Wednesday, April 14, 2010

இஷ்கியா- கனவில் இன்பம்

                      நஸ்ருதீன்ஷாவும்(காலூஜா),அர்ஷத்வர்சியும்(பாபன்) கூட்டாளித் திருடர்கள்.இவர்கள் இருவரும் தங்களது உறவினனான முஸ்தாக்கிடம் பொய் சொல்லி,ஏமாற்றி,கட்டி போட்டுவிட்டு பை நிறைய பணத்துடன் தப்பிக்கிறார்கள். இவர்கள் தேடிச் செல்லும் பழைய நண்பன் இறந்ததை அறிந்து சிலநாட்கள் நண்பனின் மனைவி(வித்யாபாலன்) வீட்டில் தங்குகிறார்கள்


.                             
                                                                                
அப்போது ஏற்படும் ஒரு முக்கோண காதல் காவியம்தான்! இந்த இஷ்கியா. கதையின் பெரும்பாலான பகுதி கோரக்பூர் என்ற நேபாள எல்லை கிராமம் ஒன்றிலேயே நகர்கிறது. இருவரும் நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்காகத் தான் வித்யா வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.


அதனைத் தொடர்ந்து உடனடியாக கிளம்ப முயற்சி செய்யும் போது வித்யாபாலன் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, அங்கேயே தங்க வைக்க முயற்சி செய்கிறாள். அவளுடைய திட்டப்படி ஒரு ஸ்டீல் ஃபேக்டரி அதிபரிடமிருந்து கடத்தி பணம் பறிப்பதே முக்கியமான விஷயமாகிறது.

இந்நிலையில் காலூஜா காவியக் காதலோடு கிருஷ்ணாவைக் காதலிக்கிறார். பாபனோ மிகைக்காமத்துடன் கிருஷ்ணாவைக் காதலிக்கிறான். முக்கியமாக அந்த இரவில் இரத்தம் கொட்டும் காட்சியும், அதைத் தொடர்ந்த அழுத்தமான காட்சியும், இதனை நமக்கு குறிப்பால் எளிதாக உணர்த்தி விடுகிறது.


இவர்களுடைய மாஸ்டர் பிளானுக்கு கார் ஒன்று தேவையாக இருப்பதால் அதனைத் திருடிக் கொண்டு வர காலூஜா நகரத்திற்கு சென்று வருவதற்கு ஆகும் நேரத்தில் கிருஷ்ணாவிற்கும், பாபனுக்கும் காமம் மலர்ந்து விடுகிறது.
                                                                                    
காவியக் காதலைக் கண்களில் சுமந்தபடி திரும்பி வரும் காலூஜா இருவரின் காம களியாட்டங்களைக் கண்டு மனமுடைந்து வித்யாபாலனிடம் பேச மறுக்கிறான். ஏன் இப்படிச் செய்தாய் என்று கிருஷ்ணாவிடம் பொங்கும் போது, அதைக் கேட்பதற்கு நீ ஒன்றும் என் கணவனில்லை என்ற பதில் மூலம் காலூஜாவின் காதலை நிராகரித்தாலும், தொடர்ந்து வரும் காட்சிகளில் அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் காண்பித்துக் கொகிறாள்.


கடைசியில் தனது கணவன் இறந்து விடவில்லை என்றும், போலிசில் சரணடைய சொல்லி வற்புறுத்தியதால் தன்னை கொல்ல முயற்சி செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக சொல்லவும், அதனை நம்பாமல் கிருஷ்ணாவைக் கட்டிப்போட்டுவிட்டு தப்ப முயலும்போது, கிருஷ்ணாவின் கணவன் கைகளில் அகப்படுகின்றனர்.
  விஷால் பரத்வாஜ் 


 கைகட்டி இருப்பவர் இயக்குனர் அபிஷேக் ஷோபே      
                                                                 
கடைசியில் பாபனும், காலூஜாவும் கிருஷ்ணாவை அவனது (முதல்) கணவனிடமிருந்து காப்பாற்றி தங்களோடு அழைத்துச் செல்வதாகப் படம் முடிகிறது.


முக்கியமாக நஸ்ருதீன் ஷா கிருஷ்ணாவிடம் பாடல்களில் மூலமாக தனது பிரியத்தை வெளிப்படுத்தும் இடமும், அதற்காக தன்னை இளமையாக்கிக் கொள்ள முயற்சி செய்வதுமான காட்சிகள் ஓவியம் போல வந்து செல்கின்றன.


மேலும் முக்கியமாக கிருஷ்ணாவிற்கும், அவனது கணனனுக்கும் இடையிலான காட்சிகள் அருமை. அப்போது அவன் “சரண்டர்” என்பதை “சிலிண்டர்” என்று உச்சரிப்பதன் காரணம் தெரிய கிளைமாக்ஸ் வரை மர்மம் நீடிக்கிறது. நம் மனதில் ஒளிந்துள்ளவை நம் பேச்சில் வெளிப்படும் என்று உண்மையை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 


” Badi Dheere Jali” என்ற பாடலும் “Ab Mujhe Koyi"  என்ற ரேகா பரத்வாஜின் பாடலும், ஒரு கிராமத்துப் பெண்ணின் விரக தாபத்தை மிக அழகாக, விரசமில்லாமல் உணர்த்துகிறது. 


கிருஷ்ணாவைக் கொன்று விடுமாறு காலூஜா செல்லவும் அதற்கு பாபன் ‘உனக்கு காதல் மட்டும்தான், எனக்கு செக்ஸே உண்டு” என்று கூறும் இடத்தில் இயக்குனர் அபிஷேக்கின் திறமை அழகாகத் தெரிகிறது.


பாடல்களைத் தரவிறக்க சுட்டி இங்கே
இப்படத்திற்கான மேலதிக விவரங்கட்கு இங்கே


டிஸ்கி:
-----------
அருமையான திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல்கள், இசை ஆகியவற்றின் ஒரு அற்புதமான கூட்டணியே இஷ்கியா. படத்தின் இயக்குனர் அபிஷேக் ஷைபே, இணை இயக்குனரும், இசையமைப்பாளரும், வசனகர்தாவுமாகிய விஷால் பரத்வாஜ், ஒளிஓவியர் மோகனகிருஷ்ணன், பாடலாசிரியர் குல்சார், அழகு தேவதை விதயாபாலன்,நஸ்ருதீன் ஷா, அர்ஷாத் வர்சி அனைவரையும் எவ்வளவு பாரட்டினாலும் தகும்.இந்த படத்தப் பத்தி யோசிச்சா கேபிளாரின் வரிகள் தான் நினைவுக்கு வருது- ”ம்ஹூம்.... எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?” Ab Muje Koyi Intezaar Kahan.

29 comments:

Chitra said...

”ம்ஹூம்.... எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?

...... வரும் - வரும் ..... ஆனால், கலைஞரின் பேரன் தயாரித்து நடிக்கும் படமாக இருக்கும். ஓகேவா?

துபாய் ராஜா said...

அழகான பகிர்வு மயில்...

கே.ஆர்.பி.செந்தில் said...

"கிருஷ்ணாவைக் கொன்று விடுமாறு காலூஜா செல்லவும் அதற்கு பாபன் ‘உனக்கு காதல் மட்டும்தான், எனக்கு செக்ஸே உண்டு” "

நன்றாக எழுதி உள்ளீர்கள், உடனே பார்த்துவிடுகிறேன்

எம்.எம்.அப்துல்லா said...

:)

சைவகொத்துப்பரோட்டா said...

உங்க விமர்சனம் நல்லா இருக்கு.

கருந்தேள் கண்ணாயிரம் said...

மயிலு . . இந்தப் படத்தோட ‘இஷ்க் ஹை பச்சா ஹை ஜீ’ என்னோட ஆல் டைம் ஃபேவரைட் பாட்டாக மாறி விட்டது . . அதுதான் என்னுடைய ஹலோ ட்யூன் . . :-)

ஆருமையான படம். . பிக்ஃப்ளிக்ஸில் போட்டாச்சு . . சீக்கிரமே பார்ப்பேன் . . சூப்பர் விமர்சனம்

kailash,hyderabad said...

:)))
ottukkal pottachu.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான விமர்சனம்
நன்றி
மயில்ராவணன்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான விமர்சனம்
நன்றி

எறும்பு said...

:)

butterfly Surya said...

எழுத வேண்டிய லிஸ்டில் இருந்த படம்.

நன்றி..

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

விமர்சனத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். தரமான படைப்புக்கள் குறித்து பகிர்ந்து கொள்வதற்கு நன்றி நண்பரே.

வால்பையன் said...

பார்த்துருவோம்

இராமசாமி கண்ணண் said...

நல்ல விமர்சனம் மயில். இந்த படம் பார்த்தப்ப பாதி புரிய்ல எனக்கு. இருந்தாலும் நஸ்ருதின் ஷா, வித்யா பாலன் இவங்களுக்காக இந்த படத்தை பார்த்தேன். உங்க விமர்சனத்தை படிச்ச உடனே திரும்பி ஒரு தடவை இந்த படத்தை பார்க்கணும்னு நெனைக்கிறேன்.
நன்றி மயில்.

செ.சரவணக்குமார் said...

அருமையான படம். அசத்தலான விமர்சனம். கலக்குறீங்க மயில்.

மயில்ராவணன் said...

@ சித்ரா
@ துபாய் ராஜா
@ கே.ஆர்.பி.செந்தில்
@ எம்.எம்.அப்துல்லா
@ சைவகொத்துப்பரோட்டா
@ கருந்தேள் கண்ணாயிரம்
@ கைலாஷ்
@ மணி
@ எறும்பு
@ பட்டர்ஃபிளை சூர்யா
@ கனவுகளின் காதலன்
@ வால்பையன்
அனைவருக்கும் நன்றி.

மயில்ராவணன் said...

@ ராமசாமி கண்ணன்
முதல் முறை கொஞ்சம் கஷ்டமா இருக்கும் இதன் மொழி.அதுக்காகவே படத்த நிறைய இடங்களில் ரீஷூட் பண்ணாங்கெ.கிராமத்து ஹிந்தி.நன்றி

மயில்ராவணன் said...

@ சரவணக்குமர்.செ
நன்றி.

ஜாக்கி சேகர் said...

இந்த படத்தை நான் பார்க்கலை... நிச்சசயம் பார்பேன்.. நல்ல எழுதி இருக்க.. நண்பா..

DREAMER said...

என் நண்பர்கள் பலரும் (நீங்கள் உட்பட) இந்த படத்தை பலமா சிபாரிசு செஞ்சிருக்காங்க! சீக்கிரமே பாக்கணும்! உங்க விமர்சனம் படிச்சதும் ரொம்பவும் ஆவலா இருக்கு!

//எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?//
இந்த மாதிரி என்னங்க, இதே படத்தையே சீக்கிரம் எடுத்துருவாங்கன்னு நினைக்கிறேன்.

-
DREAMER

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நானும் போன மாசம் இந்த படத்தை பார்த்தேன். படம் சுமார் பரவாயில்லை பார்க்கலாம்.

உங்கள் விமர்சனம் ரொம்ப அருமை.

மயில்ராவணன் said...

@ ஜாக்கி சேகர்
ஃபோடோ சூட் எப்போ வெச்சுக்கலாம்?

@ ட்ரீமர்
//இந்த மாதிரி என்னங்க, இதே படத்தையே சீக்கிரம் எடுத்துருவாங்கன்னு நினைக்கிறேன்.//
தப்பே இல்லைண்ணே! எப்படியோ நல்ல படம் வந்தா சரி.

@ ஸ்டார்ஜன்
நன்றி நண்பரே!

Yuva said...

நல்லதொரு விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

Cable Sankar said...

எ.வ.த.இ.மா.படம்? இது என்னோட டேக்.. ராயல்டி கொடுங்க..:)

நல்ல விமர்சன்ம்

Shameer said...

//கிருஷ்ணாவைக் கொன்று விடுமாறு காலூஜா செல்லவும் அதற்கு பாபன் ‘உனக்கு காதல் மட்டும்தான், எனக்கு செக்ஸே உண்டு” என்று கூறும் இடத்தில் இயக்குனர் அபிஷேக்கின் திறமை அழகாகத் தெரிகிறது.//

இந்த எடத்துல வசனம் "உனக்கு மட்டும் காதல், ஆனால் நான் செஞ்சா செக்ஸான்னு" இருந்ததா நியாபகம். உங்க விமர்சனம் நல்லாயிருக்கு.

அக்பர் said...

நானும் படம் பார்த்தேன். அருமையான விமர்சனம்.

மயில்ராவணன் said...

@ யுவா
நன்றிங்க

@ கேபிள் சங்கர்
அதுதான் போட்ருக்கோம்ல கேபிள்னு...அப்புறமென்ன. நன்றி.

@ ஷமீர்
நன்றிங்க. திருத்திவிடுகிறேன்.

மயில்ராவணன் said...

@ அக்பர்
ரொம்ப சந்தோசம் இம்புட்டு தொலைவிலருந்து வந்ததுக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்துருவோம்