பார்வை
தொலைவிலேயே
நோக்கத் தொடங்கியது பார்வை
கோவில் யானையும்
கோபுரமும் மட்டுமே தெரிந்தது
சுவாமியின் உள் அறையை
என்னதான் பூசாரி
வெளிச்சமிட்டு காட்டினாலும்
ஒன்றுமே தெரிவதில்லை இருளில்...
வடிவம் தவிர!
எட்டாத உயரத்திலிருந்த
நான்காவது மாடியின் விளக்கொளி
மிக நன்றாகவே புலப்பட்டது.
தேய்ந்துபோன
பாத்திரங்களின் ஒளி கூட
இன்னமும் மனசில் நிற்கிறது.
எதற்கென என்றில்லாமல்
என்னுடனிருக்கும்
இந்தப் பார்வை என்ன செய்ய?
- பொன்.வாசுதேவன்
அக்-92 கணையாழி
மொழி
உன்னுடன் சேர்ந்து வரும்
அந்த மௌனம் போதுமெனக்கு.
நீ என்னுடன்
பேசவேண்டியது அவசியமில்லை.
எனது பேச்சினைக் கேட்டு
எதையும் வெளிப்படுத்த
வேண்டியதில்லை.
உனது மௌனத்தைத் தவிர.
உனது மௌனம் என்னை
என்றும் மறுத்துப் பேசாது.
உனக்கும் எனக்குமிடையே
என்றும்
கருத்து வேறுபாடுகளில்லை
என்றாலும்
எனது மொழி உனக்கும்
உனது மௌனம் எனக்கும்
என்றும் விளங்கும்
தொடர்பின்றி நான் பேசினாலும்
உன் மௌனம்
கைகட்டி, தலை குனிந்து
நிற்கும் என்னிடம்.
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ
ஒரு போதும் இல்லை
நீ உனது மௌனத்தை
கடைபிடிக்கும் வரை!
பொன்.வாசுதேவன்
-மே.92.கணையாழி
டிஸ்கி:
ஆமாம் இப்ப என்ன திடீர்னு ’பப்ளிஷர்’ கவிதைகள்னு கேக்குறீகளா? ரெண்டே காரணந்தேன்
* 92’ க்கு முன்னாடிலேர்ந்தே ‘கணையாழி’ போன்ற எளக்கிய இதழ்களை வாசிச்சவிங்க தான் நாங்க.
* கதை, கவிதை, குறுநாவல் எல்லாம் எழுதி முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். சீக்கிரம் புக் போடணுமில்ல? :)
23 comments:
எனக்கு மெய்யாலுமே பிடித்த கவிதைகள்.அப்போல்லாம் நிறையா கவிதைகள் எழுதுவார் வாசு!!
நல்ல கவிதைகள்!
சீக்கிரமாக புத்தகம் வெளியிட வாழ்த்துக்கள்!
வாசுவும் மயில்ராவணனும் என் இனிய நண்பர்கள் என்பதில் பெருமையே...
அப்ப 2020ல என் கவிதகளையும் போட்டுடுங்க:))
@ சித்ரா
நன்றி மேடம்.
@ பட்டர்ஃப்ளை சூர்யா
அதெல்லாம் கரெக்ட்தான். சனிக்கிழமை அவிங்க மீட்டிங்க் போகணுமா?
@ ஷங்கர்
பொய்தவத்துல வந்திருந்தா கண்டிப்பாக போட்ருவோம்ணே.
நன்றி சாமி.
கூடிய விரைவில் புக் போட
வாழ்த்துக்கள்.
சாமர்த்தியமுள்ளவர்கள் புத்தகம் வெளியிடுகிறார்கள்! குறைந்தவர்கள் புத்தகம் எழுதுகிறார்கள்!
பத்து வலைப்பதிவு, நாலு என்டர் தட்டிக் கவிதைகள் எழுதினாலே இங்கே நிறையப் பேருக்கு எழுத்தாளர் ஆகிவிட்டதாக ஒரு நினைப்பு வந்து விடுகிற சோகம் உங்களையும் விட்டு வைக்கவில்லையா?
:-((
நண்பரே,
சிறப்பான கவிதைகளின் தெரிவு. உங்கள் கனவுகள் யாவும் இனிதே நிறைவேறிட வாழ்த்துக்கள்.
@ சைவகொத்துப்பரோட்டா
ரொம்ப நன்றி.
@ கிருஷ்ணமூர்த்தி
சரி விடுங்க. தப்புதேன்.நான் கொஞ்சம் வெகுளி. மனசுல எதையும் வெக்குறதில்ல.நன்றி.
@ கனவுகளின் காதலன்
நன்றி நண்பரே.
நண்பா . . கவிதைகள் பிரமாதம் . . எனக்கு இது புதிய தகவல் . . :-) கவிதைகள் தொடரட்டும் . . சூப்பர் !!
அதல்லாம் சரி. நீங்க எப்ப கவிதை எழுத போறீங்க.
// 92’ க்கு முன்னாடிலேர்ந்தே ‘கணையாழி’ போன்ற எளக்கிய இதழ்களை வாசிச்சவிங்க தான் நாங்க.//
எளக்கியவ்யாதி மயில் ராவணன் வால்க வாள்க
:)
அது சரி மயில் என்ன பன்னெண்டு வயசுலயே கணையாழி எல்லாம் படிச்சீங்களா என்ன..கவிதை அருமை..வாழ்த்துக்கள் வாசுவுக்கு
@ கருந்தேள் கண்ணாயிரம்
நன்றி நண்பரே..
@ ராமசாமி கண்ணன்
சென்ற மாதமே ஆரம்பிச்சு ரெண்டு ரன்
எடுத்துருக்கேன்.
@ அகநாழிகை
எழுதுன உங்களுக்குத்தேன் வாழ்த்துகளும் நன்றியும்.
@ எறும்பு
ரெம்ப நன்றிங்க.
@ தேனம்மை லெட்சுமணன்
ஆமாங்க. அங்க வீடு பூரா புத்தகமா இருக்கும். வேற வழியில்லாம எதையாச்சும் படிச்சிக்கிட்டிருப்பேனுங்க.
DISKY.........SUPER:)
Post a Comment