Sunday, September 5, 2010

என் பார்வையில் ஜெயமோகனின் காடு - கோகுல்

                     விடுமுறையை உல்லாசமாகக் கழிக்கக் காட்டிற்கு சென்று வரும் நம் அனைவருக்கும் , ஊருக்குத்திரும்பி வந்த பிறகும், நம் மனதை விட்டு அகலாமல் ,  மறுபடியும் அடுத்த பயனத்தின் போது இருகரம் நீட்டி அழைக்கும் சக்தி கொண்டதுதான் காடு.  அதுபோல மேலோட்டமாக , ஜெயமோகனின் “காடு” நாவலை ஏற்கனவே வாசித்திருந்தாலும் மழையூறிய ஒரு இரவில் மீண்டும் என் கைகளில் வந்தமர்ந்தது இந்த நாவல்.

                   நாவலில் இடம்பெறும் கிரிதரன் கதாபாத்திரம் முதலில் காட்டிற்குள் வழிதவறி சென்று விடுவான். அடுத்தடுத்த முறை காட்டிற்குள் செல்லும்போது காடு வரைபடமாக அவன் கண்முன்னால் விரிவடைந்து கொண்டே போகும். அது போல இந்த மறுவாசிப்பின்பொது என்னால் நாவலின் கதாபாத்திரங்களோடு பேச முடிந்தது. எனக்கு சற்றும் பரிச்சயமில்லாத மொழி நடைத்தான். ஆனாலும் ஜெயமோகன் எழுதும்போது அப்படியொன்றும் அந்நியமாகத் தெரியவில்லைதான்.  பலகாலம் பழகிய மலையாளப் பெண்ணின் மொழியைபோல என்னோடு ஒட்டிக் கொண்டு விட்டது. காடும் அது காட்டும் பல நிகழ்வுகளும் 48 மணி நேரத்துக்கும் மேலாக அந்த நாவலோடு என்னைக்கட்டிபோட்டு வைத்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.
காடு- ஜெமோ
                                                                                                     
                   முன்னும் பின்னும் நகரும் திரைக்கதை போன்ற எழுத்தின் மூலம், காடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றத்திற்கு உள்ளாகி வருவதை நாவலில் விரியும் பல்வேறு சம்பவங்களினூடாக காட்சிப் படுத்தும் தன்மை ஜெயமோகனுக்கு மட்டுமே உரித்தானது. முக்கியமாக கனவுகள் ஜெயமோகன் நாவல்களில் மட்டுமே முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த நாவலிலும், ஆழ்மனதின் காட்சிகள், நாவலின் கதா பாத்திரங்களின் கனவுகளின் மூலம் ஒரு யட்சியைபோல நம்மைத் தழுவிக்கொள்கின்றன.

                     கிரிதரன் குட்டப்பன் ஆகிய இரு கதாபாத்திரங்களின் வழியாகவே பெருமளவு நாவல் விவரிக்கப்படுகிறது. ஆயினும், குட்டப்பனை விட கிரிதரன் கதாபாத்திரம் சிறியதாகவே தெரிவதற்கு காரனம், குட்டப்பனின் வாழ்வனுபவமு, அவன் வாழ்க்கையை எளிமையாக புரிந்து வைத்திருப்பதுமேயாகும் என்பதின் மூலம் நமக்கு விளங்குகிறது. இந்த நாவல் நானறிந்த வரையில் மனிதர்களைப் பற்றி மட்டும் பேசுகின்ற மற்றும் வழமையான உறவுச் சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசுகிறது என்பதோடல்லாமல் , ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், குறிப்பிட்ட  காலத்தில் காணக்கிடைத்த , அழகிய காட்டைப் பற்றிய வரலாறு என்றே கூற வேண்டும்.

                      “ ஒரு சாலைபோதும் ஒரு முழுக்காட்டையே அழிப்பதற்கு” என்பார் கானியலாளர் தியோடர் பாஸ்கரன். அதுபோல சாதாரன கட்டுமானத் தொழிலுக்காக ஒரு காடும் அதன் வளமும் , அதன் சகல ஜீவராசிகளும் அழித்தொழிக்கப்படுவதன் ஆதங்கத்தை இந்த நாவல் வழிநெடுகிலும், ஒரு சிறுத்தையின் காலடித்தடத்தை போல விட்டுச் செல்கிறது.


                      “அப்படித்தான் நிகழும், எல்லாப் பெரு நகரங்களும் ஒரு காலத்தில் காடுகளாக இருந்தவைதான், காடுகள் அழிந்துகொண்டே இருக்கின்றன. பின்வாங்கிப் பின்வாங்கி மலையடிவாரத்துக்கு வந்து விட்டன. இனி நகரங்கள் மலைகளையும் வளைத்து உள்ளிழுத்துக் கொள்ளும்…”

                         “காடு அழிந்து ஊர்களானதே நாகரீகம்…”
                         “நாகரீகம் என்ற சொல்லுடன் புரண்டு படுத்தேன். நகர் சார்ந்தது நாகரீகம். அதற்கு எதிர்ப்பதம் காட்டுத்தனம், காட்டு மிராண்டி. எவ்வளவு தெளிவாக இருக்கிறது எல்லாம்.!.ஆரம்பப் பள்ளியிலேயே கற்பிப்பது. காட்டை வென்றடைக்கும் ஊர்களின் கதைதான் மனித நாகரீகம் போலும்” என்ற வரிகளின் மூலம் இந்த நாவல் காட்டின் முக்கியத்துவத்தை எந்தளவு பேசுகிறது என்பதை அறியலாம்.

                          டிஸ்கவரி சேனலின் “ Survivor Man” நிகழ்ச்சியில் வரும் சாகசக்காரர் இனி எனக்கு நாவலின் கதாபாத்திரமான “குட்டப்பனை” எப்போதும் நினைவு கூர்வர். காட்டில் உள்ள பொருட்களையே உணவாய் கொண்டு வாழும் குட்டப்பன் நாவலில் வாழ்ந்திருக்கிறார். அவருடைய முடிவு நாவலின் ஆரம்பத்திலேயே விவரிக்கப்பட்டுவிட்டாலும், நாவலின் ஒவ்வொரு கனத்திலும் அவரே நிறைந்திருக்கிறார்.

                          வெகுஜன வாழ்க்கையில் நாமனைவரும் சாதாரனமாக சந்திக்கும் ஒரு கதாபாத்திரமே “அய்யர்”. அவருடைய சபலத்தை அழகிய நகைச்சுவை உணர்வுடன் கையாண்டிருப்பது அழகு. குறிப்பாக கையுடைந்து மருத்துவமனையில் படித்திருப்பதாக வருமிடம். இந்த நகைச்சுவை ஜெயமோகனுக்கே உரியது.

                           நாவல் முழுக்க ஒரு சாதாரன மனிதனின் பயணத்தின் போது காட்டுக்குள் காணக் கிடைக்கு, மிளா, முயல், தேவாங்கு, மலை அணில், மாண், கூழக்கடா மற்றும்  யானை இவற்றை மட்டுமே பயன்படுத்தி இருப்பதன் மூலம் ஒரு பயனியின் நிறைவை நாம் அடைகிறோம். மற்ற அரிய உயிர்கள் ஆராய்ச்சியாளர்களின் பைனாகுலர் கண்களுக்கே கிடைக்கும் என்பதே உண்மை.

                           நீலி நாவல் முழுவதும் வந்தாலும், அவளுடைய முடிவின் மூலம் வாசகரை ஒரு கணம் துக்கப்பட வைக்கிறாள். நீலியுடனான கிரிதரனின் சந்திப்புகள் ஜெயமோகனின் வேறொரு நாவலை நினைவுறுத்துகிறது. கபிலனும் குறுந்தொகையும் காட்சிகளை விளக்குவதற்கு பயன்பட்டிருந்தாலும் ஜெயமோகனின் வரிகளே பெரிதான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருவேளை குறுந்தைகையையும் கபிலனையும் புரிந்துகொள்ள எனக்கு இன்னும் பல காலமாகலாம். ஆனால் எனக்கு அதுவரை ஜெயமோகன் போதும். அடுத்தமுறை இந்த நாவலைப்படிக்கும்போது 40 வருடம் காட்டில் அலைந்தவனைபோல பரிச்சயமாக இருக்கும் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன்.

                              நாவல் தந்த அனுபவம் காட்டை மேலும் மேலும் ரசிக்கவும், வாழ்க்கையை புத்துணர்ச்சியுடையதாகவும் ஆக்கும் என்ற ஆவலோடு அடுத்த காட்டு பயணத்திற்கு காத்திருக்கின்றேன்.

                              எனக்கு தீவிர இலக்கிய விமர்சகர்களின், பூதக்கண்ணாடிகளின் மேலும், இந்த நாவலைப்பற்றிய விமர்சனத்தின் மீதும் எந்த பிடிப்பும் இல்லை. ஜெயமோகனுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன். மாறாக ஒரு மண்ணும் அது சார்ந்த மலையினமும், நம் கண் முன்னே அழிந்து கொண்டிருப்பதை தேர்ந்த வாசகனுக்கு நாவலின் வழி சொன்ன ஜெயமோகனின் இலட்சம் வார்த்தைகளுக்கு கோடானு கோடி நன்றி.
அன்புடன்
கோகுல்.

27 comments:

கனவுகளின் காதலன் said...

தமிழின் உன்னதமான நாவல்களில் காடு ஒன்று. மிளாவின் காலடித் தடம் கால்வாயின் காங்கீரிட் தரையில் படிந்து கிடப்பதைப் போல் காடு மனதில் வளர்ந்து கிடக்கிறது. சிறப்பான பதிவு.

மரா said...

நன்றி கனவுகளின் காதலரே,
எனக்கென்னமோ தமிழ்ல புனைவுனா ஜெமோ ஞாபகம் தான வரும் இந்த சந்ததியினர்க்கும் அடுத்த சந்ததியினர்க்கும் :)

இராமசாமி கண்ணண் said...

எனக்கு ஜெயமோகனின் எழுத்து அவ்வளவ்வாக பரிட்ச்யம் இல்லாத ஒன்று.. இருந்தாலும் அவரின் ஊமை செந்நாய் ஒருமுறை வாசித்திருக்கிறேன்... இருந்தாலும் கோகுலின் எழுத்தின் வாயிலாக அறியும் போது இப்புத்தகம் வாசிக்க வேண்டிய ஒன்றாகிற்து...
“காடு அழிந்து ஊர்களானதே நாகரீகம்…”

இது என்னை பொறுத்த வரையில் மனிதன் அவனுக்காக கூறிக்கொண்ட சமாதானங்களின் ஒன்று ...

Anonymous said...

எனக்கும் மிக பிடித்த நாவல் 'காடு'. குட்டப்பனின் பார்வையில் சில விஷயங்கள் மிக வியப்பானவை. சிங்கம் என்ற ஒன்றே கிடையாது , புலி தான் வயோதிகத்தில் முடி வளர்ந்து அப்படி தோன்றுகிறது என்பான். அந்த காட்டுக்குள் கட்டுமானப்பணி செய்யும் பெண்கள், கட்டற்ற பாலியல் சுதந்திரம், அதோடு அந்த பெண்களின் குடும்ப வாழ்க்கை போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இளவரசரை மயக்கும் நீலி பற்றிய கட்டமைப்பு சிலிர்ப்பூட்டும். அதையும் குட்டப்பன் தான் கிரிதரனுக்கு சொல்வான். குறிப்பிடத்தக்க நாவல். ஜெ. வின் எழுத்தில் எனக்கு மிக பிடித்த படைப்பு. கோகுலுக்கு நன்றி..பகிர்ந்ததற்காக என் நண்பன் மயிலுக்கும்.

மரா said...

@ இராமசாமி கண்ணன்
// எனக்கு ஜெயமோகனின் எழுத்து அவ்வளவ்வாக பரிட்ச்யம் இல்லாத ஒன்று..//
என்ன மாப்ள இப்புடி சொல்லிப் போட்டிங்க,..... தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளார் அவர். இந்தியா வந்தா அவசியம் இவுரு பொய்தவம்லாம் வாங்கி படிங்க சாமி.

இராமசாமி கண்ணண் said...

//மரா said...

@ இராமசாமி கண்ணன்
// எனக்கு ஜெயமோகனின் எழுத்து அவ்வளவ்வாக பரிட்ச்யம் இல்லாத ஒன்று..//
என்ன மாப்ள இப்புடி சொல்லிப் போட்டிங்க,..... தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளார் அவர். இந்தியா வந்தா அவசியம் இவுரு பொய்தவம்லாம் வாங்கி படிங்க சாமி. //

வாங்கி வெச்சுருங்க மாம்ஸ்.. உங்க கைலேந்து வாங்கி படிக்கிறதுக்கு ஈடாகாது மாம்ஸ்... அதுனால சொன்னேன் :)

மரா said...

@ சந்தனார்

ஜெமோவோட தீவிர ரசிகராச்சே நீங்க.
‘காடு’ மெய்யாலுமே அருமையான நாவல் தான். எனக்கு அவர் சொல்லுற ஒவ்வொரு விசயமும் வியப்பா இருந்தது. எப்புடி மனுஷன் அலையா அலைஞ்சிருக்காரு காட்டுக்குள்ள. வியப்பும்,ஆச்சரியத்தையும் அளித்தன அவர் எழுத்துக்கள்.

மரா said...

@ இராமசாமி கண்ணன்
// வாங்கி வெச்சுருங்க மாம்ஸ்.. உங்க கைலேந்து வாங்கி படிக்கிறதுக்கு ஈடாகாது மாம்ஸ்... அதுனால சொன்னேன் //

இது என்னா இது? எளக்கியத்த வளக்கோணும்னா சொத்த விக்கனும் போலயே? சரி விடுங்க.. வாங்கித்தாரேன்.

ஜோதிஜி said...

தமிழ்மண பட்டை செயல்படவில்லை நண்பரே

மரா said...

@ ஜோதிஜி
காரணம் தெரியலை நண்பரே :)

மீன்துள்ளியான் said...

நன்றி பகிர்ந்தமைக்கு .

மரா said...

@ மீந்துள்ளி
வாங்க சார். ரெம்ப நாளாச்சு பார்த்து :)

யாசவி said...

ரெண்டு மூனு எளக்கிய புக்கு வாங்கி எல்லாம் பாதியிலே நிக்கிது. எடுத்த பத்து நிமிசத்திலேயே ஆஆஆவ்வ்வ்வ்வ் :).


இருந்தாலும் இதையும் முயற்சி செய்கிறேன்.

அப்படியே எனக்கும் ஒரு செட் பார்சல் :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
This comment has been removed by the author.
|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பர் கோகுல்,நல்ல விமர்சனப்பார்வை.
காடு,மிக நல்ல புதினம்.மறுப்பதற்கில்லை.குட்டப்பன் பாத்திரம்,அய்யர் பாத்திரம்.நீலி பாத்திரம்,ஏன் அன்ந்த குரிசு.அன்ந்த தேவாங்கு கூட நம் மனதை விட்டு நீண்ட நாட்கள் மனதைவிட்டு அகலாது

இதில் கதாபாத்திரங்களின் பேச்சுவாக்கில்
ஜெயமோகன் மேனன்,கண்டன் புலையன்,நாயர்.சாதியினரையும்,உட்பிரிவுகளையும்,தலீத்துகளையும் அங்கதம் [cheap humour or sick joke] என்னும் மட்டமான சிலேடை கொண்டு வாரி தூற்றியிருப்பார்,அது வட்டார மொழி இடையே ஒளிந்திருக்கும்.அதைப்பற்றியும் நீங்கள் சொல்லியிருக்கலாமே?

===
சாதியை ஒழிப்போம்,நல்ல சமுதாயம் வளர்ப்போம்.

கருந்தேள் கண்ணாயிரம் said...

நண்பர் கீதப்ரியனின் கருத்தை வழிமொழிகிறேன் ;-)..

மரா said...

@ கருந்தேள், @ கீதப்பிரியன்
இன்னமும் காட்டிலும், நாட்டிலும் சில பல இடங்களில் அப்பிடித்தானே இருக்குது. ‘நாயர் கடை’ல டீ வாங்கிட்டு வா, ‘கோனார் கடை’ல கொத்துக்கறி வாங்கிட்டு வா ன்னு சொல்ல கேட்டிருக்கிறோமல்லவா. அதைத்தான் ஜெமோ பதிவு பண்ணியிருக்கார் :)

மரா said...

@ யாசவி
நன்றி. நீங்க சென்னைவாசியாயிருந்த சொல்லுங்க. பொய்தவம் தாரேன் படிச்சுப்போட்டு குடுங்க :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

// உங்க கைலேந்து வாங்கி படிக்கிறதுக்கு ஈடாகாது மாம்ஸ்//

ரிப்பீட்டு..!

//சென்னைவாசியாயிருந்த சொல்லுங்க. பொய்தவம் தாரேன் படிச்சுப்போட்டு குடுங்க ://

பெர்ய மன்சு சார் உன்கு!

Arangasamy.K.V said...

பின்தொடரும் நிழலின் குரல்தான் மிக பிடித்த புத்தகம் எனினும் குட்டப்பன்தான் மிகப் பிடித்தமான கேடர்க்ட்டர் ,

வித்தியாசமான பார்வையில் விமர்ச்சனம் , நன்று

MANO said...

இப்போது நான் படித்துக்கொண்டு இருப்பதும் காடுதான். பாதி முடித்துவிட்டேன். ஒரு மாதிரி விசித்திரமான நாவல் இது. முழுவதும் படித்துவிட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மனோ

Arangasamy.K.V said...

//
இதில் கதாபாத்திரங்களின் பேச்சுவாக்கில்
ஜெயமோகன் மேனன்,கண்டன் புலையன்,நாயர்.சாதியினரையும்,உட்பிரிவுகளையும்,தலீத்துகளையும் அங்கதம் [cheap humour or sick joke] என்னும் மட்டமான சிலேடை கொண்டு வாரி தூற்றியிருப்பார்,அது வட்டார மொழி இடையே ஒளிந்திருக்கும்.அதைப்பற்றியும் நீங்கள் சொல்லியிருக்கலாமே?//

அந்த பழமொழிகள் அத்தனையும் சமுதாயத்தில் புழக்கத்தில் உள்ளனதானே ? அதையெல்லாம் விலக்கி எழுதினால் நீதிக்கதைகள் , பஞ்சதந்திர கதைகள்தான் எழுதமுடியும் :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

//@ கருந்தேள், @ கீதப்பிரியன்
இன்னமும் காட்டிலும், நாட்டிலும் சில பல இடங்களில் அப்பிடித்தானே இருக்குது. ‘நாயர் கடை’ல டீ வாங்கிட்டு வா, ‘கோனார் கடை’ல கொத்துக்கறி வாங்கிட்டு வா ன்னு சொல்ல கேட்டிருக்கிறோமல்லவா. அதைத்தான் ஜெமோ பதிவு பண்ணியிருக்கார் :) //
எப்புடி எல்லாரும் 10க்கு 9பேர் கடைஞ்செடுத்த வேசிமகன்,அந்த ஒற்றை ஆள் தெய்வம்னா? அடுத்தவன் சாதியை சொன்னா நமக்கென்ன வந்ததுன்னு சத்தமில்லாம புத்தகத்தை சிலாகித்து போகும் ரகமா நீயி,முதல்ல படிச்சியா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

//அந்த பழமொழிகள் அத்தனையும் சமுதாயத்தில் புழக்கத்தில் உள்ளனதானே ? அதையெல்லாம் விலக்கி எழுதினால் நீதிக்கதைகள் , பஞ்சதந்திர கதைகள்தான் எழுதமுடியும் :)//

சில குறிப்பிட்ட சாதியில் பெரும்பாலானவர்கள் எல்லாம் வேசிமகன்கள்,இழி குடி.இது பழ்மொழியா?இது போல ப்ழமொழிபேசித்திரியும் ஆளெல்லாம் ஒரு ஆளா?புத்தகத்துக்கு சென்சார் இல்லை போல,அதுதான் இதுபோல தைரியமா வெளியிட்டிருக்கான்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

http://geethappriyan.blogspot.com/search/label/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

இது ஏழாம் உலகம் படித்தபின் எழுதிய என் பார்வை.

பிடித்தவற்றையும் பிடிக்காதவற்றையும் சுட்டிக்காட்டியிருப்பேன்.காடுக்கும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.சாதி வெறி ஒவ்வொரு பதிவிலும் எட்டிப்பார்ப்பதையே நான் சாடுகிறேன்.
===
தமிழகத்தில் சில சாதிகள் உள்ளன.அவர்களுக்கு மிகவும் முக்கியமானது அந்த அடையாளம்.அந்த சாதிகள் பற்றி இவர் எழுதினால் கை காணாமல் போய்விடும்.இவர் எழுதுவாரா?
===
அதுசரி ராஜிவ்மேனன்,சுரேஷ்மேனன்,கௌதம்வாசுதேவமேனன்,உன்னிமேனன் போன்றவரை இவர் அந்த 9பேரில் சேர்க்கிறாரா?அல்லது கடைசி 1ல் சேர்க்கிறாரா? சரி இவர்களை 9க்குள்ளே சேர்க்கட்டும்,அவர்கள் படத்துக்கு கதை எழுத சொன்னால் எழுதுவாரா? எழுதமாட்டாரா?
இல்லை நாய் விற்ற காசு தானே ரகமா?
===
ஒரு சிறிய எடுத்துக்காட்டு:-
நானும் புனைவு எழுதுவேன்,சாதிகள் மதங்கள்,மத நம்பிக்கைகள் பற்றி எழுத மிகச் சுவையாக இருக்கும்,படிப்பவரும் எழுதுபவரும் குரூரமாக சிரிக்கமுடியும் ,அதற்கென்று ஊரில் உள்ள எனக்கு பிடிக்காத சாதிகளை ,மதங்களை வாரித்தூற்றுவது தான் அழகா?
படிப்பவர் அந்த சாதியில் இருந்து தொலைந்தால் அவருக்கு மன உளைச்சல் தானே,வெறி கிளப்பும் செயல் தானே?
அடுத்தவருக்கு நடந்தால் நம்க்கென்ன என்னும் மனோபாவம் இனியேனும் தொலைப்போம்.

கருந்தேள் கண்ணாயிரம் said...

//தமிழகத்தில் சில சாதிகள் உள்ளன.அவர்களுக்கு மிகவும் முக்கியமானது அந்த அடையாளம்.அந்த சாதிகள் பற்றி இவர் எழுதினால் கை காணாமல் போய்விடும்.இவர் எழுதுவாரா?
===//

இது உண்மை. அப்படி என்ன ஜாதிகளைப் பற்றிய வெறி இவர்களுக்கு?

//இன்னமும் காட்டிலும், நாட்டிலும் சில பல இடங்களில் அப்பிடித்தானே இருக்குது. ‘நாயர் கடை’ல டீ வாங்கிட்டு வா, ‘கோனார் கடை’ல கொத்துக்கறி வாங்கிட்டு வா ன்னு சொல்ல கேட்டிருக்கிறோமல்லவா. அதைத்தான் ஜெமோ பதிவு பண்ணியிருக்கார் :) //
எப்புடி எல்லாரும் 10க்கு 9பேர் கடைஞ்செடுத்த வேசிமகன்,அந்த ஒற்றை ஆள் தெய்வம்னா? அடுத்தவன் சாதியை சொன்னா நமக்கென்ன வந்ததுன்னு சத்தமில்லாம புத்தகத்தை சிலாகித்து போகும் ரகமா நீயி,முதல்ல படிச்சியா?//

ஜெயமோகனுக்கே உரிய வயிற்றெரிச்சல் இது. அவரது பல பதிவுகளில், பல பேரை வெளிப்படையாக இழிவு செய்திருப்பதைப் படிக்க முடியும். கமலாதாஸ், சுஜாதா, சிவாஜி, எம்ஜிஆர், மனுஷ்யபுத்திரன், அபிலாஷ் இன்னும் பலர்.. அவர்களது பலவீனத்தைச் சொல்லிச்சொல்லி அசிங்கப்படுத்தும் வேலையை ஜெயமோகன் பல காலமாகவே செய்துவருகிறார் ...

கருந்தேள் கண்ணாயிரம் said...

//ராஜிவ்மேனன்,சுரேஷ்மேனன்,கௌதம்வாசுதேவமேனன்,உன்னிமேனன் போன்றவரை இவர் அந்த 9பேரில் சேர்க்கிறாரா?அல்லது கடைசி 1ல் சேர்க்கிறாரா? சரி இவர்களை 9க்குள்ளே சேர்க்கட்டும்,அவர்கள் படத்துக்கு கதை எழுத சொன்னால் எழுதுவாரா? எழுதமாட்டாரா?
இல்லை நாய் விற்ற காசு தானே ரகமா?//

நண்பா... ஜெயமோகனுக்கு சினிமாவைச் சேர்ந்த நபர்கள் என்றால் தெய்வங்கள்.. (முதலில் அவர்களைத் தாக்கிக்கொண்டு இருந்தார்.,. ஆனால் இப்போது காலில் விழுந்துகொண்டிருக்கிறார்).. வரிக்கு வரி அவர்களை ‘சார், சார்’ என்று அவர் அழைப்பது குறித்து பல காமெடி துணுக்குகள் உலாவிக்கொண்டிருக்கின்றன ;-)