- கலாப்ரியா
கற்காலம்
இடறிய ஒவ்வொரு கல்லும்
சொல்லிப் போகின்றது
ஒரு நூற்றாண்டுக்கான
தன் கதையை
புண்ணியம் செய்தது
ரசனயானது
பாவம் செய்தது
தேவதை கல்
கன்னிக் கல்
பூக்களால் ஆன கல்
சொல்லித் தீராதது
கற்களின் வாழ்க்கை
எவற்றின் மிச்சமிது
என்ற என் கேள்விக்கு
அடுக்கிச் செல்கிறது
தன் புலம்பல்களை.
-----------------------------------------------------------
கவிதை போலும்
காலம் காலமாய் வாழும் அது
என்றாய் நகைத்திருந்தேன்
காவியம் போல அது
என்றாய் புன்னகைத்திருந்தேன்
பூவிலும் மெல்லியதது அது
என்றாய் சிறு இதழ் விரித்திருந்தேன்
சாவிலும் கூடவே வரும் அது
என்றாய் இறுகிய முகம் கொண்டிருந்தேன்
இறுதியில் நீ உமிழ்ந்து விட்டு போன
எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
கலங்கியது எனக்காக.
டிஸ்கி:
ரொம்ப நாளாச்சு வாங்கி. நேற்று படித்தவுடன் பிடித்து போயின கவிதைகள். ’அகநாழிகை’ வெளியீடு. கண்டிப்பாக வாங்கி படியுங்கள். அருமையான வரிகள்.
17 comments:
இரண்டுமே மிக அருமையான கவிதைகள்..
இனி கால் தடுக்கும் கல்லெல்லாம் ஒரு கதை சொல்லப் போகிறது ..
அருமையான் கவிதைபகிர்வுக்கு நன்றி தோழரே!!!
உங்களுக்கு வெளிவாரித்தட்டு தயார்.அதற்கு வெளிவாறிதுட்டு எடுத்து வைக்கவும்!!!:))))
உம் பதிவில் கும்மியிட முடியவில்லை,
ஐயா சாமி,
ஏன் இன்னும் மாடரேஷன் வித்திருக்கிறீர்,அதுதான் கருந்தேள் சொன்னதன் பேரில் மாடரேஷனை துக்கியாச்சுல்ல?நட்புக்கு மரியாதயில்லை?அதான் கருந்தேள் இருக்காப்லல்ல?:))எடும்
ரைட்டு...
ராங்கு..
மீ த எத்தனையாவதோ??
நபநம . . ;-)
மயில்.. ராவணன் பார்த்தாச்சா ;-)
அருமை. பகிர்வுக்கு நன்றி. :-)
வாழ்த்துகள் லாவண்யா.
பகிர்விற்கு நன்றி
@ கே.ஆர்.பி.செந்தில்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
@ கீதப்பிரியன்
துட்டு பெரிய விசயமேயில்லை..நீர் கொண்டு வாரும்.
மாடரேஷன் எடுக்கனுமா? இது ஆவுறதில்ல.
கும்மியா? அதுக்கு இன்னொரு பதிவு சொல்லிட்டு போடுறேன்.வந்து கும்முங்க.
@ கருந்தேள் கண்ணாயிரம்
ராவணன் பார்த்தாச்சு.மணியின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ்!!
@ சித்ரா
@ பட்டர்ஃப்ளை சூர்யா
நன்றி.
நல்ல பகிர்வு மயில்.
நன்றி மயில் பகிர்வுக்கு.
@ சரவணக்குமார்.செ
@ ராமசாமி கண்ணன்
நன்றி நண்பர்களே.
மிக்க நன்றி மயில்ராவணன் சார்
Post a Comment