Saturday, September 11, 2010

மற்றுமொரு அயல் சினிமா-The Guns Of Navarone

2000 பிரிட்டிஷ் வீரர்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்கின்றது ஜெர்மன் ராணுவம்.ரொம்ப ஆபத்தான இடம் யாரும் சென்றடைவதற்கு.போதாதற்கு இரண்டு பெரிய துப்பாக்கிகள் ராடாரால் இயங்கக்கூடியவை - மிகத்துல்லியமாக எதிரி கப்பல்களை கண்டுபிடித்து அழிக்கும் சக்தி கொண்டவை.ஆக எந்தப்பக்கம் பார்த்தாலும் தடை,பிரச்சனை,ஆபத்து. 
இதையெல்லாம் தாண்டி ஒரு சிறு குழு எப்படி அந்த 2000 பேரை மீட்டெடுத்து வந்திருக்கின்றது என்பதை நாம் கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவிற்கு(1961’ல் இருந்த தொழில்நுட்ப வளார்ச்சியை பயன்படுத்தி!!) நம்பகத்தன்மையோடு தந்திருக்கின்றனர்.
                                                                                       
படம் ஆரம்பிக்கிறது.திரையில் ஸ்க்ரோல் வரிகள்.வர்ணனை(Narration) முறையில் காட்சி விளக்கப்படுகிறது - கிரேக்க நாட்டு இடிந்த கட்டிடங்கள்,கல் தூண்கள் என ஒரு வாழ்ந்து கெட்ட அல்லது போரினால் தன் புகழ, பெருமையெல்லாம் இழந்து நிற்கும் நாடாக நம் கண் முன்னே Greece தெரிகிறது. அதெ போல் அங்குள்ள ஏகன்கடறகரையும் முக முக்கியமான பல நிகழ்வுகளை தனக்குள்ளே கொண்டது.
                                                                        
1943ல் நடந்த காட்சிகள் திரையில் ஓட பின்னால் வரும் வர்ணனையும் நமக்கு மேலும் இப்படம் தொடர்பான ஆர்வத்தை இரட்டிப்பாக்கின்றன.2000பிணைக்கைதிகள் கிரோஸ் தீவில்(Island of Kheros) அடைக்கப்பட்டிருக்கின்றனர்.இன்னு ஒரு வாரமே அவர்கள் உயிருடன் இருப்பர் :) கிரோஸ் தீவிற்கு போவதற்கு போக, வர ஒரே வழிதான், அதிலும் எந்நேரமும் 2 ராடார் 
துப்பாக்கிகளின் கண்கானிப்பு 24 மணிநேரமும்.


இன்னும் 6 நாட்களே மீதம் உள்ளது.அதற்குள் அங்குள்ள அனைவரையும் அவ்விடத்தை விட்டு அகற்றவேண்டும்.இந்த 6 நாட்கள் நடந்த சம்பவக்கோர்வையே ‘The Guns of Navarone' நாவலும், திரைப்படமும்.
                                                             
ஆரம்பத்தில் கேப்டன் மல்லோரி,ஜென்சன்,ராய் மூன்று பேர் மீதமிருக்கும் வீரர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்- அதில் ஒருவன் கிண்டலாக ‘ஒரே வழிதான் இருக்கு, ஒரு விமானம் முழுவதும் குண்டுகள் நிரப்பி கொண்டு யாரோ ஒருவன் தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டியதுதான், ஆனால் அப்பிடியொரு விமான ஓட்டிதான் கிடைக்க மாட்டான்’ என்கிறான்.


விசயம் நாளுக்கு நாள் தீவிரமாக உடனே ஆறு திறமையான வீரர்களுடன் ஒரு கப்பலில் தன் சாகசப்பயணாத்தை தொடர்கிறான் கேப்டன் மல்லோரி.கூடவே மல்லோரியை என்றைக்காவது கொன்றுவிட வேண்டும் என துடிக்கும் ஒரு வீரனோடு.கப்பலில் நடக்கும் உரையாடல்கள் மிக யதார்த்தமாகவும் இடையில் உளவுக்கப்பலுடனான ஒரு சண்டையும் 
நேர்த்தியாகவும் இருக்கும்.


ஒவ்வொரு நாளும் வெவ்வேரு விதமாக கழிய,ஆரம்பத்திலேயே ஜெனரல் ஃப்ராங்க்ளின் கால் ஒடிந்துவிட அவரை வேறு தூக்கிக்கொண்டே செல்கின்றனர்.அதேபோல் ஒரு இடத்தில் 2 பெண்களும்(local rebels) சேர்ந்து கொள்கின்றனர் இவர்கள் அணியில்.ஒரு கட்டத்தில் இவர்கள் ஜென்ரல் ஃப்ராங்க்ளினை மருத்துவரிடம் கொண்டு செல்லும் இடத்தில் கொத்தாக 
மாட்டிக் கொள்கின்றனர். ஜெர்மானிய அதிகாரி ஒருவன் இவர்களை ஒரு அறையில் வைத்து விசாரிக்கும் காட்சி, இவர்கள் அவனிடமிருந்து தப்பி ஜெர்மானிய வீரர்கள்போல உடையணிந்து தப்பும் காட்சி போன்று பல காட்சிகள் அருமையா இருக்கும்.


சொந்த செலவுல சூனியம் வெச்சுக்குறாது மாதிரி ‘அன்னா’ என்ற பெயருடைய பெண், நாஜிக்களால் தான் முகவும் துன்புறுத்தப்பட்டு இறுதியில் பேசும் திறன் இழந்து ஊமையான கதையையும் சொல்கிறாள்.ஆனால் இருதியில் இனும்ம்சில மர்ம முடிச்சுகள் உண்டு. இவர்கள் அந்த ‘Guns of Navarone' ப்ராஜக்டில் வெற்றி பெற்றார்களா இல்லையா? வேறு என்ன சிக்கல்கள் 
சந்தித்தார்கள்? ஜெனெரல் ஃப்ராங்க்ளினை விட்டு சென்றார்களே-அவ்ர் உயிர் பிழைத்தாரா?யருக்காச்சும் காதல் பூத்ததா, கனிந்ததா? இப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரிய படம் பாக்கறத தவிர வேறு வழியில்லை.


ரொம்ப திறமையான நடிகர்கள்,நல்ல இயக்குனர்,ஒலி, ஒளிப்பதிவாளர் இன்னும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டிக் கொண்டே செல்லலாம்.
வழமைபோல் இப்படத்தின் முன்னோட்ட காணொளி: இங்கே
வழமைபோல் இப்படத்தின் மேலதிக விவரம்: இங்கே


டிஸ்கி:
     பொதுவாவே ‘War Cinema’னா எனக்கு அம்புட்டு பிரியம். அதுவும் இந்த படம் நாம் நினைத்து பார்க்க முடியாத காலகட்டத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட நேர்த்தியான நல்ல படம்.கண்டிப்பா அனைவரும் பாருங்கள்.ஏகப்பட்ட விருதுகள் பெற்ற இப்படத்தை அறிமுகப்படுத்திய என் நண்பனின் தந்தையும் அற்புதமான ஆளுமையுமான கிருஷ்ணமூர்த்தி சார்க்கு நன்றி நன்றி.
 
        

14 comments:

சுதர்ஷன் said...

நல்ல படம்ன்னு சொல்லுறீங்க ..இந்த மாதிரி படங்கள் மிகவும் பிடிக்கும் .. நீங்க பரிந்துரை செய்யும் இந்த படமும் நல்ல இருந்தா நன்றிகள் மயில் ..பார்க்கிறேன் ..

வினோ said...

படம் கண்டிப்பா பார்க்க வைக்கிறீங்க நண்பா...

vaarththai said...

i faintly remember this movie and my life then, as it has been about 22 years past.

one scene that i still remember is bombs fixed in the steps, expecting the path of movement; but the men ski on the railings to save time...

thanx for bringing back the memories

மரா said...

@ S.Sutharshan

நன்றி நண்பரே. அவசியம் பாருங்க.

மரா said...

@ வினோ
கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் நண்பரே.நன்றி.

மரா said...

@ வார்த்தை
Oh God..u saw this before 22 years. Great sir.then u might seen the original version which starts with the climax. right? the blast of the two guns and the story traverse back. Thanks for coming to my blog sir.

tshankar89 said...

மயில்ராவணன்,
Guns of Navarone போல இன்னும் பல "WWII" எனப்படும் இரண்டாம் உலகப் போர் பற்றிய படங்கள் பல உண்டு.
"பொதுவாவே ‘War Cinema’னா எனக்கு அம்புட்டு பிரியம்"
நானும் அப்படித்தான் இருந்தேன், Saving Private Ryan, Thin Red Line
பார்த்த பின்பு தான் போரின் உண்மையான தாக்கம் தெரிந்தது.
இருந்தாலும் அவற்றில் (எனக்குப் பிடித்ததில்/தெரிந்ததில்) சில:
Casablanca (Romance..during the war peroid in Morocco)
Operation Daybreak
Where Eagles Dare
The Great Escape
Force 10 from Navarone
A Bridge Too Far
Von Ryan Express
Battle for Berlin
Battle of the Bulge
The Eagle Has Landed
The Dirty Dozen
Battle of Britain
Ice Station Zebra

சங்கர நா. தியாகராஜன்
நெதர்லாண்ட்ஸ் - கோயம்பத்தூர்

க ரா said...

நன்றி மாம்ஸ்... A Good Review...

Chitra said...

Yes. Its one of the classics. :-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

நான் சிறியவயதில் ரசித்துப் பார்த்த ஒரு படம் இது. சில வருடங்களுக்கு முன்னர் மற்றொருமுறை பார்த்தேன். அப்போதும் பிடித்திருந்தது.

அலிஸ்டர் மெக்லீனின் மற்ற நாவல்கள் போலவே இதுவும் ஒரு பரபரப்பான நாவல். அதே விறுவிறுப்புடன் படமாகவும் எடுக்கப்பட்டது (இருந்தாலும் நாவலே பெட்டர்)..

ஜாலியான நோஸ்டால்ஜிக் அனுபவத்தைக் கொடுக்கும் படங்களில் இதுவும் ஒன்று ;-) .

நபநம ;-)

Ramki said...

2000 british sailors would be stranded on a greek island near navarone and any ships going through it would be shot down by the guns, but again, wonderful movie...to all others who are yet to watch this movie....do watch it first!

மரா said...

@ இராமசாமி கண்ணன்
@ சித்ரா
@ கருந்தேள்
@ ராம்கி

அனைவருக்கும் நன்றிங்க.

எஸ்.பாரத், said...

திருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,

நாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.

அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..

அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

Thenammai Lakshmanan said...

நல்ல ரி்வ்யூ மயில்..:))