சீனிவாசன் நடுத்தர குடும்பத்தின் தலைவன். அவன் குடும்பத்தில் மனைவி வள்ளி,மகன் சந்தோஷ்,மகள் சந்தியா, கடைக்குட்டி ராஜ் என இவனுடன் சேர்த்து மொத்தமாக ஐந்து பேர்.வள்ளி மூன்று குழந்தைகள் பெற்ற தாய் என்று பார்ப்பவர்கள் யாரும் கேட்க முடியாது.
ஏங்க இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகலை ....மாப்பிள்ளை அமையலையா? என்று தான் கேட்பார்கள். அழகு குன்றாது அப்படி இருக்கும் தாய் தான் வள்ளி.சீனிவாசனின் மாத வருமானம் போதும் போதாததாய்த்தான் வீட்டில் இருந்தது!
சீனிவாசன் ஒரு நாள் வேலைக்கு செல்லாமல் தலை கனக்கிறது என்று வீடு திரும்பினான். கையில் வள்ளி போட்டுத் தந்திருந்த டிபன் கேரியர் பை. அவன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.மனைவியை நோக்கியே அவன் மனக்குதிரை தாவியபடி இருந்தது!
”இன்று எப்படியும் உன்னை கையும் களவுமாக பிடிக்கப் போகிறேன். எனக்குத் தெரியாமல் எவ்வளவு நாளாக இது நடக்கிறது? கட்டின புருசனுக்கு துரோகம் செய்கிறாயா? இவ்வளவு நாள் யார் சொல்லியும் கேட்கலை நான்.என் வள்ளி அப்படி எல்லாம் நடக்க மாட்டாள் என்று நம்பிக்கை தான். ஆனால் நான் தான் முட்டாளாக போய்விட்டேனே...”
நேற்று நைட் ஷிப்ட் போனதும் டைம்கார்டு(access card) எடுக்க மறந்தாச்சே என்று வீடு திரும்பி வந்தபோது தெருக் கோடியில் இருந்து பார்த்தபோது என் வீட்டில் லைட் எரிவது தெரிந்தது! நான் வந்து கதவை தட்டியதும்...நேரம் கழித்து வந்து கதவைத் திறந்தாள் வள்ளி.இவ்ளோ நேரமா கதவைத் திறக்க? என்று கேட்டதற்கு, கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் அப்படின்னு பொய் சொல்றாள்! என்னை வேறு, இந்நேரத்துல ஏன் திரும்பி வந்தீங்க! அப்படின்னு கேள்வி கேட்கிறாள்? வேலை இல்லையா? அப்படிங்கிறாள்? உள்ளே போய் பார்த்தேன். டைம் கார்டை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தன. யாரும் வந்ததிற்கான அடையாளத்தை சுத்தமாக அழித்து விட்டாளே! இருக்கட்டும்! கையும் களவுமாக நாளை பிடித்து விடலாம் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு நேற்று வேலைக்கு சென்று விட்டான்.
மனக்குதிரையை ஓடவிட்டுக் கொண்டே தெருக்கோடிக்கு வந்துவிட்டான் சீனிவாசன்.இன்னும் சமையல் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது! இருதயம் வேகமாக அடித்துக் கொண்டது சீனிவாசனுக்கு! வீட்டின் அருகில் பூனை மாதிரி சென்றான். அழகிய புள்ளிமானை பிடிக்க பதுங்கிப் போகும் புலிபோல.
ஜன்னல் சந்தில் சமையலறையில் எட்டிப்பார்த்தான் சீனிவாசன். உள்ளே வள்ளி இவனுக்கு முதுகு காட்டியபடி அடுப்பில் வேலையாக இருந்தாள். புகை மூட்டமாக இருந்தது! சீனிவாசனுக்கு ஆச்சர்யம். இப்போது தானே எனது டிபனுக்கு சாதம் போட்டு, சாப்பிடவும் வைத்து வேலைக்கு அனுப்பினாள்! இப்போது என்ன செய்கிறாள். நமக்கு தெரியாமல் நான் இல்லாத நேரத்தில் வாய்க்கு ருசியாக சமைத்து வயிற்றில் கொட்டிக் கொள்கிறாளோ! குழந்தைகள் வேறு இந்நேரம் தூங்கியிருக்குமே!
முன்பக்கமாக வந்து கதவைத் தட்டினான். நேற்றைப் போலவே சிறிது நேரம் கழித்துத் தான் கதவு திறந்தாள் வள்ளி.வள்ளி முகத்தில் புகை வாட்டம் தெரிந்தது! கூடவே இன்னும் கணவனைக் கண்ட அதிர்ச்சியும் தெரிந்தது.
”வள்ளி என்னது இது! இந்த ராத்திரி நேரத்துல குழந்தைகளை தூங்க வச்சுட்டு களி கிண்டிக்கிட்டு இருந்துருக்கே? ஆசையா இருந்தா நேரத்துலயே செஞ்சு சாப்பிட வேண்டியதுதானே? அதென்ன நான் வேலைக்கு போன பிறகு திருட்டுத்தனமா செய்யறே?” என்றான் சீனிவாசன். வள்ளியின் கண்களில் மளமளவென கண்ணீர் ஊற்றெடுத்தது!
”இல்லீங்க....இது ஆசையா இருக்குதுங்கறதுக்காக நான் செய்யலை. நீங்க வேலைக்கு போன அப்புறமா நாங்க தினமும் இதைத்தான் சாப்பிடுறோம்”.
”என்னது? எதுக்காக நாலு பேரும் நான் இல்லாதப்ப சாப்பிடணும்?”
”ஆமாங்க,வேற வழி இல்லை.நீங்களும் முடிஞ்ச அளவு சம்பாதிக்கறீங்க. நான் சந்தோஷ்,சந்தியா ஸ்கூல் பீஸ் கட்டவும்,பால்,மளிகை பணம் கொடுக்கவும் தான் அதை கொடுக்கிறேன்.....அதுக்கே சரியா இருக்குது. பல சமயம் பத்தவே மாட்டேங்குது. அதனாலே செலவைக் குறைக்கத்தான் இப்படி செஞ்சேங்க.எனக்கு வேற வழியும் தெரியலை.என்னை மன்னிச்சிடுங்க” என்று வள்ளி அழுதாள். சப்தம் கேட்டு குழதைகள் அறைக்குள் கண்ணை தேய்த்துக் கொண்டே எழுந்து வந்தார்கள். “அம்மா பசிக்குதும்மா...இன்னுமா களி செய்யுறே!” சந்தோஷ் தான் கேட்டான்.
இவளைப் போயி சந்தேகப்பட்டோமே!” என்று அவன் மனதில் வேதனை புகுந்தது!சந்தோஷும், சந்தியாவும் வேறு இவர்களை கட்டிக் கொண்டார்கள். மணி இரவு பதினொன்று!
30 comments:
மயில் சார்
கதை ரொம்ப நல்லா இருக்கு சார்
ஃபார்மாலிட்டி டன்
கதை ரொம்ப நல்லாருக்கு நண்பா..
நல்லாயிருக்கு..
இன்னும் அழுத்தமாய் எழுதியிருக்கலாம்.
பாவமா இருந்துச்சு. நல்ல கதை.
@ கார்த்திகேயன்
நன்றி நண்பரே
@ ஸ்டார்ஜன்
வலைச்சர நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்.
@ சித்ரா
நன்றி தங்கள் ஆதரவுக்கு.
@ பட்டர்ஃப்பிளை சூர்யா
கண்டிப்பா அடுத்த கதையில் எல்லாரையும் அழ வெச்சிருவோம்.
:)
செமையான சென்டிமென்ட்!!!
@ அகநாழிகை
@ சைவகொத்துபரோட்டா
நன்றி நண்பர்களே.
Chennai vanthaachu. Will call u .
:)
கேபிள் சங்கர்
ரொம்ப நல்லாயிருக்கு.. :) இன்னும் நிறைய கதைகள் எழுதுங்க..
குட். வாரயிதழுக்கு தகுந்த நடை. மற்றபடி butterfly Surya உணர்ந்ததை நானும் உணர்ந்தேன்.
அட்டகாசமான ஆரம்பம். விறுவிறுப்பான நடை. தன்மை படர்க்கை எங்கும் இடறவில்லை. முடிவு அபாரம். வாழ்த்துக்கள்.
(உண்மையான நேர்மையான விமர்சனம் வேண்டுமெனில் ஈ மெயிலில் கேளுங்கள்)
நல்லாருக்குங்க கதை. :)
@ கேபிள் சங்கர்
@ ஜெய்
நன்றிங்க.
@ யுவா
கொஞ்ச நாள் கழிச்சி அனுப்புவோங்க. நன்றி.
@ லதானந்த்
அப்ப இங்க சொன்னது பூரா சும்மாவா. என்ன சார்? சரி ஓகே உண்மையான விமர்சந்த்த ஐஃபோன்ல இருந்து மெயிலா தாட்டி வுடுங்க.
@ லதானந்த்
அப்ப இங்க சொன்னது பூரா சும்மாவா. என்ன சார்? சரி ஓகே உண்மையான விமர்சனத்த ஐஃபோன்ல இருந்து மெயிலா தாட்டி வுடுங்க.
@ ஜாக்கி சேகர்
நன்றி அண்ணே.
@ விதூஷ்
நன்றிங்க..அடிக்கடி வாங்க.
@ உழவன்
நன்றி நண்பரே.
நண்பரே,
சென்டிமெண்டால் அசரடித்து விட்டீர்களே. தொடருங்கள்..
எல்லாரும் ஐ.டி. பீல்டு, காதல், கல்யாணம், ஒரு குழந்தைன்னு மாடர்னா எழுதுறதா நினைத்து கொண்டு இருக்கும் பொழுது உலககத்தின் இன்னொரு பக்கத்தை இயல்பான எழுத்து நடையில் வித்தியாசமான கதையாக கொடுத்து இருப்பது அருமை நண்பரே...
இதுபோன்ற வித்தியாசமான படைப்புகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@ கனவுகளின் காதலர்
அப்பிடியும் மகளிர் ஓட்டு விழமாட்டேங்குது!!
@ துபாய் ராஜா
நமக்கு நல்லா தெரிஞ்சத எழுவுனாதானே படைப்புல ஒரு நேர்மை இருக்கும்.
இன்னும் உங்ககிட்ட அதிகமா எதிர்பார்கிறேன்
:)
thala, vanthachu. ottukkal pottachu,
aarambame viruviruppa iruuke !
mulusa padichuttu appuram varen.
கதை சூப்பரா இருக்கு மயில் ராவணன் சார்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Post a Comment