Monday, November 16, 2009

கால்சென்டர் காதல் (The Other End Of The Line)

கோகுல்

ஸ்ரேயா நடித்திருக்கும் திரைப்படம் என்றவுடன் ஆவலாகப் படம் பார்க்கத்தொடங்கிய எனக்கு படம் பிடித்துப்போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு சம்பவத்தை மனது அசை போட்டுக்கொண்டிருந்த்தும் பட்த்தைப் பிடித்ததற்கு காரணமாக இருக்கலாம்.


மும்பை சிட்டி ஒன் கால் சென்டரில் பணிபுரியும் பிரியா சேத்தி என்ற பெண்ணிற்கும் அதனுடைய நியூயார்க் கஸ்டமர் கிராண்டியருக்கும் இடையிலான காதலை மிக அழகாக திரையில் வடித்திருக்கிறார்கள். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு எழுந்து அமெரிக்க குட்மார்னிங் சொல்லும் பெண்ணாக ஸ்ரேயா நடித்திருக்கிறார். அமெரிக்க அக்சண்டில் பேசி கிராண்டியருடன் நட்பு கொள்கிறார். அதே நேரத்தில் இந்தியாவில் திருமணம் நிச்சயமாகிறது. இந்நிலையில் கிராண்டியரைப் பார்த்து அவருடன் பழக முடிவெடுத்து , வீட்டில் யாருக்கும் சொல்லாமல் அமெரிக்கா செல்கிறார். கிராண்டியர் தன்னுடைய புராஜக்டிற்காக தங்கி இருக்கும் அதே ஹோட்டன் ஹாக்சனில் தானும் தங்கி , கிராண்டியரை சந்தித்த பின்பும் , உண்மையை சொல்லாமல், பொய்யான காரன்ங்களை சொல்லி நட்பாகிறார்.

இதற்கிடையில் ஸ்ரேயாவைத் தேடி அமெரிக்கா வரும் பெற்றோரின் லொள்ளு சற்று சிரிப்பைத்தந்தாலும், உண்மையில் கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது.
ஹோட்டல் அதிபருடன் புத்திசாலித்தனமாக பேசி ஸ்பெஷல் கெஸ்டாக ஆகும் இட்த்தில் கிராண்டியர் மனதில் ஆழமாக பதிகிறார். கிராண்டியருடன் விருந்திற்கு செல்லும் இட்த்தில் பெற்றோரை தற்செயலாக சந்திக்க , உண்மையை அறிந்து கொண்ட கிராண்டியரிடமிருந்து பிரிந்து இந்தியா வந்து விடுகிறார்.

புராஜக்டை முடித்த கையோடு, ஸ்ரேயாவின் காதலை விட முடியாமல் கிராண்டியர் அமெரிக்காவில் தவிக்கிறார். அமெரிக்கர்களின் வாழ்வோடு இந்தியர்கள் எவ்வாறு கலந்திருக்கிறார்கள் என்பதை திரைபட்த்தின் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. கிராண்டியர் இந்தியா வந்தாரா, ஸ்ரேயாவை கைப்பிடித்தாரா என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கலாச்சாரம் மாறி வருவதையும், தலைமுறைகள் எல்லையைத்தாண்டி சிந்திப்பதையும் மிக அழகாக சித்தரிதிருக்கிறார்கள். ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாக வேண்டும்.

ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் பார்த்த திருப்தி கிடைக்கும் என்பதற்கு உறுதி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்களேன். நன்றி....

2 comments:

puduvaisiva said...

Thanks Maiel

மரா said...

@ புதுகை சிவா
நன்றி சிவா.