2006ல் வெளிவந்த குழந்தைகள் படம்.’RottenTomatoes'ல வேற நல்லா எழுதியிருந்தார்கள். இளவேனில் காலம் தொடங்குகிறது. நெடுநாள் உறக்கத்தில் இருந்த விலங்குகள் ஒவ்வொன்றாக எழுகின்றன.ஒரு மரநாய்(racoon) போன்ற உயிரினம் கையில ஒரு குச்சியோட ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுக்க முயற்சி செய்யுது, அனைத்தும் தோல்வி.சீ சீ இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லிட்டு திரும்பினா இயக்குனர் அங்க வெச்சுருக்காரு முடிச்சு(twist).
பதட்டத்தில் அந்த சின்ன தள்ளுவண்டியும் மலையிலிருந்து உருண்டோட, ஒரு லாரியில் சிக்கி அவ்வண்டி
சின்னாபின்னமாகின்றது. கரடிக்கு கோபம் தலைக்கேற, ரக்கூனைச் சாப்பிடப் போகிறேன்னு சொல்லுது. பயந்து போன ரக்கூன் ‘அண்ணே, ஒரே வாரம் டைம் கொடுங்க. உங்க எல்லாக் கணக்கையும் செட்டில் பண்ணிபுடுறேன்’னு சொல்ல, சோம்பேறி கரடியும் ஒத்துக் கொண்டு திரும்பத் தூங்கத் தொடங்கியது.
சிறுசிறு விலங்குகளும் அவை செய்யும் சேட்டைகளும்
அருமை.
அதுக்கப்புறம் நடக்கும் சம்பவங்கள்,ஒரு கட்டத்தில் இவ் விலங்குகளை அடக்க pest contollerகளான ’The Verminator’ ஐக் கூப்பிடுவதும், அது வேறு சிலப் பிரச்சனைகளில் கொண்டு போய் விடுவதும், பெண் பூனைக்கு அழகுபடுத்தி வீட்டில் இருக்கும் பெரிய ஆண்பூனையைக் கவரச் செய்வதும், கிளைமாக்சும் வயிறு குலுங்க வைக்கும். நேரம் கிடைத்தால் பாருங்கள் குடும்பத்தோடு.
வழமைப்போல் இப்படத்தின் டிரைலர் இங்கே:
வழமைப்போல் இப்படத்தின் மேலதிக விவரங்கள் இங்கே:
டிஸ்கி:
சரி....இது என்ன பெரியக் கதை...இதப் போயி....இது மைக்கேல் ஃப்ரை என்பவர் எழுதிய காமெடித் தொடர்.அதை Tim Johnson, Karey Kirkpatrick இரட்டை இயக்குனர்கள் படத்தை உருவாக்கிய விதம், பிண்ணனிக் குரல் கொடுத்து உயிரூட்டிய Bruce Willis போன்ற ஹாலிவுட்டின் பெருந்தலைகள், கலகலப்பாகப் போகும் திரைக்கதை போன்றவை இப்படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது.
11 comments:
குழந்தைங்களோடோ பாக்கிற மாதிரி ஒரு படத்த ரெகமன்ட் பண்ணீட்டிங்க. தேங்க்ஜுபா!
இந்த மாதிரி படங்கள் எனக்கு பிடிக்கும்.. நன்றி
ரைட்டு என் பையன் வேற இத பார்த்துட்டான்..:))
@ Kailash
உங்களுக்கு நன்றி.
@ அண்ணாமலையான்
பெரிய ஆட்களுக்கு எல்லாம் குழந்தை மனசுதான் போல :)
@ ஷங்கர்
பலாபட்டறையைக் கேட்டதாகச் சொல்லவும். படம் அவசியம் காண்பிங்க குழந்தைகளுக்கு.
இந்தப் படத்துக்கு 2வது பார்ட் வராதது ரொம்ப ஆச்சரியம்.
ட்ரீம்வொர்க்ஸ் எப்பவும் அதை பண்ணி காசு பார்த்துடுவாங்க. இதை ஏன் விட்டு வச்சாங்க???
நண்பா வாழ்க உங்க சேவை
ஃபார்மாலிட்டி டன்
பாஸு . . கொஞ்ச நாளு வேலை காரணமா பிசி ஆயிட்டேன் . .அதான் இந்த லேட்டான பின்னூட்டம் . . இனிமே பிரச்னை இல்லை. . நல்ல விமர்சனம் . . இந்த மாதிரி அனிமேஷன் படங்கள பத்தி நிறைய எழுதுங்க. . :-)
நல்ல படம் நானும் பாத்துட்டேன், படத்தை போலவே சிறந்த பதிவு :)
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
வருகைக்கு நன்றி.
//ஃபார்மாலிட்டி டன்//
என்னாது அது..என்ர icici a/c பாலன்ஸ் ஏறவே இல்லை.. :(
@ கருந்தேள் கண்ணாயிரம்
கத சொல்லாதீங்க பாஸ். உங்க வீட்டுக்கு கலர் பெயிண்ட்லாம் அடிச்சு மெருகேத்திட்டு நம்மள மறந்துட்டீங்க!! நன்றி
@ டுபாக்கூர்கந்தசாமி
ரொம்ப சந்தோசம் இங்கிட்டு வந்ததுக்கு.
Post a Comment