Monday, April 26, 2010

யதார்த்த சினிமாக்களின் வருகை

                                                                 வா.மு.கோமு   
                ஒரு விஜய்யோ ஒரு அஜித்தோ அல்லங்கேல் ஒரு 
சிம்புவோ ஒரு தனுஷ்ஷோ, இன்னும் சில தோக்களோ, 
வோக்களோ சோக்களோ நடிக்கவே முடியாத நடித்தாலும் குப்பையாய் போய் விடக்கூடிய யதார்த்த படங்களின் வரவு தமிழ்சினிமாவை பிரம்மாண்டங்களில் இருந்து மீட்டு வளர்த்தெடுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது தான். பருத்திவீரன், வெண்ணிலா கபடிக்குழு, சுப்பிரமணியபுரம், வைகை என்று மிக மெதுவாய் காலடி வைத்த இந்தப் போக்கு இன்னமும் மந்த நிலையில் தான் நுழைகின்றன என்று சொன்னாலும் அது மிகையாகாது.


யதார்த்தப் படங்களில் கிராபிக்ஸ் கலக்கல்கள் தேவையில்லை. செலவீனங்கள் குறைவு. நகரங்களில் முப்பது நாட்கள் ஓடினாலே வெற்றி. நான் கடவுள் தோற்றுப் போனதற்கு காரணம் அதன் நாயக பிம்பம் தான். அநீதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பது எம்ஜிஆர் பார்முலா. எப்பேர்பட்ட விஷப்பூச்சியாக இருந்தாலும், அது வெளிக்கிரக ஜந்துவாக இருந்தாலும் மனிதனால் வெற்றி கொள்ள முடியாத சமாச்சாரம் அல்ல என்பது அங்கிலத் திரைப்படங்களின் பார்முலா.
                                                           
ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் பாடல்களின் ரசிகனாய் இருந்த எனக்கு இன்று கிம்கிடுக் என்கிற கொரிய மொழி இயக்குனரின் படங்கள்தான் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவரின் படங்கள் கொரியாவில் மூன்று நாட்கள் தான் ஓடும் என்பது அதைவிட ஆச்சரியம். எனது வாலன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.மொழி புரியாத படங்களை பார்பதில் தான் அவனுக்கு ஆர்வம்.’தி வே ஹோம்’லிருந்து ‘இன்னோசண்ட் வாய்சஸ்’ வரை பார்க்கிறான்.இரவு பனிரெண்டு மணி என்றாலும் தூங்காமல் பார்ப்பவனுக்கு தமிழ்படம் புதுசு என்று பார்க்கச் சொன்னால் ‘போப்பா’ என்று தூங்கச் சென்றுவிடுகிறான்.அந்த திருநீறு பூசாத கிறுஸ்துவ பையன் விஜய் நடித்த படம் சன் டீவியில் டமீர் டுமீர் என்று விளம்பரம் ஓடுவதால் அந்தப் பையனின் படம் என்றால் அரை மணிநேரம் பார்ப்பான்...பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று எட்டிப் பார்த்தால் தூங்கியிருப்பான்.நல்ல விமர்சனம்.


அண்ணா நீ எழுதுற மாதிரிதான் அங்காடித் தெருவுல கதாநாயகி பேசினாள் என்றான் தம்பி. இதென்றா வம்பு?’உள்ளார கூட்டிப் போய் அண்ணாச்சி என் மாரைப் பிசைஞ்சான்’ அப்படின்னு நாயகனிடம் சொல்றா! ’ஏலே தம்பி என்னலே சொல்றே? அப்படியாகலே அந்தப் பொண்ணு சொல்லுச்சு? ஏ நடவே சட்டுனு போயி அந்தப் படத்தைப் பார்ப்போம்”, என்று முதலாக பெண்டிங் வைத்திருந்த ‘அவள் பெயர் தமிழரசி’ படம் பார்த்தேன்.
                                                                                   
படம் ஓடத்துவங்கிய ஆரம்ப காட்சிகளிலேயே பழைய நினைவுகளை அது கிளறிவிட்டது!     வாய்பபாடியில் நான் தோல் பொம்மையாட்டத்தை பார்த்த காலம் 1978. ராமாயணம் தான். ராமன்,  லெட்சுமணன் இருவரும் விடும் அம்புகள் எதிராளிகளின் நெஞ்சில் பாய்கின்றன. டக்கு டக்கு, டக்கு டக்கு டக். இரண்டு மரக்கட்டைகளை அடித்து ஒலி எழுப்புவது.அனுமன் இலங்கை நோக்கி வானில் பறக்கையில் பிண்ணனி நீலம், சிவப்பு,மஞ்சள் பல்புகள் மாறி மாறி ஒளிவிடுகின்றன. ஒளி நின்று வழக்கமான வெள்ளி நிற ஒளி வந்ததும் அனுமன் இலங்கையில் நிற்பான். அனுமனுக்காகவும் , ராமன், லட்சுமணன்,ராவணனுக்காகவும் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் ஒரே ஆள்.


பள்ளிக்கூடம் சென்று வந்ததும் பொறுப்பாய் படிப்பு. ஏழு முப்பதிற்கு ரெக்கார்டு போட்டு விடுவார்கள். அப்பாவிடம் சில்லறை வாங்கி ஓட்டம் தான். அதிசயம் ஒருநாளும் கோபித்துக் கொள்ளாமல் ஐம்பது பைசா சொடுத்தார். நண்பர்கள் நாங்கள் மொன்னையன், சொட்டையன் தமாஸ் காட்சிகளுக்காகத்தான் காத்திருப்போம். என் பத்து பைசாவை கொடுடா மொன்னை வக்காலி! தோல் பொம்மலாட்டம் முடியும் வரை மொன்னையனிடம் சொட்டயன் கொடுத்த பத்து பைசாவை வாங்க முடியவில்லை. பத்து நாட்கள் தொடர்ந்து தூக்கம் கெட்டு பார்த்தால் எனக்கு ஆசன வாய் துவாரத்தில் மூன்று நாட்கள் பின்னர் வர்ணம் வர்ணமாக கழிவுகள் வெளியேறியது கூட நடந்தது.


படத்தில் சொன்னது போலவே அந்தக்கலை அழிந்துவிட்டதுதான். ஆனால் புதியனவற்றை வரவேற்கும் நாம் ஒரு கலை சாவதற்காக வருத்தமே படக்கூடாது.ஏலே! நாங்களும் ஈக்கு மாரு குச்சியால பொம்மை ஒட்டி ஆட்டியிருக்கம்பி! ஏலா சும்மா அதை ஆட்டிக்கிட்டே இருக்கமுடியாமாலே! ஒரு விசயம் உண்மைதான். தோல் கூத்து முடிந்த நாள் மழை வந்தது! மழை வரும் என்று சொன்னார்கள்! அண்ணன்மார் கதையை கூத்து கட்டி ஆடினார்கள்.உள்ளூர் ஆட்கள் கூட படுகள நிகழ்ச்சிக்காக விரதமிருந்து கலந்து கொண்டார்கள்.கூத்து முடிந்த நாள் மழை வந்தது! 


                 கூத்து முடியும் வரை பெண் வேடமிட்ட ஆணுக்கு உள்ளூர் பென்கள் சேலை கட்டி விட்டார்கள்.அவனை நிசமாகவே காதலித்தார்கள்.அவன் கூடவே சிலர் படுத்தார்கள்.அவன் மீது காதலாய் திரிந்தார்கள்.அவனுடன் கூடவே ஊர் ஊராக போகவும் ஆசைப்பாட்டார்கள். கூடவே சென்று வேறு ஊர்பெண்கள் மீது அவன் மையல் கொண்டு விடாமல் இருக்க,தான் மட்டுமே அவனிடம் நொட்டிக் கொள்ள ஆசைப்பட்ட பிசாசுகள் இன்று ஒன்றுமே நடவாதது போல் ஊருக்குள் திரிகின்றன.


தமிழரசி சின்னப்பெண். தோல்பொம்மை கூத்துக்காரப்பெண்.அவள் மீது பிரியமாய்த் திரிகிறான் நாயகன். உள்ளூரிலேயே அவர்கள் தங்கிவிட ஏற்பாடு செய்கிறான். பசங்க படம் வந்தபிறகு தான் இப்படி சிறுவர்களை வைத்து ரீல் நகர்த்தும் வேலையை இயக்குனர்கள் தைரியமாய் செய்கிறார்கள்.கதாநாயகி பாஸாகி பாஸாகி படிக்கிறாள்.நாயகன் பெயில் ஆகிவிடுகிறான். கண்டிப்பாக இதுதான் யதார்த்தம்.ஆனால் இதுவரை நாம் பாஸாகி மெடல் குத்திக் கொள்ளும் நாயகர்களைத் தான் திரையில் பார்த்திருக்கிறோம்.ஸ்டேட் பர்ஸ்ட் என்று வேறு நம் காதில் வாழைப்பூவையே சொருகுவார்கள்.


                  நண்பர்கள் கருத்துப்படி எங்கே நாயகி நைசாக நழுவி விடுவாளோ என்று நாயகன் நாயகியை பலாத் பண்ணி விடுகிறான். அவளின் படிப்பு கெடுகிறது. அவள் அம்மா தூக்கில் தொங்குகிறாள் ... நாயகி மகாராஸ்டிரா போகிறாள்.நாயகன் தேடிப் போகிறான் ... ஐய்யோடா சாமி! போதும்டா என்றாகி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முன்பே முடிந்து போன யதார்த்த திரைப்படம் வழக்கமான திரைப்பட காட்சிகளுக்கு தாவி ஓடுகிறது! வழக்கம் போல நம்மை நோகடித்து தியேட்டரை விட்டு அனுப்புகிறது!


அடுத்ததாக துணிக்கடை சேல்ஸ்மேன் தான் கதாநாயகன் என்று பலராலும் எழுதப்பட்ட,  
பேசப்பட்ட படம் அங்காடித்தெரு.கிரிக்கெட் ஆடுவதற்காக சைக்கிள் டியூப்பை ரப்பர் பேண்ட் போல வெட்டி பந்து தயாரித்து ஆடுவது வழக்கமே! திரையில் முதலாக வருகிறது!  அதில் அடிபட்டால் எப்படி வலிக்கும் என்பது அடியேனுக்கு தெரியும். வலி உயிர் போய் வரும்.எல்லாம் பந்து வாங்க காசில்லா கொடுமையால் வரும் வினைதான். வாத்தியாரிடமோ, அப்பாவிடமோ பெயில் ஆகி அடிதின்று படித்தால் தான் படிப்பு ஏறும். உள்ளூர் தெருவில் ஒரு கேரக்டர் அடிதின்று வெட்கப்படுகின்றது பெய்ல் ஆகி! நகரம் நோக்கி குடும்ப சூழல் காரணமாக விளையாட்டுத் தனங்களை விட்டு     
                                                      
திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு படையெடுத்து வரும் வெளியூர் ஆட்களின் கதிகள் இப்படித்தான். ஒரே குடோனில் அடைந்து கிடக்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் கம்பெனியிலேயே வெள்ளை நிற வில்லைகள் கொத்தாய் எடுத்து நீட்டும். ஆண்களுக்கு பிரச்சனை அவ்வளவு இல்லை! பெண்களுக்குத்தான்!நல்லவேளைடா கோமகா!இந்த ஜென்மத்தில் நீ ஆண்!உனக்கு மார் இல்லை பிசைய! அடுத்த ஜென்மத்தில் எனக்கு கரையானாக பிறப்பு இருக்கிறது! என் தந்தை காக்காய் இப்போது! என் தாத்தா உடும்பாகி விட்டார்.எனது அப்பிச்சி கடவுளாகி விட்டார். 


                   சூர்யா என்கிற நடிகரை ’அயன்’ என்கிற திரைப்படத்தில் கண்டு பிரமித்தேன். என்ன ஒரு குறுகிய வளர்ச்சி! அதை விட பிரமிப்பு தமன்னா! நெஞ்சே நெஞ்சே நீ எங்கே!நானும் அங்கே! பக்கத்திலிருந்த காதலியிடம் சொன்னேன். “ரொம்ப அட்டகாம்டி!” அவள் ஏற்கனவே ‘உன்னாலே உன்னாலே’ படம்பார்த்த போது சொன்னாள். இப்புடி ஒரு படம் பார்த்துட்டோம் நம்ம லைஃப்ல! இனி ரெண்டு பேரும் போய் மருந்து குடித்து செத்துடலாம் .... என்னா படம்! என்றாள். ஆனால் ஜீவா தான் செத்துப் போனார். இப்போது ஜீவா இல்லை. சாகலாம் என்று சொன்ன காதலியும் வேறு காதலனைத் தேடிக் கொண்டாள். அனாதையாயாகத் தான் அங்காடித்தெருவை பார்க்க கடவுள் என்னை நிர்பந்தப்படுத்தி விட்டார். ஆனால் அங்காடித்தெருவை காதலியின் துணையின்றி தனியாக பார்ப்பவன் நிச்சயம் பாவம் செய்தவன் தான்.


பேப்பர் செய்தி போல சாலையோரத்தில் 
தூங்கும் மனிதர்கள் மீது டாட்டா சுமோ ஏறிப்போகிறது! நாயகிக்கு கால் போகிறது என்று மன நிம்மதியோடு வீடு செல்ல ஒருவரையும் இந்தப்படம் விட்டுவைப்பதில்லை! யதார்த்த படங்கள் வருவது நல்லது தான். ஆனால் இவைகள் எல்லாமே மிகை யதார்த்தப் படங்கள்! சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும் என்பதால் வரும் பிரச்சனை!இவைதான் கேலிக்கூத்து! அங்காடித்தெருவில் முக்கியமான காமெடி இருக்கிறது!அது துணிக்கடை விளம்பர படத்திற்கு நடிக்க வரும் சிநேகாவும்! அவரது நடிப்பும்!அந்தப் பாடல் அதைவிட தமாஸ்! நினைத்துப் பாருங்கள் சூர்யா சேல்ஸ் மேனாக இதில் நடித்திருந்தால்? பயங்கரம்தான்!!

21 comments:

Chitra said...

தமிழ் சினிமாக்களை குறித்த ஒரு அலசல் பார்வை.
It was very interesting to read. :-)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

// ஆண்களுக்கு பிரச்சனை அவ்வளவு இல்லை! பெண்களுக்குத்தான்!நல்லவேளைடா கோமகா!இந்த ஜென்மத்தில் நீ ஆண்!உனக்கு மார் இல்லை பிசைய! //

:(


அடுத்த ஜென்மத்தில் எனக்கு கரையானாக பிறப்பு இருக்கிறது! என் தந்தை காக்காய் இப்போது! என் தாத்தா உடும்பாகி விட்டார்.எனது அப்பிச்சி கடவுளாகி விட்டார்.
//

முடியல!!

:))

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

கலகலப்பான கலக்கல்.

சைவகொத்துப்பரோட்டா said...

விமர்சனம் நன்று.

கருந்தேள் கண்ணாயிரம் said...

இந்த யாதார்த்த சினிமாக்களைப் பற்றிய கருத்தில் நானும் உடன்படுகிறேன் . . இவற்றைப் பார்க்கப் போனால், கொடூரமாக நம்மை அழவைத்து, மிகை எதார்த்தத்தை நம் மேல் திணித்து அனுப்புவதே இவர்களது வாடிக்கையாகி விட்டது. .

இன்னொன்று . . இப்படங்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னால், சில பேர் கொலைவெறியோடு நம் மேல் பாய்வது ஏனென்றும் எனக்குப் புரியவில்லை :-)

VISA said...

:))))

வாய்ப்பாடி குமார் said...

ஏனுங்க கமெண்ட் எதும் போட்டா கடிச்சு வெச்சுருவிங்களா?

ஒருத்தரக்கூடக் காணோம்,

ஓட்டப்பூரா நீங்களாப் போட்டுகிட்டிங்களா?

செ.சரவணக்குமார் said...

கலக்கலான கட்டுரை மயில். எழுத்து நடை அபாரம்.

adhiran said...

good critic. thanks.

இராமசாமி கண்ணண் said...

நல்ல அலசல் மயில்.

இளமுருகன் said...

நல்லா சொல்லி இருக்கீங்க

இளமுருகன்
நைஜீரியா

மயில்ராவணன் said...

@ சித்ரா
ரொம்ப நன்றி.

மயில்ராவணன் said...

@ ஷங்கர்
கோமுவோட பலமே இந்த எள்ளல் தான் சாரே.

மயில்ராவணன் said...

@ கனவுகளின் காதலன்
@ சைவகொத்துப்பரோட்டா
நன்றி

மயில்ராவணன் said...

@ கருந்தேள் கண்ணாயிரம்
இதுக்குத்தேன் நிறைய ஒலக சினிமால்லாம் பாக்கக் கூடாது. நம்ம படம் பாத்தமா, அழுவுனமான்னு போய்க்கிட்டே இருக்கோனும். ஆமாம்!

மயில்ராவணன் said...

@ விசா
வாங்க நண்பரே.

@ வாய்ப்பாடி குமார்
உங்க அண்ணன் அனுப்புறத டைப்படிக்கவே முழுக்கோழி திங்கோனுமாட்டிருக்கு! நான் வேறு சைவம் :)

மயில்ராவணன் said...

@ சரவணக்குமார்.செ
டைப்பிங் மட்டும் தாண்ணே நான். எழுத்து வாமுகோமுவூட்டு.

மயில்ராவணன் said...

@ இளமுருகன்
நன்றி. அடிக்கடி வாங்க.

வாய்ப்பாடி குமார் said...

"@ வாய்ப்பாடி குமார்
உங்க அண்ணன் அனுப்புறத டைப்படிக்கவே முழுக்கோழி திங்கோனுமாட்டிருக்கு! நான் வேறு சைவம் :)"


சரி உடுங்க , நல்லா முருங்கைக்காய் சாம்பார் வைச்சு சாப்பிடுங்க , சரியாப் போயிரும், பாக்யராஜ் மாதிரி ஆயிரலாம்

~~Romeo~~ said...

super ooo super .. கலக்கல் பதிவு

இரசிகை said...

// ஆண்களுக்கு பிரச்சனை அவ்வளவு இல்லை! பெண்களுக்குத்தான்!நல்லவேளைடா கோமகா!இந்த ஜென்மத்தில் நீ ஆண்!உனக்கு மார் இல்லை பிசைய! //

:(