Tuesday, September 7, 2010

போயி புள்ளை குட்டிங்கள படிக்க வையுங்கய்யா! - கோகுல்

                         சக மனிதனின் ஊனத்தைக் கூட சரியான வார்த்தை மூலம் வெளிப்படுத்த தெரியாத விமர்சகர்கள் வாழும் இந்த தேசத்தில், என் கருத்தின் எதிர் வினைகள் எப்படி இருக்கும் என்று நினைத்தபோது இந்த கட்டுரையை எழுதவே தயங்கினேன்.

                        இருந்தாலும் , “கூட்டத்துல சத்தமாய் பேசுறவன் பேச்சுதான் எடுபட்டு போவுது, அதுல நியாயம் செத்துப் போவுது :” என்று தேவர் மகன் படத்தில் நாசர் சொல்வது போஅல பிளாக்கில் பதிவெழுதி , தமிழ்மணத்துல ஓட்டு வாங்கிவிட்டால் கமல் செய்த அனைத்தும் தவறு என்றும், விமர்சனங்கள் அனைத்தும் சரி என்றும் ஆகிவிடுமா?

                       ராஜபார்வை திரைப்படத்தின் மூலக்கதை சந்தான பாரதியிடம் இருந்து பெறப்பட்டது. ஆதாரம் கிழக்கு பதிப்பகத்தின் , தீனதயாளம் அவர்கள் எழுதிய “கமல்”. பக்கம் : 150. அந்த திரைப்படத்தில் கேரக்டர் மீது பரிதாபம் தோன்றுவதற்குப் பதிலாக ஒரு ஈர்ப்பு வர வேண்டுமென் பதற்காக ஸ்பெஷல் ஸ்பெக்ஸ் அணிந்து நடித்திருந்தார். ஆனால் நமது விமர்சன கண்களுக்கு அனைத்துமே காப்பிதான். கலைதான் நமது கண்களுக்குத் தெரியாதே. அதுவும் கமல் செய்திருப்பதால் மொத்தமும் தவறுதான். அல்லவா?

                       எப்போதோ படித்த ஞாபகம். “ அந்தப்புரத்தில் நடக்கும் காரியங்கள் அனைத்தும் அங்குள்ள அழகிகளுக்கு தெரியுமாம். ஆனால் அவர்களால் அது முடியாதாம்.” அதைப்போல நம்மால் விமர்சனம் மட்டுமே செய்ய முடியும். ஒரு ஆகச் சிறந்த படைப்பை குப்பை என்று விமர்சனம் செய்ய மட்டுமே முடியும். அது அங்கிருந்து திருடப்பட்டது, இங்கிருந்து திருடப்பட்டது என்றெல்லாம் குறைகள் மட்டுமே சொல்ல முடியும்.

                      இப்போதெல்லாம் இணையத்தில் இருந்து ஏராளமான திரைப்படங்களை டவுன்லோட் செய்து பார்க்க முடிகிறது. நம்மில் எத்தனை பேர் இத்தகைய உலகத்திரைப்படங்களை அது திரையிடப்படும் இடங்களிலும், ஒரிஜினல் டிவிடிக்களிலும் பார்த்திருக்கின்றோம். இதோ! சில திரைப்படங்களின் பட்டியல் தரப்பட்டுவிட்டது, இதிலிருந்துதான் கமல் கதையையும், காட்சியையும் திருடினார் என்று குற்றம் சாட்டி விட்டோம். விளைவு இன்னும் டோரண்ட் வழியாக திருடுவதற்கும், டவுன்லோட் செய்து பார்த்துவிட்டு, ஆமாம், ஆமாம், காப்பிதான் அடித்துள்ளார்! அப்பட்டமான காப்பிதான் என்றெல்லாம் பேசுவோம்.நம்மால் வேறென்ன முடியும்.
                       
                         ஒரு விவாதத்திற்காக அவர் அப்படித்தான் உலகத் திரைப்படங்களை காப்பி அடித்திருந்தாலும் கூட அதனை அவரிடம் சொல்வதற்கும், அல்லது அவதூறு பரப்புவதற்கும் நாமெல்லாம் உண்மையில் தகுதியானவர்கள்தானா?

                          ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களின் கதைக் கரு பைபிளில் இருந்தே கிடைக்கிறதாம். அதற்காக ஸ்பீல்பெர்க் எடுக்கும் அனைத்து திரைப்படங்களும் பைபிளில் உள்ளது, எனவே அது பைபிளின் காப்பி என்று கூறுவது எவ்வளவு அசட்டுத்தனமோ அவ்வளவு அசட்டுத்தனம் நாம் கமலின் படைப்புகள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டுகள்.
                                                                                           
                           இது கமல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமல்ல எந்தவொரு படைப்பாளியின் , படைப்புக்கும் பொருந்தும். நாம் யார் இவற்றை விமர்சனம் செய்ய, நமக்கு என்ன தகுதி இருக்கிறது அடுத்தவர் படைப்பை குறைகூற என்பதை நிச்சயம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நாயகன் திரைப்படம் “காட்ஃபாதரின்” அப்பட்டமான காப்பி என்று ஒரு குற்றச்சாட்டு, இதனை கமலே எல்லோருக்கும் முன்னால் ஒப்புக்கொண்டாரே. பிறகென்ன? அவரது பதிலை மட்டும் இருட்டடிப்பு செய்து விட்டு குற்றசாட்டை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருப்பதில் பயன் என்ன? அல்பாசினோ நடித்த scarface கலந்து உருவானது நாயகன் என்பதை கமல் அப்போதே ஒப்புக் கொண்டு விட்டார்.

அவை கமலின் வார்த்தைகளிலேயே
                 ”மரியோ பீஸோவை தமிழ்லே கொண்டு வரனும்கிறது கனவு. யூ கேன் சீ லாட் ஆஃப் கபோலா இன் தட் ஃபிலிம். ஆனா ரொம்ப இந்தியனா இருக்க அசாத்திய முயற்சியோட பண்னினோம். நாயகனின் வெற்றி ஆழ்வார்பேட்டை பையன்கள் எல்லோருடைய கனவும் நனவான மாதிரி” என்று அப்போதே கூறிவிட்டார்.

                இதைவிட வேறெந்த “கிரெடிட்டை” இந்த பிளாக் விமர்சகர்கள் கமலிடமிருந்து எதிர் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை.

                 ஒரு ஹோட்டலுக்கு போயி சாப்பிடும்போது , அது வெளி நாட்டு உணவு என்றால் அதை சமைத்தவனை விட்டு விட்டு இது அந்த ஹோட்டல் உணவோட காப்பி என்று கூறி கொண்டா உள்ளோம். அதுபோல உணவிற்கு பக்கத்தில் "கிரெடிட்" போர்ட் வைத்தால்தான் சாப்பிடுவேன் என்பது போல உள்ளது இந்த விமர்சகர்களின் வாதம். அந்த உணவு வெளி நாட்டு உணவாகவே இருந்தாலும் இங்கு கிடைக்கின்ற பொருட்களையும் சமையல் காரர்களையும் வைத்து அருமையாக கொடுத்த சமையல்கரனை பாராட்டுவதே சிறந்த மனது. அனால் நமக்குத்தான் எதையும் விமர்சனம் செய்து மட்டுமே பழக்கமாயிற்றே பிறகு என்ன செய்ய முடியும்??

                  மேலும் தேவர்மகன் படத்தை எல்லாம் “காட்ஃபாதர்” திரைப்படத்தோடு ஒப்பிடுவதெல்லாம் டூ மச். அது ஒரு மிகச்சிறந்த படைப்பு. சாதியைக் காரணம் காட்டி அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பர். இப்போதும் அது நடக்கும். அந்த திரைப்படம் வெளிவர காணாத போராட்டமா? இதனை எந்த திரைப்படத்தின் காப்பி என்றும் சொல்ல முடியாது. மீறியும் நாம் விமர்சிப்போம் என்றால் அந்த திரைப்படத்தில் வரும் ஒரு வசனமே அதற்கு பதில் சொல்லும். “உனக்கொன்னும் தெரியாது!. நீயெல்லாம் அப்ப சின்னப் பய! பேயாம இருக்கணும்.!.

                    ஹேராம், இதையும் விடவில்லை. இதுவும் காப்பிதானா? திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு நாவல். வசன் ஒவ்வொன்றும் ஒரு டிவிட் அல்லவா? இதைப்பற்றி நான் மேலும் பேசினால் ஒரு இந்து வெறியன் என்று மேலும் விமர்சிக்கப்படுவேன். இத்திரைப்படத்தை “சாதத் ஹாசன் மண்டோவின்” வரலாற்றுக் குறிப்புகளோடு ஒப்பிட்டால் கூடத் தகும். அவர் சொல்லில் வடித்த சித்திரங்களை இவர் ஃபிலிம் நமக்கு காட்டியிருப்பார்.

                   தமிழன் பெருமைப்படுவதற்கு வாழும் ஒரு கலைஞனை திட்டித்தான் தமிழ்மணத்தில்,இண்ட்லியில் ஓட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்தை தமிழர்கள் புறக்கணிக்கும் நாளில். தமிழ் சினிமா நிச்சயம் ஆஸ்கார் வென்றிருக்கும். ஆனால் அடுத்த சில நாட்களில் அத்திரைப்படமும் யாரோ ஒருவரால் இது அப்பட்டமான காப்பி என் விமர்சிக்கப்படும்!

                     வள்ளுவர் கூட மன்னன் செய்யும் தவறுகளை அவனுக்கு இடித்து உரைக்க ஒரு அமைச்சர் வேண்டுமென்கிறார். ஆனால் அதனைகூறக்கூட ஒரு அமைச்சர் வேண்டும் என்பதுதான் உண்மை. ஆனால் நாம்தான் அடிப்படையில் ஒரு நல்ல ரசிகன் கூட கிடையாதே.

                      இதுபோன்ற தேவையற்ற சச்சரவுகள்தான் பல நேரங்களில் நிகழ மறுக்கும் அற்புதங்கள் நிகழாமலே இருப்பதற்கும் காரனமாகி விடுகிறதோ!
      
                     வாருங்கள்! தமிழில் கெட்டவார்த்தையில் திட்டு வாங்கி வெகு நாட்களாகிறது. உங்களால் முடிந்த அளவு பின்னூட்டத்டை நாறடித்து செல்லுங்கள் ஆனால் இனியாவது ஒரு கலைஞனின் திறமையை விமர்சிப்பதை தவிருங்கள்..

                      போதுமய்யா இனி ஒரு கலைஞனுக்கு இது நடக்க கூடாதுய்யா!..போயி புள்ளை குட்டிங்களை படிக்க வையுங்கய்யா!!                                                                                அன்புடன் கோகுல்

87 comments:

ஜோதிஜி said...

அந்தப்புரத்தில் நடக்கும் காரியங்கள் அனைத்தும் அங்குள்ள அழகிகளுக்கு தெரியுமாம். ஆனால் அவர்களால் அது முடியாதாம்.

ரொம்பவே ரசித்த யோசிக்க வைத்த வரிகள்,

திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு நாவல். வசனம் ஒவ்வொன்றும் ஒரு டிவிட் அல்லவா?

எத்தனை எளிமையாக ஒரு முழு நீள திரைப்படத்தை இரண்டு வரிகளில் அடக்கி விட்டீர்கள்,

ஆனால் இந்த பதிவு எதன் பொருட்டு என்பது தான் எனக்குப் புரியவில்லை,

நன்றி நண்பா

ஜெய் said...

// ஒரு ஹோட்டலுக்கு போயி சாப்பிடும்போது , அது வெளி நாட்டு உணவு என்றால் அதை சமைத்தவனை விட்டு விட்டு இது அந்த ஹோட்டல் உணவோட காப்பி என்று கூறி கொண்டா உள்ளோம். //
இதேதான் என் வாதமும்...

முகிலன் said...

பாஸ் பைபிளிலிருந்து கதையை எடுப்பதற்கும் Whats about Bob? படத்தை அப்படியேக் காப்பி அடிப்பதற்கும் வித்தியாசம் இருக்குதே?

கோபம் காப்பி அடிப்பதால் மட்டுமில்லை. காப்பியடித்துவிட்டு தான் என்னவோ பெரிய அறிவு ஜீவி போலவும் திரைத்துறையில் இருக்கும் மற்றோர் எல்லாம் அடி முட்டாள்கள் போலவும் நடந்துகொள்ளும்/பேசும் நடத்தைகள் தான் கோபமூட்டக் காரணம்.

மற்றபடி கமல் ஒரு நல்ல ஆல்ரவுண்டர். ஜேக் ஆஃப் ஆல். கிங் ஆஃப் நத்திங்.

ஜெய் said...

திரைப்படம் என்பது கதை மட்டும் இல்லை.... திரைக்கதை, காட்சி அமைப்பு, கதாபாத்திரம், வசனம், இசை, கேமிரா, எடிட்டிங்-னு ஏகப்பட்ட விஷயங்களின் தொகுப்புன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்... நமக்கு என்னமோ அதுல கதையை சுடறது மட்டுமே தெரியுது/புரியுது... திரைக்கதையில narration, ஃப்ளாஷ்பேக், நான்-லீனியர்-னு எத்தனையோ டெக்னிக் யாரோ ஒருத்தர் கண்டுபிடிச்சதைதான் இப்ப வரைக்கும் எல்லா படத்துலயும் உபயோகப்படுத்தறாங்க... இதே மாதிரி எவ்வளவோ கேமிரா டெக்னிக், எடிட்டிங் டெக்னிக் எல்லாம் யாரோ முதல்ல கொண்டுவந்ததைதான் இன்னைக்கு வரைக்கும் எல்லா படத்துலயும் யூஸ் பண்றாங்க... அதை விடுங்க... ஹாலிபாலி போன பதிவுல சொன்ன அந்த “இவர்” கண்டுபிடிச்ச Short Range Apparent Motion டெக்னிக்தானே உலகத்தின் அத்தனை படங்களிலயும் யூஸ் பண்றோம்...

யாரோ ஒருத்தர் முதல்ல கண்டுபிடிச்சதுக்கு, ஏதாச்சும் ஒரு பேரு வச்சு, ஊருல எல்லாரும் அதை உபயோகப்படுத்தினா அது “டெக்னிக்”... கொஞ்சம் பேரு மட்டும் உபயோகப்படுத்தினா அது ”காப்பி”யா?

மரா said...

பின்தொடரும் 100 வாசகர்களுக்கு நன்றி நன்றி.

மரா said...

@ ஜோதிஜி
@ ஜெய்

நன்றி நன்றி.

மரா said...

@ முகிலன்
நண்பரே ‘காப்பியடிக்கிறார்’ என்ற அப்பட்டமான வார்த்தையை பிரயோகிப்பதை முக்கியமாக எதிர்க்கிறோம்.
இண்டெலக்சுவல் மேகிங்க்கு மரியாதை குடுங்கண்ணே :)

ஜாக்கி சேகர் said...

ஜெய்யின் வாதமே என் வாதமும்...அதே போல் இந்த பதிவு.. பெங்களுர் நண்பர் கருந்தேள்... சமீபத்தில் கமல் காப்பி பற்றி உதாரணங்களுடன் விளக்கி இருந்தார்... நல்ல விஷயம்...ஆனால் கருந்தேள் மன்னமே சொல்லிவிட்டார்... கமல் பற்றி துவேஷ பதிவு அல்ல என்று....ஆனால் அந்த விபரங்களை நான் ரசித்தேன்... அது நல்ல பதிவு... அப்போது நான் பதில் சொன்னேன்... இது பற்றி பதில் சொல்வேன் விரிவாக என்று... அது நாளை கூட எழுத வாய்ப்பு இருக்கின்றது..மயில் இந்த பதிவும் அருமை...

நாஞ்சில் பிரதாப் said...

//ஒரு ஹோட்டலுக்கு போயி சாப்பிடும்போது , அது வெளி நாட்டு உணவு என்றால் அதை சமைத்தவனை விட்டு விட்டு இது அந்த ஹோட்டல் உணவோட காப்பி என்று கூறி கொண்டா உள்ளோம்//

சூப்பர் உதாரணம்....

கலக்கல் பதிவு பாஸ்...

நாஞ்சில் பிரதாப் said...

//கோபம் காப்பி அடிப்பதால் மட்டுமில்லை. காப்பியடித்துவிட்டு தான் என்னவோ பெரிய அறிவு ஜீவி போலவும் திரைத்துறையில் இருக்கும் மற்றோர் எல்லாம் அடி முட்டாள்கள் போலவும் நடந்துகொள்ளும்/பேசும் நடத்தைகள் தான் கோபமூட்டக் காரணம்.//

சூப்பர் காமெடி...அவர் என்னைக்குங்க பேட்டி கொடுத்தாரு நான் ஒரு அறிவு ஜீவின்னு
உங்களால அவர் படத்தை ரசிக்க முடிலன்னு சொல்லுங்க முகிலன்... இது ஒரு பொறாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது... ச்சீ.ச்சீ இந்தப்பழம் புளிக்கும் ங்கற கதைதான் உங்களோடது...

எல்லா ரசிகர்களையும் எல்லாராலும் திருப்தி படுத்த முடியாது....

R.Gopi said...

இது சரியான வாதம் இல்லையே மயில்..

ஜாக்கியின் பதிவிற்காக வெயிட்டிங்...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

என் கணவருக்கும் பிடித்த நடிகர் கமல்தான்.. ஆனால் எனக்கும் என்னாவோ அவர் ஒரு கர்வி போலத்தான் தென்படுவார் சில சமயம்..

butterfly Surya said...

இந்திய திரையில் கமல் ஒரு மைல்கல். அதுவே அவரது வெற்றி..

I love Kamal.

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஜிங்சக் ஜிங்சக் ;-)... டோட்டல் ஜால்ரா ;-) .. இருங்க கொஞ்ச நேரத்துல வர்ரேன் ;-) .. சூப்பர் காமெடி ;-)

பிரியமுடன் பிரபு said...

//கோபம் காப்பி அடிப்பதால் மட்டுமில்லை. காப்பியடித்துவிட்டு தான் என்னவோ பெரிய அறிவு ஜீவி போலவும் திரைத்துறையில் இருக்கும் மற்றோர் எல்லாம் அடி முட்டாள்கள் போலவும் நடந்துகொள்ளும்/பேசும் நடத்தைகள் தான் கோபமூட்டக் காரணம்.//அண்ணே அந்த அறிவுஜீவி அளவுகோலை இங்க கொண்டங்க , கமலை அளந்து பார்த்துடுவோம் , சரியா....

எங்க காமெடி பண்ணிகிட்டு

குடி , சிகெரெட் , வயசு கோளறு காதல் , தறுதலைய சுத்துறது , அப்புறம் ஒரே மசாலா காட்சிகளையே எல்லா படத்திலும் வச்சு பெயர் மட்டும் மாற்றி பணம் செய்யும் ரசினி விசை இருக்கும் இங்கு கமல் போன்ற சிலர் மதிக்க தக்க அறிவுசிவிகள் தான்

மதி.இண்டியா said...

சாருநிவேதிதா என்ற கதை திருடி- கமலை பற்றிய திட்டுக்கு லிங்க் கொடுக்கும் பிளாக் ஹூயுமரை என்ன சொல்ல ?

//தன் பெயரில் பிரசுரமான அவை இரண்டையும் ஒரு போதும் இனி அது, தான் எழுதியதுதான் என சொல்லவேமாட்டார். காரணம், அந்த இரண்டு கதைகளும் எழுத்தாளர் ஆபிதீனால் எழுதப்பட்டவை. அந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்ததும் சம்மந்தப்பட்டவர்களின் கை கால்களில் விழுந்து தன் 'புகழை' காப்பாற்றிக் கொண்டார். அப்படியானால் மற்றவை எல்லாம் சாரு எழுதியதுதானே… என அவசரப்படாதீர்கள். ஆபிதீன் துணிந்து முறையிட்டதால் அவை இரண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. மற்றவர்கள் மவுனமாக இருப்பதால், இன்று வரை அவை சாரு 'எழுதியதாகவே' கருதப்பட்டு வருகின்றன.
//

பிரியமுடன் பிரபு said...

கமலை திட்டுபவரின் புரொபைலை திறந்து பார்த்தல் ஒன்று ரசினி விசை ரசிகர்கள் , அல்லது மத நம்பிக்கையாளன்(அப்படி சொல்லும் மதவாதி )

உன்னை போல் ஒருவர் பார்த்துட்டு
ஒரு இந்து தீவிரவாதி கட்டி இந்துக்களை மட்டும் அசிங்க படுத்துவதாக இந்து வெறியர்களும் , ரெண்டு இஸ்லாமியரகளை காட்டியதால் கமலின் சட்டைக்கும் புனுள் தெரியுது அவர் இந்துத்துவவாதி என இஸ்லாமிய வெறியர்களும் பதிவு போட்டு மகிழ்ந்தார்கள்

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

புள்ளை குட்டிங்க எல்லாம் தானே விவரமாப் படிச்சுக்கும்!

ஆனா இப்படிக்கா உபதேசம் சொல்றவுங்கோ தான் உசாரா, என்னாத்தப் படிக்கணும், கூடாதுன்னுட்டுத் தீர்மானமா இருக்கோணும்!

எது ஒரிஜினல் எது காப்பின்னு இன்னும் கொஞ்சம் குயப்புறத்துக்காகச் சொல்றேன்....!


நாம எல்லாருமே ஒரிஜினல் கெடையாது..! காப்பிதான்! அது ஆதாம் ஏவாளோ, இல்லாட்டி வேற யாரோ, அவங்களோட காப்பி, அதன் காப்பின்னு வழிவழியாக் காப்பியில் பிறந்தவுங்க தான்!

இதுல இன்னாத்துக்குக் கமல் மட்டும் தான் காப்பின்னு புதுசா குன்சா உட்டுக்கினு..?

ஃப்ரீயா வுடுங்கோ மரா!

கருந்தேள் கண்ணாயிரம் said...

//ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களின் கதைக் கரு பைபிளில் இருந்தே கிடைக்கிறதாம். அதற்காக ஸ்பீல்பெர்க் எடுக்கும் அனைத்து திரைப்படங்களும் பைபிளில் உள்ளது, எனவே அது பைபிளின் காப்பி என்று கூறுவது

எவ்வளவு அசட்டுத்தனமோ அவ்வளவு அசட்டுத்தனம் நாம் கமலின் படைப்புகள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டுகள்.//

அப்படியா? :-) எனது தளத்தில், ஒவ்வொரு ஆங்கிலப்படத்தையும் குறிப்பிட்டு ஆதாரத்தோடு கமல் செய்த பித்தலாட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். முடிந்தால், அது இல்லை என்று நிரூபியுங்கள். முடிந்தால் ! ;) அதை விட்டுவிட்டு,

சுற்றி வளைத்து உளறுவதை நிறுத்துங்கள் ;-) . பைபிளில் காப்பியடிப்பது வேறு. . ஆங்கில் மற்றும் உலகப்படங்களை, காட்சிகள் முதற்கொண்டு ஈயடிச்சாங்காப்பி அடிப்பது வேறு. கமான் ;-) .. என் பதிலில் முழு காப்பி லிஸ்ட்டும்

உள்ளது. அவைகள் காப்பியடிக்கப்படவில்லை என்று நேரடியாக எழுதுங்கள் பார்க்கலாம். இது எனது வெளிப்படையான, எளிமையான கேள்வி.

நாயகன், காட்ஃபாதரின் காப்பி என்று அவர் மட்டும் ஒப்புக்கொள்ளவில்லையெனில், அடி பின்னியிருப்பார்கள் ;-) .. இதுதான் அவரது தந்திரம் ;-)

// மேலும் தேவர்மகன் படத்தை எல்லாம் “காட்ஃபாதர்” திரைப்படத்தோடு ஒப்பிடுவதெல்லாம் டூ மச்.//

அப்புடிங்களா? தேவர் மகனில் வரும் காக்கா ராதாகிருஷ்ணன் பாத்திரம் எதனைக் குறிக்கிறது ? தனது மகனுக்குப் பல திட்டங்கள் போட்டுக்கொடுப்பது, காட்ஃபாதரில் இல்லையா? சிவாஜி, கமல் கதாபாத்திரங்களே காட்ஃபாதரில் இருந்து

சுடப்பட்டவை தானே ராசா ;-)

//திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு நாவல். வசன் ஒவ்வொன்றும் ஒரு டிவிட் அல்லவா? //

எது? ஹேராமா? ;-) அதில் உள்ள முஸ்லிம் வெறியைப் பற்றிப் பல பதிவுகள் எழுதலாம் ;-) அதில் ஆரம்பித்து, உன்னைப்போல் ஒருவன் வரை, கமல் காட்டுவது அப்பட்டமான முஸ்லிம் எதிர்ப்பு ;-) ..

//தமிழன் பெருமைப்படுவதற்கு வாழும் ஒரு கலைஞனை திட்டித்தான் தமிழ்மணத்தில்,இண்ட்லியில் ஓட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்தை தமிழர்கள் புறக்கணிக்கும் நாளில். தமிழ் சினிமா நிச்சயம் ஆஸ்கார் வென்றிருக்கும். ஆனால் அடுத்த

சில நாட்களில் அத்திரைப்படமும் யாரோ ஒருவரால் இது அப்பட்டமான காப்பி என் விமர்சிக்கப்படும்!//

அப்புடிப்போடு ! ஓட்டு வாங்கவேண்டும் என்று உங்கள் கும்பல் (மயில் + நீங்கள்), காடு நாவலைக்கூடப் படிக்காமல், விளம்பரம் வேண்டும் என்றே பதிவு போட்டீர்களே.. அது என்ன ராசா? அது தேசசேவையா? :-)

என்னுடையே நேரடிக்கேள்வி இது - முடிந்தால், நான் பட்டியலிட்டுள்ள படங்கள் காப்பி அல்ல. அக்மார்க் ஒரிஜினல் கமல் படங்கள்தான் என்று நிரூபியுங்கள் பார்க்கலாம் ! அப்படிச் செய்து காட்ட முடியாமல், வழவழ கொழகொழவென்று ஒரு பதிவு ;-).. இதில் ஒண்ணரையணா உதாரணங்கள் வேறு.. ;-) யெஸ்.. இப்படி உதாரணங்கள் கொடுக்க மட்டும் தான் உங்களால் முடியும் ;-) .. புலம்பித்தானே ஆகவேண்டும்.. ;-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

மற்றபடி, இதில் இருக்கும் பின்னூட்டங்கள் படித்தேன்.. இதோ உளறலுக்கு இன்னொரு உதாரணம் ;-)

//திரைப்படம் என்பது கதை மட்டும் இல்லை.... திரைக்கதை, காட்சி அமைப்பு, கதாபாத்திரம், வசனம், இசை, கேமிரா, எடிட்டிங்-னு ஏகப்பட்ட விஷயங்களின் தொகுப்புன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்... நமக்கு என்னமோ அதுல கதையை சுடறது மட்டுமே தெரியுது/புரியுது... திரைக்கதையில narration, ஃப்ளாஷ்பேக், நான்-லீனியர்-னு எத்தனையோ டெக்னிக் யாரோ ஒருத்தர் கண்டுபிடிச்சதைதான் இப்ப வரைக்கும் எல்லா படத்துலயும் உபயோகப்படுத்தறாங்க... இதே மாதிரி எவ்வளவோ கேமிரா டெக்னிக், எடிட்டிங் டெக்னிக் எல்லாம் யாரோ முதல்ல கொண்டுவந்ததைதான் இன்னைக்கு வரைக்கும் எல்லா படத்துலயும் யூஸ் பண்றாங்க... அதை விடுங்க... ஹாலிபாலி போன பதிவுல சொன்ன அந்த “இவர்” கண்டுபிடிச்ச Short Range Apparent Motion டெக்னிக்தானே உலகத்தின் அத்தனை படங்களிலயும் யூஸ் பண்றோம்...

யாரோ ஒருத்தர் முதல்ல கண்டுபிடிச்சதுக்கு, ஏதாச்சும் ஒரு பேரு வச்சு, ஊருல எல்லாரும் அதை உபயோகப்படுத்தினா அது “டெக்னிக்”... கொஞ்சம் பேரு மட்டும் உபயோகப்படுத்தினா அது ”காப்பி”யா//

ஏன்யா யோவ் ;-) நீங்க சொல்றது, இந்தப் பதிவை விட சூப்பர் காமெடி ;-) .. கேமரா எடிட்டிங் லொட்டு லொசுக்கு எல்லாமே அடிப்படை விஷயங்கள். காப்பிரைட் வாங்கப்பட்டவை. அவைகளை விலைகொடுத்து வாங்கியோ அல்லது வாடகைக்கு எடுத்தோதான் படம் எடுக்க முடியும் ;-) .. அதுவும், ஈயடிச்சாங்காப்பி அடித்து படமெடுப்பதும் ஒன்று என்று உங்களைப்போல் முட்டாள்கள் நினைக்கும்போது, கமல் ஜீனியஸாகத்தான் தெரிவார் ;-) .. ரைட்டு ;-) .. இதுல, பெரிய பன்ச் டயலாக் வேற ;-) .. நீங்க சொன்ன இந்த முட்டாள்தனமான உதாரணத்தை நீங்களே இன்னொரு முறை படிங்க ;-)

அவ்ளவுதான். முடிச்சிக்குறேன். நன்றி ;-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

என்னுடைய மற்றொரு பின்னூட்டம், இருமுறை போட்டும் காணவில்லை.. மயிலு... Is it deleted ? :-)

Anonymous said...

@Karundhel
//எது? ஹேராமா? ;-) அதில் உள்ள முஸ்லிம் வெறியைப் பற்றிப் பல பதிவுகள் எழுதலாம் ;-) //

How do you expect Saketh Ram to have good opinions about Muslim when his wife was raped and murdered by a group of Muslim people. He too kills them, and regrets it later throughout the film. It was not Kamal Haasan. It was the character. And to have a view is his own and like any other artist he expresses his belief through his medium. What do we have to say about that. Ignore him if you dont like the themes thats all.

மரா said...

கருந்தேள் கண்ணாயிரம் :

//ராஜபார்வை திரைப்படத்தின் மூலக்கதை சந்தான பாரதியிடம் இருந்து பெறப்பட்டது. ஆதாரம் கிழக்கு பதிப்பகத்தின் , தீனதயாளம் அவர்கள் எழுதிய “கமல்”. பக்கம் : 150. அந்த திரைப்படத்தில் கேரக்டர் மீது பரிதாபம் தோன்றுவதற்குப்

பதிலாக ஒரு ஈர்ப்பு வர வேண்டுமென் பதற்காக ஸ்பெஷல் ஸ்பெக்ஸ் அணிந்து நடித்திருந்தார். ஆனால் நமது விமர்சன கண்களுக்கு அனைத்துமே காப்பிதான். கலைதான் நமது கண்களுக்குத் தெரியாதே. அதுவும் கமல் செய்திருப்பதால்

மொத்தமும் தவறுதான். அல்லவா?//

அந்தப் படமே ஒரு ஈயடிச்சாங்காப்பி என்றுதான் படத்தின் ஒரிஜினல் ஆங்கிலப்படத்தின் பெயர் மற்றும் கதையோடு எழுதியிருக்கிறேன். நீங்கள் இன்னும் The Graduate பார்க்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. அதன் க்ளைமேக்ஸ் ,

யூட்யூபில் உள்ளது. அத்துடன் ராஜபார்வை க்ளைமேக்ஸை ஒப்பிட்டுக் கொள்ளவும். படம் முழுதுமே காப்பி என்பது தெரிய வரும். எந்தப் புத்தகத்தில் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் உளறலாம். இந்தப் பதிவில் நீங்கள்

சொல்லியிருப்பது போல. இதோ.. உங்கள் ஒவ்வொரு பாயிண்டுக்கும் எனது பதில்.

//எப்போதோ படித்த ஞாபகம். “ அந்தப்புரத்தில் நடக்கும் காரியங்கள் அனைத்தும் அங்குள்ள அழகிகளுக்கு தெரியுமாம். ஆனால் அவர்களால் அது முடியாதாம்.” அதைப்போல நம்மால் விமர்சனம் மட்டுமே செய்ய முடியும். ஒரு ஆகச் சிறந்த

படைப்பை குப்பை என்று விமர்சனம் செய்ய மட்டுமே முடியும். அது அங்கிருந்து திருடப்பட்டது, இங்கிருந்து திருடப்பட்டது என்றெல்லாம் குறைகள் மட்டுமே சொல்ல முடியும்.//

அப்படித்தான் சொல்லுவோம். ஈயடிச்சாங்காப்பி அடித்துவிட்டு, பெர்ர்ரீய மேதை போல் தனது திறமை’யை ஜம்பம் அடிக்கும்போது, நாங்கள் ஏன் உண்மையைச் சொல்லக்கூடாது?

//இப்போதெல்லாம் இணையத்தில் இருந்து ஏராளமான திரைப்படங்களை டவுன்லோட் செய்து பார்க்க முடிகிறது. நம்மில் எத்தனை பேர் இத்தகைய உலகத்திரைப்படங்களை அது திரையிடப்படும் இடங்களிலும், ஒரிஜினல் டிவிடிக்களிலும்

பார்த்திருக்கின்றோம். இதோ! சில திரைப்படங்களின் பட்டியல் தரப்பட்டுவிட்டது, இதிலிருந்துதான் கமல் கதையையும், காட்சியையும் திருடினார் என்று குற்றம் சாட்டி விட்டோம். விளைவு இன்னும் டோரண்ட் வழியாக திருடுவதற்கும்,

டவுன்லோட் செய்து பார்த்துவிட்டு, ஆமாம், ஆமாம், காப்பிதான் அடித்துள்ளார்! அப்பட்டமான காப்பிதான் என்றெல்லாம் பேசுவோம்.நம்மால் வேறென்ன முடியும்.//

;-) உங்கள் குமுறல் தெரிகிறது ;-) .. நீங்கள் கும்பிடும் தெய்வத்தின் உண்மையான நிறத்தைத் தோலுரித்துக் காட்டியதில், ப்ரஷர் வந்து, இஷ்டத்துக்கு உளறிக்கொட்டியிருக்கிறீர்கள் ;-). என்னைப் பொறுத்த வரை, ஆரம்பம் முதல்

இன்றுவரை, பிக் ஃப்ளிக்ஸில் rent செய்துதான் படங்களைப் பார்த்துவருகிறேன். ஒரிஜினல் டிவிடிக்களை வாங்கிப் பார்த்ததும் உண்டு. ஒரு முறை கூட - டவுன்லோட் செய்து பார்த்தது இல்லை. செய்யவும் மாட்டேன் ;-)Posted by கருந்தேள் கண்ணாயிரம் to மயில்ராவணன் at September 7, 2010 10:24 PM

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

"போயி புள்ளை குட்டிங்கள படிக்க வையுங்கய்யா! - ஏற்கனெவே படிச்சிகுனு தான்யா கீது.
==
ஹிஹி ஒரு ரைமிங்கு ஒருமைல சொல்லிபார்த்தேன்.

==
இந்துத்துவா ஆர் எஸ் எஸ் விஎஹ்பி க்கு ஆதரவு தரும் மெயின் குற்றவாளிகள் பட்டியலில் ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கே முதலிடம்.
அப்புறம் மணி.படத்தின் அகில உலக கவனத்துக்காக சர்ச்சைக்குறிய சங்கதிகளை தன் இஷடம் போல மாற்றி எடுப்பதில் இரு வல்லவர்கள் இவர்கள்,ஆனால் வெளிப்ப்பார்வைக்கு என்னமா படம் எடுத்திருக்கான் என்று தான்யா தெரியும்.
==
இவன் படத்தை கொண்டாடும் முன்னர் தீபா மேத்தா,மீரா நாயர்,பான் நலின் படங்களை பாருங்கள்.காப்பி இல்லாமல் படம் எடுப்பது எப்படி என்று இவர்களிடம் பாடம் படிக்கட்டும் இரு வல்லவர்களும்.
===
தவிர மதவாதிகளை,சாதி வெறியர்களை நான் வெறுக்கிறேன்.அன்று பாபர் மசூதி இடிப்பின் போது நாம் காத்த மௌனம் ஒவ்வொரு வருடம் டிசம்பர் 6 அன்றும் நம் உடபிறந்த பிறவாத சகோதரர்களை காவு வாங்குகிறது,எல்லாவற்றிற்கும் அடிப்படை சாதி,மத,இன வெறி.
நாம் மனதாற என்றாவது அந்த கொடிய சம்பவத்துக்கு நம் இசுலாமிய சகோதர்களிடம் மன்னிப்பு கேட்டிருப்போமா?மதவெறி,சாதி வெறியர்களை ஒடுக்குவோம்,வாருங்கள்.இல்லை நான் மன்மத அம்பு தான் பார்ப்பேன்.என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
===
குறிப்பு ஹேராம் போல காப்பி குப்பைகளை எடுப்பதற்கு கமல் மன்மத அம்பே எடுக்கட்டும்.
===
முதல்ல போயி உம் புள்ளை குட்டிங்கள படிக்க வையுங்கய்யா..

===

நாடோடி said...

//முகிலன் said...
பாஸ் பைபிளிலிருந்து கதையை எடுப்பதற்கும் Whats about Bob? படத்தை அப்படியேக் காப்பி அடிப்பதற்கும் வித்தியாசம் இருக்குதே?

கோபம் காப்பி அடிப்பதால் மட்டுமில்லை. காப்பியடித்துவிட்டு தான் என்னவோ பெரிய அறிவு ஜீவி போலவும் திரைத்துறையில் இருக்கும் மற்றோர் எல்லாம் அடி முட்டாள்கள் போலவும் நடந்துகொள்ளும்/பேசும் நடத்தைகள் தான் கோபமூட்டக் காரணம்.//

இத‌னால் ம‌க்க‌ளுக்கு அறிவித்து கொள்வ‌து முகில‌ன் என்ப‌வ‌ர் க‌ம‌ல் என்ற‌ த‌னிப‌ட்ட‌ ம‌னித‌னை விம‌ர்சிக்க‌வில்லை... :)

இவ‌ர் தான் கொஞ்ச‌ நாள் முன்னால் புலிக்கேசியின் ப‌திவில் ர‌ஜினி என்ற‌ த‌னிப்ப‌ட்ட‌ ம‌னித‌னை தாக்கினால் எவ‌னாயிருந்தாலும் வெட்டுவேன் என்ற‌ தோணியில் பேசினார்.. அதையே த‌மிழ் வ‌லைப்பதிவ‌ர் போர‌மில் ந‌ட‌ந்த‌ விவாத‌த்திலும் என்னிட‌ம் சொன்னார்...

ர‌ஜினியை ர‌சிப்ப‌வ‌ன் ஒரிஜின‌ல்
க‌ம‌லை ர‌சிப்ப‌வ‌ன் டூப்பிளிகேட்.. :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

மேலும் கமல் போல ஒரு சுயநலமியை பார்க்கவே முடியாது.ஹேராம் பட்த்தின் அகில உலககவனத்துக்காக இவர் நாடியது எல்.சுப்ரமணியத்தை.அவர் பெயரை போட்டோ செஸ்ஸன் வரை அறிவித்து விட்டு,சோளபோறி கொடுத்து இசைக்கோரவை சிலதை வாங்கிவிட்டு,புறக்கணித்தார்.ஏன் கஞ்சத்தனம்.காசு பெயராது ஆனால் தோசை மட்டும் வேணும்னா?
அவருக்கு காசு அழமுடியாமல்,இசைஞானி காலில் போய் விழுந்து,இசைஞானியின் சுயநலமில்லாத இசையின் பரிபூரணவெளிப்பாடுதான் ஹேராமின் இசை.அது தான் இசைஞானியின் குணம்.
இதே போல தசாவதாரத்துக்கும் நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.

Sivaji Sankar said...

நல்ல ஆய்ய்வு....... நான் எப்போதும் கமல் ரசிகன் தான்..

ஆண்டனி said...

ராம் கோபால் வர்மா அவர்கள் தன்னுடைய சர்க்கார் படம் காட்பாதரின் இன்ஸ்பிரேசன் என்று கூறியபோது அவருடைய திறமையை யாரும் குறைத்துப் பேசவில்லை. ஆனால் கமல் தான் காப்பி அடிக்கும் படத்தில் கதை என்று அவர் பெயரைப் போடும் கீழ்த்தரமான வேலையைத் தான் நாங்கள் வெறுக்கிறோம்.

ஹாலிவுட் பாலா said...

யாருங்க இந்த கோகுல்???

இந்த இத்துப்போன ஜெயமோகனோட நாவலை.. ஆஹா ஓஹோன்னு சொன்ன இன்னொரு இலக்கியவாதிதானே?

அவருக்கு புள்ளகுட்டி எதுனா இருக்கா?

அலைகள் பாலா said...

// ஒரு ஹோட்டலுக்கு போயி சாப்பிடும்போது , அது வெளி நாட்டு உணவு என்றால் அதை சமைத்தவனை விட்டு விட்டு இது அந்த ஹோட்டல் உணவோட காப்பி என்று கூறி கொண்டா உள்ளோம். //
பீஸாவ பீஸானு சொல்லி வித்தா ஒ.கே. அத ஏன் பனியாரம்னு சொல்றிங்க?

அலைகள் பாலா said...

// ஒரு ஹோட்டலுக்கு போயி சாப்பிடும்போது , அது வெளி நாட்டு உணவு என்றால் அதை சமைத்தவனை விட்டு விட்டு இது அந்த ஹோட்டல் உணவோட காப்பி என்று கூறி கொண்டா உள்ளோம். //
பீஸாவ பீஸானு சொல்லி வித்தா ஒ.கே. அத ஏன் பனியாரம்னு சொல்றிங்க?

ஹாலிவுட் பாலா said...

அடடே.. ஏகப்பட்ட பாலா இப்ப இருக்காங்க. நான் எலக்கியவாதி பாலா-ன்னு பேர் மாத்திக்கலாமான்னு இருக்கேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

தல ஹாலிபாலி
ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

எலக்கியவாதி பாலா வாழ்க வாழ்க

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

இந்த ஜோதிஜி எங்க பின்னூட்டம்போட்டாலும் ஸ்பாம் போலவே தோற்றமளிக்கிறது,யாருக்காவது புரிஞ்சா சொல்லுங்கப்பா

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

தல ஹாலி பாலி,
ஒரு விஷயம் தெரியுமா?
ஜெயமோகன் மேனன் சாதியாம் ஆகவே அவர் மேனன் சாதியை திட்டுவதற்கு பூரண உரிமை பெற்றவராம்.அப்படின்னு ஒருவர் சொல்லிருக்கார்.

https://www.blogger.com/comment.g?blogID=3099434018973543607&postID=2512446746782834953&isPopup=true

அலைகள் பாலா said...

@ஹாலிவுட் பாலா
வேணாம் அண்ணா. ஹாலிவுட்-அ ஹாலி னு சுருக்குன மாதிரி எலக்கியவாதிய "எலி பாலா"னு சுருக்க போறாங்க.

Mohan said...

//அப்புடிங்களா? தேவர் மகனில் வரும் காக்கா ராதாகிருஷ்ணன் பாத்திரம் எதனைக் குறிக்கிறது ? தனது மகனுக்குப் பல திட்டங்கள் போட்டுக்கொடுப்பது, காட்ஃபாதரில் இல்லையா? சிவாஜி, கமல் கதாபாத்திரங்களே காட்ஃபாதரில் இருந்து

சுடப்பட்டவை தானே ராசா ;‍) //

இப்படியெல்லாம் பார்த்தால் காட்ஃபாதரையே, பழைய தமிழ் படங்களின் காப்பி என்று கூற முடியுமே :-‍)

எழுத்தாளர் சுஜாதா மாதிரிதான் கமலும். சுஜாதாவைப் பிடிப்பவர்களுக்கு கமலையும் கண்டிப்பாகப் பிடிக்கும்,ஆனால் இரண்டு பேரைத் தவிர:-‍)

மதுரை சரவணன் said...

கமல் பற்றி ஒரு அற்புதமானப் பார்வை. வாழ்த்துக்கள்

மரா said...

@ ஜோதிஜி
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

மரா said...

@ ஜெய்
உங்க வாதம் சரிதான். ஆனால் இதெயெல்லாம் சொன்னா நம்மள முட்டாப்பயனுன்னு சொல்லுவாய்ங்க சில அதிபுத்திசாலிகள்.

முகிலன் said...

அன்பின் ஸ்டீஃபன்,

உங்களுக்குள் இருக்கும் ஒரு சராசரிக் கமல் ரசிகனின் “ரஜினி வெறுப்பு”தான் புலிகேசிக்கு உங்களை வக்காலத்து வாங்க வைத்தது என்றால்... என்னால் ஒரு புன்னகையைத் தவிர வேறு எதையும் பதிலாகக் கொடுக்க முடியாது.

இங்கே நான் விமர்சித்தது கூட கமலின் திருட்டுப் படைப்புகளைத்தானே ஒழிய, கமலின் சொந்த வாழ்க்கையை அல்ல..

“திருடி வித்துப் பொழைக்கிறான் அவனுக்குப் போய் ரசிகனா இருக்க உனக்கு வெக்கமா இல்லையா? சூடு சொரணை இல்லையா?” - இப்பிடியெல்லாம் நான் கேட்டிருந்தால், நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு உடன்படுகிறேன்.

மற்றபடி நான் கமலையும் சூர்யா, விக்ரம் போன்றோரை ரசிப்பது போலவே ரசிப்பவன். அதற்காக கமலை விட சிறந்த நடிகன் உலகத்திலேயே இல்லை என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட என்னால் முடியாது.

மரா said...

@ முகிலன்
வாங்க பாஸ். கமல் ஒரு நல்ல நடிகன். திறமை இருக்கும் இடத்தில் கொஞ்சம் கர்வமும் இருக்கும். தவறில்லை.

மரா said...

@ ஜாக்கி சேகர்
உங்க பதிவுக்காக வெயிட்டிங்.

மரா said...

@ நாஞ்சில் பிரதாப்
வாங்க பிரதாப்.
//எல்லா ரசிகர்களையும் எல்லாராலும் திருப்தி படுத்த முடியாது....//

மிகச்சரியான வார்த்தைகள்.

மரா said...

@ R.கோபி
கமல் தரப்பு நியாயங்கள் மட்டுமே இங்கு. சண்ட போடுறது நம்ம நோக்கம் இல்லை.அப்பிடி போட்டாலும் அந்த ஆங்கில் பதிவு எழுதுன நண்பர்கிட்ட வேணா கருத்து சொல்லலாம்.

மரா said...

@ தேனம்மை லெட்சுமணன்
ரொம்ப நன்றி.

மரா said...

@ பட்டர்ஃப்ளை சூர்யா
நன்றி நண்பரே.

மரா said...

@ பிரியமுடன் பிரபு
நல்லா சொன்னீங்க.

மரா said...

@ மதி.இண்டியா
// சாருநிவேதிதா என்ற கதை திருடி- கமலை பற்றிய திட்டுக்கு லிங்க் கொடுக்கும் பிளாக் ஹூயுமரை என்ன சொல்ல ? //

இலக்கிய உலகில் அவர் போன்று ஒரு காமெடி பீசப் பார்க்கவே முடியாது. பாவம் பொழச்சிப் போறாரு விடுங்க.

மரா said...

@ பிரபு
//
கமலை திட்டுபவரின் புரொபைலை திறந்து பார்த்தல் ஒன்று ரசினி விசை ரசிகர்கள் , அல்லது மத நம்பிக்கையாளன்(அப்படி சொல்லும் மதவாதி ) //

விடுங்க பாஸ். நமக்கு தெரிஞ்சத மட்டும் நம்ம சொல்லுவோம்.

மரா said...

@ கி.மூ. சார்

// இதுல இன்னாத்துக்குக் கமல் மட்டும் தான் காப்பின்னு புதுசா குன்சா உட்டுக்கினு..?

ஃப்ரீயா வுடுங்கோ மரா!
//
சரிங்க சார்.

மரா said...

@ கருந்தேள்
// அப்புடிப்போடு ! ஓட்டு வாங்கவேண்டும் என்று உங்கள் கும்பல் (மயில் + நீங்கள்), காடு நாவலைக்கூடப் படிக்காமல், விளம்பரம் வேண்டும் என்றே பதிவு போட்டீர்களே.. அது என்ன ராசா? அது தேசசேவையா? :-) //

அண்ணே உங்கள் ஆழ்ந்த கருத்தும் வாசிப்பனுபவமும் பிரமிப்பாக இருக்கிறது.. நான் இன்னும் முழுசா ‘காடு’ படிக்கல. கோகுல் படிக்காம எப்புடி நூல் விவர்சனம் எழுதுவார். போகிற போக்கில் எதையாவது உளறக்கூடாது... கூல். இட்ஸ் ஆல் இன் தி கேம் :)

மரா said...

@ கருந்தேள்
// மற்றபடி, இதில் இருக்கும் பின்னூட்டங்கள் படித்தேன்.. இதோ உளறலுக்கு இன்னொரு உதாரணம் ;-) //

சரியாச் சொன்னீங்க. நீங்க சொன்னா மட்லும் தத்துவம். மத்தவங்க சொன்னா
உளறல். சூப்பர்ணே.

அப்பிடியே நீங்க இன்னா பண்றீங்கண்ணா உங்க கருத்த எல்லாம்
மருதமலை மலையில எழுதி வெச்சுட்டு அப்பிடிக்கா குத்த வெச்சு உக்காந்திருங்கண்ணே. வர்ற சந்ததியினர் பார்த்து படிச்சு புரிஞ்சுக்க ஒதவியா இருக்கும்.நன்றி.

மரா said...

@annasarp

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மரா said...

@annasarp

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மரா said...

@ கீதப்ரியன்
// "போயி புள்ளை குட்டிங்கள படிக்க வையுங்கய்யா! - ஏற்கனெவே படிச்சிகுனு தான்யா கீது.
==//

ரொம்ப சந்தோசம்.

மரா said...

@ கீதப்ரியன்
// .படத்தின் அகில உலக கவனத்துக்காக சர்ச்சைக்குறிய சங்கதிகளை தன் இஷடம் போல மாற்றி எடுப்பதில் இரு வல்லவர்கள் இவர்கள்,ஆனால் வெளிப்ப்பார்வைக்கு என்னமா படம் எடுத்திருக்கான் என்று தான்யா தெரியும். //

நீங்க எதிர்பாக்குற விசயமெல்லாம் இருக்கோனுமின்னா டிவி சீரியல் பாருங்கண்ணே.. :)

மரா said...

@ கீதப்ரியன்

// இவன் படத்தை கொண்டாடும் முன்னர் தீபா மேத்தா,மீரா நாயர்,பான் நலின் படங்களை பாருங்கள்.காப்பி இல்லாமல் படம் எடுப்பது எப்படி என்று இவர்களிடம் பாடம் படிக்கட்டும் இரு வல்லவர்களும். //

நன்றி தகவலுக்கு.

மரா said...

@ நாடோடி
நன்றி.

மரா said...

@ சிவாஜி சங்கர்
நாங்களும் அப்பிடித்தேன்.

மரா said...

@ ஆண்டனி
// கமல் தான் காப்பி அடிக்கும் படத்தில் கதை என்று அவர் பெயரைப் போடும் கீழ்த்தரமான வேலையைத் தான் நாங்கள் வெறுக்கிறோம். //

சரிங்க. அப்பிடியே அவர புறக்கணியுங்கள்.

மரா said...

@ அலைகள் பாலா
பனியாரம்னு சொன்னாகூட போதாதாம்
பனியாரத்துக்கு பக்கத்துல இது பீசாவோட காப்பினு கிரெடிட் போர்டு போட்டு வச்சாதான் சாப்பிடுவாங்கலாம் :)

மரா said...

@ அலைகள் பாலா
அப்படியே சாப்பிட்டாலும்...சாப்பிட்டு விட்டு பீசாவைவிட ஈசியாதான் செரிக்குது...ஆனா பீசாவோட காப்பிதான் அப்படி சொல்லுவாங்களாம். :)

மரா said...

@ ஹாலிவுட் பாலா
//
யாருங்க இந்த கோகுல்???
//
எனது நண்பர். நிறைய ஒலகபட டிவிடி,புத்தகமெல்லாம் ஓசி குடுப்பாரு.நல்ல பையன்.

மரா said...
This comment has been removed by the author.
மரா said...

@ ஹாலி பாலி

இவ்வளவுக்கும் அவரு கமல் ரசிகர் இல்ல தல அவர் மோகன்லால் ரசிகர் :)

மரா said...

@ ஹாலிபாலி

அப்புறம் நீங்க நினைக்குற மாதிரி அவர் ஜெயமோகன் ரசிகர் இல்ல
அவரும் ஒரு சாருநிவேதிதா விசிறி. பிச்சாவரத்துல சாருகூட கூட்டு சேந்து ஆட்டம் போட்டவர்தேன் :)

மரா said...

@ கீதப்ப்ரியன்
//
எலக்கியவாதி பாலா வாழ்க வாழ்க
//

வால்க வால்க :)

மரா said...

@ Mohan
//அப்புடிங்களா? தேவர் மகனில் வரும் காக்கா ராதாகிருஷ்ணன் பாத்திரம் எதனைக் குறிக்கிறது ? தனது மகனுக்குப் பல திட்டங்கள் போட்டுக்கொடுப்பது, காட்ஃபாதரில் இல்லையா? சிவாஜி, கமல் கதாபாத்திரங்களே காட்ஃபாதரில் இருந்து

சுடப்பட்டவை தானே ராசா ;‍) //

இப்படியெல்லாம் பார்த்தால் காட்ஃபாதரையே, பழைய தமிழ் படங்களின் காப்பி என்று கூற முடியுமே :-‍) //

இதுதான் என் கருத்தும். நன்றி மோகன்.

மரா said...

@ மதுரை சரவணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மரா said...

@ முகிலன்

// இங்கே நான் விமர்சித்தது கூட கமலின் திருட்டுப் படைப்புகளைத்தானே ஒழிய, கமலின் சொந்த வாழ்க்கையை அல்ல..//

மிகச்சரி. யூ ஆர் ஆல்வேஸ் ரைட் பாஸ்.

முகிலன் said...

//சூப்பர் காமெடி...அவர் என்னைக்குங்க பேட்டி கொடுத்தாரு நான் ஒரு அறிவு ஜீவின்னு//

நான் அறிவு ஜீவின்னு சொல்லிக் குடுத்தாத்தான் ஒத்துக்குவீங்களா? போய் கமல் குடுத்த பேட்டியெல்லாம் படிச்சிப் பாருங்க. பத்து கமல் பேசின மாதிரி இருக்கும்.

//
உங்களால அவர் படத்தை ரசிக்க முடிலன்னு சொல்லுங்க முகிலன்... இது ஒரு பொறாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது... ச்சீ.ச்சீ இந்தப்பழம் புளிக்கும் ங்கற கதைதான் உங்களோடது...
//

என்னால கமல் படத்தை ரசிக்க முடியலைன்னு நான் சொன்னேனா? எனக்கெல்லாம் எம்.சி.ஏ வரும் வரை உலகப் படம் என்றால் ஜாக்கிசான் படம் மட்டுமே தெரியும். ஜூராஸிக் பார்க் மட்டுமே ஜா.சா தவிர்த்துப் பார்த்த முதல் ஆங்கிலப் படம். நான் ரசித்து சிலாகித்து பார்த்த கமல் படங்கள் பல உண்டு. ஆனால் பின்னால் அந்தப் படங்கள் எல்லாம் ஆங்கிலப் படங்களின் காப்பி என்று தெரிய வரும்போது, கமலுமா இப்படி என்று ஏற்பட்ட ஏமாற்றமே கமலின் மீதான கோபத்துக்குக் காரணம். நாம் ஒருவரை நன்றாகப் படிப்பவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் மார்க் எடுத்ததெல்லாம் அடுத்தவரைப் பார்த்துக் காப்பி அடித்ததால் என்று தெரிய வந்தால்? அவர் மீது கோபம் வருமா வராதா?

மற்றபடி, கமல் நல்ல நடிகன் தான். ஆனால் இந்தியாவில் இல்லை, தமிழ்த்திரையுலகில் கூட தலை சிறந்த நடிகன் என்று சொல்ல மாட்டேன். அவரைத் தூக்கிச் சாப்பிடக்கூடிய அளவுக்கு நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் வருவார்கள்.

முகிலன் said...

To put that in a different way,

இது வரை கமல் செய்ததை அவரை விட சிறப்பாகவே செய்யக்கூடியவர்கள் தமிழிலும் இந்திய சினிமாவிலும் இருக்கிறார்கள்.

நாடோடி said...

/முகிலன் said...
அன்பின் ஸ்டீஃபன்,

இங்கே நான் விமர்சித்தது கூட கமலின் திருட்டுப் படைப்புகளைத்தானே ஒழிய, கமலின் சொந்த வாழ்க்கையை அல்ல..//

அப்ப‌டியா!!! முகில‌ன். மேலே உள்ள‌ பின்னூட்ட‌த்தை மீண்டும் ஒருமுறை ப‌டித்து பாருங்க‌ள்.. :)

நான் க‌ம‌ல் ர‌சிக‌ன் அல்ல‌, ர‌ஜினி ர‌சிக‌னும் அல்ல‌. ந‌டிக‌ர்க‌ளின் ர‌சிக‌ன்..

ந‌டிப்ப‌வ‌ர்க‌ள் க‌ண்டிப்பாக‌ விம‌ர்சிக்க‌ப் ப‌டுவார்க‌ள் என்ப‌துதான் அன்றைக்கு என்னுடைய‌ வாத‌மாக‌ இருந்த‌து. ஆனால் நீங்க‌ள் அவ‌ர்க‌ளை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் விம‌ர்சிக்க‌ கூடாது என்று வாத‌ம் செய்தீர்க‌ள்..

அத‌னால்தான் உங்க‌ளுக்கு இதை சுட்டிக்காட்டினேன்..

புரித‌லுக்கு ந‌ன்றி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

//நீங்க எதிர்பாக்குற விசயமெல்லாம் இருக்கோனுமின்னா டிவி சீரியல் பாருங்கண்ணே.. :)//

யாரு,டிவி சீரியலை பத்தி சொல்றது,
இரவு 7-30 துவங்கி 11-00 மணிவரை டிவியில் வரும் சீதா ஆண்டி முதல் ஷைலஜா ஆண்டி வரை பார்க்கும் நீ சொன்னா சரியாகவே இருக்கும்,நான் டிவி சீரியல் தொடர்ந்து பார்த்தே 5 வருடமிருக்கு,நீ தான் அரிசி,மங்கையர்கரிசி,எல்லாம் பார்ப்பே.இரு ஃப்ரீ டைமல வரேன்.
====
அகம்பாவிக்கு ஏன்யா வக்காலத்து?நீ போயி கைகுடுத்தாலோ,ஆட்டொக்ராஃப் கேட்டாலோ,உடனே போட்டுட்டா அன்னிக்கு மழைதான்.ஏன் உன்னை திட்டாம விட்டாலே மழைதான்.போய்யா போய் மகனை ப்லேஸ்கூல்ல போடு.

கருந்தேள் கண்ணாயிரம் said...

//சரியாச் சொன்னீங்க. நீங்க சொன்னா மட்லும் தத்துவம். மத்தவங்க சொன்னா
உளறல். சூப்பர்ணே.

அப்பிடியே நீங்க இன்னா பண்றீங்கண்ணா உங்க கருத்த எல்லாம்
மருதமலை மலையில எழுதி வெச்சுட்டு அப்பிடிக்கா குத்த வெச்சு உக்காந்திருங்கண்ணே. வர்ற சந்ததியினர் பார்த்து படிச்சு புரிஞ்சுக்க ஒதவியா இருக்கும்.நன்றி.//

ஓ அப்புடியா? ;-) அப்ப சரி.. நானு மேலே கேட்ட கேள்விகளுக்கு உங்களால பதிலே குடுக்க முடியாதுன்னு நல்லாத் தெரியுது ;-) ..

இருந்தாலும், மறுபடியும் இதோ என் கேள்விகள்: உங்க வசதிக்காக சுருக்கமா குடுத்துருக்கேன் ;-)

1. கமல் ஈயடிச்சாங்காப்பி அடித்த லிஸ்ட், எனது தளத்தில் உள்ளது. உங்கள் பதிவை முழுமையாகத் தேடியும் கூட, இதைப்பற்றிய ஒரு பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை ;-) . முதலில் அதனைத் தெளிவுபடுத்திவிட்டு, பின் மற்றதெல்லாம் பேசலாமே ;-) ..

2. உளறல் என்ன என்பது, அந்தப் பின்னூட்டத்தையும் உங்களது வழவழ பதிவையும் பார்த்தாலே தெரிகிறதே ;-) .. பதில் சொல்ல வக்கில்லாமல், கேலியாகப் பேசுவது போல எதாவது உளறினால், அது பதிலாகிவிடாது ;-)

3. ஏதோ ஒரு கமலைத் துதிபாடும் புத்தகத்தைப் படித்துவிட்டு, யாரோ ஒருவரிடம் அவசரமாக ஒரு பதிவை எழுதி வாங்கிக்கொண்டுவந்து, உங்கள் தளத்தில் போட்டால் மட்டும் போதாது ;-) .. பதில் வேண்டும் ..மறுப்புப் பதிவு என்றெல்லாம் ஃபேஸ் புக்கில் அப்டேட் செய்தாலும், பதிவில் சரக்கு இல்லவே இல்லை ;-) .. எனது கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள் என்றுதான் கேட்கிறேன் ;-)

இவைகளுக்குத் தெளிவான பதில் உங்களிடமிருந்தோ, அல்லது இந்த கோகுல் என்பவரிடமிருந்தோ வராது என்பது உங்களது சமாளிப்புப் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரிகிறது ;-) .. உங்கள் சமாளிப்பு எப்படி இருக்கும் என்பதற்கு, அந்த ஹோட்டல் உணவைக் காப்பியடிக்கும் ‘அதிபுத்திசாலித்தனமான’ உதாரணமே சாட்சி ;-) ..

எனக்கு ஒரு சந்தேகம் - எதற்கு இந்த அவசரம்? இவ்வளவு அவரசமாக ஒரு எதிர் பதிவு? ஆனால அதில் எதுவுமே இல்லை ;-) ஒன்றுமே பதில் சொல்லாமல் ஒரு பதிவு போடுவது எப்படி என்று உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது ;-) .. முதலில், உங்களுக்கு எழுதிக்கொடுத்துவிட்டு, எந்தப் பதிலும் சொல்ல வக்கில்லாமல் பயந்து, நடுங்கிக்கொண்டு, ஒளிந்து கொண்டு நிற்கிறாரே அந்த கோகுல் என்னும் ஆள்.. அவரை வெளியே வந்து, தைரியமாக எழுதச் சொல்லுங்கள் ;-) .. நாங்கள் அவரைக் கடித்துத் தின்றுவிட மாட்டோம்.. ;-)

ILLUMINATI said...

//அதைப்போல நம்மால் விமர்சனம் மட்டுமே செய்ய முடியும். ஒரு ஆகச் சிறந்த படைப்பை குப்பை என்று விமர்சனம் செய்ய மட்டுமே முடியும். //

உண்மை தான்,நம்மால விமர்சனம் தான் செய்ய முடியும்.விமர்சனம் செய்யனும்னா படம் எடுக்கணும் னு எதுனா ரூல் இருக்கா என்ன? ஒரு நல்ல படைப்பை,ஒரு மனிதனுடைய சொந்தக் கற்பனையில் எழுந்த ஒரு கதையை நான் என்றுமே குறை சொல்லப் போவதில்லை.சமீபத்திய அங்காடித்தெரு நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன்.

சமீபத்திய மோசமான உதாரணம், மதராசபட்டினம்.வெளிப் பார்வைக்கு ரெண்டுமே நல்ல படங்கள் மாதிரி இருந்தாலும்,ஒண்ணு நிதர்சனத்தை பேசுது.ஒவ்வொரு முறையும் டி நகர் போகும்போதும்,ஒரு அழுத்தம் நமக்கு வரும்.அது தான் ஒரு நல்ல படத்தின் வெற்றி.இது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரிஜினல்னு நான் நினைக்குறனோ அவ்வளவு காபி மதராசபட்டினம். ரெண்டுமே ஒருத்தருக்கு பிடிக்கலாம்.ஆனா,உண்மை தெரியற வரை தான் ரெண்டாவது பிடிக்கும்.

// விளைவு இன்னும் டோரண்ட் வழியாக திருடுவதற்கும், டவுன்லோட் செய்து பார்த்துவிட்டு, ஆமாம், ஆமாம், காப்பிதான் அடித்துள்ளார்! அப்பட்டமான காப்பிதான் என்றெல்லாம் பேசுவோம்.நம்மால் வேறென்ன முடியும்.//

ஒரு சின்ன சந்தேகம்,இதுக்கும் கமல் காபி அடிச்சிட்டு படத்தை கொடுக்குறார் னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்? என்னைப் பொறுத்த வரை,சில படங்கள் ரென்ட் பண்ணுவேன்.சில படங்கள் டவுன்லோட் பண்ணுவேன்.ஆனா,மிகச் சிறந்த படம்னா,நான் பார்த்த பின்ன அந்தப் படம் எனக்கு பிடிச்சா,நான் அதை கண்டிப்பா காசு கொடுத்து ஒரிஜினல் வாங்குவேன்.அது தான் அந்த படத்துக்கு நான் கொடுக்கும் கிரெடிட்.

கமல் இந்தக் கிரெடிட் கொடுப்பதில்லையே? அப்ப,உங்க வாயாலேயே அவர் திருடன் தான?

//அவதூறு பரப்புவதற்கும் நாமெல்லாம் உண்மையில் தகுதியானவர்கள்தானா?//

ஏன்?அவருக்கு மட்டும் என்ன ரெண்டு கொம்பா இருக்கு? அரசியல்,சினிமா,புத்தகம் னு வந்துட்டாலே புகழும் வரும்,விமர்சனமும் வரும்.சின்னப் பிள்ளைத் தனமா இருக்கு உங்க பேச்சு...

// ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களின் கதைக் கரு பைபிளில் இருந்தே கிடைக்கிறதாம். //

பைபிள்ல இருந்து எடுத்து அதை தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொடுப்பது வேறு.ஒரு படத்தை அட்டுக்காபி அடிப்பது வேறு. பைபிளை அப்படியே பப்ளிஷ்பண்ணிவிட்டு, இது நான் எழுதிய புதுக் காவியம் என்று சொன்னால் சிரிக்க மாட்டார்கள்?

// ஒரு ஹோட்டலுக்கு போயி சாப்பிடும்போது , அது வெளி நாட்டு உணவு என்றால் அதை சமைத்தவனை விட்டு விட்டு இது அந்த ஹோட்டல் உணவோட காப்பி என்று கூறி கொண்டா உள்ளோம். //

உங்க உதாரணமே தப்பு. copyright கொண்ட ஒரு விசயத்தையும்,சாப்பாட்டையும் எப்படி ஒப்பிடுவீங்க? சரி, அப்படிப் பார்த்தா, திருட்டு விசிடிகாரங்கள நாம தூக்கி வச்சு இல்ல கொண்டாடனும்? ரெண்டு பேருமே உழைப்பை திருடறவங்க தான? ஏன் அவங்க மட்டும் கிரிமினல் னு சொல்றீங்க?

கமல் நல்ல நடிகன்.அவரை ஒரு நடிகனா எனக்கு பிடிக்கும்.but, that's it...
அவரு ஒரு genius, கலை உலகின் விடிவெள்ளி போன்ற விஷயங்கள்ல எனக்கு உடன்பாடு இல்ல. அவரு பல வித்தியாசங்களை செய்து இருக்கலாம்.அதான் மூலம் அவரை தேடல் உள்ள மனிதன்னு வேணும்னா சொல்லுவேன். கண்டிப்பா genius னு இல்ல...

// போதுமய்யா இனி ஒரு கலைஞனுக்கு இது நடக்க கூடாதுய்யா!//

கலைஞன் சர்ச்சைக்கு உட்பட்டவன்.அதை முதல்ல புரிஞ்சுக்கங்க.உங்க கருத்தை நீங்க சொல்ற மாதிரி அவரவர் கருத்தை அவரவர் சொல்ல தான் செய்வாங்க.கலைஞன் அப்டின்ற ஒரே விசயத்துக்காக நாம வாய மூடிகிட்டு இருக்கணும்னு இல்ல.

ILLUMINATI said...

// ஒரு ஆகச் சிறந்த படைப்பை குப்பை என்று விமர்சனம் செய்ய மட்டுமே முடியும்.//

இன்னொரு விஷயம், ஒருத்தருக்கு நல்லதா தெரியுற ஒரு விஷயம் இன்னொருத்தருக்கு பிடிக்காது.
அதுக்காக,எந்த விசயத்தையும் விமர்சனம் பண்ணக்கூடாது னு இல்ல. விமர்சனம் வேற,உங்க ரசனை வேற..
உங்க ரசனைக்காக விமர்சனம் கூடாதுனு சொல்ல முடியாது.

மரா said...

அன்பு நன்பர் கருந்தேளுவிற்கு,

நலமா!
இங்கு நடைபெறுவது ராமாயணம் அல்லவென்றும் மேலும் நான் ராமனோ அல்லது நீங்கள் வாலியோ அல்லவென்றும் , மறைந்து நின்று தாக்குதல் நடத்துவதற்கு யுத்தம் ஏதும் நடக்கவில்லை என்றும் நம்புகின்றேன். தங்களின் பின்னூட்டங்கள் சிலவற்றை மரா போனில் கூறக் கேட்டேன். நாம் குழாயடிச்சண்டை நடத்தவில்லை என்றும் , அப்படியே நடந்தாலும் போகிற போக்கைப் பார்த்தால் இது இப்போதைக்கு தீரப்போவதில்லை என்றும் நம்புகிறேன். காடு நாவல் முடிந்துவிட்டதால் , சாருவின் ராசலீலாவின் மறுவாசிப்பில் (”கதை:பதினெட்டு”) சற்று பிசியாகவும் இருக்கிறேன். முடித்துவிட்டு நேரமிருந்தால் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அனுப்புகிறேன்.மற்றபடி தங்களது தங்குதடையில்லாத மொழிபெயர்ப்பு புலமை மூலத்தை விட மிகவும் அருமை :-) . ஒரு நல்ல மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கக் காத்திருக்கின்றேன்.

மேற்படி அறைகூவல் விடுத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

விரைவில் ஒரு “அறிவுஜீவித்தனமான”!!!! கட்டுரையுடன் சந்திப்போம்.

மரா: இதனை பின்னூட்டத்தில் போட்டுவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
கோகுல்

கருந்தேள் கண்ணாயிரம் said...

அன்பு நண்பர் கோகுலுக்கு,//இங்கு நடைபெறுவது ராமாயணம் அல்லவென்றும் மேலும் நான் ராமனோ அல்லது நீங்கள் வாலியோ அல்லவென்றும் , மறைந்து நின்று தாக்குதல் நடத்துவதற்கு யுத்தம் ஏதும் நடக்கவில்லை என்றும் நம்புகின்றேன். //

;-) இது யுத்தம் இல்லை ;-). ஆனால், அவசர அவசரமாக ஒரு பதிவு எழுதி, வழவழவென்ற நடையில் எந்தக் காரணங்களும் கொடுக்காமல், வெறும் சினிமா வசனங்களிலும், உப்புப்பெறாத காமெடி பீஸ் உதாரணங்களிலும் (அந்த
ஹோட்டல் உணவு உதாரணம் தான் டாப் க்ளாஸ் காமெடி.. ஹாஹ்ஹா) அந்த பதிவை நிரப்பி, மண்டபத்தில் உட்கார்ந்து எழுதிக் கொடுத்து, அதனை மயில் அவரது தளத்தில் அவசரமாகப் போட்டிருப்பதையே நான் சொன்னேன் ;-) ..

//நாம் குழாயடிச்சண்டை நடத்தவில்லை என்றும் , அப்படியே நடந்தாலும் போகிற போக்கைப் பார்த்தால் இது இப்போதைக்கு தீரப்போவதில்லை என்றும் நம்புகிறேன்//

ஹாஹ்ஹா.. ;-) .. நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நீங்கள் தெளிவாகப் பதில் அளித்தால், இது தீர்ந்துவிடும் ;-) .. ஆனால், நீங்கள் பதிலளிக்கும் நிலையில் இல்லை என்று நன்றாகத் தெரிகிறதே ;-). எப்படியெல்லாமோ கமல்
ஈயடிச்சாங்காப்பி அடித்ததை சமாளித்துப் பார்த்தீர்கள் ;-) .. அவரது படங்களில் வரும் வசனங்களை உளறி ;-) .. இதற்கு மேல், காமெடியான அந்த ஹோட்டல் உதாரணம் வேறு கொடுத்தீர்கள் ;-) .. அதை யாரும்
ஒப்புக்கொள்ளவில்லை என்றவுடன், ராமாயணம் கீமாயணம் என்று இன்னொரு வெட்டி உதாரனம் இப்போது வந்துள்ளது ;-)

//முடித்துவிட்டு நேரமிருந்தால் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அனுப்புகிறேன்.மற்றபடி தங்களது தங்குதடையில்லாத மொழிபெயர்ப்பு புலமை மூலத்தை விட மிகவும் அருமை :-) . ஒரு நல்ல மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கக்
காத்திருக்கின்றேன். //

நேரமிருந்தால் அனுப்புவேன் என்றால்? நேரம் இருந்ததால் தானே நான் பதிவு போட்டவுடன், அவசர அவசரமாக கமலின் ஜால்ராப்புத்தகம் ஒன்றைப் படித்து (நீங்கள் தான் பக்க எண்ணோடு அதன் ரெஃபரன்ஸ் கொடுத்திருக்கிறீர்களே ), இந்த
சமாளிப்பு பதிவைப் போட முடிந்தது? ஆனால், நான் கேள்விகளை எழுப்பியவுடன் மட்டும், கிரேட் எஸ்கேப் ;-) .. பின்றீங்க போங்க ;-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

இன்னொரு விஷயம்... இப்படி அடுத்தவர்கள் ப்ளாகில் போய் உங்கள் சரக்கை ஏற்றுவதற்கு, சொந்தமாகவே ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதலாமே ;-) .. இப்போது, நீங்கள் உளறியவைகளுக்கு நாங்கள் பதில் அனுப்பினால், அதற்கு மயில் பதிலளிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு அவரை எடுத்துவந்துவிட்டீர்களே ;-) பாவம் ;-)

மரா said...

@ Karundhel

Friend have u read this
http://charuonline.com/blog/?p=974

கருந்தேள் கண்ணாயிரம் said...

//@ Karundhel

Friend have u read this
http://charuonline.com/blog/?p=974//

படிக்காம ? ;-) இதோ பதில்.. கொஞ்ச நேரத்தில்

கருந்தேள் கண்ணாயிரம் said...

மயிலு,

நம்ம பதில் வந்தாச்சு.. படிங்க

செ.சரவணக்குமார் said...

// மரா said...

பின்தொடரும் 100 வாசகர்களுக்கு நன்றி நன்றி.//

வாழ்த்துகள் மயிலு..

shivam said...

I agreeeeee karundhel's view ...