Sunday, February 7, 2010

தஹான் - ஒரு வெள்ளைக் காவியம்

  -மயில்ராவணன்
           This film is a fable with fictitious characters and non-fictitious incidents.
சந்தோஷ் சிவன் என்கிற ஒரு பிரபலமான ஒளிஓவியர் இயக்கி, ஒளிப்பதிவு செய்த ஒரு தனித்துவமானப் படம் ‘தஹான்’. கதை மற்றும் திரைக்கதை மூவர்-சந்தோஷ் சிவன், ரித்தேஷ் மேனன், பால் ஹார்டர்ட். படம் முழுவதுமே காஷ்மீரில் எடுக்கப்பட்டது. ஒரு சிறுவன், சற்று வளர்ந்த சிறுமி,இவர்களின் அம்மா,தாத்தா இவர்களுடன் ஒரு கழுதை, இவர்கள் தான் இப்படம் முழுவதும். ஆனால் ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதை.


தொப்பியணிந்த சிறுவன்(தஹான்) ஒருவன் ‘பீர்பால்’, ’பீர்பால்’ நீ எங்கே தொலைந்தாய்? சூரியன் வேறு மறையத் தொடங்கி விட்டது. உனை எங்கு தேடுவது”, எனக் கத்திக்கொண்டே மலைகள் முழுதும் எதிரொலிக்கும்
குரலினூடே சாலைக்கு வருகிறான். திடீரென மலையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. தாத்தா அவனைப் பிடித்து கண்டித்து அழைத்து செல்கிறார். கழுதையும் கிடைக்கிறது.

கழுதையைத் திட்டிக்கொண்டே வீட்டுக்கு வருகிறான். கழுதை காண்பிக்கும் இடத்தில் ஒரு பறவை இறந்து கிடக்கிறது. அங்கே தாத்தாவிற்கும் பேரனுக்கும் நடைபெறும் உரையாடல் தத்துவமார்த்தமானது. நம் மனமும் படத்துடன் பயணிக்க தயாராகிறது.

பீர்பால் எனப் பெயரிடப்பட்ட கழுதை,சிறுவனுக்கு அவன் தந்தை பரிசாகக் கொடுத்தது. பெரும்பாலான நேரம் அவன் அக்கழுதையோடு தான் செலவு செய்கிறான்.அவன் அப்பா இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஒரு நபர். தாத்தா குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். பல்வேறு கஷ்டங்களுக்கிடையே வாங்கிய கடனனுக்காக மாதா மாதம் வட்டி கொடுத்துக்  கொண்டு வருகிறார்.
இது எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே.........இதப் போயி உலகசினிமான்னு விமர்சனமா? மக்களே! கொஞ்சம் அமைதி... 


திடீரென தாத்தா இறைவனடி சேர்கிறார்,கடன் வாங்கியவனுக்கு வீட்டில் இருந்த நகை, பணம் ..... எல்லாத்துடன் கழுதையும் சேர்த்து தஹனின் அம்மா கொடுத்துவிட்டு வந்து விடுகிறாள். வீடு திரும்பும் தஹன் அழுது அரற்றுகிறான். எப்படியாவது 
பீர்பாலை மீட்டுக் கொண்டு வரவேண்டி பகீரதப் பிரயத்தனம்(’செந்தமிழ்’) செய்கிறான்.


இதற்கப்புறம் தான் இப்படம் நம்மை அப்பிடியே ஃபெவிக்கால் போட்டு ஒட்ட வைக்குது சீட்டுடன். பீர்பால் அவனைவிட்டுப் பிரிந்தது, அது வேறொருவருக்கு சுபான் தாராக வரும் அனுபம் கெருக்கு விற்கப்படுவது, தஹான் அதைத் தொடர்வது, இத்ரிஸ் பாயின் சந்திப்பு, அனுபம் கெரின் பேரனின் நட்பு, இன்னும் எத்தனையோ சம்பவங்கள். என்னவெல்லாம் நடந்தது? 


பட டைட்டிலில் வரும் அடைமொழி ‘A Boy With A Grenade’ க்கு என்ன அர்த்தம். தஹான் என்ன சிரமங்களை,மனிதர்களைச் சந்திக்கிறான்? படம் சொல்லும் செய்தியென்ன? எல்லாத்துக்கும் விடை படத்தில்..நாமெல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு ‘Visual Treat’ தஹான் என்றால் மிகையாகாது. 

காஷ்மீரின் வெள்ளை அழகு நம் கண்களைக் கொள்ளை கொள்கிறது. படத்தில் ஊமைத்தாயாக வரும் சரிகா, சுகந்தராக வரும் அனுபம் கெர், ராகுல் போஸ், தஹானாக வரும் Purav Bhandare, அவன் அக்காவாக வரும் அனைவருமே படத்தின் பலம்.


வழமைபோல் இப்படத்தின் டிரைலர் இங்கே
வழமைபோல் இப்படத்தின் விவரம் இங்கே


டிஸ்கி:
இந்திய மொழிகளிலேயே நிறைய நல்ல படம் இருக்கே? வெளிநாட்டுப் படங்களோடு சேர்த்து இதையெல்லாமும் எழுதுன்னு சொல்லி உறைக்க வைத்த அண்ணன் மணிஜிக்கு நன்றிகள் பல.



31 comments:

மரா said...

நண்பர்களே மேலே உள்ள ‘தஹான்’ படித்ததற்கு நன்றி. இந்த சுட்டியையும் சற்று பார்க்கவும்.
http://mynandavanam.blogspot.com/2010/02/blog-post.html

Paleo God said...

நன்றி மயில் :)
பறவையை பார்த்து தாத்தாவும் பேரனும் பேச ஆரம்பித்த உடனே படத்தை நிறுத்தி விட்டேன். கொஞ்சம் பொறுமையாக அனுபவித்து பார்க்கவேண்டிய படம் என்பது புரிந்துவிட்டது. நல்ல பகிர்வுகளுக்கு மீண்டும் நன்றி.

மாதேவி said...

படம் பற்றிய நல்ல தகவல்களுக்கு நன்றி.

butterfly Surya said...

நன்றி மயில்.

DREAMER said...

எனது நண்பர் சதீஷ் என்பவர் சந்தோஷ் சிவன் அவர்களின் தீவிர இரசிகர். அவர் என்னை இந்த படத்திற்கு அழைத்து சென்றார். படத்தைப் பார்த்த பிறகு எனக்கு 2 நாட்கள் இதன் பாதிப்பு இருந்தது.

நல்ல படத்தை பரிந்துரைத்திருக்கிறீர்கள்.

geethappriyan said...

நண்பா அருமையான படத்தை பற்றிய பகிர்வுக்கு நன்றி வீக்கெண்டுக்கு இதாச்சு.ஓட்டுக்கள் போட்டாச்சி

geethappriyan said...

தமிலிஷ் பட்டை எங்கேப்பா?
அதுதான் ஆளை இழுத்துவரும்,அடுத்து ஹாலிபாலியின் லின்க். உடனே தமிலிஷ் பட்டை வைக்கவும்

அண்ணாமலையான் said...

படிச்சாசு, பாத்தாச்சு. பகிர்வுக்கு, தகவலுக்கு நன்றி

கருந்தேள் கண்ணாயிரம் said...

ராகுல் போஸ் எனக்கு மிகப்பிடித்த நடிகர்களில் ஒருவர். . இந்தப்படம் ஒரு அருமையான கவிதை. . இதை அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுக்கள். . சூப்பரப்பு . . !!

கருந்தேள் கண்ணாயிரம் said...

எங்க தமிலிஷ் பட்டைய காணோம் . . அத சீக்கிரம் நிறுவுறது . . . அப்பதான குத்து குத்துன்னு குத்த முடியும் . . :--)

மரா said...

@ ஷங்கர்
வருகைக்கு நன்றி. அவசியம் குடும்பத்தோடு பாருங்க.

மரா said...

@ மாதேவி
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

மரா said...

@ butterfly Surya
ஏதோ ‘மைத்ரிக்கு’ என்னால முடிஞ்சது..நன்றி

மரா said...

@ கனாக்காண்பவர்
சந்தோஷ் சிவன் ஒரு பல்துறை வேந்தர். வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

மரா said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
தமிலிஷ் பட்டை வெச்சாச்சு. அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

மரா said...

@ அண்ணாமலையான்
ரொம்ப நன்றி சார்.

@ கருந்தேள் கண்ணாயிரம்
ராகுல் போஸ்க்கு இப்படத்தில் அதிக வேலையில்லை.இருந்தாலும் வரலாறு முக்கியம் என்பதற்காக பங்கெடுத்திருப்பார். நல்ல நடிகர்.நன்றி பாஸ்.

மணிஜி said...

நன்றி சுவாமி..நிறைய எழுதுங்கள்!!

மரா said...

@ தண்டோரா
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.

செ.சரவணக்குமார் said...

நல்ல விமர்சனம் சார். பகிர்வுக்கு நன்றி.

மரா said...

@ செ.சரவணக்குமார்
ரொம்ப நன்றிங்க இவ்ளோ தொலைவிலேர்ந்து வந்ததுக்கு.அடிக்கடி வாங்க.நன்றி.

புலவன் புலிகேசி said...

தஹான் பற்றி படித்ததும் பார்க்கத் தோன்றுகிறது. பார்த்துற வேண்டியதுதான்...

மரா said...

@ புலவன் புலிகேசி
வாங்க புலவரே!புத்தகக் கண்காட்சியிலே பார்த்தது. மிக்க மகிழ்ச்சி. அவசியம் பார்த்துவிடுங்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான விமர்சனம் .

உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுதே

ஆதவன் said...

arumaiyana padam. ezhuthum arumaiya irukku. :)

kailash,hyderabad said...

நல்ல படத்தை பத்தி சொன்னிங்க. கண்டிப்பா பாத்துட வேண்டியதுதான். அறிமுகத்துக்கு நன்றி தல.
தமிலிஷ்ல ஒட்டு போட்டுட்டேன். தமிழ் மணம் கை கிழே மட்டும்தான் தெரியுது. அது என்ன பிராப்ளம்னு பாருங்க.
( யாரவது தெரியாம மைனஸ் குத்து குத்திற போறாங்க.)

chandramohan said...

அன்பு மயில்ராவணன்
உங்கள் திரை பார்வை சுவாரஸ்யமாக இருக்கிறது..
எனினும் இத் திரைப்படங்களை பற்றிய ஆழமான , குறிப்பாக அரசியல் , கலாசாரம் சார்ந்த பார்வை இன்னும் தேவை என்று தோன்றுகிறது . சுருக்கமாக எழுதுவதால் வரும் பிரச்னை இது.. ஒளிப்படங்களை குறைத்து content க்கு முக்கியத்துவம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.. நண்பனாக நான் முன்வைக்கும் ஆலோசனை இது..

kailash,hyderabad said...

தமிழ் மணம் பிராப்ளம் சரியாயிருச்சு.ஓட்டு போட்டாச்சு.

மரா said...

@ ஸ்டார்ஜன்
முதல் வருகைக்கு நன்றி. பாருங்க பாஸ்.உங்களுக்கு பிடிக்கும்.

மரா said...

@ ஆதவன்
நன்றி பாஸ்.

@ கைலாஷ்
வருகைக்கு நன்றி. எனக்கே தமிழ்மணத்திலே ஓட்டுப் போட த்ரியாது பாஸ்.

@ சந்திரமோகன்
//இத் திரைப்படங்களை பற்றிய ஆழமான , குறிப்பாக அரசியல் , கலாசாரம் சார்ந்த பார்வை இன்னும் தேவை என்று தோன்றுகிறது .//
கண்டிப்பாக ஏற்றுக்கொள்கிறேன். நான் ஏதாவது சொல்ல நினைத்து அது தவறாகப் போய்விட்டால் சிக்கலாகிவிடும்...ஆகையால் கொஞ்ச நாளைக்கு இப்படி எழுதுகிறேன். நன்றி.

Ashok D said...

ஏற்கனவே எஸ்.ராமகிருஷணன், பட்டர்பிளைசூர்யா ரெவியூக்களை படித்தும் இது நல்லாயிருந்து மயில். நன்றி!

மரா said...

@ D.R.Ashok
வாங்க விந்தைக் கவிஞர் அசோக்.புக் ஃபேர்ல பாத்தது.ரொம்ப நன்றி.