Wednesday, May 5, 2010

மூளை கிலோ 100.ரூ

             நான் மயில்ராவணன்.உங்களிடம் சரளமாய்
பேசுவதற்கு என்னிடம் கொஞ்சம் இந்த அறிவு என்று சொல்வார்களல்லவா .... அதை மூர்மார்க்கெட்டில் கிலோ நூறு ரூபாய்க்கு வாங்கி மண்டைக்குள் சேகரமாக்கியிருக்கிறேன். நான் இந்த மூளையை வாங்கிய நாள் அன்று மார்க்கெட்டில் எல்லா காய்கறிகளும் குறைந்த விலையிலேயே விற்றுத் தீர்ந்தன.நான் வாங்கி வந்த மூளைக்குள் ஆங்கில அறிவு, உலக அறிவு என்று சகலமும் உள்ளன. அதனால் தான் தைரியமாக உங்களிடம்
பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் தயாராகவே இருக்கிறேன்.

            இந்த மூளை வந்த நாளில் இருந்து எனக்கு ஒரே ஒரு தொந்தரவு தான். சின்ன விசயத்தைக் கூட அரைமணி நேரம் மூளை யோசிக்கத் துவங்கி விடுகிறது! ஒரு பின்னூட்டம் எழுதிவிடலாம் என்றால் முன்னெல்லாம் உடனே எழுதிவிடலாம். ஆனால் இப்போது எழுத ஒரு மணிநேரம் யோசிக்க வேண்டி இருக்கிறது! எல்லாம் இந்த 100ரூபாய் பிதிர் கெட்ட மூளையால் தான்.

         நகர்புறத்தில் திரியும் எனக்கு ஈஸ்ட்,வெஸ்ட்,நார்த் குளறுபடிகள் பழைய மூளையில் இருந்தது! புதிய மூளையில்(100ரூ) அந்த குளறுபடிகள் இல்லை. சூரியன் எங்கு உதிக்கிறானோ அது ஈஸ்ட் என்று இப்போதுதான் ஒரு மணிநேரமாக யோசித்து முடிவுக்கு வந்திருக்கிறேன். அது சரியா?சரியல்லவா? என்று சந்தேகம் தோன்றுவதே இல்லை!(100ரூ)

       சமீபமாக நகரின் ஒதுக்குப்புறம் வரை சென்றிருக்க
வேண்டிய நிர்பந்தம் ஒன்று ஏற்பட்டது! அது குறு நகரம். ஆகாரங்களை வயிற்றில் நிரப்பிக் கொண்டவன் சாலையில் சற்று தூரம் நடந்து வரும் ஆசையில் சென்று கொண்டிருந்தேன். அந்த சமயம் 100ரூ மூளை ஓய்வாகத்தான் இருந்தது. சாலையில் ஒரு குப்பைத்தொட்டி!

                அதனுள் தான் ஒரு குழந்தையின் அழுகை குரல் கேட்ட வண்ணமாக இருந்தது! ஒரு டேப் ரிக்காடரோ,அல்லது புதிய செல்போனாகவோ, உள்ளே கிடக்கலாம் அல்லவா?(100ரூ மூளை). நின்று நிதானித்தேன்.

        உள்ளே போய் எட்டிப் பார்க்கவில்லை.வெடிகுண்டாக இருந்தால்? காலை பேப்பரில் போட்டுவிடுவார்களல்லவா! இளம்பதிவர் மரணம் என்று!(நான் பிரபலபதிவர் என்று 100ரூ மூளை வாங்கியதில் இருந்து அறிவிப்பதேயில்லை)

        ஒரு கணவரும் மனைவியும் அந்த குப்பைத்
தொட்டியை கடந்து செல்கையில் எட்டிப் பார்த்து விட்டு சென்றார்கள்.”எவளோ குழந்தைபெத்து ... தொட்டிக்குள்ளாரப் போட்டுட்டுப் போயிட்டாளுங்க ... பாவம் அழுதுட்டு கிடக்குது...அவ பொம்பளையா இருக்க மாட்டாளுங்க! மனசு வந்திருக்குது பாருங்க..வீசிட்டு போவதற்கு!” அந்த மனைவி
                                                                  
                பேசியபடியே சென்றாள். கணவர் அவளை அதட்டி வைத்தார். கம்முன்னு வரமாட்டியாடி! பெரிய இவ இவ! என்றார். இவ என்ற வார்த்தையை நான் யோசித்தேன். எப்படி பார்த்தாலும் இவ ஒரு சமூக சீர்திருத்த அக்கரை உடைய பெண் என்று அர்த்தம் தந்தது மூளை.

         ”கம்முன்னு தான் வர்றேன். நான் என்ன அதை
எடுத்துட்டு வந்து கொஞ்சுறேன், வளர்க்கிறேன்னா சொன்னேன். இன்னும் ஆறுமாசம் போனா எனக்கு ஒரு குழந்தை வந்துரும்....நடங்க போலாம்”. அவர்கள் போய் விட்டதும் இன்னொரு நடுத்தர ஜோடி அதன் வழியே வந்தது! நான் கவனிக்காதவன் போல சுவற்றில் இருந்த ‘சுறா’-சினிமா சுவரொட்டியை வேடிக்கை பார்த்தேன்.

          ”என்னங்க...நமக்கு தான் 5 வருஷமா குழந்தையே இல்லையே...இதை எடுத்து வளர்ப்போமா? என்னமா அழுது பாருங்க!” என்றாள். ”அய்யே...சும்மா வரமாட்டே!எவளோ தூக்கி வீசிட்டு போயிட்டா...வழியை போற சண்டை நமக்கு எதுக்கு? சொந்த செலவில சூன்யம் வெச்சுக்கலாங்கிறியா?அனாதை இல்லத்துல எடுத்துக்கலாம்...நட நட...நாடு அநியாயத்துக்கு கேவலமாப் போயிடுச்சு”.அவர்களும் போய்விட்டார்கள்.

         ”ஐய்யா பிச்சை போடுங்க தர்மராஜா” என்று தட்டு
ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு ஒரு பெண் வந்தது! என்னிடம் தட்டை நீட்டினாள்! ஒரு ரூபாய் சில்லறை ஒன்றை பாக்கெட்டிலிருந்து எடுத்து தட்டில் போட்டேன். குழந்தையின் அழுகுரல் கேட்டதுமே அவள் குப்பை தொட்டிக்கு ஓடினாள்.

         ”ஐய்யோ! பச்சை கொழந்தை இப்புடி கத்துதே! அழுவாதடா சாமி! செல்லம் ” என்று குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு குழந்தையை அவள் எடுத்துக் கொண்டாள். தூரி தூரி என்று ஆட்டினாள்.
         ”உங்கா வேணுமா ராசா! நம்ம ஊட்டுக்கு போயி உங்கா வாங்கித் தர்றேன் ..” என்றவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னிடமே வந்தாள்.

        ” இன்னாய்யா மனுசன் நீ! கொழந்தை அழுது!
பார்த்துட்டு சும்மா நின்னுக்கினே இருந்தியா? நீதான் எடுத்துனு வந்து போட்டியா?”
         ”என்னுது இல்லை, அதான் எடுத்துட்டியே... இன்னா
 வரைக்கும் இதுல போனவங்க யாருமே எடுக்கலை..........நீ தான் எடுத்திருக்கே! என்ன பண்ணப் போறே இதைக் கொண்டு போய்?” என்றேன்.

         ”வறுத்து சாப்பிடுவேன்”.

       ”என்ன?” மூளைதான் உடனே வேலை செய்வதில்லையே!

       ”படிக்க வைப்பியா?” மூளை மூளை!!

       ”புடுங்க வைப்பேன்...நானே பிச்சை எடுத்து வகுத்துப் பாட்டை ஓட்டிட்டு இருக்கேன். இதுல படிக்க வக்கிறதாமா! பல ஊட்டு சோறு ஊத்தி வளர்த்து பிச்சை எடுக்க உடுவேன். நான் வயசாகிப் போய் கெடந்தா சோறு ஊத்துறதுக்கு ஆள் வேணுமில்ல!”
      ”உன் புருசன்?”

     ”அவனா? அவனை பார்த்து மூணு வருஷம் ஓடிப் போச்சு!
தாலி கட்டி ரெண்டு மாசம் இருந்தான்.ஓடிட்டான்.இதைய வளர்த்து காலை ஒடிச்சு நொண்டியா நடக்க உட்டு பிச்சை எடுக்க வைப்பேன்!சாமி! அழாதடா! நான் இருக்கேண்டா! போ சார்! இங்க ஏன் நின்னுக்கிட்டு போறவுங்க வர்றவங்கள பராக்கு பார்த்துட்டு நின்னுட்டு இருக்கே? இல்லைனா நீயும் போயி தொட்டிக்குள்ளார படுத்துட்டு அழு! உன்னைய தூக்கிட்டு போக வேனு ஒண்ணு வரும்..!

               அவள் குழந்தையோடு சென்றாள்! நான் குப்பைத் தொட்டிக்குள் வேறு சத்தம் வருகிறதா என்று கேட்டேன்! பின்னர் சப்தம் வரவில்லை என்றதும் ஒரே ஜம்ப்பில் தொட்டிக்குள் தாவி குறுக்கலாய் படுத்துக் கொண்டு அழத்துவங்கினேன்! குழந்தையைப் போல!மூளை!
                                                                                              -மயில்ராவணன்
       

37 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மயிலூஊஊஊஊஊஊஊஊஊஊஉ!!!

எங்கியோ பூட்டப்பா....!

Chitra said...

கதையாய் இருந்தாலும், இதுதான் பல இடங்களில் நடக்கிறதோ..... மனம் பதறுகிறது.

Sukumar Swaminathan said...

உங்கள் எழுத்து நடை அருமை தல.. தொடர்ந்து கலக்குங்கள்

Sabarinathan Arthanari said...

சமூகத்தின் மீதான விமர்சனமும், நையாண்டியும் கலந்து நன்றாக உள்ளது

சங்கர் said...

?????????

கிருஷ்ணமூர்த்தி said...

யதார்த்தம் கொஞ்சம்அல்ல, நிறையவே சுடத்தான் செய்கிறது.

கடைசி வரியை இன்னும் கொஞ்சம் டெவலப் செய்திருக்கலாம்!(று ரூபாய்க்கு வாங்கிய மூளை என்னிடம் இல்லாததால், ஒருவேளை நான் சரியாகப் புரிந்துகொள்ளாமல் போய்விடக் கூடாது அல்லவா, அதற்காக!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சித்திரை மாசம் கத்திரி வெயில் ஆரம்பமாயிடிச்சு சாமி

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சித்திரை மாசம் கத்திரி வெயில் ஆரம்பமாயிடிச்சு சாமி

VISA said...

என்ன மாதிரி மூளை கம்மியா இருக்குறவன கூட முழுகதையையும் படிக்க வச்ச ஸ்வாரஸ்யம் புடிச்சிருந்தது.
அருமை!!!

செ.சரவணக்குமார் said...

எழுத்து நடை அபாரம் மயில். ஆமா ரொம்ப நாளா ஆளையே காணோமே தல, பிஸியோ?

பிரேமா மகள் said...

மனதை வதைக்கிறது உங்கள் எழுத்து,.,..

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

கலக்கல். பின்னியிருக்கிறீர்கள். ஆரம்பம் முதல் முடிவு வரை.

ஜெய் said...

பின்னியிருக்கீங்க.. சூப்ப்ர்..

// ஒரே ஜம்ப்பில் தொட்டிக்குள் தாவி குறுக்கலாய் படுத்துக் கொண்டு அழத்துவங்கினேன்! குழந்தையைப் போல!மூளை! //
- இந்த ஸ்டைல் ரொம்ப அருமை..

மயில்ராவணன் said...

@ ஷங்கர்
எல்லாம் உங்க ஆசிர்வாதம்.அடுத்த ஷெட்யூல் எங்கே?

மயில்ராவணன் said...

@ சித்ரா
அதான் ‘நான் கடவுள்’ல கூட காமிச்சாங்கள்ள...நன்றி

மயில்ராவணன் said...

@ சுகுமார் ஸ்வாமிநாதன்
வாங்க தம்பி. நீங்க நச்சுன்னு நாலு படத்த வரைஞ்சு பூரா கூட்டத்தையும் அள்ளிவிடுகிறீர்களே! வாழ்த்துக்கள்.

மயில்ராவணன் said...

@ சபரிநாதன் அர்த்தநாரி
நன்றி சார். ஜெமோவைக் கேட்டதா சொல்லவும்.

மயில்ராவணன் said...

@ சங்கர்
என் உச்சி மண்டைல சுற்றுங்குதே :)

மயில்ராவணன் said...

@ கிருஷ்ணமூர்த்தி
ரொம்ப நன்றி சார்.சென்னை வந்தா கூப்பிடுங்க.சந்திப்போம்.

மயில்ராவணன் said...

@ மணி
கரீட்டா சொன்னீங்க நண்பரே!

மயில்ராவணன் said...

@ விசா
உங்களுக்கு மூளை கம்மிதான், ஆனால் அதில் மடிப்புகள் அதிகம்(Brain convulusions are directly proportional to intelligence)பத்தாங்கிளாஸ்ல படிச்சது.!!

மயில்ராவணன் said...

@ செ.சரவணக்குமார்
நன்றிங்க.'Appraisal' டைம்...ஹி ஹிஹி ஹி..

மயில்ராவணன் said...

@ பிரேமா மகள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

padma said...

அட்டகாசமான satire . ரொம்ப நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்

மயில்ராவணன் said...

@ கனவுகளின் காதலன்
ரொம்ப நன்றி. ஆனால் நான் பொறாமைப்படும் எழுத்து உங்களுடையது.ஆங்கிலமே கலக்காமல் எப்படி நண்பரே. அடுத்தவாட்டி கிரனோபில் வந்தா சந்திக்கிறேன்.

மயில்ராவணன் said...

@ ஜெய்
ரொம்ப நன்றி.கிளைமாக்ஸ பாராட்டியிருக்கீங்க.

கே.ஆர்.பி.செந்தில் said...

ஆமா.., நூறு ரூபதானா..?

மயில்ராவணன் said...

@ பத்மா
ரொம்ப நன்றிங்க வருகைக்கும், பாராட்டுக்கும்.

மயில்ராவணன் said...

@ கே.ஆர்.பி செந்தில்
அவ்ளோதான். சிங்கையிலேருந்து வந்தாச்சா? பயண கட்டுரை போடலாம்ல?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை
அருமை
அருமை
பெருமையோ பெருமை உம்மை நினைத்து

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் :-)

thenammailakshmanan said...

மயிலூஊஊஊஊஊஊஊஊஊஊஉ!!!

எங்கியோ பூட்டப்பா....! //

ஹாஹாஹா.. ஷங்கர் சூப்பர் கமெண்ட்.. மயிலும்ம்ம் நிஜம்தான்... எங்கேயோ போயிட்டாப்பா...

மயில்ராவணன் said...

@ கார்த்திகேயன்
வருகைக்கு நன்றி

@ உழவன்
நன்றி சார்.

@ தேனம்மை லெட்சுமணன்
ரொம்ப நன்றிங்க.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

மனிதம் இங்கே எங்கேயுமே இல்லை.. மூளையுடன் சேர்த்து இருதயத்தையும் நாம் கழற்றி வைத்து மூன்று பத்து ரூபாய்க்கு விற்கும் சைனா ஐட்டங்களைத் தான் பொருத்திக் கொண்டு அலைகிறோம்..

நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

எப்பவும் பின்னூட்டம் போடாம போறியே, இதுக்கு கண்டிப்பா நல்லாருக்குன்னு ஒரு பின்னூட்டம் போடுன்னு சொன்னுச்சு....மூளை.

Mohammad Haathim said...

hai swami
yeppadi ithellam,,,,,superb pa...namm mayavaram visitaiyum konjam yeluthen ..sastha prakash


regards
tharik ali