Thursday, February 11, 2010

காதல்- காற்றாய் சுவாசமாய் WindStruck

                                                                              - மயில்ராவணன்

 அணு அணுவாய்ச் சாவதென
முடிவெடுத்தப் பிறகு
காதல் சரியான வழிதான்
                  - அறிவுமதி

கொரியத் திரைப்படங்களைத் தவிர்த்து உலக சினிமாக்களை லிஸ்ட் பண்ணுவது ரொம்பக் கஷ்டம்.முக்கியமாக கடந்த பத்து ஆண்டுகளில் வந்த படங்களை வைத்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. தமிழ் சினிமாக்களில் வரும் சில பல காதல் காட்சிகள் இவ்வகைப் படங்களிலிருந்து எடுத்தாளப்பட்டவைதான்!, முக்கியமாக 2001ல் வெளியான ‘My Sassy Girl' (பாக்காதவங்களுக்கு சொர்க்கம் கிடையாது!)

அப்படத்தப் பாத்துட்டு அந்த நாயகியின் நிழற்படத்தை மூன்று மாசம் என் மடிக்கணினியின் 'wallpaper’ ஆக வைத்திருந்தேன்.. அவ்வளவு அழகு!!இயக்குனர் 'Kwak Jae-yong' கொரிய சினிமாவின் குறிப்பிடத் தகுந்த ஒரு ஆளுமை.’Windstruck' படம் ‘My Sassy Girl-2' அப்பிடின்னு பொத்தாம் பொதுவாச் சொல்ல முடியாது. சில காட்சி ஒற்றுமைகள் உள, இயக்குனர் அவரே இருபடத்திற்கும்.

கடைசிவரைக்கும் இந்தப் படத்தப் பத்தி சொல்லவே இல்லையே.. சிம்பிள் ஸ்டோரிங்க. கதைநாயகி க்யூஞ்சின்(Jun Ji-hyun) நேர்மையான போலீஸ் அதிகாரி. கதைநாயகன் ம்யூங்வூ-கோ(Jang Hyuk) அப்பாவி இயற்பியல்ஆசிரியர். 

தவறுதலாக இருமுறை நாயகனைக் கைது செய்கிறாள். ஒருதடவை ஜேப்படித் திருடனென்று, மறுமுறை அவன் வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு ஹேண்ட்பேக் கிடக்கு, என்னடா இதுன்னு பாக்குறான் ‘வேட்டையாடு விளையாடு’கமல் மாதிரி ‘நான் அப்பவே நெனச்சேன்னு’ சொல்லி திரும்ப போலீஸ் ஸ்டேசனுக்கு அழைச்சிட்டு போயிருது அந்தப்பொண்ணு. 

நல்லவேளை ஒரிஜினல் திருடனை அதற்குள் பிடித்து விடுகிறார்கள். அங்கே ஒரு சின்ன சம்பவம் . நாயகியை உள்ளூர் தாதா காவல்நிலையத்தில் வைத்து அறைகிறான்.  நாயகன் தொண்டைத் தண்ணி போகக் கத்தி பெரிய ரவுடியாக நடித்து நாயகியை அவமானப்படுத்துபவனை துப்பாகியைக் காட்டி ஓட வைக்கிறான். அப்பிடியே அவனை விட்டுவிட்டு கிளம்பி போய்விடுகிறாள் நாயகி.

நாயகன் கடுப்பாகி,’ஒரு ஸாரியாவது சொல்லலாம்ல’ எனக்கேட்கிறான்.  அதுக்கு நாயகி ’கொரியால எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஸாரிதான். வேணுமின்னா உன் பேரை ‘ஸாரின்னு’ மாத்திக்க..கூப்பிட முயற்சி பண்றேன்னு ’அலப்பறையைக் குடுக்கிறாப்ள. அதுலப் பாருங்க... அடுத்த காட்சியில கைவிலங்குல பஞ்சும்,நெருப்பும் ஒருநாள் பூரா (அதாங்க. ஹீரோவும், ஹீரோயினும்) ஒண்ணாத் திரியிறாங்க....எதுக்குன்னு தெரிஞ்சிக்க படத்தப் பாருங்க..காதல் பிறந்து விடுகிறது.

இந்தக் காட்சிகள், நாயகி நாயகனின் பள்ளிக்கு போய் மாணவிகளிடம் சிற்றுரை ஆற்றுவது, அதற்கப்புறம் வரும் அனைத்துமே கண்களுக்குக் குளிர்ச்சி..அதுவும் மழையில் ஆடும் டூயட் அருமையான புதுக்கவிதை.

கொஞ்ச நாளுக்கு அப்புறம் நாயகன் ஒரு ஜீப்பில் நம்ம ‘தமிழ்ப்படம்’ சிவா மாதிரி நாயகியுடன் சுற்றுலா செல்கிறான். ஒரு பெரிய மலையின் உச்சிக்கு செல்கின்றனர். இயற்கையை ரசிக்கின்றனர் (நம்புங்கப்பா!). வழக்கம்போல ஒரு விபத்து,நாயகி நாயகனைக் காப்பாற்றுகிறாள். அதன்பின் வரும் காட்சிகள் மனதை பெரிதாக பாதித்ததால் அதை சொல்லி உங்களையும் 
அழுவாசியாக்கப் போவதில்லை.படத்தின் வசனங்களும்,காட்சியமைப்புகளும், பிண்ணனி இசையும்,எடிட்டிங்கும் அவ்வளவு அருமையா இருக்கும்.

அப்புறமென்ன வழமைப் போல அவுட்டோர் சூட்டிங்தான்.வெறும் பாட்டு, காதல்னு இருந்தா படம் எப்புடி?முதல்பாதி முழுவதும் இப்படிப் போக, இரண்டாம் பாதி கொஞ்சம் மனசைக் கனக்க வைக்கும் துயரங்களாகவும், சம்பவங்களாவே வரும்.

ஒருவரின் மீது அளவுகடந்த பாசம் வைத்தோமானால் பின் அவரின் பிரிவு நம்மை எந்தளவு துயரத்தில் ஆழ்த்தும் என்பது இப்படத்தைப் பார்த்தால் விளங்கும். காதலிக்கும், காதலித்த அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காதல்காவியம் தான் இது.
வழமைப்போல் இப்படத்தின் மேலதிக விவரம் இங்கே
வழமைப்போல் இப்படத்தின் டிரைலர் இங்கே

டிஸ்கி:
  காதலனை காற்றோடு ஒப்பிட்டு அவனுக்கு நம் மனதில் ஒரு நீங்கா இடம் கொடுத்த இயக்குனர்க்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.என்ன படத்தப் பார்த்துவிட்டு நானும் வீட்டில இருக்கிற காகிதங்களிலெல்லாம் காத்தாடியும், விமானமும் செய்ய ஆரம்பித்துவிட்டேன். படத்த அப்பிடியே தமிழ்ல ரீமேக்கினாலும் நூறு நாட்கள் ஓடும். காதலர்தினத்துக்கு என்னால முடிஞ்சது இப்பட விமர்சனம்.

22 comments:

ஆர்வா said...

அவ்ளோ அழகாவா இருக்கு. ட்ரை பண்ணுவோம் பார்க்கிறதுக்கு

மரா said...

@ கவிதை காதலன்
அருமையான படம் நண்பரே.டிவிடி கிடைச்சா பாருங்க.வருகைக்கு நன்றி.

Chitra said...

கொரிய மொழியில் ஒரு தமிழ் படம். ha,ha,ha,ha.....

கே.என்.சிவராமன் said...

சமீபத்தில்தான் இந்தப் படத்தை பார்த்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மரா said...

@ சித்ரா
முதல் வருகைக்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.

Paleo God said...

ஒருவரின் மீது அளவுகடந்த பாசம் வைத்தோமானால் பின் அவரின் பிரிவு நம்மை எந்தளவு துயரத்தில் ஆழ்த்தும் என்பது இப்படத்தைப் பார்த்தால் விளங்கும். காதலிக்கும், காதலித்த அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காதல்காவியம் தான் இது//

இது எவர் கிரீன் டாப்பு..:))

மரா said...

@ பைத்தியக்காரர்
வாங்க.வாங்க.கருத்துக்கு ரொம்ப நன்றி.

மரா said...

@ ஷங்கர்
ரொம்ப யதார்த்தமான படம் இது தோழரே.பாசத்திற்கு நன்றி

butterfly Surya said...

கொரிய மொழி படங்களில் நிறைய மொக்கையும் உண்டு.

அது தவிர கதையை டமால்ன்னு முடிச்சிடுவாங்க.. பல தடவை ஏமாந்து போயிருக்கேன்.

இந்த படம் பார்க்க முயல்கிறேன்.

நன்றி.

மரா said...

@ butterfly Surya
நீங்க சொல்றது உண்மைதான். இந்தப்படம் உங்களை ஏமாற்றாது.நன்றி.

மணிஜி said...

டிவிடி கொடு கண்ணா!

அண்ணாமலையான் said...

உங்கள நம்பி பாக்கறேன்..

மரா said...

@ தண்டோரா
கண்டிப்பாத் தாரேன். நன்றி.

@ அண்ணாமலையான்
அவசியம் பாருங்க பாஸ்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

சுவைபட எழுதியிருக்கிறீர்கள். காதல் என்றாலே சுவைதானா!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

படம் அருமையா இருக்கோ இல்லையோ உங்க விமர்சனம் சூப்பரோ சூப்பர் . நல்ல விமர்சனம் .

படம் பாக்கலாமுன்னு சொல்றீங்க . ரைட் .

M.S.R. கோபிநாத் said...

நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.

மரா said...

@ கோபிநாத்
நன்றி கோபி தங்கள் வருகைக்கு.

kailash,hyderabad said...

தல.பதிவ காதலர்தினத்துக்கு dedicate பண்ணி காதலர்கள் மனசில இடம் புடிச்சிட்டிங்க.விமர்சனம் ரொம்ப நல்லாருக்கு.
இந்த படத்தின் heroine ரொம்ப அழகு. படத்தில் அதனுடைய குழந்தைத்தனமான முகமும் நல்ல நடிப்பும் பிளஸ்.
பின்பகுதி கொஞ்சம் சென்டிமெண்டில் மெதுவாக போனாலும் படம் முழுவதும் இயல்பான நகைச்சுவையாக இருந்தது.
சில சீன்கள் அறிமுகமானதாக இருந்தாலும் அடுத்து இப்படித்தான் போகும் என்று எதிர்பார்த்தால் படம் வேறு மாதிரி போனது.பட்டாம்பூச்சி சார் சொன்ன மாதிரி முடிவு என்னவோ எனக்கு பிடிக்கலை.ஆனாலும் குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு நல்ல நகைச்சுவை படம் இது,

அப்புறம் பார்மாலிட்டி டன்.

மரா said...

@ kailash
ரொம்ப நன்றி நண்பரே.

Cable சங்கர் said...

my sassi girlஐ நிறைய பேர் முயற்சி பண்ணி இதுவரை தோல்விதான் அடைந்திருக்கிறார்கள். ஹிந்தியில் அப்படியே ஒரு படத்தை எடுத்தார்கள் நானும் பார்த்தேன் இந்த அளவுக்கு இல்லை.

கருந்தேள் கண்ணாயிரம் said...

இந்தப் படத்த பத்தி கேள்வி ஞானம் தான் . . இன்னும் பார்க்கலா. . ஆனா, இந்தப் பதிவ படிச்சவுடனே, பார்த்தே தீரனும்னு முடிவு பண்ணிட்டேன் . .ஏல . . எட்றா அந்த டி வி டி ய . . !!!

Unknown said...

Nice review! super movie!! :)