Monday, July 26, 2010

இது கவிதை- வா.மு.கோமு



அம்மா அவர்தான்
காதல் இளவரசர்
என்று சொன்ன
மகளைப் பார்த்து
தாய் சொன்னாள்
“தள்ளியே நட”
**********************************


இப்படி ஒன்றும்
செய்யாமல்
சும்மா கிடப்பதற்கு
பேசாமல்
காவடியாவது தூக்கலாம்.
***********************************


ஊர் மாரியம்மா
கனவில் வந்து புலம்பினாள்
பூசாரிகிட்ட எடுத்துச் சொல்
நானொருத்தி இங்க
குத்துக்கல்லாட்ட
இருக்கச்சே
சபரிமலைக்கு ஏன் மாலை போட்டேன்னு!
***********************************


தேடி வந்தவன்
திரும்ப போய் விட்டானாம்.
தேடிப் போனவன்
திரும்பி வந்துவிட்டேன்.
************************************


இப்படி பரிகாசமாய்
சிரிப்பது உனக்கு
வேடிக்கையென்றால்
இப்படி பரிகாசமாய்
எழுதுவது
எனக்கு டபுள் வேடிக்கை!
************************************


விடியலின் அழைப்பு கோழியின்
கொக்கரக்கோவில்!
நடந்து போன கொலுசொலி
என் பார்வைக்குத் தப்பி!
ஒரு நிமிரலில்
சாணி வண்டின் பர்ர்ர்ரிடல்!
நிமிடத்தில் வாசலில்
மறைந்த வாலில்லா நாய்!
பல்பொடி காகிதம் காலி!
வேப்பை குச்சியில் காக்கை எச்சம்.
இன்று தீர்வதில்லை இப்பிரச்சனை.
வட்டலில் இட்லி சட்னியுடன்.
அடுத்ததாக அடுப்பில் தோசைக்கல்!
நாளையே பார்த்துக் கொள்வோம் பல்லை!
**********************************************

18 comments:

Paleo God said...

ரைட்டு.
இது கவிதை! :))

Chitra said...

கவுஜ...கவுஜ.... கலக்கல்ஸ்!

மரா said...

@ ஷங்கர்
நன்றி சேட்டன்.

மரா said...

@ சித்ரா
தேங்க்ஸ்க்கா.

Unknown said...

இதுதான் கவிதை..

கருந்தேள் கண்ணாயிரம் said...

யோவ் மயிலு... கவிதை படிச்சி ரசிக்குற தெறம எல்லாம் நம்ம கிட்ட லேது... ;-) என்னமோ போய்யா.. முழுசா படிச்சி புரிஞ்சிக்க முயலுறேன் ;-)

வினோ said...

/ தேடி வந்தவன்
திரும்ப போய் விட்டானாம்.
தேடிப் போனவன்
திரும்பி வந்துவிட்டேன். /

நல்ல இருக்கு அண்ணே..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வா மு கோமுவின் கவிதைகள் துள்ளலான மனநிலையைத் தருபவை. இக்கவிதைகளும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

க ரா said...

எல்லா கவிதைகளும் அருமையா இருக்கு மயில்

பாலா said...

அப்ஸண்ட் சார்!!

நசரேயன் said...

கவுஜ ...கவுஜ

Prathap Kumar S. said...

மயில்... வசனம் எல்லாம் சூப்பர்... எந்தப்படத்துல வருது...:))

நல்லாருக்கு தலைவா:))

King Viswa said...

//அம்மா அவர்தான்
காதல் இளவரசர்
என்று சொன்ன
மகளைப் பார்த்து
தாய் சொன்னாள்
“தள்ளியே நட”//

இடம்: மன்மதன் அம்பு பட ஷூட்டிங்.

ஆட்கள்: கமல் ஹாசன், த்ரிஷா மற்றும் த்ரிஷாவின் அம்மா. சரியாக புரிந்துகொண்டேனா?

King Viswa said...

//இப்படி ஒன்றும்
செய்யாமல்
சும்மா கிடப்பதற்கு
பேசாமல்
காவடியாவது தூக்கலாம்.//

இதுகூட பிரபல நடிகரை கிண்டல் செய்வது தானே? இருந்தாலும்கூட சபை நாகரீகம் கருதி அவரது பெயரை சொல்லாமல் விடுகிறேன்.

ஒரு க்ளூ: அவருக்கும் காதலருக்கும் ஒரு "இது" உண்டு.

geethappriyan said...

அருமை சார் கவித

geethappriyan said...

வூட்ல இண்டர்நெட் கட் ஆயி போச்சி,நாலு நாலா,சோ பின்னூட்டமுடியலை,மிஸ்டுகால கொடுத்தீர்களே?ஏன்?என்னிடம் பேலன்ஸ் இல்லாததால் திரும்பி அழைக்கமுடியவில்லை

geethappriyan said...

நீங்கள் எனக்கு கடிதம் எழுதலாமே?:)))