பயணம்
பயணம் புறப்பட்டு
பாதி வழி வந்தால்,
உட்கார நிழலில்லை,
ஓய்வற்ற வழி,நடை.
அடுத்தவன் நிழலை
அண்டினால் அபாயம்,
எனது நிழலோ
எனக்கும் பின்னால்,
மரத்தின் நிழலோ
நெடுந் தொலைவில்;
நிற்கவா, ஓடவா?
நெருப்புக் கொதியில்
என்ன அமைதி?
தூரத்தில் தெரியும்
கானல் நீரை
நம்பி
நடக்க முடியுமா?
செல்லும் பாதை
சேணெடுந்தூரம்;
அல்லும் பகலும்
அடி வைத்தாலும்;
மீளாப் பயணம்
முடியுமோ விரைவில்.
- சுப.கோ.நாராயணசாமி
-----------------------------------------------------------------------------
பழம்பெருமை
குழம்பு மாங்கொட்டை
குலப்பெருமை பேசிற்று;
நட்டுவைத்துக்
காத்திருந்தேன்;
நெடுமரமும் மரக்கனியும்
நிழலாச்சு!
நெளிந்தது
- தி.சோ.வேணுகோபாலன்
நன்றி- தாத்தா சி.சு.செல்லப்பா
8 comments:
மக்கா அமசமான கவித ரெண்டு,பலே பலே.
யோவ் மாடரேஷனை இடுகாட்டி உன் பேச்சு கா!!!:)
இரண்டும் அருமை! இரண்டாவது மிக நெருக்கம்!
தூரத்தில் தெரியும்
கானல் நீரை
நம்பி
நடக்க முடியுமா?
..... அருமையாக எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்!
பயணத்துக்குப் பழம்பெருமை தான் பதிலோ?
மாங்கொட்டைக் கவிதை சொல்ல வந்ததைக் கொஞ்சம் தெளிவாகவே சொல்கிறது!
சூப்பர் ..
மக்கா ,கமெண்டு போட்டா அதை ரிலீசு பண்ணனும்,நீர் என்ன ஆண்டு இறுதி கணக்கா எடுக்குறீர்.குமைட்டுலையே குத்துவேன் வந்தால்.எத்தினி முறை என்ன பதில் சொல்றீர்னு பாக்க வர்ரது?
உண்மைய சொல்லிர்ரேன்.. எனக்குக் கவிதைகளைப் படிக்கத் தெரியாது ;-)
அதுவும் உரைநடைன்னு சொல்லிக்கினு, வேக வேகமா படிச்சிக்கினு போவேன்.. நல்லபடியா கவிதை படிக்க முயற்சி செய்யுறேன் ;-)
வேலை வாத்யாரே.. இப்பதான் பதிவே பார்த்தேன்.. என்ன கொடும இது !
முதலாவது கானல் நீர். ரெண்டாவது தற்பெருமை.. நல்ல பகிர்வு நன்றி மயில் ராவணன்
Post a Comment