. Puriyadha per ullavanga podrathaa?.//

hehehehe..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

//அந்தாளுக்கு யாராவது ஜேப்பியார் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வாங்கி குடுங்கையா..அப்போ தான் பொறுமல் அடங்கும்//

காசு குடுத்து டாக்ட்டர் பட்டம் வேணும்னா வாங்கி குடுக்கலாம்

சிவாஜி சங்கர் said...

விசா-வை வழி மொழிகிறேன்.. இசை ரசிப்பவர்களுக்கு மட்டுமே உரியது..

முல்லை மயூரன் said...

அது ஒன்றுமில்லை சாஜி அப்படி ஒரு கட்டுரை எழுதிவிடார் அல்லவே அவ்வளவுதான் அப்பா எனக்கும் இசையை பற்றி தெரியும் என்று காடத்தானே வேண்டும் ,,,, இவக்களிட்க்கேல்ல்லாம் இசை என்கேயிரிந்த்து வருது என்று கேட்டு வடிவேலுவிற்கு ஒரு விசரன் அறைவானே அப்படித்தான் செய்ய வேண்டும்

கருந்தேள் கண்ணாயிரம் said...

//அவர்களை இசையிலோ நடிப்பிலோ குறை கூறும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை . ஒரு வேளை சாருவுக்கு( இசை மேதை ) இருக்கலாம் அல்லது உங்களுக்கு இருக்கலாம் . ராவணன் பாடல்கள் பற்றிய உங்கள் விமர்சனம் வாசிக்க விரும்புகிறேன் . விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் பற்றி நீங்கள் ஒன்றும் கூறவில்லையே ? . தனிப்பட்ட ரீதியில் ரகுமானை சாடி உலக இசை மேதைகளுடன் ஒப்பிட்டு எழுதியதையே நான் குறை கூறுகிறேன் . முழுமையாக வாசித்து விட்டு மீண்டும் பின்னூட்டம் இடுங்கள் . அவர் சரியான விதத்தில் எழுதியிருந்தால் நிச்சயம் மதித்திருப்பேன் .//

வெல். . சரியான விதம் என்றால் என்ன? ஆஹா ஓஹோ என்று எழுதுவதா? தனிப்பட்ட ரீதியில் சாடியுள்ளார் என்று சொல்கிறீர்கள். சாருவின் கட்டுரை, அந்த நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. உலக இசை மேதைகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளார் ரஹ்மான் என்று நீங்களே சொல்கிறீர்கள். ரஹ்மானை, சாரு, நமது தேவா, எஸ் ஏ ராஜ்குமார் போன்றவர்களோடு ஒப்பிடவில்லை அல்லவா. . சாரு சொல்லியுள்ள பெயர்களை எடுத்துப் பாருங்கள். விஷால் பரத்வாஜ் ஒரு உதாரணம். இசை மேதை என்றே அவரைப் பற்றிச் சொல்லிவிடலாம். அவரது ஒவ்வொரு படத்திலும், அவரின் இசை, மிக இயற்கையாக அமைந்து, நம்மை சிலிர்க்க வைக்கிறது. ரஹ்மானுடைய ஜூனியர் காண்டெம்பொராரி அவர். சாரு சொல்லியுள்ளது எல்லாமே, ரஹ்மானின் இசையின் தரம் இப்பொழுது சற்றே குறைந்துள்ளது என்பதே. அப்படிச் சொல்லும்போது, இப்பொழுது இருக்கும் நல்ல இசையமைப்பாளர்களோடு ஒப்பிடுவது மிகவும் இயற்கை.

அதுபோல், இசை என்பது ஒரு படைப்பு. அது, பொது வெளியில் வைக்கப்படும்போது, அது விமர்சனத்துக்கு உள்ளாகிறது. நீங்கள் சொல்லியுள்ளதைப் பார்த்தால், ரஹ்மான், இளையராஜா போன்றவர்களை விமர்சித்தால், அவர்களின் தலையை வாங்கி விடுவேன் என்று சொல்லும் ஒரு வெறிபிடித்த ஃபனாடிக்கைப் போல் உள்ளது.

இளையராஜாவின் சில படங்களைப் பற்றி நீங்கள் உதிர்த்திருக்கும் கருத்துக்களைப் பார்த்தால், இக்கருத்து இன்னமும் வலுப்படுகிறது.

எனது கருத்து இது தான். பொதுவெளியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பை விமர்சனம் செய்வது தவறே அல்ல.

//ஒரு வேளை சாருவுக்கு( இசை மேதை ) இருக்கலாம் அல்லது உங்களுக்கு இருக்கலாம்.//

இது தான் உங்களது கருத்தா? இந்தத் தத்துவ முத்தை நீங்கள் உதிர்த்திருக்கும் வேகத்தைப் பார்த்தால், இளையராஜா மற்றும் ரஹ்மானை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இருக்கக்கூடாது என்று மறுபடியும் அதே ஃபனாடிக்கின் நிலையில் நின்றுகொண்டு கத்துகிறீர்கள் என்பது திண்ணமாகத் தெரிகிறது.

சாருவின் இசையைப் பற்றிய புத்தகங்களையோ அல்லது கட்டுரைகளையோ படித்திருக்கிறீர்களா? கலகம் காதல் இசை படியுங்கள். அதன்பின், நாம் விவாதிக்கலாம். சாரு ரஹ்மானை எவ்வளவோ முறை பாராட்டியும் இருக்கிறார். அப்பொழுது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? ஒருவேளை, இதைப் போல் சில ‘ஃபனாடிக்’ கட்டுரைகள் எழுத முயற்சி செய்துகொண்டிருந்திருக்கலாம் :-)


//முழுமையாக வாசித்து விட்டு மீண்டும் பின்னூட்டம் இடுங்கள் . அவர் சரியான விதத்தில் எழுதியிருந்தால் நிச்சயம் மதித்திருப்பேன்//

அது என்ன சரியான விதம்? :-)

முழுமையாக வாசித்ததால் தான் அப்பின்னூட்டம். அதையே இன்னமும் கூறுகிறேன் - இளையராஜா, ரஹ்மான், கமல் இத்யாதி வகையறாக்களை விமர்சனம் செய்து ஒரு வார்த்தை எழுதிவிட்டாலும், நம் ஆட்கள் பொங்கியெழுந்து சண்டைக்கு வந்து விடுவார்கள் என்பதற்கு இக்கட்டுரை ஒரு உதாரணம் - என்று.

எனவே, உங்களது ’கோபத்தை ’ விடுத்து, ரிலாக்ஸ் ஆகி, உங்களது கட்டுரையை நீங்களே ஒரு முறை மறுபடியும் படித்துப் பாருங்கள். அது எந்த மனநிலையில் எழுதப்பட்டது என்று உங்களுக்குப் புரியும். அதன்பின், இந்தச் ‘சரியான முறை’ இத்யாதி விஷயங்களுக்கு ஒரு அருஞ்சொற்பொருள் வரையுங்கள் :-)

Nothing to say said...

@கருந்தேள் கண்ணாயிரம்:

//அதுவும், இளையராஜா, ரஹ்மான், கமல் இத்யாதி வகையறாக்களை விமர்சனம் செய்து ஒரு வார்த்தை எழுதிவிட்டாலும், நம் ஆட்கள் பொங்கியெழுந்து சண்டைக்கு வந்து விடுவார்கள் என்பதற்கு இக்கட்டுரை ஒரு உதாரணம்.//

எனக்கும் இதே கதை தான் தலைவா இன்னிக்கு நடந்துச்சு. ரஹ்மான் இசையமைத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான theme song அவரின் தரத்தில் 10% கூட இல்லன்னு orkut a r rahman கம்மியுனிட்டில போய் கொஞ்சம் வீராவேசமா பேசிட்டேன். அவங்க மொத்தம் 18 பேர். போட்டு பொரட்டி எடுத்துட்டானுங்க.

கருந்தேள் கண்ணாயிரம் said...

@ Nothing to Say - அந்தக் காமெடி பீஸை நானும் கேட்டேன் . . . நிர்ப்பந்தத்துக்குள்ளாகி அந்த இசையை அவர் எழுதியுள்ளார் என்பது திண்ணம். பாவம் ரஹ்மான் . . !

ஆர்க்குட் கம்யூனிட்டிகள் என்பது இன்னொரு கேலிக்கூத்து. கமல் பற்றி நண்பர் சரவண கார்த்திகேயன் கருத்து சொல்லப்போய், அவரை அந்தக் கம்யூனிட்டியிலிருந்தே ப்ளாக் செய்துவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நான் ‘வெறிபிடித்த ஃபனாடிக்குகள்’ என்று சொல்லியிருக்கிறேன் . . கவலையை விடுங்கள் நண்பா . . உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். அது என்றுமே நல்லது ! :-)

சுதர்ஷன் said...

சில விடயங்கள் கோபம் ஊட்டவில்லை நண்பரே .. சிரிப்பு வருகிறது .
உங்கள் ராவண விமர்சனத்தை காணவே இல்லையே ... நான் அடிப்படையிலேயே கூறிய கருத்து யாரையும் யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்பது . நீங்கள் தூக்கி வைத்து ஆடும் சாருவை இன்னொரு உலக எழுத்தாளருடன் ஒப்பிடவோ ?? ஒருவரை பிடித்து விட்டால் அவர் எது செய்தாலும் சரி என நான் வாதாடியதே இல்லை . தனிப்பட்ட ரீதியிலும் கூட, ஆனால் இது வரை ரகுமான் இசையமைத்த பாடல்களில் விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு மயில் கல் .

என்னுடைய கருத்து விமர்சனனம் செய்யும் தகுதி இல்லை என்றில்லை . ஏன் இப்படி எடுத்துக்கொள்ள கூடாது . அவர்கள் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் . நாம் தான் இன்னும் அப்படியே . உங்களை சொல்லவில்லை .. எவருக்காவது பரிந்து பேசினால் உடனே கமல் இளையராஜா யாரையாவது பேசினால் கோபம் வரும் என்று கூறி கருத்தையே முடக்கி விடுவது . விஜய் பற்றி கமென்ட் அடித்தால் நீ அஜித் ரசிகன்னா என்பது .. என்ன கொடுமை ? ஏன் உங்களுக்கு எவ்வகையான கலை உலக பிரம்மாக்கள் தேவை . ரகுமான் போல நான் ஒரு ஆல்பம் கூட அடித்து கிழித்து விட்டு விமர்சனம் செய்ய வரவில்லை .அவர் தன் காலத்தில் வந்த பாடல்களை கேட்டு புகழந்து எழுதியிருக்கலாம் . அவருக்கு இந்த கால ரசனை அதே மட்டத்தில் இருக்கும் என்று நீங்கள் எவ்வாறு கூறுகிறீர்கள் ?

இசை நுணுக்கமான விடயம் . நுணுக்கமாக அவதானிக்க வேண்டும் . ரகுமான் பாடல்கள் கேட்ட உடனேயே விளங்கி விடாது . அதையே தான் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலுக்கும் சொல்கிறேன் . மீண்டும் சொல்கிறேன் தலையில் தூக்கி வைத்து உங்களை போல ஆடவில்லை . நான் ரகுமானுக்கு அப்படிஎசெய்தாலும் நீங்கள் சாருவுக்கும் அதையே தான் செய்கிறீர்கள் .. பெரிய எழுத்தாளர்கள் பிழை விட்டால் உடனே வருவது . நானும் சாருவை பற்றி நான்றாக நண்பர்களிடம் கூறியுள்ளேன் . ஆனால் வேறு யாரும் அவர் கருத்துகளை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை .

கருந்தேள் கண்ணாயிரம் said...

@ சுதர்ஸன் - சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாக எழுதவும். நான் இங்கே தான் இருப்பேன். எங்கும் சென்றுவிட மாட்டேன். எனவே, உங்கள் கருத்தை நிதானமாகப் புரியும்படி எழுதினால் சௌகரியமாக இருக்கும். இருந்தாலும், நீங்கள் அடித்துள்ள எழுத்துக்களைக் கூட்டிப் படித்துப் பார்த்து எனக்குப் புரிந்தவற்றைப் பற்றி இதோ . .

ரஹ்மானின் இசை சற்றே தேய்ந்து வருகிறது என்ற கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்ள முன்வரவில்லை. ரஹ்மானாயினும் இளையராஜாவாயினும் எப்படி இசையமைத்தாலும் அது சூப்பர் என்ற கருத்தில் நீங்கள் இருப்பதாகத் தெரிகிறது. . :-) . . ரைட்டு. . அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் :-) இப்படிப்பட்ட மனநிலையைப் பற்றித்தான் நான் எனது முந்தைய பின்னூட்டங்களில் எழுதியுள்ளேன்.

சாருவை ஒப்பிடுவது குறித்து: அவரது படைப்புகள் நிறைய உள்ளன. நீங்கள் எந்த எழுத்தாளருடன் வேண்டுமானாலும் அவரை ஒப்பிடலாம். நான் ஒப்பிடக்கூடாது என்று உம்மைப்போல் கொடிபிடிக்கவில்லையே? இலக்கியம் என்பதில், ஒரு படைப்பைப் பற்றி விமர்சனங்கள் எழுந்தால் தான் அப்படைப்பின் நிறை குறை பற்றி விபரங்கள் தெரியவரும். அதேபோலத்தான் இசையும்.

இசையை நுணுக்கமாக அவதானிப்பது குறித்து: எவ்வளவோ முறை மிக ’நுணுக்கி நுணுக்கி’ அவதானித்தும்கூட எனக்கு ராவணா பாடல்கள் சற்றும் பிடிக்கவில்லை. எனவே, உங்களது நுணுக்கும் திறமை குறித்து விபரமாகப் பதிவு எழுதவும். முடிந்தால் அக்கருத்துக்களை ஒரு கல்வெட்டில் செதுக்கி வைப்பது சாலச்சிறந்தது. வருங்காலத்துச் சந்ததிகள், அக்கருத்துக்களைப் பார்த்துப் படித்துப் புரிந்து நடந்துகொள்ள உதவியாயிருக்கும் :-)

சாருவை நான் தலையில் தூக்கிக் கொண்டு ஆடுகிறேன் என்பதைக் குறித்து: ரஹ்மானைப் பற்றி அவர் எழுதியுள்ளதே எங்கள் கருத்தும். ரஹ்மானின் திறமை மங்கிவிடக் கூடாதே என நாங்கள் நினைக்கையில், அவரது கட்டுரை வெளிவந்தது. அது எப்படி, எந்த விஷயத்துக்கும் மாற்றுக் கருத்து ஒன்று இருக்கவே கூடாது என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை நீங்கள் கூறுவதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். ஆனால், எனது கருத்தை நான் கூறுவதை நீங்கள் ஆட்சேபிப்பது, ஒருவேளை உங்களது நுணுக்கும் திறமையாலா? :-)

ரஹ்மான் பாடல்கள் கேட்டவுடனே விளங்கிவிடாது என்ற அரிய உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ள உங்களுக்கு நன்றி. . ஏனெனில், அது இவ்வளவு நாள் எனக்குத் தெரியாமல், காரிருளில் மூழ்கியிருந்தேன். அந்த இருட்டை, இத்தகைய அரிய கருத்துமுத்தைக் கூறி விரட்டியதற்கு நன்றிகள் :-)

உங்களது பின்னூட்டத்தில், எனக்குப் புரிந்த பகுதிகள் குறித்து எனது பதில்களை நான் அளித்துள்ளேன். மற்ற பகுதிகளை நீங்கள் விளக்கி அருளினால், அவற்றுக்கும் பதிலளிக்க வசதியாக இருக்கும்.

பி.கு - ‘சரியான முறை’ என்று நீங்கள் சொன்ன பதத்துக்கு இன்னமும் அருஞ்சொற்பொருள் நீங்கள் எழுதவில்லை. ஒருவேளை அவசரமாக பதிலளித்ததனால் மறந்துவிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கும், இன்னபிற ‘நுணுக்கங்களுக்கும்’ பதிலிறுத்து, இந்த எளியவனைக் கடைத்தேற்றும்படிக் கேட்டுக்கொள்கிறேன் :-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

@ சுதர்ஸன் - ஹைய்யா . . உங்களது பதிலில் இன்னொரு பகுதி புரிந்து விட்டது . .

//விஜய் பற்றி கமென்ட் அடித்தால் நீ அஜித் ரசிகன்னா என்பது .. என்ன கொடுமை ?//

இதை நீங்கள் தான் செய்துகொண்டிருக்கிறீர்கள். ரஹ்மான் பாடல்கள் பற்றிக் கருத்து சொன்னால், உங்களது பதில் - //நீங்கள் தூக்கி வைத்து ஆடும் சாருவை// என்று வருகிறது. . அதாவது, விஜய் பற்றி கமென்ட் அடித்தால் நீ அஜித் ரசிகன்னா என்பது .. என்ன கொடும இது !!

உங்களது ‘கல்வெட்டு’ பதிலில், இதற்கான கருத்தையும் சொல்லி அருள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் . . :-)

மதன் said...

vidunga thala etho avaru theriyama oru 2 vaartha sollitar ennakum music pathi onnum theriyathu ana neenga niraya solli irrukinga sariya than irrukum, enga thala suriyana pathu naai kolacha naiku than vaai valikum eppudi.....