Monday, January 18, 2010

வெறுங்குண்டி அம்மணம் போட்டுக்கடி சம்மணம்-வா.மு.கோமு

உங்களுக்கு தெரியப்படுத்த....


மகாத்மாவை தெரிய வருகிறது
உங்களுக்கெல்லாம்
ஆனால் பாருங்கள் பகத்சிங்கை
யாரெனக் கேட்கிறீர்கள்.
அப்படியாயின் கிடக்கட்டும் விடுங்கள்.
-தகவல் ஒன்று.
சுள்ளிமேட்டு ராமசாமி தி.மு.க. காரன்
பாவம் கிட்னி பெய்லியராகி செத்துப்போயிட்டான்.


-தகவல் இரண்டு
அத்திக்காடு சின்னச்சாமி மதிமுக காரன்
பாவம் எழுச்சி பேரணிக்கு
மெட்ராஸ் போறச்சே லாரி மோதி
வைகுந்தம் போயிட்டான்.


-தகவல் மூன்று.


பெரியபுளியம்பாளையம் சுப்பு இந்தா இருக்கே
புளியமரத்திலே சுருக்கு மாட்டிட்டு செத்துட்டான்.
நெஞ்சுல ரெட்டெல பச்சை குத்தியிருந்தான்.


மகாத்மா,பகத்சிங்க்,ராமசாமி,சின்னசாமி
அல்லாருமே செத்துப் போயிட்டாங்க!
நீங்கெல்லாம் மூச்சு வாங்குற காத்துல
கார்பண்டை ஆக்சைடு
இருக்காமா கவலப்படாதீங்க!


==============================================
திருவிழா முடிந்த வீதி


தைப்பூச விழாவுக்காக வீதி சுற்றி
வந்த தேர் அலைக்கழிப்பு முடிந்தானபின்
அமைதியானது தேர்முட்டியில்!
எதை எடுத்தாலும் பத்து ரூபாய் சாமான்காரர்கள்
அவ்வப்போது கடந்து போகும் பயணிகளை
நம் கடைக்குத்தான் வுருகின்றனரா
எனப் பார்த்து ஈ ஓட்டினர்.
சாலையெங்கும் கரும்புத் தோகைகள்
மிட்டாய் காகிதங்கள் மீந்திருந்த
மக்காச் சோளங்கள் என இறைந்து கிடந்தன.
தைப்பூச சிறப்பு பேருந்துகள்
அதனதன் ரூட்டுக்கு சென்றுவிட்டன.
முதலியார் வீட்டு பேரக்குழந்தை
உடைந்து போன பலூனை
வாயில் சப்பி மென்று கொண்டிருந்தது.
இன்று ஏதவது தேறுமாவென
மொட்டை முனிசாமி கையில் வதங்கிய
அலுமினியப் போசியோடு சில்லறைக்காய்
வீதிக்குள் கால் வைத்தான்,
பொம்மை கடைக்காரனின் பொம்மை அழுதது
விளையாட ஒரு குழ்ந்தை வேண்டுமென!
பஸ் நிறுத்தத்தில் பாலுக்காய் அழும்
குழந்தையை இடுப்பில் வைத்தபடி
வற்றிய முலை பார்த்து
பெருமூச்சு விட்டாள் பிச்சைக்காரி.
ஏதோ ஒரு வீட்டினுள்ளிருந்து
“இன்னைக்கும் இட்லியா?”
என்றொரு குரல் கேட்டது.
தெருவில் நின்றிருந்த கருநாய்
யாராவது மொபெட்டில் போனால்
கடித்தத் துரத்தலாமென
தருணம் பார்த்து நின்றது!


8 comments:

mayilravanan said...

சிறுகதைகள் மட்டும் அல்ல ஒருகாலத்தில் நல்ல கவிதைகளும் எழுதியவர் தான் நண்பர் வா.மு.கோமு.

அண்ணாமலையான் said...

நல்ல கவிதைதான்..

பலா பட்டறை said...

அருமையா இருக்கு நண்பரே.. சந்திக்கும்போது நிறைய பேசிவோம்.. நன்றி.

கருந்தேள் கண்ணாயிரம் said...

இவரப் பத்தி சாரு எழுதியிருக்காரே . . கவிதைகள் நன்றாக உள்ளன. . கண்டினியு . .


சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் படிச்சாச்சா . .

mayilravanan said...

@ அண்ணாமலையான்
நன்றி வருகைக்கு..

@ பலா பட்டறை
கண்டிப்பாக நிறையப் பேசுவோம்.நன்றி.

@ கருந்தேள் கண்ணாயிரம்
வாங்க தல...பெண்களூர்லேர்ந்து வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு..’சாந்தாமணி’ ஒரு மார்க்கமாத்தேன் போவுது...150 பக்கத்துக்கு அங்கிட்டுதேன் ஸ்பீடாப் போவும்னு மாமு கோமு சொன்னார்.

shortfilmindia.com said...

சமிபத்தில் அவர் எழுதிய வெளிவந்திருக்கும் சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் நாவலை

படித்துவிட்டு.. இன்னும் பிரம்மிப்பாகவே இருக்கிறது..

கேபிள் சங்கர்

கருந்தேள் கண்ணாயிரம் said...

படிச்சிட்டு சொல்லுங்கப்பூ . . நானும் வாங்கிப் படிக்குறேன் . .அதென்ன பெண்களூர்? இந்தக் கிண்டல் தானே வாணாங்கறது :-)

mayilravanan said...

@கேபிள், @கருந்தேள் கண்ணாயிரம்

வருகைக்கு நன்றி.சாந்தாமணி கோமுவின் நேர்த்தியான படைப்பு.‘கள்ளி’ல நாவலுக்கான ஃபார்ம் இல்ல அது இல்ல இது இல்லனு சொன்னவுக எல்லாம் இப்ப நரசிம்மராவ் மதிரி கம்முனு இருக்காக..

அழகிய பெண்கள் அதிகம் உலவும் ஊர் பெங்களூருதான பாஸ்..:)