Wednesday, July 28, 2010

களவாடிய கனவுகள்

                 முதலில் இப்படத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் பற்றி அரிய விசயங்கள் அறிய
                           நண்பர் ஜெய் வலைப்பூ
                 இப்படத்தின் விமர்சனம் அறிய தேளு கருந்தேளு
         கனவுகளும் திருடப்படலாம். மனிதனது அந்தரங்க விஷயங்கள் கேமராக்களால் மட்டுமல்ல,கனவுகளைத் திருடுபவர்களாலும் நடக்கலாம் என்பதை சற்று கற்பனை கலந்து, ஹாலிவுட் வாசனை தடவி நமது மூளைக்குள் விதைக்கும் முயற்சிதான் இந்த ‘இன்செப்ஷன்’.


         பேராசைகாரர்களின் பேராசையால் கனவுகளுக்குள் புகுந்து அவர்களின் மூளைக்குள் சிந்தனைகளை மாற்றி அமைக்க முடியும் என்பது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், 


                வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் அதுவும் சாத்தியம் என்றே நம்ப வேண்டியதாகிறது. கனவுகளுக்குள் பயணிக்கும் லியனார்டோ-டி-காப்ரியோவிற்கு ‘சாய்டோ’ என்பவன் கொடுக்கும் அசைன்மெண்டே இந்த திரைப்படத்தின் கதை.கனவுகளுக்குள் கனவாகி-அந்த கனவாலும் வேறொரு கனவுக்குள் பயணித்து உன்மைகளைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள். கொஞ்சம் பிசகினாலும் குழப்பிவிடக் கூடிய திரைக்கதை.


         நாம் எல்லோருமே ‘பேரடாக்ஸ்’ என்ற சிந்தாந்தத்தை 
அறிந்திருக்கிறோம்.சிலருக்கு கல்லூரிப் பாடமாக கூட இருந்திருக்கிறது. ஒரு பொருள் என்னவாக இருக்க வேண்டுமோ அப்படியில்லாமல், வேறொன்றாக இருக்கும். அதனுள் அமைந்த சிக்கலை விடுவிக்க வேண்டும்.


                இது நிஜ வாழ்வில் ‘Maze' என்ற கட்டமைப்பின் மூலம் எளிமையாக விளக்க முடிகிறது. ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வெகு நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு 'Maze' அமைந்திருந்தார்கள். பயங்கர புதிராக இருக்கும். பல இளம்பெண்கள் வெளியே வர தெரியாமல் உள்ளிருந்து செல்ஃபோனில் அழைத்ததை கண்டிருக்கிறேன்.


      ஆனால் இந்த திரைப்படத்தில் அந்த 'Maze' என்ற கற்பனை கட்டமைப்பை உருவாக்கும் பெண்ணாக Ellen Page நடித்துள்ளார். கனவுகளுக்கு பொதுவாக நிறமில்லை என்பர்.ஆனால் இந்த படமெங்கும் வண்ணமயம்.


       உளவியல் தொடர்பான நூல்களைப் படிப்பவர்களுக்கு இந்த திரைப்படம் கூடுதல் ஆனந்தமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ’சிக்மண்ட் ப்ராய்ட்’ தன் உளவியல் சக்தி மூலமாக “Dreams and their interpretations" என்ற அற்புதமான நூலை நமக்கு வழங்கியுள்ளார். உறங்கும்போது கனவுகள் ஆழ்மனதில் ஏற்படும் எண்ண அலைகள் மட்டுமல்ல அவற்றின் மூலம் நமது வாழ்வில் பல குறுக்கீடுகள் நிகழும் என்பதை இதில் விளக்கியுள்ளார்.


         கனவுக்குள் பெரும்பாலும் கனவுகள் வருவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும் ஆனாலும் அதையே திரைக்கதையாக்கி இருப்பது சிறப்பான செயல்.


         ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் அருமை.முக்கியமாக Ellenக்கு Leonardo தனது புராஜக்டை விளக்கும்போது நடக்கும் நிகழ்வுகள் ஸ்பெசல் எஃபெக்டின் உச்சகட்டம்.Anti Gravity என்பதே கனவின் மிகச்சிறந்த உதாரணம்.எனக்கு கூட பல நேரங்களில் Anti Gravity force ல் பறப்பது போன்று கனவில் தோன்றி இருக்கிறது.அதை திரைப்படத்தில் மிக அருமையாக பயன்படுத்தி உள்ளனர்.


         நிகழ்காலத்தில் நடப்பதை wobbler மூலம் விளக்க முயன்று கடைசியில் அந்த wobbler பயன்படுத்தியே திரைப்படத்தின் கிளைமாக்ஸை முடித்திருப்பது மிகவும் அருமை. படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று உறங்கும் போது கனவுகள் வருவது உறுதி.ஆனால் Limboவிற்கும் பேசாமல் விழித்தெழுவது உங்கள் சாய்ஸ்.


         மொத்தத்தில் திரையரங்கில் மட்டுமே காண வேண்டிய மிகச் சிறந்த திரைப்படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


                        “An Idea. A single idea from the human mind can buid cities. An idea can transform the world and rewrite all the rules which is why i have to steal it."


                 "We can access your mind through your dreams!!"


வழமைபோல் இந்த படம் பற்றிய தகவல்கள் :     புள்ளிவிவரம்
வழமைபோல் இந்த படத்தின் முன்னோட்ட காணொளி சொப்பன வாழ்வில்... 

29 comments:

சுதர்ஷன் said...

அருமையான விமர்சனங்கள் ..இந்த படம் இன்னும் பார்க்கவில்லை ... இலங்கையில் திரையிடப்படவில்லை .. DVD வரும் வரை காத்திருக்கிறேன் . :((

Unknown said...

படத்தை சத்யம் தியட்டரில் பார்த்தோம் 80 சதம் மக்கள் நிறைய காட்சிகளுக்கு விசிலடித்து கைதட்டினர் எங்களுக்குத்தான் எதற்காக எனப் புரியவில்லை..

உண்மையில் படத்தை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை...

geethappriyan said...

மிக அருமையான ஷார்ட் அண்ட் ஸ்வீட் விமர்சனம் மக்கா,கலக்கிட்ட காப்பி

geethappriyan said...

வாக்குகள் சேகரிக்கப்பட்டன

geethappriyan said...

இந்த ஒப்பில்லா படத்தை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியே விட்டாய் போ

geethappriyan said...

உனக்கு நேரமிருந்தால் என் பதிவுக்கு வரவும்

கருந்தேள் கண்ணாயிரம் said...

யோவ்.. இதென்ன களவாடிய பொழுதுகள் டைட்டிலோட அட்டக்காப்பி !! பச்சான் எங்கிருந்தாலும் வரவும் ! ;-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

யோவ்.. இதென்ன களவாடிய பொழுதுகள் டைட்டிலோட அட்டக்காப்பி !! பச்சான் எங்கிருந்தாலும் வரவும் ! ;-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

கொஞ்ச நேரம் கழிச்சி வந்து வெச்சிக்குறேன் கும்மிய

Chitra said...

"We can access your mind through your dreams!!"

...interesting movie!

மரா said...

@ S.Sudharshan
Thanks for visiting my blog and comments.

மரா said...

@ K.R.P.Senthil
Its common at all places boss.I took my friend Gokul's help to explain n give live commentary :)

மரா said...

@ Geethapriyan
Thanks for your support.

மரா said...

@ Karundhel Kannayiram
I stole the title from his dream :)

மரா said...

@ Chitra
Thanks for your support sister.

ஜெய் said...

அருமையான விமர்சனம் மயில்... கலக்குறீங்க...

// பல இளம்பெண்கள் வெளியே வர தெரியாமல் உள்ளிருந்து செல்ஃபோனில் அழைத்ததை கண்டிருக்கிறேன். //
அதென்ன குறிப்பா இளம்பெண்கள்? செல்ஃபோன்ல யாரைக் கூப்பிட்டாங்கன்னு சொல்லலியே... :)

@ கருந்தேள்,
// இதென்ன களவாடிய பொழுதுகள் டைட்டிலோட அட்டக்காப்பி !! //
அந்த கலெக்‌ஷனும் இருக்கா? :)

Ganesan said...

Kaveri Ganesh பதிவர் பட்டர்பிளை சூர்யாவின் “உலக சினிமா” பற்றி ஜெயா தொலைகாட்சி பேட்டி--சூடான புகைப்படங்கள்.

http://kaveriganesh.blogspot.com/2010/07/blog-post_29.html

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

சிறப்பான பார்வை. இருப்பினும் நடிகை மரியோன் கோட்டிஆரை குறித்து எதுவும் சொல்லாத காரணத்தால் வெளிநடப்பு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறேன் :))

க ரா said...

//// பல இளம்பெண்கள் வெளியே வர தெரியாமல் உள்ளிருந்து செல்ஃபோனில் அழைத்ததை கண்டிருக்கிறேன். //
அதென்ன குறிப்பா இளம்பெண்கள்? செல்ஃபோன்ல யாரைக் கூப்பிட்டாங்கன்னு சொல்லலியே... :)//

வேற யாரும் அண்ணணுக்கு தெரியாது ஜெய் :)

பாலா said...

//இது நிஜ வாழ்வில் ‘Maze' என்ற கட்டமைப்பின் மூலம் எளிமையாக விளக்க முடிகிறது. //

கொஞ்சம் எளிமையா விளக்கி கழுவுனீங்கன்னா.. புண்ணியமா போகும் தல.!! ப்ளீஸ்...

இப்படிக்கு
ஹாபா

பாலா said...

//’சிக்மண்ட் ப்ராய்ட்’ //

Sick, மண்டு, ஃப்ராடு....

இது ஒரு தமிழ் ‘எழுத்தாளரை’ குறி வச்சி தாக்குற மாதிரி இருக்கே.

க ரா said...

//
இப்படிக்கு
ஹாபா//

நோ பாபா...

King Viswa said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, முடியல.

பதிவ விட கமேன்ட்டுகளுக்கே தனியா கமெண்ட்டு போடணும் போல இருக்கே?

அது என்னதுங்க ஹாபா? ஏதோ கெட்ட வார்த்தை போல இருக்கே?

King Viswa said...

இது என்னங்க படம்?

திருப்பாச்சி, சிவகாசி எல்லாம் நீங்க பார்த்தது இல்லியா?

போய் பழனி என்றொரு படம். பேரரசு இயக்கம், சின்ன தளபதி பரத் நடிப்பு. அதுதாங்க படம்.

கிருஷ்ண மூர்த்தி S said...

இன்னிக்கு வரைக்கும் கனவு ஒண்ணுதான் களவாட முடியாம இருந்திச்சு. இப்போ அதுக்கும் வேட்டா...?

படம் இப்போதைக்கு மதுரைக்கு வர்ற வாய்ப்பு இல்லை! டிவிடி வரட்டும் பாத்துக்கலாம்!

ஒரு கோப்பை வாழ்க்கை said...

அருமையான பதிவு. ஒரு விமர்சனத்தை அகடமிக்காக அணுகிய விதம் வித்யாசமாக இருக்கிறது. நன்றி ம.ரா

உலக சினிமா ரசிகன் said...

இன்செப்சன் தமிழில் பார்த்தேன்.சற்றும் புரியவில்லை .நான் இன்னும் கற்றுக்கொள்ளவேண்டும்.

நெய்வேலி பாரதிக்குமார் said...

வணக்கம் மயில் ராவணன் சார். நான் சுகனில் எழுதுவதற்கும் என்னுடைய ப்ளாக் இல் போடுவதற்கும் இந்த படத்தை வலை போட்டு தேடிக்கொண்டு இருக்கிறேன் கடைசியில் மீன் உங்களிடம் சிக்கிவிட்ட தா? சரி நன்றாக மசாலா போட்டு சமைப்பவரிடம்தான் சேர்ந்திருக்கிறது நன்றாக ரசித்து சுவைத்து எழுதியிருக்கிறீர்கள் பார்க்கவேண்டும் என்ற ஆவலை அதிகம் தூண்டியது உங்கள் எழுத்து

நெய்வேலி பாரதிக்குமார் said...

வணக்கம் மயில் ராவணன் சார். நான் சுகனில் எழுதுவதற்கும் என்னுடைய ப்ளாக் இல் போடுவதற்கும் இந்த படத்தை வலை போட்டு தேடிக்கொண்டு இருக்கிறேன் கடைசியில் மீன் உங்களிடம் சிக்கிவிட்ட தா? சரி நன்றாக மசாலா போட்டு சமைப்பவரிடம்தான் சேர்ந்திருக்கிறது நன்றாக ரசித்து சுவைத்து எழுதியிருக்கிறீர்கள் பார்க்கவேண்டும் என்ற ஆவலை அதிகம் தூண்டியது உங்கள் எழுத்து