மகனுக்கு அரைக்கால் டவுசர் என்றாள்
இல்லை முழுக்கல் டவுசர்தான் என்றேன்
நான் பட்ட கஷ்டம் அவன் படவேண்டாம் என்றேன்
அரசு பள்ளி என்றாள்
இல்லை தனியார் பள்ளி என்றேன்
நான் பட்ட கஷ்டம் அவன் படவேண்டாம் என்றேன்
கல்லூரி செல்ல சைக்கிள் என்றாள்
இல்லை மோட்டார் சைக்கிள் தான் என்றேன்
நான் பட்ட கஷ்டம் அவன் படவேண்டாம் என்றேன்
மகனுக்கு காதல் திருமணம் என்றாள்
இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என்றேன்
நான் படும் கஷ்டம் அவன் பட வேண்டாம் என்றேன்.
- மயில்ராவணன்
டிஸ்கி:
பார்க்கும்போதெல்லாம் எப்போ கவிதை எழுதப்போறீங்கன்னு கேட்டு என்னை கவிதை எழுத வைத்த கவிஞர் பலாபட்டறை ஷங்கருக்கு இக்கவிதை சமர்ப்பணம்.(இக்கவிதைத் தலைப்பு மட்டும் அவர் வெச்சது!!)
27 comments:
காதலர்கள் கோச்சுக்க போறாங்க
தலைப்பை மாற்றி சொந்த அறிவுன்னு வைங்க பாஸ் நல்லா இருக்கும் :)))))
அட, அடடா. ..... ஷங்கர் சார் இப்படி எல்லாம் தமிழ் தொண்டு ஆற்றுகிறார்!
உங்களுக்குள் இருக்கும் கவிஞரை தட்டி எழுப்பி விட்டு விட்டார்........... அருமை.
இனி மாறுவேஷத்திலதான் ஊருக்குள்ள திரியனும் போல..
--
சமர்ப்பணம்??? நோ நோ ஒன்லி பணம்..:)
நிறைய விஷயங்கள் உங்களிடம் இருக்கிறது இன்னும் சிறப்பா நிறைய எழுதுங்க.
நன்றி.
அருமை மயில்ராவணன். கலக்குறீங்க.
எனது வலைப்பூவீற்கு வருகை தந்து உங்கள் கருத்துகளை பதிந்ததார்க்கு நன்றி நண்பரே
பகுத்தறிவு கவிதை நல்லா இருக்கு.
மயில்,
கவிதை அருமை,சொந்த அனுபவமோ?
இல்லையே?!!!
தமிலிஷில் டிசைன் டிசைனா போட்டோ போட்டு கலக்குறீங்களே நண்பா.
ஃபார்மாலிட்டீஸ் டன்.
//மகனுக்கு காதல் திருமணம் என்றாள்
இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என்றேன்
நான் படும் கஷ்டம் அவன் பட வேண்டாம் என்றேன்.//
:)
நீங்களுமா.....
நண்பரே,
நீங்கள் தைரியமான ஆள்தான்:))
வலிக்காத மாதிரி எவ்ளோ நாள்தான் நடிக்கிறது
இல்ல !!!
அட கவிதையிலும் கலக்குறீங்க மயில் ராவணன்
@ அண்ணாமலையான்
கோச்சுக்கிட்டா நமக்கென்னா பாஸ்?
@ ரோமியோ
வருகைக்கு நன்றி.
@ சித்ரா
ஷங்கர் இன்னும் நிறைய தொண்டுகள் ஆற்றுகிறார். ஒருவேளை MLA எலக்ஷன்ல நிக்க போறாரோ என்னவோ?
@ ஷங்கர்
ஊக்கத்திற்கு நன்றி ஐயா.
@ செ.சரவணக்குமார்
வாங்க சரண்.நல்லா இருக்கீயளா?
@ லக்கி லிமட்
ரொம்ப சந்தோஷம் நண்பரே.
@ சைவகொத்துப்பரோட்டா
நன்றி நண்பரே.
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்த காதலு.
@ விசா
நன்றி முதல் வருகைக்கு.
@ ஜெட்லி
இப்போதான் எண்டராகியிருக்கோம்.
@ கனவுகளின் காதலர்
நன்றி நண்பரே.
@ ஸ்ரீநி
அதேதான்....
@ தேனம்மைலட்சுமணன்
எல்லாம் உங்க ஆதரவுதான்.நன்றி
நீங்க பட்ட கஷ்டம் யாரும் பட வேண்டாம்!
இனி யாருக்குமே பூமியில் கல்யாண்மே இல்ல!
//~~Romeo~~ said...
தலைப்பை மாற்றி சொந்த அறிவுன்னு வைங்க பாஸ் நல்லா இருக்கும் :))//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்.... :))
நலலாருக்கு மயில். ரொம்ப லேட்டா படிக்கிறேன்.
Post a Comment