Wednesday, January 13, 2010

தஞ்சை ப்ரகாஷ் கவிதைகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்க்ள்..........
                        ---------------------------------------
தேடியபோது கிட்டாது
கிட்டினாலும் நிறைவளிக்காது
நிறைவு தந்தாலும் பொருள் தராது
பொருள் தந்தாலும் சுகம் தராது
சுகமே தந்தாலும் நிலை நிற்காது
நிலை நின்றாலும் நானாகாது என்று
தெரிந்தும் இவைகளை எழுதிய நான்
இன்றும் எனக்குப் புதிதே
எளிதே ! பயமே !
--------------------------------------------------------
காலம் மனிதனைத்
தின்று கொண்டிருந்தது.
மனிதர்கள்
காலத்தை நொறுக்கிக்
கொண்டு இருந்தார்கள்.
காலம் என்பது
கற்பனை.
அதில்
இன்னொரு கற்பனை
மனிதன்.
--------------------------------------------------------
        தூசிபடலம்
கனவு காண்பதென்
வாழ்க்கை !
வாழ்வதல்ல !
வாழ்வதென் வழி 
விதிக்கப்பட்டது
விதி யாயல்ல
பிறக்கவில்லை என்
வாரிசு !
வேண்டவில்லை என்போல்
இன்னொருவன்
கனவை நனவாக்குவதென்
சிரமம்
சிரமமே எல்லாமல்ல
இருண்டு கிடக்குதென்
பாதை.
போகும் பாதி எனின்
நானே அஃதல்ல
ஒளிவேண்டிப்பறப்பதென்
சிறகு !
கண்ணறியாது என் இருபுறமும்
வீசுது பயனற்று
வானம் எனக்கு
மண்
விளைவது என்
உயிர்
பழம் பழுக்குது
நுனியில்
என் கால்களோ
புழுதியில்
ஆம் என்
புழுதியே நான் மீதியாய் !






நன்றி-சுகன்

4 comments:

யாத்ரா said...

பிரகாஷ் அவர்களின் கதைகளை தேடி ரசித்துப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். கவிதைகளை இப்போது தான் படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி. பிரகாஷ் அவர்களை பாரத்துக் கொண்டிருப்பதும் எனக்கு மிகப் பிடிக்கும். அடர்கரு முகமயிர்களுககு நடுவே தீட்சண்யமான கண்கள். கதைத்தொகுப்பில் பார்த்தது. மறுபடியும் இப்போது. புகைப்படத்திற்கும் நன்றி.

மரா said...

@யாத்ரா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாத்ரா.ப்ரகாஷ் ஒரு அபூர்வமான ஆளுமை.

ஆதவன் said...

கவிதைகள் அருமை. தஞ்சை பிரகாஷ் கதைகள் போன்றே அவரின் கவிதைகளிலும் ஒரு எளிமை இருக்கத்தான் செய்கிறது. அவர் பற்றி நான் அதிகம் அறிந்துக் கொள்ள காரணம் சுகன். சுகன் அறிமுகத்திற்கு காரணம் சாமி. நன்றி சாமி.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

பகிர்வுக்கு நன்றி மயில்ராவணன்.
ப்ராகாஷுடன் பழகிய நாட்கள், இலக்கியம் பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்ட மறக்கமுடியாத நாட்கள்
வாழ்க்கை,இலக்கியம் பற்றிய அவர் பார்வையில் நான் பல இடங்களில் முரண்பட்டாலும் தன் அன்பால்,பரந்துபட்ட படிப்பால் என்னை கட்டிப்போட்டவர்.
அவருடைய மேபல்,கரமுண்டார் வீடு தமிழில் மிக முக்கியமான படைப்புக்கள்.