Saturday, June 13, 2009

மோட்டார் சைக்கிள் டைரிஸ் Motorcycle Diaries


(Journey Makes the change on life) --கோகுல்--


மனிதனுக்கு தான் வாழும் இடத்தை விட பிறரின் கலாச்சாரத்தையும் , அவர்களின் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்வதற்கான முயற்சியின் விளைவாக பல நாடுகளை கண்டறிந்து, குடியேறி , குடிபெயர்ந்து, குடிபெயர்த்து….தன் சந்ததிகளை விட்டுச்செல்வதற்கான ஆசை ஆரம்ப காலம் முதலே இருந்து வந்துள்ளது. அதன் விளைவுதான் இன்றைய அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும்.


வரலாற்றின் கரையில் சிலர் மட்டும் சற்றே பிறழ்ந்து, வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களைப்பற்றிய நிகழ்வுகளையும் சரித்திரம் மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு வாழ்வின் பதிவுதான் “மோட்டார் சைக்கிள் டைரிஸ்”. இரு வேறு தளத்தில் வாழும் இரண்டு நன்பர்கள், ஒரு கருத்து மட்டும் இருவருக்கும் பொதுவாக இருக்கிறது, அதுதான் அர்ஜெண்டினாவில் இருந்து அமெரிக்காவிற்கு தரை வழி போக்குவரத்தை மேற்கொள்வது. ஆசை , கனவு , இலட்சியம் அனைத்தும் உண்டு ஆனால் இலக்கு மட்டும் தெளிவில்லாத பயனம். அது மிக மிக ஆபத்தான கருத்தே என்றாலும் அதனை ஆராய்ந்து பார்க்க தோன்றாத இள வயது. ஆசை மட்டும் அதிகம் , முதிர்வு குறைவு. குடும்பத்தின் ஆசியுடன் அந்த பயன நாளும் வந்து விட்டது. இருவர் மட்டுமே அமரக்கூடிய அந்த “லா பெடரோ” மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்க நாட்டின் மறுபகுதியில் வாழும் காதலிக்கு பரிசளிக்க ஒரு சிறிய நாயும் பயனிக்கிறது. கண்களின் வழியாக லத்தீன் அமெரிக்காவின் இயற்கை அழகை அள்ளிப்பருகிக் கொண்டு, அருமையான இசையுடன் நமது காதுகளும் பயணம் செய்கிறது.


எப்போதாவது கடந்து போகின்ற விவசாய டிராக்டர்களுக்காக போடப்பட்ட குண்டும் குழியுமான தார்சாலைகளில் தட தடத்து செல்கின்ற மோட்டார் சைக்கிள் உங்கள் நன்பரில் ஒருவனாக ஒட்டிக்கொள்கிறது .பயனம் சிறிது களைப்பைத்தர காதலியின் வீட்டில் ஓய்வு எடுக்கிறது.


ஒரு மனம் பரந்து விரிந்த இந்த உலகைக் காண பறக்கிறது. மற்றொரு மனம் காதலியோடு காதலோடு தங்கி விட சொல்லி புலம்புகிறது. இறுதியில் வென்றது உலகைக் காதலிக்கும் மனம்தான். காதலிக்கு நீச்சல் உடை வாங்க சேகரித்த சில அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையில். சம்பாதிப்பதற்கோ முழு பயிற்சியையும் முடிக்காத மருத்துவ படிப்பு கை கொடுக்காது. வாழ்க்கையை எதிர்கொள்ளும் வலிமையான மனது மட்டுமே துனைக்கு வர மீண்டும் வண்டி ஓடத்தொடங்குகிறது.


முழு வீச்சில் செல்லும்போது தோன்றும் முட்டுக்கட்டை போல் வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து ஏற்கனவே பழுதடைந்திருந்த வண்டி மேலும் மோசமாகிறது. ஆற்றங்கரையில் அமைக்கும் கூடாரமும் காற்றில் அடித்துச் செல்ல “ஆஸ்துமாவால்” சீரழிக்கப்பட்ட உடல்நிலை இரவு முழுவதும் சிக்கலாகின்றது. குளிர் அதிகரிக்க அதிகரிக்க குரல் வளையை உடையச் செய்யும் மோசமான் இருமல் பாடாய் படுத்துகிறது. வாழ்வின் இறுதியை பார்த்துவிட்ட மனிதனைபோல் காலையில் மீண்டும் இலட்சியம் துரத்த ஒரு விடுதியில் மது அருந்தும் சகோதரிகளை சரி செய்து, அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஒரு பகலை கழிக்கிறார்கள். இரவு அந்த சகோதரிகளின் வீட்டில் உறங்கி விட்டு, காலையில் கண் விழித்தவர்களின் கண்களில் இனி எப்போதும் பயன்படாத நிலையில் அவர்களின் மோட்டார் சைக்கிள் தெரிய, வேறு வழியில்லாமல் அதனை அங்கேயே விட்டு விட்டு, ஒரு நன்பனை இழந்த வலியோடு, இரு நன்பர்களின் பயனம் தொடர்கிறது………


கரடு முரடான காட்டு வழியில் நடந்து வந்தவர்களுக்கு, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொனமையான நாகரிகத்தின் சுவடுகள் நம்பிக்கையூட்டுவதாகவும் , வரலாறு நம்பிக்கை அளிப்பதாகவும் தோன்ற பயனம் தொடர்கிறது. முதலாளிகளிடம் நிலத்தை இழந்த பலர், சுரங்கங்களில் தொழிலாளிகளாக வேலை செய்யும் அவல நிலை கண்டு முதல் முறையாக வாழ்வின் துயரத்தை உணர்ந்து, உண்ண மறந்து உணர்வின்றி பயனம் செய்கிறார்கள். வழியில் கண்ட ஒரு ஏழைத் தம்பதிகளின் குளிரைப்போக்க தனது கம்பளி ஆடையை தானம் செய்து விட்டு, ”ஆஸ்துமா” குளிரில் வருத்த உலகில் வாழ்க்கையை எதிர்கொள்ள மக்கள் படும் அவலத்தின் ஆபத்தை நன்பனை தவிர்த்து தனியே யோசிக்கிறான்.




தட்டுத்தடுமாறி தான் படித்த கல்விக்கேற்ப ஒரு தொழுநோய் மருத்துவமனையின் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் இருவரும். அந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டை மீறி, நோயாளிகளுடன் கை குலுக்கி பேசியதற்காக , உணவு மறுக்கப்பட்டு பசியால் வாடும் நிலையில் தொழுநோயாளிகளின் கைகளாலேயே உணவு பரிமாறப்பட்டு இது ஒரு தொற்று நோயல்ல, என்று மனம் வருந்தி பார்க்கும்போது, ஒரு பயணியின் நிழல் மறைந்து ஒரு உண்மையான மனிதாபிமானம் மிக்க டாக்டராக தெரிகிறான். அங்கும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்க முடியாது, நன்பனோ பயனத்தை தொடர விரும்பாமல், நோயாளிகளுக்கான சேவைப்பிரிவில் பணிபுரிய விரும்பி அந்த சிறிய மருத்துவமனையிலேயே தங்கி விட முடிவு செய்கிறான். . தன் லட்சிய பயணத்தை விட்டு விட முடியாமல் முதல் முறையாக நன்பனை பிரிந்து தனியே பயனம் செய்ய முடிவு செய்கிறான்.


இந்நிலையில், பிரிவுபச்சாரமும், பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரே நாளில் நடக்கிறது. தொழுநோயாளிகள் ஆற்றின் ஒரு புரமும், மருத்துவ பணி விடுதி மறுபுரமும் அமைந்திருக்க, மிக சிறப்பான அவனது சேவையை அனைவரும் புகழ்ந்து பாராட்ட விருந்து நடைபெறுகிறது,


ஆனால் மனம் ஆற்றின் மறுகரையில் ஆடிக்கொண்டிருக்கிறது, அங்கு இவன் மேல் உண்மையான அன்பு கொண்டு, ஆனால் உடனடியாக அதை கொண்டாட முடியாத நோயாளிக்கூட்டம் இரவிலும் உறங்காமல் இவனுக்காக காத்திருக்கிறது. காற்றாட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறது. காசநோய் வேறு பாடாய் படுத்துகிறது. ஆற்றில் இறங்கினால் ஒன்று காற்றாறு வெள்ளத்தில் சாக வேண்டும், இல்லையேல் நீரின் குளிர்ச்சியால், இருமல் அதிகரித்து, இறக்க வேண்டியதுதான். கடப்பதற்கு படகு காலையில்தான் வரும், அது வரையில் அன்பர்களை காணாமல் இருக்க முடியாது. நன்பனின் எச்சரிக்கையையும் மீறி ஆற்றில் இறங்கி நீந்த தொடங்கிவிட்டான். அமேசான் ஆற்றை அவ்வளவு எளிதாக இரவில் யாரும் நீந்திக்கடந்து விட முடியாது. இருப்பினும், எளிமையானவர்களின் அன்பிற்கு முன்னால் அமேசான் நதியென்ன செய்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் நீந்த தொடங்கியவனின் கை கால்கள் ஒத்துழைக்க மறுக்கிறது, கடப்பவனின் இருமல் அதிகரிக்கிறது, இருமலின் ஓசை அலை ஓசையை மீறி கேட்கிறது. அதைவிட இவனைக் கண்டு கொண்ட நோயாளிகளின் பேரொளி காட்டின் நிசப்தத்தை கிழிக்க, ஆம்…அவன் நீந்திக்கடந்தே விட்டான்.


தனது பிறந்த நாளை அவர்களோடு கொண்டாடிவிட்டு, மறுநாள் காலையில் வந்து சேர்ந்த தோணியில் ஏறி பயனம் செய்து, மறுகரை வந்து விட்டவனுக்கு, மனதில் தோன்றியது, ”என் ஒரு மனிதனின் இலட்சிய பயனத்தை விட இந்த மண்ணில் வாழும் மனிதர்களின் இலட்சியத்திற்காக இறப்பதே மேல்” என்ற கருத்தோடு, தனது வாழ்வின் இரண்டாம் பாகத்தின் அத்தியாயத்தில் முதல் பக்கத்தை எழுத தொடங்கிவிட்டான்…..


இம்மனிதனின் வரலாறு சில நேரம் கொச்சைப்படுத்தப்படலாம், ஆனாலும் இலட்சியவாதிகளின் வாழ்க்கை மறுக்கமுடியாத பல வரலாற்று நிகழ்வுகளை தினசரி தனது டைரியில் எழுதி வைத்திருக்கிறது என்பதே மறக்க முடியாத உண்மை.

Tuesday, May 26, 2009

தி டெர்மினல் The Terminal

--கோகுல்--

படித்த புத்தங்களையும், பார்த்த திரைப்படங்களையும், மீண்டும் பார்ப்பதென்பதென்பதும் அவற்றைப் பற்றி நண்பர்களுடன், விவாதிப்பது என்பதும் எனக்கும் மிகவும் பிரியமான ஒன்றாகும். அவ்வாறு சமீபத்தில் மீண்டும் பார்த்து ரசித்த திரைப்படம்- The Terminal.


க்ரோக்கோச்லேவியா என்ற நாட்டிலிருந்து, நியூ யார்க்கின் JF Kennedy விமான நிலையத்திற்கு வந்திறங்கும் , நவோஸ்கி என்ற மனிதனின் வாழ்க்கை இப்படத்தில் சொல்லப்படுகிறது. நாட்டிலிருந்து புறப்பட்ட பிறகு உள்நாட்டு கலவரம் வெடித்து, நாடு தனிமைப்படுத்தப்படுகிறது. இதன் காரனமாக அமெர்க்கா தன் நாட்டினுள், இதுபோன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் எவரையும் அனுமதிக்கத் தடை விதிக்கிறது.


இதை அறியாத நிலையில் தன்னுடைய மொழிப்பிரச்சனையின் ஊடாக அந்த விமான நிலைய கண்காளிப்பாளரைச் சந்தித்தும் நிலைமையை சரிவர உணராத சூழ்நிலைக் கைதியாக தனித்து விடப்படுகிறார். நிலைமை சரியாகும் வரை அவரை வெளியில் விட முடியாத சூழ்நிலையிலும் , ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலும், கண்காளிப்பார் உத்தரவின் பேரில் 64ம் நம்பர் கேட்டில் தங்கிக் கொள்ள அனுமதி பெறுகிறார்.


ஆங்கிலம் தெரியாத நாட்டில் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் உதவியுடன் அவர் எபேசும் ஆங்கிலத்தின் மூலமாக அவர் ஒரு காமெடியனாக அங்கு உணரப்படுகிறார்.


அதிகாரியின் கள்ளத்தனமான் உத்தரவால் விமான நிலையத்திலிருந்து வெளியேற வழிகிடைத்தாலும் அதனை நேர்மையான வழெயில் மட்டுமே அடைய வேண்டும் என்ற மனநிலையில் வாய்ப்பை வேண்டுமென்றே மறுத்து விடுகிறார்.


கையிலிருந்த பொருளாதாரம் செலவழிந்துவிட்ட நிலையில் உண்பதற்கும் உறங்குவதற்கும் அவர் செய்கின்ற கோமாளித்தனமான் செய்கைகளை மீறி ஒரு சோகம் வெளிப்படுவதை நம்மால் உணர முடிகிறது.


பிஸ்கட் தின்று பசியாற முயற்சி செய்யும்பொது விமான பயனிகளின் ‘டிராலி’ களை வரிசைப்படுத்தி அடுக்குவதால் கிடைக்கும் சில சில்லறை காசுகள், சில ‘Burger’ கள் வாங்க கிடைப்பதை உணர்ந்து மகிழ்ச்சியால் கத்தும்போது மணம் கலங்குகிறது. தற்காலிக உணவும் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு வேலைக்காரனால் பறி போகும்போது நிலைமை மேலும் சிக்கலாகின்றது.


தனது நாடு பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதை டிவியில், செய்தியில், பார்க்கும்ப்போது , அவரது பரிதவிப்பையும், மொழி புரியாமல் அல்லாடுவதையும், மேலும் விபரம் அறிந்து கொள்ள எஸ்கலேட்டர்களில் தாவித் தாவிச் செல்வதையும் காணும்போது மென்சோகம் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.


இவரை உளவாளி என்று சந்தேகிக்கும். துப்புரவுத்த் தொழிலாளியையும் , டிராலி ஆப்ரேட்டரையும் காதலுக்காகத்திருட்டுத் தனமாக உணவு வழங்கும், உதவியாளரையும், தன்னுடைய நட்பு வட்டரத்தில் , மனிதபாமிமானத்துடனான செய்கைகளின் மூலமாக கொண்டுவந்து விடுகிறார்.


தன்னுடைய பாஸ்போர்ட், விசா மறுக்கப்பட்ட நிலையிலும், தினமும், “இளம்-பச்சை” நிறப்படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு மணிநேரம், வரிசையில் நிற்கும் இவரை, கவுண்டரில் உள்ள பெண் “Denied” சீலுடன் கேளி செய்யும்போது, எப்படியும் உனது மற்றொரு கையில் Approved” சீல் இருக்கிறதே என்ற தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளோடு சமாளிக்கும்போது இவரது ஆளுமையை முழுதாக உணர முடிகிறது.


அடுத்தவர் துன்பத்தை தன் துன்பமாக நினைத்து விமானப் பணிப்பெண்ணின் சோகக் கதையைக்கேட்டு அவள் மீது காதல் கொள்ளும்பொது, மனதிற்கு மொழியை விட வேகம் அதிகம் என்பதை உணர வைக்கிறார்.


தன் தந்தைக்காக கனடாவில் இருந்து கொண்டு வந்த ஒரு மருந்து பாட்டிலுடன் தன் நாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபன் அமெரிக்க விமான நிலையத்தில் பிடி படுகிறான். அவனுடைய மொழி புரியாத காரனத்தால் மொழிபெயர்ப்பாளராக நவோஸ்கி நியமிக்கப்படுகிறார். விசாரனையின் போது அவன் தடை செய்யப்பட்ட மருந்தை கடத்த முயன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப் படுகிறான்.


அவன் மீதும் அவனது தந்தையின் மீதும் இரக்கப்பட்டு நவோஸ்கி மருந்து பாட்டிலில் இருப்பவை கால்நடைகளுக்கான் மருந்துகள் என்று அந்த இளைஞனை ஆங்கிலத்தில் சொல்ல வைக்கிறார். இதனால் இளைஞன் விடுதலை செய்யப்படுவதுடன் காவல்துறை அதிகாடியின் , வெறுப்பால், நியூ யார்க் விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறுவதற்கான உத்தரவு மறுக்கப்பட்டு மேலும் பல நாட்கள் விமான நிலையத்திலேயே அடைபட்டுக்கிடக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறார்.


விமானப்பணிப்பெண்ணைக் காதலிக்கும் அவர், அவளுக்கு டின்னர் கொடுக்க உறுதி அளித்து விட்ட காரனத்திற்காக, தன்னுடைய கடினமான முயற்சியால் விமான நிலைய “ கார்பெண்டர்” குழுவில் இணைந்து பணிபுரிந்து பணம் சேர்த்து, “ டின்னர்” வைக்கிறார்.


கடைசியில் தடை நீங்கி, வெளியேறினாரா, தனது காதலில் வெற்றி பெற்றாரா என்பது சஸ்பென்ஸ். பிரமாண்ட இயக்குநரான ஸ்பீல் பெர்க்கின் இயக்கம் இது என்பதை நம்பமுடியாத அளவிற்கு அற்புதமானத் திரைப்படம். மிக அருமையான் இசை. “The Queen” திரைப்படத்தின் இசையினை நமக்கு நினைவூட்டுகிறது.


விடாமுயற்சியும், சூழ்நிலையை தமக்குச் சாதகமான பயன்படுதும் திறனு, நேர்மையும். மனிதாபிமானமும் எந்த நாட்டிலும். என்றைக்கும், சரியான விகிதத்தில் பயன்படுத்தப்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை ஒற்றை வரியாகக்கொண்டு எடுக்கப்பட்ட, அகதியாக வாழ்வது என்பது பெயரில்லாதவனாக வாழ்வதை விட கொடுமையானது என்பதை உணர்த்திய அருமையான திரைப்படம். “தி டெர்மினல்”.

Saturday, April 18, 2009

சிக்ஸ் சிக்மாவும் ரயில் பிச்சையும்

--கோகுல்--

ரொம்ப நாளைக்கு அப்புறம் சிஸ்டம் ஒரு வழியா கையில கிடைச்சிடுச்சி. இத கையில வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. ரிப்பேர்க்கு கொடுத்த இடத்தில அவங்க ஏகப்பட்ட procedures வச்சிருக்காங்க. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏகப்பட்ட formalities. அதுவே டெலிவரியை delay பண்ணுது. உம்...என்ன பன்றது மல்டி நேஷனல் கம்பெனியில்ல!..அப்படித்தான் இருப்பாங்க.. ஆமாங்க சொல்ல மறந்துட்டேன்...இந்த மல்டி நேஷனல் கம்பெனிகள் குவாலிட்டி கண்ட்ரோல்னு ஒரு மேட்டர் வச்சிருக்காங்க. இதுல பலவகை உண்டு. அதுல ஒருவகைதான் இந்த “சிக்ஸ் சிக்மா”. இத புரிஞ்சிக்கிறதுக்கு பல பெல்ட் வாங்கனும். சிம்பிளா சொல்லனும்னா, பல படிகள்ல நடக்குற வேலைய சிக்கல் இல்லாம, error இல்லாம செய்யறதுக்கு ஃபாலோ பன்ற மெத்தட்ஸ்னு சொல்லலாம். இதுல நிறைய mathematical calculation, Derivations எல்லாம் இருக்கு. நமக்கு கணக்கு வராதுங்கறாதால அதப்பத்தி கவலைப்பட வேண்டாம்.


இந்த சிக்ஸ் சிக்மாவுக்கு ஃபேமஸ் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ், மோட்டரோலா, . இவங்களே பாத்து அதிசயிக்கற மாதிரி ஒரு விஷயம் இந்தியாவில அதுவும் நம்ம கூட்ட நெருக்கடி அதிகமா இருக்குற மும்பையில நடக்குதுனு , நேஷனல் ஜியாகரபி சேனல்ல ஒருதடவை சொன்னப்ப ரொம்ப பெருமையா இருந்தது. அது என்னனா, “டப்பா வாலா” அப்படினு ஒரு கோஷ்டி இருக்காங்க. அவங்க மும்பையின் ஒரு பகுதியில இருந்து இன்னொரு பகுதியில இருக்குற கம்பெனியில வேலையில இருக்குறவங்களுக்கு மதிய உணவு கொண்டு போகிறவர்கள். இவர்கள் பல வருஷங்களா இதை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. புறா கூடு மாதிரி இருக்கிற ஃபிளாட்டுகளில் இடத்தை கண்டுபிடிக்கிறதே கஷ்டம். இதை விட உணவை சரியான நேரத்தில சரியான இடத்தில இருக்கிற சரியான ஆளுக்கு கொண்டு போய் சேக்கிறதுக்கு இன்னமும் கஷ்டம். ஆனா இவங்க error ration பத்து இலட்சம் டிபன் கேரியர்ல ஒரு கேரியர் மிஸ் ஆகிறது பெரிய error. அந்த அளவுக்கு குவாலிட்டி ஃபாலோ பன்றாங்க.(ஆனா வடை வாங்கிட்டு வர சொல்லிட்டு ஆசையோட வெயிட் பன்னா, சட்னி சாம்பார் மிஸ் ஆனா கூட பொருத்துக்கலாம், வடையே வராம இருக்குறது தனி கொடுமை. அத வேற கட்டுரையில புலம்புறேன்...என்ன பன்றது..)


மும்பையில இந்த மாதிரி கேரியர் மிஸ் ஆகாம, கொண்டு போறதுக்கு சில அதீத கட்டுப்பாடுகளை இந்த நிறுவனம் ஃபாலோ பன்னுது. இந்த கட்டுப்பாடுகளும் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் சில குறியீடுகளும் சிக்ஸ் சிக்மாவின் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்கிறது என்பது பெரிய விஷயம். இவ்வளவையும் திறமையாக கையாள்பவர்கள் , நிர்வாகவியல் படித்தவர்களோ, கணிப்பொறியோ அல்ல என்பதே சிறப்பு. இதைச்செய்பவர்கள் மிகச்சாதாரானக் கூலித் தொழிலாளிக ஒரு நாளுக்கு இவங்க தோராயமா 1,75,000 சாப்பாடு டப்பாவை ஹேண்டில் பன்றாங்க.


நான் மும்பைக்கு சென்றதில்லை. இந்த டப்பா வாலா- மனிதர்களை பார்த்ததில்லை. அடிப்படையில் இவர்களின் வெற்றிக்கு காரனமாக நான் நினைப்பது, நேரத்தை கண்க்கிட்டு பயன்படுத்துவதும், விநாடியையும் விரயம் செய்யாமல் செயல்படுவதுமே காரணமாகும்.


இதே போன்ற ஒரு செயல் திறனை நான் எலக்ட்ரிக் ரெயிலில் பிச்சை எடுக்கும் கும்பல்களிடம் கண்டிருக்கிறேன். பெரும்பாலானவர்கள் கண் தெரியாத பிச்சைக்காரர்கள். இருந்தாலும் இவர்களின் சிறப்பான தொழில்நுட்பம் என்னை பல முறை யோசிக்க வைத்திருக்கிறது. தினந்தோறும் ரயிலில் வந்தாலும் இன்றும் பலரால் இரயிலின் நுழைவு வாயில்(entry) அருகில் சரியாக கணித்து நிற்க இயலாது. ஆனால் இந்த கண் தெரியாத பிச்சைக்காரர்கள் ஒருநாளும் மிஸ் செய்வதில்லை. ஏறும் இருவரில் ஒருவர் பாட மற்றவர் யாசிக்க , கலெகஷன் முடிச்சி சரியான நேரத்தில அடுத்த ஸ்டேஷன் வர்றதுக்கு முன்னால இறங்க வேண்டிய இடத்துல சரியான நேரத்துல இறங்கி, அடுத்த பெட்டியில ஏறி தொழில continue பன்றத பாக்கும்போது, இந்த சிக்ஸ் சிக்மா, குவாலிட்டி மேனெஜ்மெண்ட், இதெல்லாம் ரொம்ப சின்னதாதான் தெரியுது. இதுல முக்கியமான் விஷயம் , பரிட்சை எழுதும்போது, கடைசி நேரத்தில 15 மார்க் ஆன்சர இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தா எழுதி இருக்கலாமுனு நமக்கு தோனும். அதுக்கு காரனம் நாம ஆரம்பத்திலேயே அந்த நேரத்த சரியா திட்டமிடாதுதானு நினைக்கத்தோனும். ஆனா இவங்க இதுவரைக்கும் டார்கெட் அச்சீவ் பண்ண நேரம் இல்லையேனு வருத்தப்பட்டதா ஒரு நாளும் தெரியல.


இவ்வளவும் சொல்றானே இவன் டைம் மேனேஜ்மெண்ட்ல எப்படினு நீங்க நினைச்சிங்கன்னா, இதுக்கப்புறம் படிக்காதீங்க. ஏன்னா, 5.25 ட்ரெயின பிடிக்கறதுக்கு, 5 மணிக்கு எழுந்து, எழுந்து காலையிலே டென்ஷனா 5.26க்கு ஸ்டேஷன் வந்து, 12B “ரன் லோலா ரன்”( 12B கதையின் மூலம்) கதைய ஞாபப்படுத்தறமாதிரி ட்ரெயின புடிச்சிருந்தா இப்படி, புடிக்கலனா இப்படினு, டயலாக் பேசிட்டு late message அனுப்புற கோஷ்டி நாம. இன்னும் சில பேர் இருக்காங்க..போதும்பா இதோட நிறுத்திக்கிறேன்...


குறிப்பு: ரன் லோலா ரன் (Run Lola Run). ஒரு நல்ல படம். முடிஞ்சா பாருங்க. எடிட்டிங்னா எப்படி இருக்குனும்னு இலக்கனம் வகுத்த தரமான படம். விநாடிகளின் முக்கியத்தை இதைவிட அருமையாக யாராலும் விவரித்து எடுக்க முடியாது.

Thursday, April 2, 2009

எம்பட ப்ரெண்டு ஹரிகிருஷ்ணன்

ஹரிகிருஷ்ணன் சேலம் மாவட்டம், ஏர்வாடியைச்சேர்ந்தவர். மயில்ராவணன் சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர்.அந்தத் தொகுப்பைப் படிச்சிட்டுதான் நண்பர் தஞ்சை சுகன்கிட்ட போன்நெம்பர் வாங்கிப் பேசினேன்.பழகுவதற்கு அருமையான மனிதர்.வெளிப்படையானப் வட்டாரப் பேச்சு,மனசுலப் படுறத மறைக்காம பேசக்கூடியவர்.சிறந்த சிறுகதையாளர், மணல் வீடு சிற்றிதழின் ஆசிரியர்,கூத்துக்கலைக்காக,கூத்துக்கலைஞர்களுக்கான உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வருபவர்.30 நிமிடம் பேசுனா 20 நிமிடம் கூத்துக்கலைஞர்கள் பற்றியும் 10 நிமிடம் மட்டுமே இதழ்,இலக்கியம் ...மற்ற விசயங்கள் பேசும் வழக்கம் உடையவர்.'ப்ளாக்' ஆரம்பிச்சிருக்கேன்..கத ஒண்ணு எழுதிக்குடுங்கன்னு கேட்டேன்.ஒரு வாரத்தில அனுப்பிட்டாப்ள..நான்தான் குழம்பிக்கிட்டிருந்தேன்..ஆராச்சிம் புலவ,வித்வ,சிரோண்மனிகள் கவிச்சியா இருக்கு 'Raw'a இருக்குனு சொல்வாங்கலோனு....!சரி..போட்றலாமுனு போட்டுட்டேன்..அவரக் கான்டாக்ட் பண்ணனும்னா இந்தாங்க
email_id: manalveedu@gmail.com

குண்டாம்புலக்காயனின் இங்கிலீஷ் பைட்


மு.ஹரிகிருஷ்ணன்


                          நானு, குண்டாம்புலக்காயன், ராக்கியூட்டு தம்பிராசு மூணுபேருந்தான் கூட்டாளிங்க. மாரியாநோம்பிக்கி பஞ்சாயத்துப்போர்டு ரேடியோச்செட்ல அம்மணப்படமோட்டி ஊருக்கவுண்டங்கிட்ட மாட்னதுக்கப்புறம் பெருஞ்செட்லயிருந்து நாங்க பிரிஞ்சிகிட்டம். எங்களுது சிறுஞ்செட்டு. தங்கறது,உங்கறது,படுக்கறது ஏம் பேழ்றதுக்கூட ஒரெ எடம். மூணுப்பேரும் ஒருத்தரவுட்டு ஒருத்தருப் பிரிஞ்சி இருக்கமாண்டம். எனக்கு கம்பிக்கட்ற சென்ரிங் வேல,தம்பிராசு போலிசிக்கு செலக்சனு ஆவியிருந்தான். குண்டாம்புலக்காயங் கட்டட மேஸ்திரி. 
ஆளுதாங் கட்டையே ஒழிய மன்னந் தடிதாண்டவராயன். ஆளயே உருக்கி அவனோட ஆயுதத்துல கொண்டி வெச்சிருந்தான் ஆண்டவன். ஒரேவொரு சித்தாள வுடமாட்டான். அவனுக்கு வயசு-கியசு வித்தியாசங்கெடயாது. வத்தலு தொத்தலுன்னுகூட பாக்கமாட்டான்.ஆராயிருந்தாயென்ன? எவராயிருந்தாயென்ன? அவ பச்ச வாழமட்டையில அடுப்புப் பத்தவைக்கிற பத்தினித் தங்கமாயிருந்தாலுஞ்சேரிச் சிரிச்சிச் சிரிச்சிப் பேசியே சீலய அவுத்துப்புடுவான்.
சிறுவயசிலிருந்தே பையஞ் செரியான துண்ட்ரிகம். 
                         எங்கூர்ல அன்னிக்கியிருந்தது ஒரேவொரு பஞ்சாயத்து பள்ளியோடம். ஒண்ணாவதுக்கு பாவாய டீசரு. ரெண்டாவதுக்கும், நாலாவதுக்கும் நாமசாமி வாத்தியாரு. மூணுக்கும் அஞ்சிக்கும் பெரிய வாத்தியாரு. நாமசாமிக்கி ஆரியங், கம்புச், சோளம்னு பலப்பட்ற வேவாரம். ஏழுச்சாமத்துல எந்திரிச்சிப் போனாருன்னா மனுசன், எல்லகுட்டையூரு, கணக்குப்பட்டி, ஒருக்கோடியா வனவாசி முட்டும் சீமயச் சுத்தி தவிசி அளந்துவுட்டுட்டு அப்பிடியே கந்து வசூலும் பாத்துக்கிட்டு புதூரு நாலுரோட்டுக்கு வாரத்துக்குள்ள ஒம்போது மணி பெல்லு அடிச்சிப்புடும்.

ஓட்டமா, ஒடியாந்த வெசயில வாயிலிருக்கற பல்லுக்குச்சிய எடுத்தெறிஙஞ்சிப்புட்டு நேராப்போயி சேருமேல குக்க வெச்சிக் குந்திக்கிவான். வாயுங் கழுவமாண்டான், பொச்ச்ங் கழுவமாண்டான் சூர. அழிஞ்சிக்கண்ணன் ஆலிவாயன், மூணுத்தலயன், குண்டாம்புலக்காயங், கூலுச்சட்டி, பீச்சுத்தி, மொட்டப்பெருக்கான், கீரிப்பிள்ள, கிழிஞ்சஒதடி, வவுறின்னு புள்ளைங்க பேரக்கூப்புட்டானோ இல்லியோ பொய்தவம் தன்னப்பாலபோயி ஒருக்கடயில கெடப்புல வுழுந்துரும். அப்புறம் பாத்துக்க சண்டாளன் வுடுற கொறட்ட மொகுட்டோட பிரிச்சிக்கிட்டு மானத்துல காத்தா பறக்கும்.
                         பெரிய்ய வாத்தியா எட்டிப்பார்த்துட்டு கண்றோவி, கண்றோவி ன்னு தலத்தலயா அடிச்சிக்குவாரு. பாக்கற வரைக்கும் பார்த்துட்டு பசங்க அதுங்க பாட்டுக்கு,
“எம்பேத்தி ஒண்ண, எம்பேத்தி ரெண்டே’’ன்னு ஒண்ணு ரெண்டு எழுதிக்கிட்டு குந்தியிருக்கணும். ஏதாவொரு நாளைக்கி தப்படியா முழிச்சிருந்தா புள்ளைங்களுக்கு ஒரெழுத்து, ரெண்டெழுத்து படுப்புச்சொல்லிக்குடுப்பானா மவராசன் ஊ-கூம்.. பனங்காட்டு காமாண்டாருக்கு கும்மியடிக்கிறாப்ல பசங்கள கூப்ட்டு சுத்தியும் நிக்கவெச்சுருவான். சோத்தாங்கைவசம் ஆம்பள பசங்க, ஒரட்டாங் கைவசம் பொட்டப்புள்ளைங்க. மொள்ள ஒவ்வொருப்புள்ளயா கிட்டக்க கூப்புட்டு நிறுத்தி பாவாட நாடாவ அவுத்து கைப்பிடிச்சட்டத்துல அந்தண்ட இந்தண்ட நவரவொட்டாம வரிஞ்சிக்கட்டி மூங்கப்பெரம்ப தலவமாத்தி முத்துன அடிய புள்ளைங்க தொப்புள்ளுக்குள்ள வுட்டு ‘தொளுக்கு, தொளுக்கு’ன்னு இடிக்கிறது.
                            ங்சேரி அந்த வெளயாட்டு சலிச்சிப்போச்சா பசங்க டவுசருப்பொத்தான அவுத்துவுட்டுட்டு தலவுச்சுன்னியப் புடிச்சி பால் பீச்சறாப்ல இழுத்து இழுத்து நிமுட்டறது. வலசுப்பசங்களாயிந்தாலுந் தேவல வாட்டமாயிருக்கும். ஊமக்கருக்குஞ்சப்பிடிச்சி நசுக்கறதுல அந்தாளுக்கென்ன ருசனயோ! நொட்டுக்கைய வெச்சிருக்கமாண்டாம ஒருநாளு குண்டாம்புலக்காயங்குஞ்சயும் புடிச்சி கசக்க, பொறுக்கறமுட்டும் பொறுத்திருந்துட்டு வாத்தியாரு கையோட பையஞ் சிர்ர்ருனு ஒருப்பிடி முத்ரத்த வுட்டாட்டிப்புட்டான். இந்தாளு கோவந் தாங்காம அவன ரெண்டு குப்பாலு வெக்க அவம்போயி அவிங்க அப்பாயிக்கிட்ட நாயஞ்சொல்ல கெழவி பள்ளியோடத்து வாசல்ல வந்து நின்னுக்கிட்டு பேசுன பேச்சு காது குடுத்துக் கேட்க முடியல, ஒரே அமர்க்களம்.
                           இந்த வெவகாரம் நடந்தப்பொறவு வாத்தியாரு ஒரு கொஞ்ச நாளு கொலாய மூடிக்கிட்டிருந்தாங் கப்புனு. அதும்பொறவு மூணு நாலு மாசத்துக்கெல்லாம் மறுக்க பழய குருடி கதவ தொறடின்னு இன்னொரு புதுநாயம் போட ஆரம்பிச்சுட்டான். ஒவ்வொருத்தனயா பக்கம் கூப்புட்டு நிறுத்தி வெச்சுக்கிட்டு “ டேய் டேய் பையா பையா நேத்து நாத்திரி ங்கொப்பனும் ங்கோயாளும் எவுத்திக்காலிடா படுத்திருந்தங்க? என்னென்றா பண்டிக்கிட்டிருந்தாங்க’ன்னு கேட்கறது. இந்த அலப்பநாயி பொந்தியில கவடு வெச்சிருக்கிறத அதுங்க பாவம் என்னத்த கண்டுச்சிங்க சூது தெரியாயதுதுங்க. நோனி வாய கம்முனு வெச்சிருக்க மாண்டாம இந்த நாயத்த நாமசாமி குண்டாம்புலக்காயங்கிட்டயுங் கேட்க, அந்தக் கொலவாரி ஓடி அவங்காயாக்காரிக்கிட்ட கேட்க அவ, “கண்ணு கண்ணு நாளைக்கி மறுக்க உங்க வாத்தியாரு அந்த மாதர கேட்டா , நீ சாரு, சாரு உங்க மவளும், நொனயமூட்டு போடுவாசியும் எங்க படுத்திருந்தாங்களோ அங்க படுத்திருந்தாங்க, அவிங்க என்ன பண்டுனாங்களோ அதத்தாம் பண்டுனாங்கன்னு சொல்றா கண்ணு"ன்னு மவங்காரனுக்குச் சொல்லிக்குடுத்திட்டா.
                              சொன்னதத்தானச் சொல்லும் கிளிப்புள்ள. மக்யாநாளு நாமசாமி மானங் கப்பலேறிப்போச்சி. அதுப்பொறவு குண்டாம்புலக்காயன் பெரிய்ய வாத்தியாரிண்ட படிக்ககுள்ள ஒருத்தக்கம், மேலுத்தெரு இச்சி மரத்தடிய ரட்சிமியூட்டு வேணம்பையன், கமலாயாவூட்டு சீனிப்பையன், பாக்கியமூட்டு சுந்தரம்பையன், பஞ்சவருணத்தூட்டு சூராம்பையன் இன்னும் ரெண்டு பசங்களோட ‘தண்ணிப்பட்ட’ வெளயாடிக்கிட்டிருந்தாம்பா.
                      அந்நேரம் அவுத்த இவங்கூட படிக்கிற கலாப்பிள்ளயும் அவிங்கச் சொந்தமோ, எரவலோ தெரியல ரெண்டு பொம்பளைங்க அண்டாவ எடுத்துக்கிட்டு தண்ணி மோக்க நல்லதண்னி கெணத்துக்கு போயிக்கிட்டிருந்தாங்க. அன்னிக்கிங்கிறப்பெட்டுக்கு இந்த கலாப்பிள்ள பள்ளியோடத்துக்கு வரல. குண்டாம்புலக்காயனிருந்துக்கிட்டு “ஏப்பிள்ள கலா! ஏப்பிள்ள இன்னிக்கி பள்ளியோடம் வரலைன்னு கேட்க அவளதுக்கு, “பையா, பையா, ஊருலந்து எங்க அப்பிச்சியும் அம்மாயியும் வந்திருக்காங்கடா, எங்கூட்ல உளுந்தவடச் சுட்டம். நானு வாழப்பழத்தையும் வடயயும் போட்டு நெய்யூத்தி பெசஞ்சி திண்னண்டாப்பையா’ன்னு அவப்பாவம் என்னம்மோ வூட்டுக்கு ஒரம்பற வந்த பெருமய பீத்திக்க இந்த திருட்டுக்கொறவமூட்டுது “ஓகோ வாழப்பழமும், உளுந்த வடயும் வேலப்பண்டிதான் உன்னப் பள்ளியோடத்துக்கு வர்ரத்துக்கில்லாமச் செஞ்சிப்புடுச்சா”ங்க, அவச்சொன்னாளோ, அதாருஞ்சொன்னாங்களோ தெரியல அந்த ஈனப்பானங்கெட்டதுங்க போயி அவிங்க அம்மாயிக்காரியிண்ட குசலஞ்சொல்ல, வெளயாடறமுட்டும் வெளயாண்டுப்புட்டு ஓடி வூட்டுக்கு அந்திப்பாலு வாங்க செம்மலையூட்டுக்கு போனவன வளைச்சிப்புடிச்சிக்கிட்டு அந்த வம்பேறிமுண்ட கள்ளுப்போதயில,
                               “ டேய் எவண்டா எம்பேத்தி வடயில வேல‌வுடுறனின்னது – அது சித்துவடடா, என்னுது இருக்கு வாடா எருமாமுட்டையாட்டமின்னு, சீலைக்குள்ள பையன வுட்டு அமுக்குறாளே சண்டாளி! பிதுமாருங்கெட்டு பையன் வர்ருவர்ருனு கத்த செம்மலப்பொண்டாட்டி பாக்கியந்தான் குறுக்கப்பூந்து 
             “அறியாப்பையன போட்டு இப்டி வாதிக்கிறியே ,ஏண்டி கெழுடி நீயி பொம்பளயா பேயாடி”ன்னு ரெண்டுப்பேசி விங்கிணிச்சியுட்டா பாவம்.
அதும்பொறவு ஒரு ஏழெட்டு வருசங்கழிச்சி பூமாத்தா கோயிலுக்கு பொங்க கொண்டுகிட்டு போன கலாப்பிள்ளய சாத்ரீகத்துல திருத்தாட்டமா தூக்கிக்கிட்டு போயி அழிங்சிப்பொதையில வுட்டு ரெண்டு ஈடு போட்டெறிங்சி ஹூக்குமின்னு முக்கனவக்கிட்ட பொறவுச் சொன்னானங் குண்டாம்புலக்காயன் “போடி ங்கோயா, ஒங்க பாட்டி கோயிலுட்டையேப் பாத்தவண்டி நானு”ன்னு. இப்பிடித்தான் சித்துராசு மவ ரட்சிமி, அவப்பொறந்தவ சரோசா ரெண்டுப்பேத்தயும் ஒருத்திக்கி தெரியாம இன்னோருத்திய வூடு பூந்து போனவாரந்தான் போட்டுத்தாட்டிப் பூசப்பண்டிப்புட்டு வந்தான்.
                               முந்தாநேத்தோ என்னமோ குட்டப்பட்டி அலமேல கூட்டிக்கிட்டுப்போயி, மலையாமூட்டுக் காட்டுல கம்பரசருக்கு பெட்டு கொட்டாயிக் கட்டிக்கிட்டிருந்திருகிறான். இந்த ரத்தனம் பிருசன் ஐயண்ணன் மாட்டுத்தாழிக்கி தண்ணி ஊத்த கெடாரத்த எடுத்து தோளுமேல வெச்சிக்கிட்டு பொடு பொடு’ன்னு அந்த கெணத்தாண்ட போயி, வெசவெசயா தோண்டிக்கவுத்த தொலக்குழ மேல நின்னு வீசுனானாம்பா.அந்நேரம்பார்த்து இந்த ரெண்டு கொலவாரிங்களும் நெற அம்மணமா நின்ன வாக்குலச் செஞ்சிக்கிட்டிருந்தாங்களாம். பாம்பு பொணயலப் பாத்தவனாட்டம் ஐயண்ணனும் பயந்து நடுங்கி உள்ற போட்ட தோண்டிக்கவுத்த “என்னமோ பொன்னு காலங்கெட்டு கெடக்கு’ன்னு வெளிய இழுத்துப்போட்டுட்டு, ‘தலயெழுத்துடா ஆண்டவனேன்னு வெறுங்கெடாரத்த எடுத்துக்கிட்டு திலும்ப போயிட்டானாம்.
அவன் ராவடி தாங்க முடியாம மயிலியுங் குருசாமியும் இந்த பையன் எலவ எத்தன நாளைக்கி எடுக்கறது? இப்பிடி தோளுமேல புடுக்க போட்டுக்கிட்டு எந்நேரமுந் சென்யேற அலையிறானே இனிமேட்டுஞ் சும்மாயிருந்தா மானம் மருவாதிய தொச்சம்வுடாம தொலைச்சிப் புடுவான்னு ஊரு ஊராப் பொண்ணு தேடனாங்க. அவங்கோளாறக் கண்டுக்கிட்டு ஒருத்தரும் பொண்ணு குடுக்க மாட்டேன்னுப்புட்டாங்க. கடைசியில அவங்கத்தயொருத்தி ஆந்தராவுல இருந்தா. அவ மவ சங்குபதிய பாத்து பேசி முடிச்சாங்க. ஊருமேஞ்ச மாட்ட மூக்கணாங்கவுறுப் போட்டு மொளக்குச்சி அடிச்சி அவுத்தயிவத்த நவறதுக்கில்லாம ஒருத்தாவுலக் கட்டி வெச்சாச்சி.
                                  கண்ணால வேலைக்கி அலைஞ்சி பையங்காஞ்சி கருவாடாப் போயிட்டான். அவனோட சேந்து எங்களுக்குத்தான் அலைச்சலு சாஸ்தி.பொதங்கெழம நாளு கண்ணாலம். எப்பவுமே முகூர்த்தத்து அன்னிக்கி ராத்திரியே பையனையும், பிள்ளயயும் ஒரூட்ல வுடறதுதான் வாமுலு. ஆனா அவனிக்கிருந்த ரொணம் நேரஞ்செரியில்லைன்னுப்புட்டு மக்யாநாளு வெசால கெழ்மயன்னிக்கி சமாச்சாரத்த தள்ளி வெச்சுட்டாங்க. குண்டாம்புலக்காயன் பொசுக்குனுப் போயிட்டான். போன நாயம் வந்த நாயம் பேசிக்கிட்டு அவங்கவூட்ல ஓட்டமூட்ல ஓநாயி பூந்தாப்பிடி பேசிக்கிட்டு ஒரே ரவுசு.
                                     ச்சேரி கூட்டத்துல ஏண்டாத் தடுமாறிக்கிட்டுக் கெடக்கறன்னு நானும், தம்பிராசும் அவன எங்கெயடத்துக்கு கூட்டியாந்துட்டம். வந்தவஞ் சும்மாயிருக்கனுமா வேண்டாமா? “டேய், டேய், தம்பிராசு கண்ணாலத்துக்கு எடுத்துக்கிட்டு வந்த டெக்கும், டி.வியுஞ் சும்மாதாண்டாக் கெடக்குது! ரெண்டு கேசட்டு பலானப்படம் போட்டு பாக்கலாம்டா’ன்னு ஆட்ட்ங்கட்னான். ச்சேரி புதுமாப்ள ஆசப்படறானேன்னுப்புட்டு அந்தக் கண்றோவிய விடிய,விடிய ஒக்காந்து மூணுபேரும் பாத்தம். மாப்ளைக்கி அதப் பாக்க பாக்க ஒண்ணுந்தாக்குப் பிடிக்க முடியல. அப்பிடியேச் சும்மா நெண்டறான், நெளியறான். காலுமேலக் காலத் தூக்கிப் போடறான், கட்டிப்பிடிக்கிறான் அடேயெங்கப்பா அவஞ்செஞ்ச சேட்டைக்கி அளவேயில்ல‌....
                           ஓங்கி ஒரு அப்பட்டக் குடுத்து “ மூடிக்கிட்டுத் தூங்குடா”ன்னு தம்பிராசு மெரட்டன அப்புறந்தான் நிம்மதியா கண்ணசர முடிஞ்சிது. விடிஞ்சி எந்திரிச்சி மாப்ளச் சீரு வாங்க சேலம் போயி பீரோ கட்லுன்னு ராரியில அள்ளிப்போட்டாந்து, எறக்கி அதது எடஞ்சேத்தி பையனச் சிங்காரிச்சி ஊட்டுக்குள்ள தள்ளிவுட்டம் ராவு மணிப்பத்து. நானும் தம்பிராசும் மானத்த பாத்து மல்லாந்துப் படுத்துக்கிட்டு குண்டாம்புலக்காயன் இன்னேரம் அத அவுத்துருப்பான் இதப் பண்டியிருப்பான்னு வெக்கங்கெட்டு போயி கோழி கூப்டற வரைக்கும் பேசிக்கிட்டிருந்துப்புட்டு எப்பத் தூங்கினமோ பொச்சியில வெயிலடிச்சப்பறந்தான் முழிச்சம். எழுந்திரிச்சி பல்லுவெளக்கிக்கிட்டே ஆயிருக்க கூள முருகனையுங் கூட்டிக்கிட்டு போலாம்னு அவங்கூட்டுக்கு போனா...........கருமாந்தரம் புடிச்ச எலவு அது கண்ணால ஊடா எலவு ஊடான்னு சந்தேவம் வந்திரிச்சி. “எம்மவளக் கொன்னுப்புட்டானே சண்டாளப் பாவி”ன்னு பொண்ணப் பெத்த ஆத்தாக்காரி ஊளைக்கரிச்சிக்கிட்டிருந்தா.
                               ‘மாப்ளயும் பொண்ணும் எங்க’ன்னு கேட்டதுக்கு கீழ்மேட்டூரு பூமா ஆசுபத்திரிக்கி கொண்டுகிட்டுப் போயிட்டாங்கன்னு சொல்லும்பிடி எங்களுக்கு பகீர்னு ஆயிப்போச்சி. அரக்கபரக்க ரெண்டு பேருங்கெளம்பி பூமா ஆசுபத்திரிக்கி போனா வாசக்கால்ல குண்டாம்புலக்காயன் குனிஞ்சி நின்னுக்கிட்டிருந்தான். அந்த டாக்டரம்மா “ஏய்யா நீ மனுசனா மிருகமான்னு” ஏசிக்கிட்டிருந்திச்சி. எங்களப் பாத்ததும் பல்ல இளிச்சிக்கிட்டு வந்தாம் பையன். “என்றா ஆச்சி முடிச்சவிக்கி”ன்னு கேட்டா “மச்சான் இங்கிலீஸ் பைட்டுப்போட்டு மொதலுக்கு மோசம் வந்துட்டுதுடா, இப்ப பதனஞ்சாயிரம் பணமும் மூணுப்பாட்லு ரத்தமுங் கேட்கறாங்கடா”ன்னான். நாங்க தொறந்த வாய் மூடல.