அந்தி வேளை
கோபுரக் கலசத்தில்
மின்சாரம்...
தும்பைப் பூவாய் பூத்திருந்தது!
அடங்காமல் திரியும்
சிற்ப அழகை
படச் சுருளால்
அதட்டி அமர்த்த
முயன்றுகொண்டிருந்தது
தம்பதியொன்று!
காதைப் பிளந்து போட்டபடி
பாடல்...
பீப்பிக்காரன்
விட்டு விட்டு
ஊதிக் கொண்டிருக்கிறான்...
கூத்து...கும்மாளம்...
மிரண்டு ஓடின
அடையவந்த குருவிகள்
வட்டமடித்தது பருந்து.
நன்றி: சுந்தரசுகன்
Tuesday, January 12, 2010
பிறவி -பொ.முத்துவேல்
நான்...
மவுனம் சுமக்கிற சவம்...!
பொறுப்பதை வேறெப்படி சொல்வது?
அவிழ்த்துவிட்ட கோயில்காளப்போல
மனசு மட்டும் அலைந்து திரிகிறது...!
கவிதையின் சூத்திரம் தேடி
ஆமாம்,
கவிதைக்கு சூத்திரமேது
சொல்லுகிற விதம்தானே
அந்த விதம் தேட
தண்ணி தெளித்து விட்டாயிற்று!
எப்பொழுதோ
நான்
மவுனம் சுமக்கிற சவம்...!
அரும்பு மீசைப்பருவம்
அப்பிவிட்ட
துடிப்புகளின் துயரம் பார்த்து...!
ஆட்டுக்காவலுக்கு ஓநாய் வந்ததுபோல
வெள்ளை வேட்டியில் வலம் வரும்
பெரிய்ய்ய...மனுசங்களைப் பார்த்து!
இமைமூடாத தூக்கம் போல...
நான்
சாகாமல் செத்துப்
பிறக்காமல் பிறக்கிறேன்
கவிஞனுக்குரிய அடையாளத்துடன்...!
நன்றி: சுந்தரசுகன்
Thursday, January 7, 2010
வால்கிரி----ஒரு தோல்வியின் இசை VALKYRIE
மயில்ராவணன்
லேண்ட்மார்க் டிவிடி அரங்கினுள் நுழைந்தவுடன் நமது கண்னில் படுமாறு “வால்க்ரி(valkyrie)” சிடிக்கள் அடுக்கி வைக்கப்படிருக்கின்றன. இதைப்பற்றிய எந்த விவரமும் அறியாத நிலையில் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து சமீபத்தில் பார்த்து முடித்தேன். வழக்கம்போல “டாம் குரூஸின்” மற்றொரு “MileStone" ஆகவே இருந்தது.
”பிரயான் சிங்கரின்” இயக்கத்தில், அருமையான ஒளிப்பிதிவு மற்றும் இசையில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம், இரண்டாம் உலகப்போரின் போது, போரின் போக்கையையே மாற்ற முயற்சி செய்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில், கலோனல் பதவியில் இருக்கின்ற டாம் குரூஸ், ஜெர்மனியின் மீதும், ஜெர்மானிய போர்வீரர்கள் மீதும், அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.
அங்கு நடைபெறுகின்ற ஒரு யுத்தத்தில், ஒரு கையையும், ஒரு கண்ணையும் இழந்து ஜெர்மனி திரும்புகிறார். அதே நேரம், ஹிட்லரின் மீது நம்பிக்கை இழந்த ஜெனரல் ட்ரெஸ்கோவும் அவரது உதவியாளரும்,
அவரை கொல்வதற்காக வெடிகுண்டு பார்சல் ஒன்றை பரிசளிக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, யாருக்கும் தெரியாமல் அதனை மூடி மறைதுவிடுகிறார்கள் டிரெஸ்கோவும், பெர்லினில் உள்ள மற்றொரு நன்பர் ஓப்லிக்கும். ஆனால் சரியான நபரை கண்டடைந்து மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கும் நிலையில், இதைபோலவே கருத்து கொண்ட ஸ்டாஃபன்பர்க்கை (டாம் குரூஸ்) சந்திக்கிறார்கள்.
ஸ்டாஃபன்பர்க் தனக்கு முழு அதிகாரம் வழங்க்பட்டால் தன்னால் இதனை முடிக்க முடியும், என்றும் மேலும் , இதனை ராணுவ மற்றும் அரசியல் கூட்டு முயற்சியின் மூலமாக மட்டுமே சாதிக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட இந்த இரகசிய குழு பொறுப்பை இவருக்கு அளிக்கிறது.
ஹிட்லர் கொல்லப்பட்டால் மட்டும் போதாது என்றும், அவருக்கு துணையாக இருக்கும், ஜெர்மன் கோரிங் மற்றும் கொள்கை பரப்பாளர் கோயபல்ஸ் ஆகியோரும் கொல்லப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஆப்ரேஷன் வால்க்ரி என்ற ஒரு சதித்திட்டத்தை உருவாக்குகிறார். இந்த ஆப்ரேஷன் வால்க்ரி என்பது, ஆபத்து காலத்தில், ஹிட்லர் எதிரி படையினரால் கொல்லப்பட்டால், அடுத்து போரின் நடவடக்கியைலும், அரசியல் நடவடிக்கையிலும் நடக்க வேண்டியவற்ற உள்ளடக்கியது. இதைத் தொடர்ந்து, தனித்தனியான மாநிலங்கள் ஒருங்கினைக்கப்படும், ஹிட்லரின் நாசிப்படை ஒடுக்கப்பட்டு, அதன் செயல் பிரிவு தலைவர்களான கோயபல்ஸ் மற்றும், கோரிங் ஆகியோர் தலைமறைவாக்கப்படுவார்கள் என்று ஹிட்லரால் தீர்மானிக்கப்பட்டது. இது அந்த காலத்தில் மிகப்பிரபலமான வாக்னர் என்ற இசையமைப்பாளரால் உருவாக்க்கப்பட்ட ஆர்கெஸ்ட்ராவாகும். இது ஹிட்லரின் ஃபேவரிட் லிஸ்டாகும்!.
இந்த திட்டதில் பெரிய மாற்றங்களை உருவாக்கி, அதன் மூலம் ஹிட்லர் கொல்லப்பட்டால், அடுத்த கட்டமாக, ஜெர்மனி ஸ்டாஃபன்பர்க் தலைமையில் ஒருங்கினைப்பட்டு, அனைத்து நாசி தலைவர்களும் சிறையிலடைக்கபட்டு, அவசர நிலை பிரகடனத்தின் மூலம் ரிசர்வ் ஆர்மி மூலம் சட்டம் ஒழுங்கு கட்டுபடுத்தப்பட்டு, பேச்சு வார்த்தைக்கு எதிரி நாடுகளுடன் தயார் செய்யப்படும் என்று மாற்றி அமைக்கிறார். ஹிட்லரை அவரது வீட்டில் வுல்ஸ் லயரில் சந்த்தித்து , தன் புதிய சட்டத்திருத்ததின் அவசியத்தையும் அத்தியாவசியத்தையும் கூறி ஒப்புதல் பெற்கிறார். ஹிட்லரும் அரை மனதுடன் இவர் மீதுள்ள நம்பிக்கையால் ஒப்புதல் அளிக்கிறார்.
இதைத்தொடர்ந்து, ஸ்டாஃபன்பர்க் மற்ற சகாக்களுடன் சேர்ந்து, பிளாஸ்டிக் டெட்டனேட்டர், பிரிட்டிஷ் பென்சில் ஆகியவற்றை கொண்டு வெடிகொண்டு ஒன்றை தயாரிக்கிறார். இதனை
அறிந்த ஜெனரல் ஃபிரம் என்பவர் இவரது முயற்சி தோல்வி அடைந்தால் தானே ஸ்டாஃபன்பர்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கூறி எச்சரிக்கை செய்கிறார். இருந்தாலும் தன்னுடைய முய்ற்சிக்கு உத்வியாக, ஹிட்லரின் அலுவலகத்தில் கம்யூனிகேஷன் ச்சீஃபாக பனிபுரியும், ஒருவரின் மூலம் தொலைத்தொடர்பை நிறுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் சதிக்கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை அளிக்கிறார்.
போர் நடவடிக்கைகளை விவாதிப்பதற்காக ஹிட்லர் ஸ்டாஃபன்பர்க் உள்ளிட்ட அனைத்து ரானுவத்தளபதிகளையும் தனது அலுவலகத்திற்கு அழைக்கிறார். அங்கு 1.5 கிலோ வெடிகுண்டுகளுடன் ஸ்டாஃபன் பர்க்கும் , அவரது உதவியாளரும் செல்கிறார்கள். வெடிகுண்டை செட் செய்வதற்கு தனி அறை வேண்டும் என்பதால் , காலையில் முகச்சவரம் செய்யும்போது, பிளேடால் கழுத்துக்கு கீழே கீரிக்கொள்கிறார். இதனால் இரத்தக்கறை படிந்த தனது மேலாடையை மாற்றுவதற்கு தனி அறை வேண்டும் என்று கூறி அங்கு சென்று, சட்டையை அணிந்து கொண்டே, வெடிகுண்டை தயார் செய்கிறார். உதவியாளரை தான் மட்டும் தனியாகவே இந்த சதித்திட்டத்தை செயல் படுத்த முடியும் என்றும், அதனால் காரில் சென்று காத்திருக்கும்படியும் உத்தரவிடுகிறார்.
கைப்பையில் எடுத்துசென்ற வெடிகுண்டை ஹிட்லரின் காலுக்கு அருகாமையில் வைத்துவிட்டு, தனது சகாக்களின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். ஹிட்லர் உரை நிகழ்த்த ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியெறுகிறார். இவரது திட்டப்படி அடுத்த பதினைந்து நிமிடங்களில் வால்க்ரி இனிஷியேட் செய்யப்பட்டு விடும் என்று நம்பி வெளியேறுகிறார். வெளியே வந்த அடுத்த நிமிடம், கட்டிடமே அதிரும் அளவிற்கு கரும்புகையை கக்கியபடி குண்டு வெடிப்பதை தனது கண்களாலேயே கான்கிறார். இவரது திட்டப்படி அனைத்து செய்தித்தொடர்புகளும் காலவரையின்றி நிறுத்தப்படுகின்றன. ஹிட்லரின் ஆதரவாளர்கள், ஹிட்லருக்கு என்ன ஆனது என்பதிலேயே குறியாக இருக்கின்ற நிலையில், இவர் அங்கிருந்து காரில் தப்பிச்செல்வதை கவனிக்கத் தவறுகின்றனர்.
வழியில் மறிக்கும், செக்போஸ்ட் காவலாளியிடம், தான் ஹிட்லருக்கு நெருங்கியவன் என்றும் வேண்டுமானால் ஹிட்லரிடம் உடனிடியாக பேசித்தெரிந்துகொள் என்றும் மிரட்டி விட்டு அங்கிருந்து விமானத்தில் பெர்லினுக்கு திரும்புகிறார். முன்னதாக தனது மனைவி , குழந்தைகள் அனைவரையும் யாருக்கும் தெரியாத படி தொலை தூரத்தில் உள்ள கிராமத்திற்கு பாதுகாப்பாக அனுப்பட்டதை நினைவு கூர்கிறார்.
ஆனால் பெர்லினில் கால் பதித்த பிறகுதான், தன்னுடைய திட்டத்தில் உள்ள பின்னடைவை உணர்கிறார். ஓல்பிக் எந்த உத்தரவையை ரிசர்வ் ஆர்மிக்கு வழங்காமல் மவுனம் காப்பதை
விரும்பாத ஸ்டாஃபன்பர்கின் நன்பர் Quirnheim அவசர சட்டமான வால்கிரியை இனிஷியேட் செய்கிறார். இதனை அறியாத ஸ்டாஃபன்பர்க் ஓல்பிக்கை இரகசிய போனில் அழைத்து ஹிட்லரின் அலுவலகம் வெடித்ததை தானே தனது கண்களால் பார்த்ததாகவும், ஹிட்லர் இறந்து விட்டதாக உடனடியாக அனைவருக்கும், இரகசிய தந்தி அனுப்பும்படிய்ம் சொல்ல ஓல்பிக் அதற்கு கீழ்படிகிறார். ஒட்டுமொத்த ஜெர்மனியும் பதறுகிறது. இரகசிய தொலைதொடர்பு அதிகாரிகள் நடுநிலையாளர்கள் என்பதால் எந்த செய்தியையும் மறைகாமல் அனைவருக்கும் வால்கிரி ஆனையை அனுப்பி வைக்கிறார்கள்.
ரிசர்வ் ஆர்மி, எஸ் எஸ் படையை சுற்றி வளைத்து கைது செய்கிறது, ஹிட்லரின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்படுகிறார்கள். வால்கிரிக்கு பனியாத மாகான மேயர்கள் கைது செய்யப்பட்டு, அதிரடியாக அவை பெர்லினை தலைமையிடமாக ஏற்றுக்கொள்ளச்செய்யப்படுகிறார்கள். தலைமறைவாக இருந்த ஹிட்லரின் அரசியல் எதிரிகள் முக்கிய பதவிகளில் பொறுப்பேற்கிறார்கள். ஜெர்மானிய மக்கள் கொடுங்கோலர் ஹிட்லரின் இறப்பை கொண்டாடும் விதமாக ஆப்ரேஷன் வால்கிரிக்கு நேரடி ஆதரவளித்து ஸ்டாஃபன்பர்குடன் இணைகிறார்கள். இவை அனைத்து, ஹிட்லர் கொல்லப்பட்டதாக வெளியான அடுத்த இரண்டரை மணி நேரத்தில் நடைபெறுகின்றன.
ஹிட்லரின் வலது கரமான கோயபல்ஸை கைது செய்ய ரிசர்வ் ஆர்மி அவரது வீட்டை முற்றுகையிடுகிறது. இதற்கு சற்றும் அஞ்சாத கோயபல்ஸ் கைது செய்ய வந்த இரானுவத்தளபதியை மிகச்சாதாரனமாக எதிர்கொண்டு தொலைபேசியில் ஒரு முக்கிய நபர் காத்துக்கொண்டிருப்பதாக கூறி பேசும்படி கோருகிறார். தொலைபேசியில் பேசிய குரலுக்கு சொந்தக்காரர், ஜெர்மனியின் சர்வாதிகாரி, ஜெர்மனியைத்தன்னால் மட்டுமே காக்கமுடியும் என்று கருதிய அடோல்ஃப் ஹிட்லர் என்பதை உணர்ந்த கேப்டன், அங்குசத்திற்கு பயப்படும் யானையைபோல அச்சத்துடன் அடுத்த உத்தரவை பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.
நடந்ததை அறியாத ஜெர்மனியின், மாகானங்களை ஒருங்கினைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார். தொடர்பற்று இருந்த அவரது அலுவலக வானொலி திடீரென உயிர்பெற்று ஹிட்லர் உயிருடன் உள்ளார் என்றும், கொல்ல நடந்த முயற்சியில் லேசான காயத்துடன் உயிர் தப்பி விட்டார் என்றும் , சதிகார்களும் அவர்களின் ஆதரவாளர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தொடர்ந்து அறிவிக்கிறது. இது தவறான தகவல் என்றும், குண்டு வெடிப்பை தானே நேரில் நிகழ்த்தியதாகவும், ஆதலால், இந்த பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். இதற்கிடையில், ஸ்டாஃபன்பர்கின் தொலைதொடர்பு முழுவதும் துண்டிக்கப்படுவதை தொடர்ந்து, ஹிட்லர் உயிருடன் உள்ளார் என்பதை மறைமுகமாக உணர்ந்து கொண்ட அவரது சகாக்கள் அவரிடமிருந்து பிரிந்து வெளியேறுகிறார்கள்.
கைது செய்யப்படுவதற்காக இரானுவம் தனது அலுவலக வாசலுக்கு வந்திருப்பதை அறிந்த ஸ்டாஃபன்பர்க் அங்கிருந்து தனது கைத்துப்பாக்கியுடன் வெளியேற முயற்சி செய்யும் போது,
தனது சில ஆதரவாளர்கள், மற்றும் மெய்காப்பாளரோடு கைது செய்யப்படுகிறார். விசாரனையின் முடிவில் அதிரடியாக மரணதண்டனை பெறுகிறார்.
மிகச்சிறப்பான காட்சி அமைப்பின் மூலமும், ஒரு வேகமான திரைக்கதையுடனும், ஹிட்லர் இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட வில்லை என்ற வரலாற பல முறை படித்திருந்த போதிலும், திரில்லாகவே கதை நகர்த்தி இருப்பதை மிக முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். சூழ்நிலை , வசனம் ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி மவுனம் காக்கும் இசை தேவையான இடங்களில் மழையாய் பொழிகிறது. முக்கியமாக வாக்னரின் இசையை பயன்படுத்தி, ஸ்டாஃபன்பர்க் எண்ணத்தை வசனமின்றி நமக்கு உணர்த்தி இருப்பதை கூறலாம்.
தேர்ந்த நடிகர்களை பாத்திரப்படைப்பிற்கு தக்க முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்டாஃபன்பர்கின் உண்மையான தோற்றத்திற்கும், டாம் குரூஸின் தோற்றத்திற்கும் பத்து சதவீத வேறுபாடே தெரிகிறது. அவ்வளவு நேர்த்தியான் மேக்கப் மற்றும் உருவ அமைப்பு. ஜெர்மானிய கலாசாரத்தை அருமை பிரதிபலிக்கும் பல்வேறு பாத்திரபடைப்புகள் இடம்பெற்றிருக்கின்றனர். வரலாற்றை திருத்தி கூறாமல், ஏற்கனவே வெளியான வால்கிரி என்ற நூலை காட்சிப்படுத்தி இருப்பது மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும் என்பதே உண்மை.
கடைசி காட்சியில், தான் கனவு கண்ட தேசத்தை பார்ப்பதற்கு முன்பே தான் கொல்லப்படுவதற்காக தன் ஒற்றைக்கண் கலங்கும் காட்சியும், தனது உயரதிகாரி கொல்லப்படுவதற்கு முன்பு தனது உயிர் போக வேண்டும் என்று துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கும் மெய்காப்பாளரும், சில பர்சனல் காரனங்களுக்கு, தானே தலையில் சுட்டுக்கொண்டு இறந்து போகும் கவர்னரும், தான் துவக்கிய இந்த சதி தோல்வி அடைந்து விட்டதெ என்ற துயரத்தில் கையெறி குண்டுக்கு தன்னையே பலி கொடுக்கும் ஜெனரல் டிரெஸ்கோவும் அருமையான காட்சிகளாகும்.
நாம் வன்முறையை ஒருபோதும் விரும்புவதில்லை, ஆனால் வரலாறு தினமொரு வன்முறையை நிகழ்த்திக் கொண்டுதானிருக்கிறது. அவை காலத்தின் பல்வேறு படிநிலைகளில் கறைகளாக படிந்து கொண்டிருக்கின்றன. மக்களை நேசிக்காத எவரையும் நன்பர்கள் கூட நேசிப்பதில்லை என்பதையும், ஒரு வன்முறைக்கு மற்றொரு வன்முறை தீர்ப்பாகாது என்பதையும், காலம் தனது புனிதமான எழுதுகோலால், எழுதிக்கொண்டேதான் இருக்கிறது என்பதையுமே இந்த வால்கிரி திரைப்படம் உணர்த்திச் செல்கிறது. மனித நேயத்தையும், மக்களையும் நெசித்து, காலம் அழகான நாட்களை மட்டுமே எதிர்வரும் நாட்களில் குறிப்பெடுக்கும் என்ற ஆவலோடு வேறொரு திரைப்படத்தில் தொடர்கிறேன்.
இந்த திரைப்படைத்தைப் பற்றிய மேலும் விவரங்கட்கு:
http://www.imdb.com/title/tt0985699/
http://www.youtube.com/watch?v=FHtCaVtryiE
டிஸ்கி:
இரண்டு மணிநேரப்படம்....அதனால் சுறுக்கி எழுத மனமில்லை..

Monday, January 4, 2010
பிலடெல்பியா Philadelphia
கசப்பின் வலி -மயில்ராவணன்
மருந்தின் கசப்பை விடவும்,ஊசிகளின் வலியைவிடவும் புறக்கணிப்பின்
வலி கொடுமையானது.’மரணத்தை விடக் கொடியது மறக்கப்படுவது’
என்று சுஜாதா கூறுவார்.
‘பிலடெல்பியா’(philadelphia) திரைப்படம் இதைத்தான் கூறுகிறது.
ஜானதன் டெம்மின் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் மற்றும் டென்சல்
வாஷிங்டன் ஆகியோரின் அருமையான நடிப்பில், இறக்கும் தருவாயில்
உள்ள ஒருவன் நீதியின் முன் கம்பீரமாக போராடி வெல்லும் மிகச்சிறந்த
திரைப்படம் ஃபிலடெல்ஃபியா. தான் ஒரு Gay என்பதற்காக ஆரம்ப காட்சிகளில் , பிறர் பார்வையில் குற்றவாளியாக தெரிந்தாலும், தன்னுடைய
personal விஷயங்களில் அடுத்தவர் தலையிடுவதற்கோ , அதை ஒரு குற்றமாக கருதி வேலைநீக்கம் செய்வதற்கோ பிறருக்கு உரிமை
இல்லை என்பதை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோர்ட்டிலேயே நடைபெற்றாலும்,
கொஞ்சம் கூட சோர்வில்லாமல் நகர்கிறது.
அது ஒரு வழக்கமான பொழுதாகத்தான் ஆண்ட்ரூ பெக்கிற்கு விடிந்தது.அவனுடைய சிறப்பான வேலை மற்றும் பொறுப்புணர்ச்சியின் காரணமாக அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் மேலதிகாரிகள் முக்கிய சில பொறுப்புகளை ஆண்ட்ரூவிற்கு வழங்குகின்றனர்.இந்த இன்ப அதிர்ச்சியில்
இருந்து ஆண்ட்ரூ மீள்வதற்குள் அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கின்றது. மீட்டிங்கின் போது தலையில் ஏற்பட்டிருக்கும் தழும்பிற்கு
காரணமாக எதையோ சொல்லி மழுப்புகிறார்.
மறுநாள் அலுவலகத்தில் அமர்ந்து முக்கியமான கோப்பு ஒன்றை திருத்திக் கொண்டிருக்கும்போது கடுமையான உடல் சோர்வுக்கு உள்ளாகி நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையை அடைகிறார்.இரத்தப் பரிசோதனையின் முடிவு மருத்துவரால் வழங்கப்படும்போதுதான், தனக்கு எய்ட்ஸ் இருப்பதை அறிகிறார்.அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வருவதைத் தொடர்ந்து,போனில் தொடர்பு கொள்கிறார்.அப்போது முக்கியமான கோப்பு ஒன்றைக் காணவில்லை என்பதை அறிந்து பதற்றம் கொள்கிறார்.இருப்பினும் உடனடியாக அலுவலகத்திற்கு சென்று கோப்பை சரிபார்த்துக் கொடுத்து கம்பெனிக்கு கெட்டபெயர் ஏற்படுவதைத் தவிர்க்கிறார்.
இந்த சூழ்நிலையில்தான் ஆண்ட்ரூ ஒரு 'HomoSexual' என்பது நமக்கு தெரிய வருகிறது.ஆனாலும் இதனை அலுவலகத்தில் உள்ளவர்களிடம் இருந்து மறைக்கிறான்.மேலும் தனக்கு எய்ட்ஸ் என்ற ரகசியத்தையும் தனக்குள்ளாகவே புதைக்க முயற்சி செய்கிறான்.இதுவரை திரைப்படத்தில் tom hanksன் தோற்றம் மிக அழகாகவே உள்ளது.முகத்திலும்,கழுத்திலும் உள்ள சில தழும்புகளைத் தவிர. ஆனால் காலம் தனது மோசமான தீர்ப்பை இவரின் உடலின் மீது எழுதி, இவரை ஒரு எய்ட்ஸ் நோயாளியாக வெளிப்படையாக தெரிய செய்யும் பிற்பகுதி காட்சிகள் கண்ணில் நீரை வரவழைக்கிறது.
இந்நிலையில் மேலதிகாரிகளால் கோப்பு காணாமல் போனது தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்.நடந்த சம்பவம் துரதிஷ்டமானது என்றும், இது முதல்முறை என்பதால் வருத்தம் கலந்த மன்னிப்பை ஏற்கும்படியும், இனி நடக்காது என்றும் விளக்கம் அளிக்கிறான்.இருப்பினும் இவரது விளக்கத்தை ஏற்காத கமிட்டி இவரை வேலையில் இருந்து நீக்குவதற்கான உத்தரவை வழங்கி இவரை வேலையில் இருந்து வெளியேற்றுகிறது.
இதற்கிடையில் ஏற்கனவே தனக்கு அறிமுகமான வக்கீல் ஜோமுல்லர்(டென்சல் வாஷிங்டன்) என்பவரை அணுகி தனக்கு நீதி கிடைக்க செய்யுமாறு வலியுறுத்துகிறார்.பெக் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பதை உரையாடலின் போது என்பதை தெரிந்து கொண்டு வெறுப்பு கொள்கிறார். மேலும் அவரை உடனடியாக தன்னுடைய அலுவலகத்தில் இருந்து திருப்பி அனுப்ப முயற்சிக்கிறார். இதனால் வெறுப்படைந்த ஆண்ட்ரூ அங்கிருந்து வெளியேறுகிறார்.
ஜோமில்லர் இரக்கமில்லாதவர் இல்லை, இருப்பினும், அன்றைய காலகட்டத்தில் போதுமான விழிப்புனர்ச்சி இல்லாத காரனத்தாலும், பெக்கை ஒரு homo sex என்று அறிந்த காரனத்தாலும் மட்டுமே அவரை வெறுக்கிறார் என்பதை பின்வரும் காட்சிகளில் நமக்கு விளங்க செய்கிறார். அவனுடன் கைகுலுக்கியதால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள அவரது டாக்டரை அணுகுகிறார். படம் வெளிவந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு படித்த திறமையானவர்களைக் கூட சரியாகச் சென்றடையவில்லை என்பதை மிக அழகாக சித்தரிக்கிறார் டைரக்டரு. இந்நிலையில் ஆண்ட்ரூ தனக்காக வாதாட யாரும் முன்வராத நிலையில் தானே தனது வழக்கை நடத்த முடிவு செய்து லைப்ரரியில் அமர்ந்து தற்செயலாக ஜோமில்லரை சந்திக்கிறான்.
ஆண்ட்ரூ பெக்கின் பரிதாபமான நிலையைப் பார்த்து ஜோ அவனுடைய வழக்கை ஒத்துக்கொள்கிறார்.இதற்கு பிறகு நடக்கும் பல சம்பவங்கள் மனிதநேயம்,மனித மாண்பு என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்போரை, செயலில் இறங்கி முடிந்தால் அடுத்தவனுக்கு உதவுங்கள் என்பதுபோல் சொல்லாமல் சொல்லி செல்கின்றன.
ஆண்ட்ரூவின் பாலியல் விருப்பத்திற்கு உலகே எதிர்ப்பு தெரிவித்தாலும் கண்ணியமான அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மேலும் அவரைப் புண்படுத்தாமல் அன்புடன் நடந்து கொள்வது சிறப்பான விசயம்.
கோர்ட்டில் கோப்பு காணாமல் போனது என்பதைவிட ஆண்ட்ரூவிற்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பதாலேயே அவன் பதவியில் இருந்து நீக்கப்பட்டான் என்று ஆண்ட்ரூவிற்கு ஆதரவாக ஜோ வாதாடுகிறார்.எதிர்தரப்பில் இருந்து ஆரம்பத்தில் இதனை மறுத்த அலுவலக நிர்வாகம் தனக்கு எய்ட்ஸ் என்பதை சக ஊழியர்களிடம் மறைத்ததை தவறாகக் காரணம் கூறி தாங்கள் செய்தது சரியே என்பதை நிரூபிக்க முயல்கின்றனர். மேலும் பெக்கிற்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பதை அவர் கூறாமல் எப்படி தங்களுக்கு தெரிய வரும்? என்று திசை திருப்ப முயற்சி செய்யும்போது, ஆரம்பத்தில் முகத்தில் தழும்புகள் இதனை தன்னிடம் இருந்து வெளிப்படுத்தி கொண்டுதான் இருந்தது என்றும், கூற....அதற்கு எதிர்தரப்பு, தங்களால் வெளிப்படையாக ஒரு தழும்பை இப்போது காண இயலாத நிலையில் எப்படி இதை ஏற்றுக்கொள்ள முடியும் எனும்போது, ஜொ அவரது சட்டை பொத்தான்களை கழட்டி உடலில் உள்ள தழும்புகளை காண்பிக்கும்படி கோருகிறார். இது ஒரு முக்கியமான திருப்பு முனையாக வருகிறது.
இதனைத் தொடர்ந்தாற்போல வரிசையாக வழக்கு மன்றக் காட்சிகள்.வசனங்கள் இப்படத்தின் பலம்.விசாரனையின்போது உடல் மற்றும் மனச்சோர்வின் காரணமாக கீழே விழும் ஆண்ட்ரூ ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறான்.
தொடர்ச்சியாக வழக்கை ஜோமில்லர் திறமையாக வாதாடி பாலியல் தொடர்பான முடிவுகளில் அலுவலகத்திற்கு எந்த தொடர்போ, உரிமையோ இல்லை என்பதை நிரூபிக்கிறான்.முன்னதாக ஆண்ட்ரூ பெக்கின் தற்போதைய மனச்சிதைவு மற்றும் மன அழுத்ததிற்கும் அவனது homosexulaity-தியேட்டர் சம்பவத்தை பலர் முன்னிலையில் அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தியதேக் காரணமென்பதையும் நீதிபதிக்கு எடுத்துரைகிறார்.
ஜூரியின் கருத்தைக் கேட்கும் நீதிபதி மிகப்பெரிய தொகையை கார்ப்பரேட் கம்பெனிக்கு அபராதமாக விதித்து ஆண்ட்ரூவிற்கு கிடைக்கும்படி செய்கிறார்.இதனை ஜோ ஆண்ட்ரூவிற்கு தெரிவித்துவிட்டு வீடு வந்து சேரும்போது ஆண்ட்ரூவின் மரணச்செய்தி வருகிறது.ஆண்ட்ரூவின் இருதிச்சடங்கு நிகழ்ச்சியில் அவரது மங்கிய குழந்தை நினைவுகள் தொலைக்காட்சியில் காண்பதோடு நம்முன் சலனத்தை ஏற்படுத்தி செல்கின்றன.
ஆண்ட்ரூ பெக்காக நடித்துள்ள tom hanksன் நடிப்பு அபாரம்.மிகவும் சிக்கலான,controversy கருவை மிக அழகாக,அருவருப்பற்ற நிலையில் படமாக்கியிருப்பது பாராட்டுக்குறியது.நோயின் முதிர்ச்சியில் படிப்படியாக உடலியல் மாற்றங்களை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ள விதம் பாராட்டுக்குரியது.ஜோமில்லராக வரும் டென்சல் வாஷிங்க்டன் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்.
குறிப்பாக சில காட்சிகள் மனதைக் கீறி விடுகின்றன.ஆண்ட்ரூ கோர்ட்டில் சட்டையைக் கழட்டி தழும்பினைக் காண்பிக்கும் காட்சி....மிகை நடிப்பில்லாமல் சோகத்தை வரவழைத்துவிடும்.மரணப் படுக்கையில் இருக்கும் ஆண்ட்ரூவை ஒவ்வொருவராக நலம் விசாரிக்கும்போது நம் கண்கள் குளமாகிவிடுகின்றன.வழக்கு தொடர்பாக வீட்டில் ஜோவும், பெக்கும் விவாதிக்கும் தருனங்களில், opera பாடல் ஒன்றில் மனம் ஒன்றி அதன் அர்த்தத்தை கையில் மருந்து ஏறும் நிலையில் நடந்து கொண்டே பேசும் காட்சியில், நோயுடன் வாழ்வதை விட தான் இறப்பதையே அதிகம் விரும்புகிறார் என்பதை மறைமுகமாக வெளிப்படுதுகிற காட்சி சிறப்பானது.
எது சரி எது தவறு என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்கு நமக்கு உரிமையில்லை, ஆனால் மனிதாபிமானம் என்ற ஒன்றை மட்டும் மனதில் கொள்வதற்கு உரிமை உண்டு என்பதை அருமையாக உன்ணர வைக்கும் திரைப்படம்தான் ‘பிலடெல்பியா’(Philadelpia).
டிஸ்கி:
'The Silence Of The Lambs' என்ற அற்புதமான படத்தை இயக்கிய ’Jonathan Demme’ன்
மற்றுமொரு தரமான படைப்பே இந்தப் படம்.
மற்றுமொரு தரமான படைப்பே இந்தப் படம்.
Saturday, January 2, 2010
Black Hawk Down பிளாக் ஹாக் டவுன்
மயில்ராவணன்
"இறந்தவனுக்கு மட்டுமே போரின் விளைவு முழுதாய் தெரியும்"--பிளாட்டோ.
பசியை ஆயுதமாகப் பயன்படுத்த தெரிந்த பலரை இந்த வரலாறு பார்த்திருக்கிறது.
ஆனால் அடுத்தவன் பசியையே ஆயுதமாகவும், ஆயுதம் தாங்கிய போராளிகளின் கேடயமாகவும் பயன்படுத்தியவன் “முகமது ஃபராக் அமிட்”.
கிழக்கு ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த சோமாலியாவின் தலைநகரம், மகதீஷ்சு பகுதி. பசித்துயர் போக்க பணம் படைத்த நாடுகள் ஒன்று திரட்டி அனுப்பிய உணவுப்பொருட்கள், பொதுமக்களை சென்று சேரும் முன்னரே, இந்த முகமதுவின் ஆட்கள் அதனை கைப்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிலரை சுட்டுத்தள்ளி விடுகின்றனர். உணவுப்பொருள் வழங்கலைக் கண்கானித்து கொண்டிருந்த அமெரிக்க ஹெலிகாப்டரும் செய்வதறியாது திரும்பி விடுகின்றனர்.
அடுத்த கட்டமாக ’எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நின்றுவிடும்’ என்பதை போல, இவர்களின் ஆயுத விநியோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, ஆயுதக்கும்பலின் தலைவன் கைது செய்யப்படுகிறான். ரொம்ப அநாவசியமான,அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பான் வில்லர்களின் தலைவன். அவனுடைய கைதை தொடர்ந்து அமெரிக்காவின் அதிரடிப்படை, ஒரு திட்டத்தை வகுக்கிறது. ஆறு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த படைச்சேகரிப்பு அமெரிக்காவின் முக்கிய போர் பிரிவான டெல்டா ஃபோர்ஸின் தலைமையிலும், நேட்டோ படைகளின் கூட்டு முயற்சியிலும் நடந்தது.
டெல்டா ஃபோர்ஸ் என்பது, அதிநவீன ஹெலிகாப்டர், எடை குறைந்த ஆனால் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும், மிகச்சிறப்பான் போர் வீரர்களையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பான படைப்பிரிவாகும்.
மொகதீஷ்சுவின் மக்கள் நெருக்கடி நிறைந்த கடைத்தெருவின் மத்தியில் அமைந்துள்ள ’ஒலிம்பியா’ என்ற கட்டிடத்தை தாக்கி அதில் உள்ள போராளிகளை கைப்பற்றுவதே இந்த ஆப்ரேஷன் ஐரேன்4 -ன் நோக்கம். இதற்காக திட்டமிடப்பட்ட கால அவகாசம் 30 நிமிடங்கள் மட்டுமே. வான் வழியாக சூப்பர்6 என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டரில் சென்று நகரின் மத்தியில் உள்ள கட்டிடத்தை அனுகவதே இந்த திட்டம். முக்கியமாக, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இலக்கை சரியாக கைப்பற்றுவதே இதன் நோக்கம். டெல்டா ஃபோர்ஸின் வீரர்கள் இதற்கான சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். கால நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே என்பதால், இரவில் போர்புரியும் கருவிகள் மறுக்கப்படுகின்றன. மேலும், ஆப்ரேஷன் ஐரேன், மூன்று கட்டமான நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது. முதல் நிர்வாகி, இலகு ரக விமானம் ஒன்றில் அதிநவீன கேமராக்களால் போர்நடவடிக்கைகளை கண்காணிக்கிறது, இரண்டாவ்து நிர்வாகி, விமானத்திற்கும், Base Station- என்று அழைக்கப்படும் தரைக்கட்டுப்பாடு அலுவலகத்திற்கும் இணைப்பு பாலமாக செயல்படும்.
ஆண்டி என்ற முன்னாள் போராளி, உளவாளியாக பயன்படுத்தப்படுகிறான். இலக்கு தீர்மானிக்கப்பட்டதும், ஹெலிகாப்டரில் செல்லும், டெல்டா ஃபோர்ஸ் இலக்கை சுற்றி வளைக்கிறது.
அதிகபட்சம் 50 வீரர்கள் என்ற நிலையில் தீர்மானிக்கப்பட்ட படைப்பிரிவாக இலக்கு சுற்றி வளைக்கப்பட்டதும், தாக்குதல் துவங்கப்படுகிறது. பின்னர் தான், டெல்டா ஃபோர்ஸின் படை வீரர்களுக்கு, தங்களின் ஆபத்து விளங்குகிறது. டெல்டா தாக்குதலை துவங்கும் முன்பே, பொராளிகளின் தாக்குதலுக்கு தப்பிக்க முயற்சி செய்யும் ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழுந்த வீரர் படுகாயமடைகிறார். டெல்டா அனுமானித்ததை விட வலுவான ஆயுதங்கள் இவர்களிடம் இருப்பதும், பொதுமக்களே உளவாளிகளாக செயல்படுவதும் அப்போதுதான் தெரிய வருகிறது.
அடுத்தடுத்து நடக்கின்ற தாக்குதலில் , டெல்டா படைப்பிரிவின், முக்கிய ஹெலிகாப்டர்கள், சுட்டு வீழ்த்தப்படுகின்றன. இருப்பினும், திறம் வாய்ந்த டெல்டா ஃபோர்ஸ் கிழக்கு, வடக்கு பகுதிகளிலிருந்து முழுவேகத்துடன் சண்டையிட்டு சிலரை போர்கைதிகளாக பிடிக்கிறது. இதற்கிடையில், தரை வழிதாக்குதலில் சிலர் படுகாயமடைகின்றனர். மதியம் 2.30க்கு தொடங்கிய சண்டை எதிர்பார்த்த 30 நிமிடத்தில் முடியாமல், முற்றுகை போராக நீடிக்கின்ற நிலையில், டெல்டா ஃபோர்ஸின் தாக்குதலுக்கு மேலும் வலு சேர்க்க, தரைப்படையினர, அருகிலிருக்கும் Base Station-லிருந்து அனுப்பப்படுகின்றனர். ஆனாலும், போராளிகளின் கடுமையான தாக்குதலால், முக்கிய தளபதிகள் சிலர் கொல்லப்பட்டவுடன் பின்னடைவை சந்திக்கிறது. இந்நிலையில், மாலை மங்கிவிடவும், டெல்டா ஃபோர்ஸின் வேகம் குறைகிறது. தாக்குதலை விட உயிர்பிழைப்பது என்பதே முக்கியமாகி போய்விடுகிறது. ஆனால் இது எல்லையில் நடக்கும் சண்டை அல்ல செய் அல்லது செத்து மடி என்பதற்கு, தன்னையும் காத்து, buddy என்னும் தோழனையும் காப்பாற்றும், டிபன்ஸ் வகையைச் சார்ந்தது,
ஆதலால், விவேகமும், அளவுக்கதிகமான சகிப்புத்தன்மையும், தேவைப்படும் சண்டையாக இருக்கிறது. தாக்குதல் நடக்கும் இடத்திலிருந்து, காயம் பட்டவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவைக்கப்படுகின்றனர். அந்த வாகனமும், போராளிகளால், தாக்குதலுக்கு உள்ளாகும்போது, உயிர்ச்சேதம்,. 12 யை தாண்டுகிறது. போராளிகள் தரப்பிலும் ஏராளமான் இழப்பு.
சுடும் எல்லைக்கு வெளியே சுற்றும், ஹெலிகாப்டரின் வழிகாட்டுதலில், டெல்டா ஃபோர்ஸ் அங்கிருந்து வெளியேற முடிவு செய்கிறது. கச்ப்பான முடிவுதான், இருப்பினும், தளபதிகளின், உயிரின் முக்கியத்துவம் கருதி, வெளியேறும் முயற்சிக்கு உதவி வழங்கப்படுகிறது. குறுகிய பகுதிகளின் வழியாகவும், இடிபாடுகளின் வழியாகவும், தப்பிச்சென்ற படை Base Station-ஐ அடைகிறது. இருப்பினும், உயிர்சேதம் 19 ஐ தொடுகிறது. போராளிகள் தரப்பில் 1000.
இது ஒரு தோல்வி அடைந்த அமெரிக்க இரானுவ முயற்சி என்றே சொல்லலாம்.இதுவரை சொல்லப்பட்ட காட்சிகள் இடம்பெற்ற திரைப்படம், பிளாக் ஹாக் டவுன்(BLACK HAWK DOWN), என்ற அமெரிக்க திரைப்படமாகும். மிகச்சிறப்பான பிண்ணனி , மறு ஒலிப்பதிவு, அருமையான திரைக்கதை என்ற அளவில், கடந்த 10 ஆண்டுகளில் வெளியான மிகச்சிறந்த ஆக்ஷன் திரைப்படமாகக் கருதப்படுகிறது.
வசனங்கள் 90% போர் தொடர்பான வார்த்தைகளால் நிரப்ப பட்டிருந்தாலும், சில இடங்களில், ஆழமான கருத்தை சொல்லாமல் சொல்லிச்செல்கின்றன. குறிப்பாக ஆயுத வியாபாரி, தான் கைது செய்து அடைக்கப்பட்டிருக்கும்போது, அமெரிக்கத் தளபதியுடன் விவாதிக்கும் தருணங்கள்.அதேபோல், போரளிகளால் உயிருடன் சிறைபிடிக்கப்பட்ட தளபதி, தனக்கு அமெரிக்க அரசுடன் negotiate செய்வதற்கு அதிகாரம் இல்லை எனும்பொது, யுத்தகுழுவின் தலைவன், ”அப்படியானால், எங்களை கொலவதற்கு மட்டும் உரிமையும், உத்தரவும் வழங்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் இல்லையா?” என்று கேட்பது சற்று யோசிக்க வைக்கிறது.
படத்தின் இசை பெரும் பஙகளிப்பாகும். முக்கியமாக படத்தின் துவக்க நிமிடங்களில் வரும், பாடலும், அந்த இசையும் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.
அமெரிக்கா, அடுத்த நாட்டின் மீது படையெடுப்பு, போர் தந்திரங்கள், என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பார்த்தால், இது மிகச்சிறந்த திரைப்படமாகும். அரசியல் ரீதியான விவாதங்களுக்குள் செல்வதற்கு இன்னும் அதிக காலமாகும். மற்றபடி, போரும் அதன் விளைவும் இருமுனைக்கத்தி என்பதை மிக அழகாக காட்சிபடுத்தியுள்ள விதம் அருமை.
இந்த திரைப்படத்தைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள
http://en.wikipedia.org/wiki/Black_Hawk_Down_(film)
http://www.imdb.com/title/tt0265086/
http://www.youtube.com/watch?v=AUJ6cxWdZwA
இந்த திரைப்படத்தைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள
http://en.wikipedia.org/wiki/Black_Hawk_Down_(film)
http://www.imdb.com/title/tt0265086/
http://www.youtube.com/watch?v=AUJ6cxWdZwA
Subscribe to:
Posts (Atom)