Friday, February 5, 2010

வா.மு.கோமுவும் இன்னபிற கவிதைகளும்

வா.மு.கோமு தமிழின் ஒரு தவிர்க்கமுடியாத படைப்பாளி. சிறுகதைகளே இவரது பலம், தற்போது நாவலும் கைகூடிவருகிறது. சௌந்தரசுகன் என்ற சிற்றிதழில் மட்டுமே இவரின் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருக்கின்றன. 


மேலும் எனக்கு ‘சௌந்தரசுகன்’ இதழாசிரியர் சுகன் மூலமாகத்தான் வா.மு.கோமு அறிமுகம் தஞ்சைப் ப்ரகாஷ் இவருடைய எழுத்துக்களைப் பற்றி என்னிடத்தில் வியந்து சொல்லி யிருக்கிறார்.


இவர் எழுதி சுகனின் ‘சுகன் பைந்தமிழ் தடாகம்’ வெளியீடாக வந்த ‘அழுவாச்சி வருதுங் சாமி’ இவரது ஆகச் சிறந்தக் கதைகளைக் கொண்டது. இவர் தந்தை கவிஞர். முத்துப்பொருணன் நடத்திய ‘நடுகல்’ சிற்றிதழ்
 இன்று இலக்கிய உலகில் இருக்கும் பல பெரிய தலைகள் உருவாகிட வித்திட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.


பின் இவரின் பல சிறுகதைத் தொகுப்புகள் ‘உயிர்மை’ வெளியீடாகவும், ‘உயிரெழுத்து’ வெளியீடாகவும் இன்னும் பல பதிப்பகங்களின் வாயிலாகவும் வெளியானது. இவரின் நாவல் முயற்சிகளும் வெற்றியே. பரவலாக வாசிக்கபடும் கோமு நானறிந்த நல்ல கவிஞனும் கூட.  அகநாழிகை வெளியீடாக வரும் ’எடுறா வண்டிய’ என்னும் நாவலை எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் வா.மு.கோமு நமது வலைப்பூவுக்கென இயற்றிய கவிதைகள் உங்களுக்காக.....


பல்லாக்கு குதிரை ஏறி
பவனி வந்த மீனாட்சி
ஒருநாள்-
நடுவீதியில் ஹவாய் இன்றி
என்னெதிரே வந்தால் மட்டும்
கும்பிட போன தெய்வம்
குறுக்கே வந்ததென்று
சொன்னாலும் சொல்வேன்!
------------------------------------------------------------------------------

நல்ல கவிதை
கெட்ட கவிதை
சும்மா படி கவிதைகளை.
------------------------------------------------------------------------------


விழிக்கவா போகிறேன்? 
போதும் உலுப்பி எழுப்பாதே விடு.
அப்படி என்னதான்
சொல்லப் போகிறாய் 
செத்துப்போன என்னிடம்?
உலுப்பி எழுப்பாதே விடு.
மூன்றாம் நாள் எழுவேன்
அப்புறம் பேசிக் கொள்வோம்.
--------------------------------------------------------------------------------


- யார்ரா அது சிலுவை மேல ?
- நாந்தானுங்க சாமி ஏசப்பன்.
- அர்த்த ராத்திரில அங்கே
 என்னடா பண்ணிட்டிருக்கே ?
- அடிச்ச காத்துல கோவணம்
 கழண்டு டேராமேல கெடக்குதுங்க
 எடுத்து சொருவிட்டு இருக்கேன்.
- அடுத்த காத்துல
 கழண்டுக்காத அளவுக்கு
 இறுக்கி கட்டு ஏசப்பா !
---------------------------------------------------------------------------------


கிணற்றின் உச்சியிலிருந்து
எனது கால்கள்
அந்தரத்தில் குதித்தது.
இதயமெங்கும் பயப்பிரளயம்
தண்ணீரில் விழும் வரை!
“தொபுக்கடீர்”
கிணற்றிலிருந்து மேலே ஏற
படிகளைக் காணோம்!?
பாம்பேறியின் துவாரங்களில்
பாம்பைப்போல் பூரான்கள்,
பூரானின் நெளியல்
பயப் போர்வையாய் மனமெங்கும்.
குஞ்சிலிருந்து கிளம்பிய நீர்
லுங்கியை நனைத்து,பாயையும்.
அம்மாவின் குரல்
விடிந்தபின் இன்றும் ஒலிக்கும்.
கெடைமல்லா!
------------------------------



21 comments:

அண்ணாமலையான் said...

போட்டு தாக்குங்க...

மதுரை சரவணன் said...

siluvai esappaa , nalla kavithaikal. arumaiyaana pathivu'

geethappriyan said...

நண்பா
மிக அருமையான பகிர்வு
ரசித்தேன்

மரா said...

@ அண்ணாமலையான்
வருகைக்கு நன்றி.

@ மதுரை சரவணன்
நன்றி நண்பரே,வருகைக்கும் கருத்துக்கும்.

@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
ரசித்தமைக்கு நன்றி. ஃபார்மாலிட்டி?? :)

அகநாழிகை said...

சரி.. நல்லாத்தான் இருக்கு இதுவும்.
000
வாமு கோமுவின் நாவல் தலைப்பு ‘எட்றா வண்டியெ‘
என்றிருக்க வேண்டும்.
000
வாமு கோமு கவிதைகளைவிட அவரைப்பற்றிய அறிமுகம் பலருக்கும் செல்லும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு.

- பொன்.வாசுதேவன்

மரா said...

@ அகநாழிகை
நன்றி.’எட்றா வண்டியெ’ மாத்திடுறேன். உங்களுக்கும் வாழ்த்துக்கள் இப்படைப்புக்கு உயிர் கொடுப்பதால்..

Unknown said...

Nice ones.

//கெடைமல்லா!//

கெடைமள்ளா?

Cable சங்கர் said...

sami,
நேத்து ராத்திரி அவர் என் கிட்ட போன் பண்ணப்ப ஒரு முக்கா மணி நேரம் சாந்தாமணி பத்தி பேசிட்டு இருந்தோம்..

Paleo God said...

பகிர்வுக்கு மிக்க நன்றி மயில், இவர் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்ற விவரமும் தரவும்.:))

ஆதவன் said...

கவிதைகள் அருமை என்று சொல்ல மாட்டேன்.. ஆனால் ஏசப்ப கவிதையும், மூன்றாவது கவிதையும் அருமை. வா.மு. கோமு. சென்னையில் இருந்தால் இந்நேரம் அவற்றின் செல்வாக்கு பலமடங்கு கூடி இருக்கும். என்றாலும் அவர் மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

:))

சங்கர் said...

படிச்சா புரியுதே, இதெல்லாம் கவித தானா?


:))

யாத்ரா said...

கோமு அண்ணனோட எழுத்துகளுக்கு நானும் தீவிர ரசிகன். பகிர்வுக்கு மிக்க நன்றி. அண்ணனை சந்தித்த நினைவுகள் இன்னும் பசுமையா இருக்கு.நேத்து கூட பேசியிருந்தன். சாந்தாமணி வாங்கி வச்சிருக்கன், படிக்க ஆரம்பிக்கணும்.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி மயில்.

மரா said...

@ கேபிள் சங்கர்
வருகைக்கு நன்றி கேபிள். சாந்தாமணி பற்றி ஒரு பதிவு போடுங்கண்ணே.

மரா said...

@ ஷங்கர்
வாங்க பலா.’நியூ புக்லேண்ட்ஸ்’ ல கிடைக்கும் பாஸ்.’அழுவாச்சி வருதுங் சாமி’ என்கிட்ட வாங்கிக்குங்க. 50ரூ தேன்.

மரா said...

@ ஆதவன்
நன்றி உங்கள் வருகைக்கு.

மரா said...

@ சுரேஷ்
நன்றி வருகைக்கு.

@ சங்கர்
அதுதானே கவிதையின் வெற்றி.

மரா said...

@ யாத்ரா
சீக்கிரம் படிச்சி சந்தோஷமா இருங்க. நன்றி.

மரா said...

@ பட்டர்ஃப்ளை சூர்யா
வாங்க சூர்யா. நல்ல விடயங்களைப் பகிர்வது என் கடமை. :)

ச.முத்துவேல் said...

/‘அழுவாச்சி வருதுங் சாமி’ இவரது ஆகச் சிறந்தக் கதைகளைக் கொண்டது/

ஆமாம் இதுவொரு ஆகச் சிறந்த உண்மை.
சிறப்புக் கவிதைகளுக்கு சிறப்பு நன்றி. முதல் கவிதயில் கோமுவின் குறும்பு நன்கு தெரிகிறது.