-மயில்ராவணன்
பெரிய இடங்களில் நடக்கும்போது மீடியாவின் வெளிச்சத்தில்
விழும்போது, முக்கியமாகிப் போய்விடுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
டோனி ப்ளேர் தான் வெற்றி பெற்று பிரதமரானதை அந்த மகிழ்வான செய்தியை ராணி எலிசபெத்திடம் தெரிவிக்க, அவருடைய பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகிறார். உயர்ந்த
அந்தஸ்த்தில் உள்ளவர்களுக்கு கூட, அரண்மனையில் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி விளக்கப்படுகிறது. இது நாம் நினைப்பது போல சாதாரண “புரோட்டாகால்” அல்ல.
இந்தக் காட்சிகள் ரொம்ப அருமையாக எடுக்கப்பட்டிருக்கும். ராணியின் உதவியாளர் கூறும் சில வரிகள் :
-- Its not 'mom' as in 'farm'
-- It is 'mam' as in 'ham' (hamilton!!)
ராணிக்கும் டோனிக்குமான சிறு உரையாடல்:
Tony blair -- I've been elected as a 'Prime minister"
Queen -- you've been elected to work under me
Tony blair -- ஈ ன்னு முழித்து சமளித்து ஒருவகையாச் சிரிக்கிறான்.
Queen -- you are customised to say 'yes' Mr.Blair
பாரீஸில் டோடி ஃபயத்துடன் ஹோட்டலிலிருந்து வெளியேறி பயணிக்கும்போது,பாப்பராஸி என்றழைக்கப்படும் “Gossip”
ஃபோட்டோகிராபர்களால் துரத்தப்பட்டு, பாலத்தின் தூண்களில் கார் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இறந்து போகிறார்.
இந்தச் செய்தியை ஜான்வரின் என்ற அந்தரங்க காரியதரிசியின் மூலமாக எலிசபெத் அறிந்து கொள்கிறார். மொத்த குடும்பமும் இது ஏதோ மூன்றாவது குடும்பத்தில் நடந்த சம்பவம் போல, இது தொடர்பான செய்திகளை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கிலாந்தின் முக்கியமான, தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார் என்றால் அது மிகையல்ல. இவருடைய வேல்ஸ் அறக்கட்டளை மூலம் பல்லாயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் மருத்துவ வசதி வழங்கிக் கொண்டிருந்ததன் மூலம் புகழேணியின் உச்சியில் இருந்தார். சார்லசும், டயானாவும் விவாகரத்து பெறுவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்பவர்களும் உண்டு.
அதே நேரத்தில் ஒட்டுமொத்த UKவும் டயானாவின் மறைவுக்கு எலிசபெத்தின் “reaction"ஐ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. ஆனால் சார்லசுடனான விவாதத்தின் போது, இது டயானாவின் சொந்த விசயம்,குடும்ப விவகாரம் என்றும் அதில் தன்னுடைய வருத்தம் கலந்த வார்த்தைகளோ, செயலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும், ஆதலால் தமது குடும்பத்தினர் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று கூறிவிட்டு குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்றுவிடுகிறார்.
இதனை அறிந்து கொண்ட லண்டனின் முக்கிய நாளிதழ்கள் டயானா விவாகரத்து ஆகியிருந்தாலும் கூட,ஒரு
காலத்தில் ராணி எலிசபெத்தின் குடும்பத்தின் முக்கிய
அங்கத்தினராக இருந்த காரணத்தால் நிச்சயம் இதற்கு, பக்கிங்ஹாம் அரண்மனையும், ராணியும் இரங்கலைத் தெரிவிக்க வேண்டுமென சூடாக செய்தி வெளியிட்டு கடிந்து கொள்கின்றன.
இது அப்போதைய பிரதமர் டோனி பிளேருக்கு சவாலான தலைவலியாக உருப்பெற்று
வருகிறது. இதைத் தொடர்ந்து, ராணியை டெலிபோனில் தொடர்பு அறிக்கை மற்றும் இரங்கலை தெரிவிக்குமாறு கோருகிறார்.ஆனால் எளிதில் இவருக்கு கட்டுப்படாத கோடாலியாக எலிசபெத் வலம் வருகிறார்.
கடைசியில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து
தொலைக்காட்சி மூலமாக தனது இரங்கலையும், வருத்ததையும் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறார். இதன் மூலம் தன் புகழுக்கு நேரவிருந்த கலங்கத்தை துடைக்கிறார்.
உண்மையில் இந்த சம்பவத்தின் மூலம் வெற்றி பெற்றது அப்போதைய பிரதமர், டோனி பிளேர் தான். தான் ஒரு பிரதமர் என்பதையும் தாண்டி அலட்சியப்படுத்தப் படும்போது அதைக் கண்டுகொள்ளாமல், அருமையான பேச்சுத் திறமை, செயல் திறன் ஆகியவற்றின் மூலம் யாருக்கும் அசையாத பக்கிங்ஹாம் ராணியையே அசைத்த பெருமை இவருக்குத்தான்.
மேலும் இதனால் ஆரம்பத்தில் ஆத்திரம் அடைந்த ராணி பின்னாளில் நடந்தவை அனைத்தும் தனது நன்மைக்குத்தான் என்று உணர்ந்து தோட்டத்தில் டோனி பிளேருடன் நடந்து செல்லும் போது விவரிக்கிறாள்.
அதிகார உணர்வுகளோடு வாழ்ந்த ஒரு மாமியாரையும், உலக மக்களின் நன்மைக்காக வாழ்ந்த மருமகளையும், நாட்டிற்காக தன்னையும் தாழ்த்திக்கொண்டு, ராணிக்காக வாதாடிய ஒரு பிரதமரையும் இந்த படத்தில் மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார் இக்காவியத்தை இயக்கிய ஸ்டீபன் ஃப்ரீயர்ஸ்.
அடிப்படையில்,டயானாவை வெறுப்பவராக தன்னைக் கட்டிக் கொள்ள முயலும் ராணி(மாமியார்), உறங்க முடியாமல் இரவில்,தொலைக்காட்சியில், டயானா தொடர்பான செய்திகளை காணும் போதும், காட்டில் தனியாக வளைய வரும் மானை தப்பித்துப் போகும்படி துரத்தும் நேரத்தில் டயானாவை நினைத்துக் கொள்ளும் நேரத்திலும் ‘கல்லுக்குள் ஈரம்’ இருப்பதை உணர்த்துகிறார்.
வழமைப் போல் இப்படத்தின் மேலதிக விவரம் இங்கே
வழமைப் போல் இப்படத்தின் டிரைலர் இங்கே
டிஸ்கி:
பிரிட்டிஷ் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முயல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டியத் திரைக் காவியம்.ராணி எலிசபெத்தாக நடித்திருக்கும் “ஹெலன் மிரென்” அப்பிடியே எலிசபெத்தாகவே வாழ்ந்திருப்பார்.டோனி ப்ளேராக வரும் மைக்கேல் ஷீன் சரியானத் தேர்வு. சார்லசாக வருபவர், ராணியின் கணவர், உதவியாளர்,டோனியின் துணைவி அனைவரும் அப்பிடியே அச்சு அசலாக இருப்பர், நம் மனதில் புகுந்து கொள்வர். ரொம்ப நல்ல படம், சுறுக்கி எழுத மனமில்லை. முழுசாப் படிச்சு காமெண்ட் போடுங்க நண்பர்களே.....
19 comments:
ரொம்ப நல்ல படம் நண்பா
ஃபார்மாலிட்டி டன்
இன்னொரு படம் எங்க?
உங்கள் விமர்சனம் மிக நேர்த்தியாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.
@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
நன்றி அண்ணே..அவசியம் பாருங்க இப்படம்.
@ சைவக்கொத்துப்பரோட்டா
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
இப்ப தான் பார்த்தேன் . .ரொம்ப நல்ல பதிவு . . வீக் எண்டு ஆனாலே பிசியா போயிருது வாழ்க்க . . :-) அதுனாலதான் இந்த ரொம்ப லேட்டான பின்னூட்டம் (ஆனா எதுலையுமே ஓட்டுப் போடா முடியலையே ஏன் ?)
விமர்சனம் அருமை. கண்டிப்பாக பார்கிறேன்
நண்பரே,
அழகானதொரு விமர்சனம்.
அருமையான விமர்சனம்.
கொஞ்சம் பிசகினாலும் டாகுமெண்டரியாக மாறிவிடக்கூடிய அபாயமான கதையை, திரைக்கதை மூலம் அற்புதமான காவியமாக நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் பீட்டர்மார்கன் மற்றும் இயக்குனர் ஸ்டீபன் ஃப்ரீயர்ஸ்க்கு ஒரு ராயல் ஸல்யூட் அடிக்கலாம் இப்படத்தை நமக்கு தந்ததற்கு.
..........மிக பொருத்தமான விமர்சனம். அருமை.
உங்க விமர்சனம் மிக அருமை..
மகளிர் தின வாழ்த்துகள்
மிக நன்றாக எழுதி இருக்கின்றீர்கள் மயில்ராவணன்
மயில் ராவணன் ரொம்ப அருமையான விமர்சனம் நல்ல பார்வை உங்களுக்கு ..ஆச்ச்ர்யத்துடன் படித்தேன்
அவசியம் பார்த்துடுறேன்.
குட் பாய் !
அருமையான விமரிசனம். நன்றி பகிர்ந்தமைக்கு
@ கருந்தேள்
நன்றி வருகைக்கு..
@ ரோமியோ
குடும்பத்தோட பாருங்க.நன்றி
@ கனவுகளின் காதலன்
நன்றி நண்பரே
@ இராமசாமி கண்ணன்
நன்றி முதல் வருகைக்கு
@ சித்ரா
வருகைக்கு நன்றி
@ ஸ்டார்ஜன்
நன்றி நண்பரே
@ உயிரோடை
முதல் வருகைக்கு நன்றி.’நீர்க்கோல வாழ்வை நச்சி’ படித்துக் கொண்டிருக்கி
றேன்.
@ தேனம்மைலெட்சுமணன்
வருகைக்கு நன்றி.
@ M.M.அப்துல்லா
அண்ணே வாங்கண்ணே.
@ தண்டோரா
என்னையெல்லாம் மறந்துட்டீகளோன்னு நினைச்சேன்.
@ வானம்பாடிகள்
முதல் வருகைக்கு நன்றி.அடிக்கடி தலையைக் காட்டுங்க இங்கிட்டு.
Post a Comment