Saturday, July 24, 2010

லேசாப் பறக்குது மனசு- சிகப்பு ஊதுபை

                                                                        --மயில்ராவணன்
         சனிக்கிழமை காலங்காத்தால ஒரு குட்டிப் படம் பார்த்தேன். முதல்முறை பார்த்தேன்.ஒன்றும் சிறப்பா இருக்கறாப்ள தெரியல.டிவிடி குடுத்த நண்பன் கோகுல்கிட்ட கேட்டா தனுஷ் மாதிரி ‘அது பார்த்தா புடிக்காது,பாக்க பாக்கத்தான் பிடிக்கும்னு சொன்னார்.என்னடா இதுன்னு ரெண்டு,மூணு தரம் பார்த்தேன்.

   இந்தப் படம் வெளிவந்த காலம், அதில் காட்டப்படும் தெருக்கள்,கடைகள்,சின்ன சின்ன விஷயங்கள் தான் இப்படத்தின் சிறப்பே.ஏனெனில் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டிருக்கிறது அந்நகரம்.இப்படம் ஒரு மிகப்பெரிய பதிவாக விளங்குகிறது. படத்தின் கதை ரொம்ப சிம்பிள்.
        
         படம் ஆரம்பிக்கிறது.சோகம் நிறைந்த மெல்லிய இசை நம் மனசுக்குள் எஸ்.ராமகிருஷ்ணன் வெயிலைப் பற்றி சொல்வது போல் படர்ந்து ஊர்கிறது! ஒரு பொடியன் சிறுபடிகளில் இறங்கி பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறான். போகிற வழியில் ஒரு கொடிக்கம்பத்தில் சிக்கியிருக்கிற ஒரு சிகப்பு நிற பலூனை, கம்பத்தில் ஏறி எடுத்து செல்கிறான்.

       அந்த பலூன் ஒரு நண்பன் போலவே அவன் எங்கெல்லாம் செல்கிறானோ, அதுவும் கூடவே செல்கிறது.ரொம்ப ஒற்றுமையாய் இருக்கின்றனர் இருவரும்.வீட்டில் மட்டும் அவன் பாட்டி(குண்டுப் பெண்) பலூனை உள்ளே அனுமதிக்காது வெளியே தூக்கி எறிகிறார், இருப்பினும் அது சன்னலுக்கு பக்கத்திலேயே காத்திருக்கிறது காதலனைப் போல.

     பள்ளியில் இவன் கூடப் படிப்பவர்கள்,அவன் தெருப் பிள்ளைகள் இந்த பலூனைப் பார்த்து ”இதை எப்படியாவது கைப்பற்றவேண்டும்” என எண்ணுகின்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் அவனால் தான் மாணவர்கள் கத்தி கூப்பாடு போடுகின்றனர் என்றெண்ணி அவனை ஒருநாள் முழுவதும் தனியறையில் அடைத்துவிடுகின்றார்.கதாநாயகியை தமிழ்பட கதாநாயகர்கள் காப்பாற்றுவதுபோல் இந்தப் பலூனும் அவரைச் சுற்றி சுற்றி வந்து கதவை திறக்கவைக்கின்றது.

            சில நேரங்களில் இவன் பலூனுடன் நடந்து செல்லும்போது அப்பாவோடு போகும் பையன் அழகிய பறவைகளை (இளைஞிகளைக்!!) கண்டால் ஒரு சிறுபார்வை விடுத்து உடனே தன்னிலைக்கு திரும்புவதுபோல் இந்த பலூனும் ஒரு சின்னபெண் ஊதா நிற பலூனுடன் அவனைக் கடக்கும் போதெல்லாம் பறந்து அருகில் செல்கின்றது, பின் திரும்ப இவனிடமே வருகின்றது.

     இப்படியே நாட்கள் ஓட ஒருநாள் இவனை அவன் தெருப் பையன்கள் ஓடி ஓடி விரட்டி பிடிக்கின்றனர்.எவ்வளவோ போராடுகிறான்.பலூனை பறக்கவிடுகிறான். திரும்ப அவன் கைக்கு அது வந்துவிடுமென்றெண்ணி(அதற்கு முன் பல தடவை பலூனைப் பறக்கவிடுவான், பிற்பாடு தானாக அவன் கைகளில் வந்தடைந்துவிடும் அது!)....ஆனால் அது எதிரிகள் கைகளில் சிக்கி கல்லடிபட்டு, ஓட்டை போடப்பட்டு உயிரிழக்கிறது.நம் இதயமும் கனக்க தொடங்குகிறது.

அழுது ஆர்ப்பாட்டம் பண்னுகிறான் சிறுவன்.இசை இந்த இடத்தில் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது.திடீரென அச்சம்பவம் நடக்கிறது. அந்த ஊரிலுள்ள அனைத்து பலூன்களும் அவனை நோக்கி பறந்து வருகிறது .....கட்டிய இடங்களிலிருந்து அறுத்துகொண்டு.

இது என்ன பெரிய காவியமென்கிறவர்களுக்கு சில தகவல்கள்:

 *  1956 ல் இப்படி ஒரு படம் எடுக்கனும்னு ஒருத்தன் சிந்தித்திருக்கிறான். அவர் இப்படத்தின் தயாரிப்பாளர், வசனகர்த்தா, இயக்குனர் ”ஆல்பர்ட் லெமோரிஸ்”.
         * 40 வயதிற்கு மேல் தான் இவர் இன்னிங்க்ஸே ஆட ஆரம்பிச்சிருக்கார். ஒரு நல்ல ஸ்டில் போட்டோகாரராகவும் , குறும்பட இயக்குனராகவும்தான் ரொம்ப காலம் இருந்திருக்கார்.யாரோ என்னைப் போன்ற நண்பர்கள் சொல்லி தான் திரைத்துறைக்கு வந்திருக்கார்.

          இப்படம் ஒரு அருமையான வரலாற்று ஆவணம்.ஏனெனில் இப்படத்தில் காண்பிக்கப்பட்ட பல விசயங்கள் இப்போது இல்லை. ஏகப்பட்ட விருதுகளையும் குவித்தது இப்படம்.

        இப்படத்தின் தகவல்கள் : ரெட் பலூன்
        முன்னோட்ட கானொளி : ரெட் பலூன்

டிஸ்கி:
    என்னாது எம்.ஜி.ஆர் செத்துட்டாரான்னு கொஞ்சம் பேர் கேக்குறது எம்பட காதுல விழுகுது. இது ரொம்ப காலத்துக்கு முன் எழுதி டிராஃப்ட்ல இருந்துச்சி. சரி வெளியிட்டிருவோமேன்னுதேன்.

45 comments:

க ரா said...

மயிலு டீவிடீய பத்திரப்படுத்தி வைங்க. அப்பாலிக்கா கலக்டு பண்ணிக்கறேன். நித்தி கேக்கறாருன்னு பெண்களுர் போறப்ப குடுத்துட்டு வந்துறாதீங்க...

King Viswa said...

இந்த படத்தை பத்தி நம்ம எஸ்ரா ஒரு மாதத்திற்கு முன்பு ஆனந்த விகடனில் எழுதி இருந்தார். அபோது பார்த்தது. மிகவும் நெகிழ வைத்த படம்.

King Viswa said...

பலூன் = ஊதுபை, சரிதானா?

மரா said...

@ இராமசாமி கண்ணன்
@ கிங் விஸ்வா

கண்கள் பனித்தது. இதயம் கனத்தது உங்கள் வருகையை எண்ணி.

மரா said...

@ இராமசாமி கண்ணன்

எல்லாம் பத்திரமா இருக்கும்ணே. நோ கவலை. பெங்களூருக்கு ‘நித்தி த்யான்’ செய்யதான் போறோம்ணே :)

மரா said...

@ கிங் விஸ்வா
எஸ்ரா எம்புட்டுபெரிய ஆளு. அவரும் உன்கள மாதிரி 7000டிவிடி வெச்சிருக்காராம். ஜெமோ வியந்து கூரினார் என்கிட்ட.

மரா said...

@ கிங் விஸ்வா
எஸ்ரா எம்புட்டுபெரிய ஆளு. அவரும் உன்கள மாதிரி 7000டிவிடி வெச்சிருக்காராம். ஜெமோ வியந்து கூரினார் என்கிட்ட.

மரா said...

@ கிங் விஸ்வா
ஊதுபை தமிழாக்கத்துக்கு பொறுப்பு ‘கனவுகளின் காதலன்’ தான். அவர்தான் சொன்னாரு!

மரா said...

@ கிங் விஸ்வா
போன வாரம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்...பாத்தீங்களா?

King Viswa said...

//கிங் விஸ்வா
போன வாரம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்...பாத்தீங்களா?//

மன்னிக்கவும் தல.

ரொம்ப லேட்டா தான் பார்த்தேன். அதான் கும்மியில வர முடியல. கொஞ்சம் கமிட்மென்ட் அதிகமாயிடுச்சு. சாரி.

இனிமே வந்துடுவேன்.

King Viswa said...

//எஸ்ரா எம்புட்டுபெரிய ஆளு. அவரும் உன்கள மாதிரி 7000டிவிடி வெச்சிருக்காராம்.//

தல, எங்கிட்ட அவ்வளவு எல்லாம் இருக்காது. நான் கடந்த ஆறு ஆண்டுகளில் வந்த பெரும்பான்மையான தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழி கமர்ஷியல் படங்களாக ஒரு ரெண்டாயிரம் டிவிடி வச்சு இருப்பேன்.

அதா தவிர, கடந்த ஒரு ஆண்டாக ஒரு புராஜெக்டில் இறங்கி இருக்கேன். அதாவது சில குறிப்பிட்ட வகை படங்கள் (1930 மற்றும் 1940'sல் வந்த ஷெர்லக் ஹோம்ஸ்,1940-1968 ஜான் வெய்ன் படங்கள், 1950 முதல் 1980 வரை வந்த தமிழ் படங்கள் என்று அது ஒரு தனி கலெக்ஷன்).

இந்த கலெக்ஷனில் பயங்கரவாதி டாக்டர் செவன் என்னை விட அதிகமாக வைத்து உள்ளார்.

King Viswa said...

//ஊதுபை தமிழாக்கத்துக்கு பொறுப்பு ‘கனவுகளின் காதலன்’ தான். அவர்தான் சொன்னாரு!//

அவரே சொல்லிட்டாரா? அப்போ சரியாகத்தான் இருக்கும்.

அவர்தான் வெளிநாட்டு வள்ளுவர்,

அயல்நாட்டு கலைஞர்,

தமிழின் நிழல்,

பொங்கல் சாப்பிடும் போதி முனிவர்,

தமிழை வாழ வைக்கும் தனி வேங்கை,

தமிழ் தாயின் தலை மகன்,

என்றெல்லாம் பட்டம் பெற்றவராயிற்றே?

மரா said...

@ கிங் விஸ்வா
//சில குறிப்பிட்ட வகை படங்கள் (1930 மற்றும் 1940'sல் வந்த ஷெர்லக் ஹோம்ஸ்,1940-1968 ஜான் வெய்ன் படங்கள், 1950 முதல் 1980 வரை வந்த தமிழ் படங்கள் என்று அது ஒரு தனி கலெக்ஷன்)..//

இங்கதான் நீங்க நிக்கிறீங்க ஸ்டூல் போட்டு எங்க மனசில். உங்க இல்ல முகவரிய மின்னஞ்சல்ல தாட்டி வுடுங்க. அப்பிடியே கைப்பேசி எண்ணும்.

King Viswa said...

கொஞ்சம் பட்டங்கள் மிஸ் ஆயிடுச்சு. காதலர் மன்னிப்பாராக.

மரா said...

@ கிங் விஸ்வா
// அவர்தான் வெளிநாட்டு வள்ளுவர்,

அயல்நாட்டு கலைஞர்,

தமிழின் நிழல்,

பொங்கல் சாப்பிடும் போதி முனிவர்,

தமிழை வாழ வைக்கும் தனி வேங்கை,

தமிழ் தாயின் தலை மகன்,
//

அப்பாடா...இம்புட்டு பேரா. அப்போ பாலி.பாலிய எத்தனையோ? பட்டியலிட்டால் தன்யனாவேன் :)

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு மயில்.

இந்தப் படம் இன்னும் பார்க்கல. நம்ம லிஸ்ட்ல சேர்த்துரவேண்டியதுதான்.

சி.பி.செந்தில்குமார் said...

விமர்சனமும்,தமிழ் டைட்டிலும் சூப்பர்

geethappriyan said...

இந்த படத்தின் கதையை எனக்கு சொல்லிவிட்டு இந்த படத்தையும் நீ காப்பி செய்து கொடுத்தியே,மறந்துட்டியா?பார்த்தேன் நீ உணர்ந்ததையே நானும் உணர்ந்தேன் என்றால் மிகையில்லை,உன் வலைவாழ்வில் இந்த இடுகை ஒரு மணிமகுடம்.வாழ்த்துக்கள்.

geethappriyan said...

பலூன் = ஊதுபை, சரிதானா?

நண்பா அது காற்றடைத்த பை என்று நினைக்கிறேன்,சரியா அல்லது தவறா?

geethappriyan said...

//
தல, எங்கிட்ட அவ்வளவு எல்லாம் இருக்காது. நான் கடந்த ஆறு ஆண்டுகளில் வந்த பெரும்பான்மையான தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழி கமர்ஷியல் படங்களாக ஒரு ரெண்டாயிரம் டிவிடி வச்சு இருப்பேன்.//
கும்பிட போன தெய்வம் குறுக்க வந்ததடா!!!

King Viswa said...

தல,

//கும்பிட போன தெய்வம் குறுக்க வந்ததடா!!!//

வாங்க. உங்களுக்காக விஜய டி ராஜேந்தர், ஜே கே ரித்தீஷ், நடிக்க முயற்சித்த படங்கள் எல்லாம் இருக்கு. குறிப்பாக வீராச்சாமி வித் இங்க்லீஷ் சப் டைட்டில். ஒக்கே?

geethappriyan said...

யெப்பா,இராவணா.
தமிழிஷ் ஓட்டுபட்டை ஆங்கிலத்துக்கான பட்டையை வச்சிருக்கே!!
சப்மிட் பண்ணா,ஆங்கில திரட்டிக்கு போவுது

geethappriyan said...

@கிங் விஸ்வா,
என்ன வீராசாமியா?
அதுக்கு விஷத்த குடுத்து குடிக்க சொன்னா 123 சொல்றத்துக்குள்ள குடிச்சிருப்பேனே!!!டூமச்சி

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அருமையான பதிவு.

//ஊதுபை தமிழாக்கத்துக்கு பொறுப்பு ‘கனவுகளின் காதலன்’ தான். அவர்தான் சொன்னாரு!// அடப்பாவிகளா :))

நண்பர் விஸ்வா, இளம் சிட்டுக்கள் மயங்குவது மாதிரி பட்டங்களை வழங்கக் கூடாதா.. இது என்ன முனிவர், கலைஞர், தலைமகன் என்று எல்லாம் ஒரு வயதான உணர்வை வழங்குகின்றன ஆங் :))

Chitra said...

டிஸ்கி:
என்னாது எம்.ஜி.ஆர் செத்துட்டாரான்னு கொஞ்சம் பேர் கேக்குறது எம்பட காதுல விழுகுது. இது ரொம்ப காலத்துக்கு முன் எழுதி டிராஃப்ட்ல இருந்துச்சி. சரி வெளியிட்டிருவோமேன்னுதேன்.

...Better late than never.... So, no problem. Good review. :-)

King Viswa said...

காதலரே,

//நண்பர் விஸ்வா, இளம் சிட்டுக்கள் மயங்குவது மாதிரி பட்டங்களை வழங்கக் கூடாதா.. இது என்ன முனிவர், கலைஞர், தலைமகன் என்று எல்லாம் ஒரு வயதான உணர்வை வழங்குகின்றன ஆங் :))//

காஸநோவாவின் கடைசி பேரன், ஜோடி தேடும் சிட்டுகளின் ஜேம்ஸ்பாண்ட், மன்மதனின் லேட்டஸ்ட் அம்பு, காதலின் லேட்டஸ்ட் அவதார், எங்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் கனவுகளின் காதலன் வாழ்க.

மரா said...

@ சரவணக்குமார்.செ
ரொம்ப நன்றி சே.

மரா said...

@ சி.பி.செந்தில்குமார்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி,

மரா said...

@ கீதப்ப்ரியன்
// இந்த படத்தின் கதையை எனக்கு சொல்லிவிட்டு இந்த படத்தையும் நீ காப்பி செய்து கொடுத்தியே, மறந்துட்டியா? //

நான் என்னிக்குமே கொடுத்தத மறந்துருவேன் :)

மரா said...

@ கீதப்ரியன்
//பலூன் = ஊதுபை, சரிதானா?//

செம்மொழி செம்மல் காதலரே சொல்லிட்டாரு. போ மக்கா அங்கிட்டு :)

மரா said...

@ கனவுகளின் காதலன்
நன்றி அண்ணே. தலைப்புக்கு :)

மரா said...

@ சித்ரா
நன்றி அக்கா.

மரா said...

@ சித்ரா
நன்றி அக்கா.

கருந்தேள் கண்ணாயிரம் said...

இதோ போட்டம்ல ஓட்ட !!!

பதிவ இப்பத்தான் பார்த்தேன்.. ஆனா, மேற்கொண்டு கமெண்ட் அடிக்க முடியாதமாதிரி, ஓஃபீஸ் வேலை தடுக்குது... அதுனால, முடிச்சிக்கினு, நைட்டு வர்ரேன் . . .வர்ட்டா ??

butterfly Surya said...

jafar Panahi யின் White Balloon பாருங்க..

மரா said...

@ கருந்தேள்

நன்றி தேளு. இன்னிக்கு ஆராச்சும் ஓஃபிஸ் போவாங்களா? என்ன கொடும
சார் இது? சரி H1 விசா இண்டர்வியூ என்னாச்சு? பார்ட்டி வைக்காம பறந்துராதீங்க. சாமி பின்னாடி குத்திரும் :)

மரா said...

@ பட்டர்ஃப்ளை சூர்யா

வாங்க குரு. ஊர்லதான் இருக்கியளா? நீங்க நாளைக்குள்ள ஒரு பதிவு போடலைன்னா நான் என் ப்ளாக்க கிளோஸ் பண்ணிருவேன் :) புக் எழுதினா போஸ்ட் போடக்கூடாதுன்னு ஆருங்க சொன்னா?

மரா said...

@ பட்டர்ஃப்ளை சூர்யா

வாங்க குரு. ஊர்லதான் இருக்கியளா? நீங்க நாளைக்குள்ள ஒரு பதிவு போடலைன்னா நான் என் ப்ளாக்க கிளோஸ் பண்ணிருவேன் :) புக் எழுதினா போஸ்ட் போடக்கூடாதுன்னு ஆருங்க சொன்னா?

ஜெய் said...

நல்ல விமர்சனம்.. இன்னும் இந்தப்படம் பார்த்ததில்லை..

// என்னாது எம்.ஜி.ஆர் செத்துட்டாரான்னு கொஞ்சம் பேர் கேக்குறது எம்பட காதுல விழுகுது. //

அட.. பக்கத்துல ஒருத்தர் 1931 M வரைக்கும் போயிட்டாரு... நீங்க என்ன 1956-க்கே ஃபீல் பண்றீங்க... இன்னும் பின்னாடி வாங்க.. .

// அப்பாவோடு போகும் பையன் அழகிய பறவைகளை (இளைஞிகளைக்!!) கண்டால் ஒரு சிறுபார்வை விடுத்து உடனே தன்னிலைக்கு திரும்புவதுபோல் //
அடா... அடா... இதுவல்லவோ உவமை... வைரமுத்துவே மெய்சிலிர்ப்பார்...

// சரி H1 விசா இண்டர்வியூ என்னாச்சு? //
அப்படியா... கருந்தேளு.. இத சொல்லலியே... :)

மரா said...

@ ஜெய்
நன்றி ஜெய்.
// பண்றீங்க... இன்னும் பின்னாடி வாங்க.. . //

ஆமாம்ல.சரி விடுங்க.அடுத்து “குலேபகாவளி” போட்டுறேன்.

Vidhoosh said...

நாளைக்கு திங்கள் கிழமைன்னா நேத்திக்கு சனிக்கிழமை # what a news!!

மரா said...

@ டி.வி.ராதாகிருஷ்ணன்
ரொம்ப சந்தோஷம் சார் உங்களை நேற்று சந்தித்தது.

@ விதூஷ்
//நாளைக்கு திங்கள் கிழமைன்னா நேத்திக்கு சனிக்கிழமை # what a news!!//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாலா said...

Yovvv... Uuuthubai, Uuuthuvathi-nnu ethunaa ezuthunga.

athula ennga Baali Bali vanthathu...? kolai vizum sollitten!!

(No NHM sorry)

King Viswa said...

பாலா,

NHM இல்லை என்றால் அவசரத்துக்கு இதனை யூஸ் பண்ணுங்க: http://www.google.com/transliterate/indic/Tamil

Anonymous said...

dont miss this movie fa meg pa for faen

http://www.bonjourtristesse.net/2011/12/turn-me-on-goddammit-2011.html