Sunday, May 9, 2010

தட்ஸ் ஆல் Thats all

                                                -மயில்ராவணன்
         காதல் யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறது? என்னை
மட்டும் போடா மயி(ரு)லு என்று விட்டுவைத்து விடுமா என்ன? என்னையும் அது கப்பென்று பிடித்துக் கொண்டது! பின்விளைவு,முன்விளைவு எதுவும் தெரியாமல் நான் எக்கச்சக்கமாக இந்த சாயங்கால மாலைவேளையில் மாட்டிக் கொண்டேன்.

               எதிர்க்கே தெரியும் இந்த சாலையை எவ்வளவு நேரம் தான் தேமே என்று பார்த்தபடி இருப்பது? அலுப்பாகவும் இருக்கிறதுதான். கிழக்கும் மேற்குமாக தெரியக் கிடந்த இந்த வீதி அப்பிடியேதான் இருந்தது! வாகனங்களின் இறைச்சல்கள், சமயங்களில் சில நல்ல மனிதர்களும் கண்களுக்குத் தென்பட்டனர்.

         நான் உட்கார்ந்திருந்த இந்த திண்ணைக்கு நேர்பார்வையில தெருவிற்கு எதிர்புறம்(நீங்கள் எதிர்பார்த்தவண்ணம்!) அந்த வீட்டின் கதவு ரொம்ப நாழியாகவே திறக்கப்படாமலேயே இருந்தது! பார்த்துக் கொண்டே இருந்ததில் கண்களுக்கு எரிச்சல் வேறு. கண்களை இறுக மூடிவிட்டாலும் அந்த மூடப்பட்ட கதவு கண்ணுக்குள் தெரிவது மாதிரியே பழகிப் போய்விட்டது. கதவு இப்போதைக்கு திறப்பது மாதிரியே தெரியவில்லை.

                    ஒரு வேளை நான் நினைக்கிறேன் கதவு இப்போதைக்கு திறப்பது மாதிரியே தெரியவில்லை. ஒரு வேளை நான் நினைக்கிறேன் கதவு சுவராகவே ஆகியிருக்குமோ
என்று! ஆனாலும் காத்திருப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் இருக்கிறது! என்ன ஒரு அழகான சுகம். ஒரு மணிநேரம் ஓடிப்போனது தெரியவில்லை. ஒவ்வொரு கண காத்திருப்பும் சுகம்தான். சிகரெட்டுகள் எட்டு காலியாகி விட்டன. இனி ரொம்ப நேரம் இந்த இடத்தில் இருப்பது சரிப்படாது.

                     ரோட்டின் முக்கு வரை சென்று வர எண்ணி
திண்ணையை விட்டு எழுந்தேன். நான் எழுந்ததுமே அதே இடத்தில் படுத்துக் கொள்ள சிவந்த நிற பெட்டை நாய் ஒன்று காத்து நின்றது போலும். (இங்கிலீஸ்காரன் படம் பார்க்கலை நான்!!)

           சாயங்காலத்தை பொன்மாலைப் பொழுது என்பார்கள். ஒரு அழகிய பாடல் கூட ஒன்று உள்ளதே! “இது ஒரு பொன்
மாலைப்பொழுது... வானமகள் நாணுகிறாள்....! வைரமுத்து திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல் கூட அதுதானே! நான் திரைப்படத்திற்கு பாடல் எழுதும் காலம் ஒன்று வரும். அப்படி வந்ததென்றால் பொன்மாலைபொழுது என்று தான் முதல் வரியை எழுதி பலவரிகளை இந்த சந்தம் என்கிறார்களே ... அவற்றை எல்லாம் எழுத வேண்டும்.

         சாலை இப்போது கலகலப்புக்கு மாறி இருந்தது. வானம் போலவே பூமிக்கும் மஞ்சள் கலந்திருந்தது. நல்ல ரம்யமான மாலை என்று சொல்லிவிடுகிறேன். சென்னை மாதிரியான நகரங்களில் இந்த மஞ்சள் மலையை காதலி ஒருத்தியுடன் கழிக்க கடற்கரை தான் நல்ல இடமென்றாலும் அங்கேயும் மனுசப்பய கூட்டங்களின் இறைச்சலில் காதலியிடம் மஞ்சள் பற்றி பேச முடியாது.

        பேசினாலும் அவள் ‘கயிற்றைக் கட்டுகிறீர்களா?’ என்பாள்.
காதலிக்கும் சமயத்தில் காதலி ஒருவள் மஞ்சள் மாலைநேரம் பற்றி கவிதை பாடாமல் மஞ்சள் கயிற்றைப் பற்றி பேசினால் என்றால் என் காதுகளிலும் உங்கள் காதுகளின் துளைகளிலும் மஞ்சள் நிற புகை தான் குபுகுபுவென செல்லும்! பின்னர் ஒரே புகைமூட்டமாகி விடும்.

         யார் அது? அய்யோ தூரத்தில் வருவது அப்பாவின் நண்பரா
அது? அவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபடியால் நான் ரோட்டோரத்திற்கு போனாலும் இவர்கள் வேறு இம்சை! பார்த்தால் சும்மா விடுவார்களா? என்ன? ஏது? இந்த பக்கமா என்ன job? என்றே விசாரிப்பார்கள். அப்பாவிடம் வேறு மறக்காமல் சொல்லி விடுவார்கள் என்னமோ இதுதான் தலையாய கடமை போல! உங்க ஆளை போனவாரம் அந்த வீதியில் பார்த்தேனே!

              எல்லாம் வம்பு தான். காதல் என்றாலே ஆரம்பம் முதலே வம்புதான். வம்பு இல்லாத காதல் மொட்டைக் காதல்!
மொட்டைக்காதலை யாரும் விரும்புவதில்லை.அப்பாடா? அவர் போய்விட்டார். என்னை அவர் பார்த்ததும் பார்க்காததுபோல போயிருக்கலாம்!அக்கம் பக்கம் பார்த்துதான் காதலை டெவலப் செய்ய வேண்டும். என்னுடைய நண்பர் கார்த்திகேயன் அக்கம்பக்கம் பக்கம் அக்கம் பார்க்காமல் காதலை டெவலப் செய்ய போய்தான் குத்துப்பட்டான்.

      தெருமுனையில் பெட்டிக்கடைக்கு அருகே வந்து சேர்ந்தேன். கடைக்காரர் என்னைப் பார்த்து புன்னகையை சிந்தினார். சமீப காலமாக எனது நடவடிக்கைகளை அவர் உன்னித்து கவனித்திருக்க வேண்டும். அவரிடம் அடிக்கடி சிகரெட்டுகளை வேறு வாங்குவேன். நானும் புன்னகை ஒன்றை அவருக்கு பரிசளித்துவிட்டு சிகரெட் பற்றவைத்துக் கொண்டேன்.

         கடையில் தொங்கும் புத்தகங்களின் அட்டைபடங்களை மேலோட்டமாக பார்த்து ரசித்தேன். உள்ளே விசயம் இருக்கிறதோ இல்லையோ அட்டைகள் கலர் கலராக கவர்ச்சியாக இருந்தன! சாமியார் ஒருவர் மீது ஒரு பெண் கட்டிலில் முகம் காட்டாமல் சாய்ந்து காதல்? புரிவதை அட்டையில் போட்டிருந்தார்கள். நடிகைகள் சினிமாவில் தான் காதலிப்பார்கள் காசுக்காக! என்றே நான் விவரமாக
யோசித்து வைத்திருந்தேன். நிஜத்திலும் அவர்கள் காசுக்காக நடிப்பார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது. நான் நடக்கத் தொடங்கினேன்.

        பாழும் திண்ணை மறுபடியும் வந்துவிட்டது! நாய் என்னைக் கண்டதும்
மரியாதை நிமித்தமாக எழுந்து அகன்றது! கதவு இன்னமும் திறந்தபாடில்லை. மணி வேறு ஆறு இருக்கலாம். பஜாஜ் M-80ல ஒரு பால்காரன் ஹாரன் அடித்தபடி எதிர்வீட்டின் முன் நின்றான். அட இது நல்ல ஐடியாதான். ஆனா பைக் வேணுமே!
                                                                                         
        ஆவலாக நானும் நீங்களும் வெகு நேரமாக எதிர்பார்த்த கதவு திறந்தது! ரொம்ப நேரமாய் மேகங்களுக்குள் மறைந்து போன நிலா எட்டிப் பார்த்து பூமிக்கு வெளிச்சம் தந்தது போலிருந்தது! தமன்னா பால் சொம்போடு பால்காரனிடம் வந்தாள். எந்த நேரமும் தூக்கமா இவளுக்கு! முகம் வேறு வீக்கமாய் இருந்தது!

                   திண்ணையை அவள் பார்த்தது மாதிரி இருந்தது! நாலே எட்டில் வீதியைக் கடந்தேன். பால் ஊற்றிவிட்டு பால்காரன் நகர்ந்தான். ” தமன்னா... இந்தா புடி லெட்டரு. சாயந்திரமா நாளைக்கு கண்டிப்பா உன்னை வரச் சொல்லிட சொன்னான் ஃப்ராங்கி”.அவள் கையில் ஃப்ராங்கியின் கடிதத்தை  கொடுத்துவிட்டு நான் நகர்ந்தேன். Thats all.

35 comments:

பத்மா said...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
நல்லா இருக்கு

மரா said...

@ padma
thanks for your quick comments :)

King Viswa said...

கடைசியில் அது பிராங்கியின் கடிதமா?

Unknown said...

//எல்லாம் வம்பு தான். காதல் என்றாலே ஆரம்பம் முதலே வம்புதான். வம்பு இல்லாத காதல் மொட்டைக் காதல்!//

அடி வாங்கின அனுபவம்தான் கதை போல

உண்மைத்தமிழன் said...

தேவைதானா இது..?

ஏன் மயிலு.. உனக்கேத்த மயிலு இன்னுமா கிடைக்கலை..?

Unknown said...

Ungal naadai romba nalla irukku Romba naalaikku munnala eludhana kadhayaa..:-):-).. Sms kadithathai vilungi varudangal aagirathe.. Apo nenga youth ilaya..:-):-)

Unknown said...

Romba naalaikku munnala eludhana kadhayaa..:-):-).. Sms kadithathai vilungi varudangal aagirathe.. Apo nenga youth ilaya..:-):-)

மரா said...

@King Viswa
ஆமாம் சார். அவரும் ஒரு பதிவர் தான் :)

மரா said...

@ K.R.P.Senthil
பப்ளிக் பப்ளிக் :)

மரா said...

@ உண்மைத் தமிழன்
என் அப்பன் முருகன் அருளால் கிடைச்சுருச்சு. இது...இது...இது..

மரா said...

@ penamoodi
வாங்க தம்பி. வாழ்த்துக்கள். கடிதத்தில இருக்கிற காத்திரம் எஸ்எம்எஸ்ல,ஈமெயில்ல கிடையாது :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

ஃப்ரான்கி சாப்புட செம ருசியா இருக்குமே . . :-)

geethappriyan said...

ஹால்ஃப் இயர்லி எக்ஸாம் நன்றாக நடந்ததா?

geethappriyan said...

கதையும் அருமை போட்டோவும் அருமை

VISA said...

யார் அந்த லக்கி பாய் பிராங்க்கி

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

கதையின் ஊடே சில வரிகளில் உங்கள் கிண்டல் அருமையாக இருக்கிறது- தெருவில் சில நல்ல மனிதர்கள்,கதை சொல்பவரின் இடத்திற்காக காத்திருக்கும் நாய், அது அவரிற்கு தரும் மரியாதை, மஞ்சள் மகிமை என- ரசித்துப் படித்தேன்.

Chitra said...

Thats all??? ha,ha,ha,ha...

Paleo God said...

//VISA said...
யார் அந்த லக்கி பாய் பிராங்க்கி//

ரிப்பீட்டு :))))

சிவாஜி சங்கர் said...

//நாய் என்னைக் கண்டதும்
மரியாதை நிமித்தமாக எழுந்து அகன்றது! //

ஆஆஅஅஅஅவ்வ்வ்வ்உஉஉஉஊஊ.....

சிவாஜி சங்கர் said...

//கடையில் தொங்கும் புத்தகங்களின் அட்டைபடங்களை மேலோட்டமாக பார்த்து ரசித்தேன். உள்ளே விசயம் இருக்கிறதோ இல்லையோ அட்டைகள் கலர் கலராக கவர்ச்சியாக இருந்தன! சாமியார் ஒருவர் மீது ஒரு பெண் கட்டிலில் முகம் காட்டாமல் சாய்ந்து காதல்? புரிவதை அட்டையில் போட்டிருந்தார்கள். நடிகைகள் சினிமாவில் தான் காதலிப்பார்கள் காசுக்காக! என்றே நான் விவரமாக
யோசித்து வைத்திருந்தேன்//

என்ன ஒரு ஆராய்ச்சி.
எப்படின்னே இப்படி எல்லாம்.... :)

சிவாஜி சங்கர் said...

//ஃப்ராங்கியின் கடிதத்தை கொடுத்துவிட்டு நான் நகர்ந்தேன். Thats all./ தட்ஸ் ஆல்..???

அண்ணே....., எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தாங்குறீங்க நீங்க ரொம்ப நல்லவரு......

கிருஷ்ண மூர்த்தி S said...

ச்சும்மா தூது போனதுக்கே இப்படின்னா..நெசமாவே ஒரு பிகரைக் கணக்குப் பண்ண ஆரம்பிச்சுட்டா அவஸ்தை இன்னும் கூடும் போல இருக்கே!

:-))

மரா said...

@ கருந்தேள் கண்ணாயிரம்
அண்ணே, இது அந்த ஃப்ராங்கி இல்ல. ஒருத்தரோட பேரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்வ்வ்......

மரா said...

@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
ரொம்ப நன்றி உங்களுக்கும் தமன்னாக்கும் :)

மரா said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
//ஹால்ஃப் இயர்லி எக்ஸாம் //
28த் ஸ்டார்டிங்..

மரா said...

@ விசா
தெரியலையே பிராங்கி :) :)

மரா said...

@ கனவுகளின் காதலன்
உன்னிப்பாக கவனித்து கருத்து கூறியமைக்கு நன்றி நண்பரே! யாருமே கவனிக்கலையோன்னு வருந்தினேன்.

மரா said...

@ சித்ரா
யா......தட்ஸ் ஆல் as of now :)

மரா said...

@ சிவாஜி சங்கர்
நலமாக உள்ளீர்களா? பார்த்து ரொம்ப நாளாச்சு. ஊரார் லவ்வை நாம வளர்த்தாதான்..........

மரா said...

@ கிருஷ்ணமூர்த்தி
அடியேன் கிரகஸ்தன். பிகரா? அபச்சாரம்..அபச்சாரம்.

Jackiesekar said...

கதைய விட தமன்னா போட்டோ ரொம்பவும் புடிச்சி இருந்துச்சி...கதையும் சூப்பருப்பு

க ரா said...

நல்லாருக்கும் மயில் கதை.

மரா said...

@ ஜாக்கி சேகர்
ரொம்ப நன்றி.

@ ராமசாமி கண்ணன்
நன்றிங்க.

புலவன் புலிகேசி said...

என்ன கொடுமை மயில் இது...

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com