Friday, March 26, 2010

கிணிங் கிணிங்



                                                                            மயில்ராவணன்

                             விடிகாலையில் முகம் தெரியாத இருட்டு! “கிணிங் கிணிங் கிணிங்” வெளியே பால்காரன் ஆனந்தனின் மணியோசை கேட்டு மளாரென எழுந்தாள் சந்திரலேகா! அம்மா எழுந்து போய் பால் வாங்கும் முன் இவளே சமையல்கட்டுக்குள் ஓடி தூக்குவாளியை எடுத்துக் கொண்டு கொலுசு ஒலிக்க வாசலுக்கு ஓடினாள். தூக்கு வாளியை நீட்டி பாலை வாங்கியவள் திரும்ப வீட்டினுள் வந்து சமையல்கட்டில் வைத்துவிட்டு படுக்கையில் குப்புற விழுந்தாள்.

                             சந்திரலேகா +2 பரீட்சை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தாள். படிப்பு படிப்பு என்றிருந்து விட்டு இப்போதுதான் காலைத் தூக்கத்தை சுகமாய் அனுபவிக்கிறாள்.

                           ஆனந்தனுக்கு வயது 26. பட்டப்படிப்பை முடித்துவிட்டு சும்மா இருக்காமல் வேலைக்கு எல்லாப் பக்கமும் அலைந்து தேடிக் கொண்டிருக்கிறான். அப்பா தான் இந்த நகர்புறத்தில் வீடு வீடாக சைக்கிளில் சென்று பால் ஊற்றிக் கொண்டிருந்தார். சும்மா இருந்து கிடப்பதற்கு பதிலாக இவனே அப்பாவின் சைக்கிளை இந்த ஒரு மாதமாக எடுத்துக் கொண்டான். காலை நேரத்தில் சைக்கிள் சவாரி விடுவது உடலுக்கும் நல்லதாகப் போயிற்று!

தேக ஆரோக்கியமே வெற்றியின் முதல்படி என்பது அவன் நினைப்பு. காலை நேரத்தில் இந்த நகர்புறத்தில் தங்களது வீட்டு நாய்களை சங்கிலியில் பிடித்துக் கொண்டு செல்லும் செல்வந்தர்களை கண்டால் இவனுக்கு சிரிப்புதான் வருகிறது. நாய்கள் தான் அவர்களை வாக்கிங் கூட்டிப் போவதால் நினைத்து சிரிப்பான்.

சந்திரலேகாவின் அம்மா.வீட்டோடு சரி.அப்பா பிரபல கம்பெனி ஒன்றில் சேல்ஸ் ரெப்பாக இருக்கிறார்.சந்திரலேகா வீட்டுக்கு ஒரே பெண். கண்ணே கண்ணு என்றுதான் செல்லமாய் வளர்த்தாள். சந்திரலேகாவிற்கு கேட்டது உடனே கிடைக்கும்.

சந்திரலேகாவின் அம்மாவிற்கு ஒரே ஆசை....தன் மகளுக்கு திருமணம் செய்து விட வேண்டும் என்பது.அதுவும் பால்கொண்டு வரும் ஆனந்தனுக்கே கொடுத்தால் என்ன என்று. ஆனந்தனை பற்றி அக்கம்பக்கம் பூராவும் விசரித்து தெரிந்து கொண்டாள். வீட்டுக்காரரும் எது சொன்னாலும் தலையை ஆட்டுபவர். நினைத்த மாதிரி திருமணம் முடிந்து விட்டதென்றால் சொந்தமாக பிஸினஸ் தொடங்கித் தரலாம், என்று முடிவு செய்திருந்தாள்.

அடுத்த நாள் காலையில் சந்திரலேகா பால்காரனின் கிணிங் கிணிங் சப்தத்திற்கு எழுந்திருக்கவில்லை. அம்மாதான் பாலுக்காக தூக்குவாளியோடு சென்றாள். ஆனால் அவனோ இவளுக்கு அதிர்ச்சியடையச் செய்யும் விதமாய் ஒரு தகவல் சொன்னான். அது- ”நாளையில் இருந்து நான் பால் கொண்டு வர மாட்டேன்”.உடனே ‘ஏன்’ என்று பதட்டத்தோடு கேட்டாள்.

”நான் ஒரு பொண்ணை உயிருக்கு உயிராய் விரும்புறேன்மா! வீட்டுல இதுபத்தி சொன்னேன். அப்பாவும் அம்மாவும் ரொம்ப கோபப்படறாங்க. அவளை என்னால மறக்கவும் முடியல.வேற வழி இல்லாம நாங்க ரெண்டு பேரும் ஊரை விட்டு போறதா முடிவு பண்ணி பேசி வச்சிருக்கோம். 

                   உங்ககிட்ட சொல்லிடலாம்னு தான் சொன்னேன்..” ஏமாற்றத்தை முகம் இருட்டில் சரியாய் அவனுக்கு காட்டித் தந்திருக்காது என்ற நம்பிக்கையில் ”உனக்கும் அந்த பொண்ணுக்கும் ஒரு குறையும் வராது..சந்தோசமா கூட்டிப் போய் குடும்பம் நடத்து ஆனந்து” என்று திரும்பினாள்.

அடுத்த நாள் பொழுது ஆனந்தனின் கிணிங் கிணிங் ஓசை இன்றித் தான் விடிந்தது! பறிகொடுத்தது போன்ற சோகம் அம்மாவிற்கு! சந்திரலேகா படுத்திருக்கும் இடம் பார்த்தாள். அங்கு வெறுமையாய் இருந்தது! சந்திரலேகா இல்லை! பதட்டமாய் எழுந்து விளக்கைப் போட்டாள். பாயில் ஒரு பேப்பர் மீது பேனா இருந்தது! அதை எடுத்துப் படித்தாள்.

”அம்மா, என்னை மன்னித்துவிடு! அப்பாவிற்கும் சொல்லி விடு! அவர், அப்பா அம்மாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி விடு சந்திரலேகா என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்கோ அந்த தைரியம் இல்லை. அவர் வீட்டில் சொல்லியே கோபப்பட்டார்களாம்.திட்டத்தை போட்டு விட்டோம். நான் அவருடன் செல்கிறேன்.”
இப்படிக்கு
சந்திரலேகா ஆனந்த்.

அடிப்பாவி! இந்தப் பூனையும் திருட்டுப் பால் குடிச்சிருச்சே! என்று கணவரின் அறைக்கு சென்றாள் “ என்னங்க ... நம்ம பொண்ணு” என்று கூறிக்கொண்டு.

17 comments:

Paleo God said...

கினி கினி ..:))

பேரெல்லாம் சூப்பரா பிடிக்கிறீங்கப்பு .:)

சைவகொத்துப்பரோட்டா said...

முடிவை பாதி படிக்கும்போதே
யூகித்து விட்டேன்!!
நன்றாக இருக்கிறது.

geethappriyan said...

மயில்,
கதை நல்லாருக்கு,
உண்மைக்கதையோ?:)))

kailash,hyderabad said...

intha puthu chanthiraleka kathai kooda nallarukke !

thodarattum.thodarttum.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

வேகமான கதை, மிக வேகமான இளைய தலைமுறை! பாராட்டுக்கள்.

Chitra said...

இந்தப் பூனையும் திருட்டுப் பால் குடிச்சிருச்சே! என்று கணவரின் அறைக்கு சென்றாள் “ என்னங்க ... நம்ம பொண்ணு” என்று கூறிக்கொண்டு.


........ சரி, சரி..... கதை நல்லா இருக்கு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வலைச்சரம் மூலமாக வந்தேன், ஸ்டார்ஜனுக்கு நன்றி


ம்.., சிலருடைய வாழ்க்கை அப்படி...,

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கதை; நல்லாருக்கு..

மயில்ராவணன், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மரா said...

@ ஷங்கர்
அது அப்பிடியே வெச்சிடுவேன்.ரொம்ப யோசிக்கிறதில்ல...நன்றி

மரா said...

@ சைவகொத்துப்பரோட்டா
முடிவு சிம்பிள் தான் தலைவரே..

மரா said...

@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
நான் எழுதுற எல்லாமே எங்க ஊர்லயோ,பக்கத்து ஊர்லயோ நடந்த விசயங்கள் தான் நண்பா..கொஞ்சம் கற்பனை கலந்துருவேன்...அம்புட்டுதேன்

மரா said...

@ கைலாஷ்
நன்றி வருகைக்கு.அடுத்து என்ன படம் போடலாம்?

மரா said...

@ கனவுகளின் காதலன்
நன்றி நண்பரே..

மரா said...

@ சித்ரா
நன்றி.

@ சுரேஷ்
பழனியிலிருந்தும்,வலைச்சரத்திலிருந் தும் வந்ததற்கு நன்றி.

மரா said...

@ ஸ்டார்ஜன்
மிக்க நன்றி வலைச்சர அறிமுகத்திற்கு.

துபாய் ராஜா said...

அருமையான கதை. எதிர்பாராத முடிவு அசத்தல்.

மரா said...

@ துபாய் ராஜா
நன்றி ராஜா.ரெஞ்சு எப்படி இருக்காங்க?!