Friday, January 29, 2010

The Tournament கெட்ட ஆட்டம்

                                                                 -மயில்ராவணன்
ஏழு வருஷத்துக்கு ஒருமுறை உலகப் பணக்காரர்கள் கொஞ்சம் பேர் ஒரு இடத்தில் கூடி ஒரு வித்தியாசமான சூதாட்டம் ஆடுவார்கள். உயிரை மதிக்காத நன்றாக சண்டை போடக்கூடிய 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மீது பணம் பந்தயம் கட்டுகின்றனர்.


24 மணிநேரத்திற்குள் இந்த 30 பேரும் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்.கடைசியாக எஞ்சியிருக்கும் ஒருவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசு(நொந்து நூடில்ஸ் ஆகி பரிசு வாங்கி என்ன செய்ய?!).

அடுத்து உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் சில விளக்கங்களும்:


 1.முப்பது போட்டியாளர்களும் எங்கிருக்கிறார்கள்? யார் யாரென்று மற்ற போட்டியாளர்களுக்கு எப்படி தெரியும்? இவிங்கள எப்படி ஃபாலோ பண்றது?
                  30 போட்டியாளர்களும் நகரின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரது உடம்பிலும் ஒரு சின்ன 'chip' பொறுத்தப்படுகின்றது. மேலும் போட்டியாளர்களுக்கு ஒரு 'tracking device' கால்குலேட்டர் சைஸ்ல ஒரு கருவியைக் கொடுத்திருக்கிறார்கள். அதோட வேலை சக போட்டியாளர்கள் சுற்றுப்புறத்தில் இருந்தால் ’அதிர்வலைகள்’ ஏற்படுத்திக் காட்டிக் கொடுத்துவிடும்.


 அதேபோல் இவர்கள் அனைவரையும் கண்காணிக்க ஒரு 'Control room’ வேறு உள்ளது. அங்கிருந்துதான் இப்போட்டியைக் காணும் கோடிஸ்வரர்கள் இருக்கும் பெரிய ஹாலுக்கு ஒளிபரப்பபடுகின்றது-டிவி ல ‘cricket highlights' போடுறமாதிரி.


2.இதுல என்ன சுவாரசியம்? படம் முழுக்க குருதியாக இருக்கப் போகிறது?
                  படம் முழுக்க இரத்தம் தான். கண்டிப்பாக 'Tender Hearted' மக்கள் தவிர்க்கவும்.
 இயக்குனர் சுவாரசியத்துக்காக வைத்திருக்கும் நபர் தான் ‘Father Macavoy'. குடிகார அப்பாவிக் காமெடிப் பீஸ் போன்ற பாதிரியார் எப்பிடி ஆட்டத்தில, தலைவிதியால சேர்க்கப்படுகிறார்? அவருக்கு ’Lai Lai chen' எப்படியெல்லாம் உதவி புரிகிறார்? இதெல்லாம் படத்தப் பார்த்தேத் தெரிந்துகொண்டால்தான் நன்றாக இருக்கும்.


3.ஹீரோ தான செயிப்பாரு கடைசியிலே எப்போதும் போல? அவருக்கொரு ஃபிளாஷ்பேக் இருக்குமே?
 ஆமாம் சாமிகளா.சரியாகச் சொன்னீர்கள். ஆனால் அவன் படும் பாடு!!(கவுண்டமணி பாஷையில் சொல்றதுன்னா ‘டங்குவார் அறுந்து போச்சுறா சாமி!’)   நம்ம ஹீரோவ ஆட்டத்தில சேர்க்குறத்துக்கே பெரிய விலை கொடுக்கிறான் இப்போட்டியை நடத்தும் ஆள்.  கடைசி வரைக்கும் யூகிக்கமுடியாத ஃபிளாஸ்பேக் !!!

வெவ்வேறு நாட்டிலிருந்து வந்து ஆட்டத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் , பணமுதலைகள் , ஆட்டம் நடக்கும் இடம் ,கேளிக்கை ,டெக்னிக்கல் பூச்சுற்று வேலைகள், லாய் லாய் சென்னின் அழகு , ஃபாதரின் அழுகை ,கடைசி பேருந்து சண்டை , பட ஆரம்ப ஹோட்டல் சண்டை என நிறைய பார்த்து ரசிக்கக் காட்சிகள் உள.


வழமைபோல் இப்படத்தின்   விவரம்  இங்கே
வழமைபோல் இப்படத்தின் டிரைலர் இங்கே


டிஸ்கி:
  வீட்டில் தனியாக இருக்கும்போதே பார்க்கவும் . குழந்தைகள்,  இல்லத்தரசிகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம். நான் படம் பார்த்த இரவு முழுக்க இப்படத்தின் ஹீரோ மொட்டை டுப்பாக்கிய வெச்சு மண்டையில சுடுற மாதிரியேக் கனாக் கண்டேன். ’Scott Mann' ரூம்போட்டு யோசிச்சு முதல்படத்த இப்பிடிக் குடுத்திருக்காரு!

27 comments:

butterfly Surya said...

சுவாமி, ரொம்ப ரத்தகளறியாக இருக்கும் போல..
ஹா.பாலாவிற்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

mayilravanan said...

@ butterfly Surya
வாங்க பாஸ்.இந்தியாவுலதான் இருக்கீயகளா? ’தண்டோரா’ சொன்னாரு ஏதோ பட ‘டிஸ்கசனு’க்கு போயிருக்கீங்கன்னு? வாழ்த்துக்கள். நமக்கு ஒரு வில்லன் ரோல் குடுங்க பாஸ்!

mayilravanan said...

//ஹா.பாலாவிற்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்//
அப்ப ரொம்ப சந்தோசம்... :)

அண்ணாமலையான் said...

ஒரே ரத்தமா? யோசிக்க வேண்டியதுதான்...

ஷங்கர்.. said...

மிக்க நன்றி மயில்..:))
என்னது சூர்யாஜி பட டிஸ்கஷனா?? வாழ்த்துக்கள்..:))

தண்டோரா ...... said...

ரைட்டு...

mayilravanan said...

@ அண்ணாமலையான்
ஆகா..இப்பிடில்லாம் கேள்வி கேட்டா எப்புடி...:) நன்றி.

@ ஷங்கர்
ஆமாண்ணே...தண்டோராவே ரைட்டு போட்டாரு பாருங்க... :D

@ தண்டோரா
நன்றி சனிக்கிழமையாயிருந்தாலும் என் பதிவுகளப் படிச்சதுக்கு.

ஹாலிவுட் பாலா said...

என்னாது பட டிஸ்கஸனா???

என்ன பூச்சி... எதுவும் சொல்லவேயில்ல? இன்னா நடக்குது?? ஹா???

==

மயில்.. படத்தை பார்த்தாச்சி. தியேட்டருக்கு இந்தப் படம் வரலை. டோரண்டில் பார்த்து டவுன்லோட் பண்ணினா.. 10 நிமிஷத்துலேயே.. தெரிஞ்சி போச்சி..!!

The Condemned படத்தின் அப்பட்ட காப்பி. கொடுமை என்னன்னா அந்தப் படமே இன்னொரு படத்தோட காப்பி.

அதே மாதிரி.. Underground (2007) -ன்னு ஒரு படம். அதையும் இதில் மிக்ஸ் பண்ணியிருப்பாங்க.

எறும்பு said...

Unable to copy paste the comment in tamil.

let me see the movie..

mayilravanan said...

@ ஹாலிவுட் பாலா
'RGV FILM COMPANY'க்குன்னு செவி வழிச்செய்தி..வதந்தியாக்கூட இருக்கலாம் :)

நல்லவேளை நான் ‘The Condemned‘,’Underground (2007)’ பாக்கல. முதல்ல இதப் பாத்தவுடனே ரொம்ப ஷாக்காயிட்டேன்.
அர்னால்டுகிட்டயிருந்து மிஸ்டு கால் ஒண்ணும் வரலையே :(

ஹாலிவுட் பாலா said...

RGV -யா???? :) :) சூப்பர்..!!! சூப்பர்..!!

பூச்சி... ஹீரோயினை ரேப் பண்றா மாதிரி ஒரு சீன் வைங்க. அந்த சீன்ல நாந்தான் நடிப்பேன் சொல்லிட்டேன் (ஹீரோயினா இல்ல!!!)

--

மயில்.., அவரு மட்டும் மிஸ்ட் கால் கொடுத்தா.. மிரட்டுராருன்னு சொல்லி... கோர்ட்ல கேஸ் போட்டு பணத்தை கறந்துடலாம்! :))

kailash,hyderabad said...

இதே மாதிரி Dead or Alive (2006),naked weapon (2002 ) ன்னு ரெண்டு படம் இருக்கு. ரெண்டும் பார்த்துட்டேன் .
அதும் naked weapon சண்டை அனல் பொறி பறக்கும்.ஹாலிவுட் பாலா சொல்றத பாத்தா இன்னும் இதுமாதிரி நிறைய படங்கள் வந்திருக்கு போலிருக்கு.நல்லவிறுவிறுப்பான, வித்தியாசமான படங்களா தொடர்ந்து எழுதுங்க தல.

சதீஷ் குமார் said...

Nandri

எறும்பு said...

Unable to copy paste the comment in tamil.

let me see the movie..
Repeatttttttt

mayilravanan said...

@ எறும்பு,சதீஷ்குமார்
ரொம்ப நன்றி வருகைக்கு. இயன்றதைச் செய்கிறேன் கண்டிப்பாக.

@ ஹாலிவுட் பாலா
// கோர்ட்ல கேஸ் போட்டு பணத்தை கறந்துடலாம்! //
பணத்தை வாங்கி ஆசிரமத்துக்கு தான குடுப்பீங்க :)

mayilravanan said...

@ கைலாஷ்
நன்றி வருகைக்கு..லிஸ்ட் ஏதாச்சும் இருந்தா மெயில் பண்ணுங்க. ட்ரை பண்றேன்..பாத்து எழுத.

Lucky Limat லக்கி லிமட் said...

படத்தை ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். இனி மேல் தான் பார்க்க வேண்டும்

mayilravanan said...

@ Lucky Limat
வருகைக்கு நன்றி.தனியாகப் பாருங்கள்.

மகா said...

ரத்த பூமியா இருக்குமோ ....

mayilravanan said...

@ மகா
அதேதான் பாஸ்.நல்லா டைம்பாஸாகும். நன்றி.

butterfly Surya said...

பாலா.. அப்படி எதுவும் இருந்தா கண்டிப்பா அந்த சான்ஸ் உனக்கு தான்.

mayilravanan said...

@ butterfly Surya
அப்ப நான் ஆட்டத்தில கெடையாதா?

Ezilagam Sathish said...

Mr. Mayil.,

Shall i come 2 join this discussion??

மயில்ராவணன் said...

@ Ezilagam Sathish
you are always welcome brother..

Chinnammani said...

மயில் ராவணன,

சும்மா இந்தப்பக்கம் வந்தா ரத்த பூமின்னு யாரோ சொன்னாப்ல இருந்த்து. மகாபாரதக்கதைங்களா. அதிலதான் கருக்ஷேத்திரத்தை ரத்தபூமின்னு சொல்லுவாங்க.

மயில்ராவணன் said...

@ சின்ன அம்மணி
அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க...
யாரோ புரளிய கெளப்பி விட்டிருக்காங்கெ
அடிக்கடி வாங்க.நன்றி

Balaji K said...
This comment has been removed by the author.
Kolipaiyan said...

Your movie review is too good. If time permit, see my review about this file.

http://kolipaiyan.blogspot.com/2010/07/tournament.html