Sunday, March 14, 2010

என்னை மன்னிச்சிடுங்க....

                                                                     மயில்ராவணன்
                       அவர்கள் பள்ளித்தோழிகள். மாலா,விமலா. இருவருக்குமே ‘லா’ என்கிற எழுத்தில் பெயர்கள் முடிவடையும் ஒற்றுமையுயை நீங்கள் கவனிக்கவும். மாலா நல்ல துட்டு பார்ட்டி.விமலா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்.இவள் ஒரு ஓடுகாலியும் கூட.ஒரு பெண்ணைப் பற்றி எடுத்தவுடன் மயில்ராவணன் வலைப்பூ நடத்தும் அடியேன் தரக்குறைவாக பேசக்கூடாது தான்.


               இருந்தாலும் இந்த விமலா இருக்காளே பத்தாவது 
லீவுல ஒரு ஓட்டம் ஒரு பையனுடன் ஓடிவிட்டு பைசா பற்றாக்குறையால் வீடு திரும்பியவள்.காதல் வெற்றியடைய வேண்டுமின்னா பைசா பிரச்சனை வரவே கூடாது. பைசா பிரச்சனை வந்ததென்றால் அந்த இடத்தில் காதல் போய் விடுகிறது.


இந்த விமலா பின்னர் மூன்று வருடங்கள் கழித்து வீட்டார் பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு குழந்தை ஒன்று பெற்று சுகமாயிருக்கிறாள். மாப்பிள்ளை கான்வெண்ட் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக இருக்கிறான்.பெண்குழந்தை அரசாங்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறது.மாலா விசயத்திற்கு வருவோம். 


               மாலாவின் கணவர் டாக்டர் ஷங்கர். சொந்தமாக மருத்துவமனை இல்லை என்றாலும் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்றில் பொது மருத்துவராக இருக்கிறார். எலும்புமுறிவு சிகிச்சைக்கான நிபுணரும் கூட.சிற்றிதழ்கள் படிக்கும் டாக்டர். சமீபத்தில் அவர் கையில் நான் பார்த்த சிற்றிதழ் ‘அகநாழிகை’. பாருங்கள் எப்படி கதை போகிறதென்று!! 


மாலாவுக்கு ஒரே பெண்குழந்தை யூகேஜி முடித்துவிட்டு first standard போகிறாள். இவள் படிக்கும் கான்வென்ட் ஸ்கூல் வேன் டிரைவர் தான் விமலாவின் ஹஸ்பண்ட். எப்புடி! புதுசாக் கத எழுதும்போது இப்படி எல்லாம் கொண்டு வந்து ஒன்று சேர்க்க வேண்டும்.


மாலாவும் விமலாவும் திடீரென சந்தித்துவிட்டார்கள். விமலாதான் எதேச்சையாக அந்த வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மாலாவைப் பார்த்து சந்தேகமாய் அருகே சென்று முடிவு செய்தாள். இருவரும் கட்டி அணைத்துக் கொண்டார்கள். மாலா விமலாவை வீட்டினுள் கூட்டிசென்றாள்.உள்ளே திருமண போட்டோவில் டாக்டர் ஷங்கர். 


                  இவரா உன் கணவர்.அதே ஹாஸ்பிடலில் தான் நர்ஸாக இருக்கிறேன். இவர் ஒரு தப்பான ஆள் ஆயிற்றே. நர்ஸ் ப்ரியாவோடு கொஞ்சி கொஞ்சி பேசுபவர்..”ஜொள்ளு மன்னன்” என்று தீப்பெட்டி இல்லாமலேயே சிறப்பாக பற்றவைத்தாள் விமலா!பற்றவைத்தவள் மறுபடி சந்திப்பதாக கூறி சென்றுவிட்டாள்.


டாக்டர் ஷங்கர் தன் மாருதியின் முன்பக்கத்தில் நர்ஸ் ப்ரியாவோடு அரட்டைக் கச்சேரி போட்டுக்கொண்டு வண்டியோட்டிக் கொண்டிருந்தார். ”ப்ரியா நீ என் இறந்து போன தங்கை செல்வி மாதிரியே இருக்கிறாய்.நீ என்னை அண்ணா என்றே கூப்பிடு...ஹாஸ்பிடலில் சார் போடுகிறாய் இங்கேயுமா சார்?” என்றதும், “சரிங்கண்ணா” என்றாள்.


ரோட்டோரமாக பள்ளி வாகனம் ஒன்று குறுக்கே குழியில் விழுந்து கிடந்தது.  இவரும் வண்டியை ஓரம்கட்டினார்.ஒவ்வொரு குழந்தையாய் ஜன்னல் வழியாக தூக்கிக் கொண்டிருந்தனர். எந்த குழந்தைக்கும் பெரிதாய் பாதிப்பு ஒன்றும் இல்லை.வண்டி அப்பிடியே சாய்ந்திருக்கிறது!டிரைவருக்குத்தான் கால் முறிந்துவிட்டது! கூட்டத்தில் தன் குழந்தையையும் டாக்டர் ஷங்கர் கண்டார்.
* * * * * * * * * * * *
இந்தப் பாழாய் போன ஷங்கர் ப்ரியாவோடு எங்கே ஜல்சா செய்ய போய்விட்டாரோ! பள்ளி சென்ற குழந்தையை இரண்டு மணிநேரமாக காணவில்லை.ஹாஸ்பிடலுக்கு போன் போட்டாலும் யாரும் சரியாய் பதில் பேசமாட்டேன் என்கிறார்கள். ஷங்கர் செல் ஸ்விட்ச் ஆஃப் என்கிறது! அடி ப்ரியா உன் 
குரல்வளையைக் கடிக்காமல் விடமாட்டேனடி! என்று மாலா புலம்பிய சமயம் போன் ரிங் ஆனது. ஷங்கர் தான் ”குழந்தைக்கு தலையில் அடி” என்கிறான். ஹாஸ்பிடல் வரச் சொல்கிறான். ஐய்யய்யோ! என் செல்லத்திற்கு என்னவாயிற்று! ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் வந்தாள்!


* * * * * * * * * * * *
குழந்தை தலைக்கு கட்டுப் போடப்பட்டிருந்தது! இவளைக் கண்டதும் “மம்மி” என்று படுக்கையிலிருந்து கொண்டே கைநீட்டியது. ஓடிப்போய் அணைத்துக் கொண்டாள். வேன் கீழே சாய்ந்து விட்டது! டிரைவருக்கு கால் முறிந்து போனது,என்று சொன்னது. பிள்ளைக்கு ஒன்றுமில்லை என்றதும் மனம் 
ப்ரியாவுக்கு தாவியது! ஷங்கர் சட்டையை எட்டி பிடித்து கொண்டாள். எங்கே என் சக்காளத்தி? உனக்கு ஹாஸ்பிடலில் 
கம்பெனி கொடுப்பவள்? என்று எகிறினாள். டாக்டர் ஷங்கர் மனைவியை சமாதானப்படுத்த படாதபாடுபட்டார். ப்ரியா என் தங்கை என்றார்.செத்துப் போன என் தங்கை போலவே இருப்பாள் என்றார்.


அதே சமயம் ப்ரியா அறைக்குள் வந்தாள்.பார்த்ததும் அசல் செல்விதான் நேரில் வந்து விட்டாளோ? என்று தான் நினைத்தாள். “ஐயோ! எவளோ சொன்னாள்னு உங்களை பேசிட்டேனே...என்னை மன்னிச்சிடுங்க” என்று அழுதாள் மாலா! டாக்டர் தேற்றினார். ”அண்ணி பாப்பாக்கு ஒண்ணுமில்லை, 
கவலைப்படாதீங்க! என்றாள் ப்ரியா! பக்கத்து அறையில் கால்முறிந்த டிரைவரை பார்க்க, ஐயோ என்று ஓடிவந்தாள் நர்ஸ் விமலா! தன்வினை தன்னைச் சுடும்! சந்தேகக்கோடு அது சந்தோசக் கேடு! இரண்டு கருத்து சொல்லியாச்சு! உங்களிடமிருந்து விடை பெறுகிறான் மயில்ராவணன்.
                                  

21 comments:

Romeoboy said...

நீங்க சொன்னது இரண்டு கதை. எங்களுக்கு தெரியாம இன்னும் அதில் எத்தனை கதை இருக்கோ :))))

மரா said...

@ ரோமியோ
வருகைக்கு நன்றி. கதைக்குள் கதை..

Chitra said...

கதை(கள்) நல்லா இருக்குங்க. அப்படியே, கமலா, ரமலா, அமலா, நிர்மலா, கதைகளையும் சொல்லிடுங்க.

Paleo God said...

மன்னிப்பே கிடையாது..:)

geethappriyan said...

ஃபார்மாலிட்டீஸ் டன்

geethappriyan said...

ஆஆஆ....
இப்புடித்தான கதைக்குள்ள கதை வச்சி குழப்பனுமா?
சூப்பார்.
உண்மையிலேயே அந்த டாக்டரும் பிரியாவும் பாசமலர் படமா காட்றாங்க?
உண்மைய சொல்லுங்க அண்ணே.
========
:)

சைவகொத்துப்பரோட்டா said...

கலக்கல்.........நல்லா இருக்கு கதை.

டக்கால்டி said...

பல முடிச்சுகள்..அங்கங்கே ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்கின்றன...
கதை சுவாரசியம்!

Unknown said...

வாசித்தோம் ,ரசித்தோம்

அண்ணாமலையான் said...

கதைக்குள் கதையோ?

எறும்பு said...

கதைக்குள் கதை நல்ல கதை..
:)

எறும்பு said...

"என்னை மன்னிச்சிடுங்க...."

நான் ++ வோட்டு போட்டுட்டேன்


:)

மரா said...

@ சித்ரா
நன்றிங்க...அடுத்து சிக்கன்குனியா, மட்டன்குனியா கலந்து ஒரு கத எழுதி ரொம்ப நாளாச்சு...பப்ளிஷ் பண்ணிர வேண்டிதான்...

மரா said...

@ ஷங்கர்
வாங்க டாக்டர் ஷங்கர்.

@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
ஆரம்பக்காலத்துல எழுவுனதுண்ணே..

மரா said...

@ சைவகொத்துப்புரோட்டா
நன்றி நண்பரே.

@ டக்கால்டி
முதல் வருகைக்கு நன்றி நண்பரே

@ சிவசங்கர்
வந்து ரசித்ததற்கு நன்றி.

@ அண்ணாமலையான்
ஆமா பாஸ். நன்றி.

மரா said...

@ எறும்பு
மன்னித்துவிட்டேன்...சாந்தாமணி படிச்சீகளா?

பத்மா said...

நா இதுவரை இதனை திருப்பங்களுடன் இவ்ளோ அருமையா பாசத்தை சொல்ற கத படிச்சதே இல்ல .மணிரத்னத்தை பாத்தீங்களா சார் ? இல்ல இதுக்கு ராஜேந்திரன் தான் சரி காபி ரைட் வாங்கிடுங்க
ஆல் தி பெஸ்ட்

kailash,hyderabad said...

நல்லாருக்கு.

புலவன் புலிகேசி said...

பக்காத் தல...சூப்பரா சொன்னீங்க.

Thenammai Lakshmanan said...

உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா ...ஒரு கதைக்குள்ள எத்தனை ட்விஸ்ட் வைச்சு இருக்கீங்க மயில் ராவணன்... ஒரு மசாலா சினிமா பார்த்த மாதிரி இருக்கு ... அருமை..:)))

மரா said...

@ thenammailakshmanan
Thanx for your comments