2006ல் வெளிவந்த குழந்தைகள் படம்.’RottenTomatoes'ல வேற நல்லா எழுதியிருந்தார்கள். இளவேனில் காலம் தொடங்குகிறது. நெடுநாள் உறக்கத்தில் இருந்த விலங்குகள் ஒவ்வொன்றாக எழுகின்றன.ஒரு மரநாய்(racoon) போன்ற உயிரினம் கையில ஒரு குச்சியோட ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுக்க முயற்சி செய்யுது, அனைத்தும் தோல்வி.சீ சீ இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லிட்டு திரும்பினா இயக்குனர் அங்க வெச்சுருக்காரு முடிச்சு(twist).
பதட்டத்தில் அந்த சின்ன தள்ளுவண்டியும் மலையிலிருந்து உருண்டோட, ஒரு லாரியில் சிக்கி அவ்வண்டி
சின்னாபின்னமாகின்றது. கரடிக்கு கோபம் தலைக்கேற, ரக்கூனைச் சாப்பிடப் போகிறேன்னு சொல்லுது. பயந்து போன ரக்கூன் ‘அண்ணே, ஒரே வாரம் டைம் கொடுங்க. உங்க எல்லாக் கணக்கையும் செட்டில் பண்ணிபுடுறேன்’னு சொல்ல, சோம்பேறி கரடியும் ஒத்துக் கொண்டு திரும்பத் தூங்கத் தொடங்கியது.
சிறுசிறு விலங்குகளும் அவை செய்யும் சேட்டைகளும்
அருமை.
அதுக்கப்புறம் நடக்கும் சம்பவங்கள்,ஒரு கட்டத்தில் இவ் விலங்குகளை அடக்க pest contollerகளான ’The Verminator’ ஐக் கூப்பிடுவதும், அது வேறு சிலப் பிரச்சனைகளில் கொண்டு போய் விடுவதும், பெண் பூனைக்கு அழகுபடுத்தி வீட்டில் இருக்கும் பெரிய ஆண்பூனையைக் கவரச் செய்வதும், கிளைமாக்சும் வயிறு குலுங்க வைக்கும். நேரம் கிடைத்தால் பாருங்கள் குடும்பத்தோடு.
வழமைப்போல் இப்படத்தின் டிரைலர் இங்கே:
வழமைப்போல் இப்படத்தின் மேலதிக விவரங்கள் இங்கே:
டிஸ்கி:
சரி....இது என்ன பெரியக் கதை...இதப் போயி....இது மைக்கேல் ஃப்ரை என்பவர் எழுதிய காமெடித் தொடர்.அதை Tim Johnson, Karey Kirkpatrick இரட்டை இயக்குனர்கள் படத்தை உருவாக்கிய விதம், பிண்ணனிக் குரல் கொடுத்து உயிரூட்டிய Bruce Willis போன்ற ஹாலிவுட்டின் பெருந்தலைகள், கலகலப்பாகப் போகும் திரைக்கதை போன்றவை இப்படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது.







.gif)










