ச்ளக்
எனஃப் எனஃப்
என்ன பரந்தாமன் ராவா குடிக்கிறீங்க, இன்னும் ரெண்டு ஐஸ் க்யூப் போட்டுக்குங்க.
நோ நோ போதும். 15 வயசிலேர்ந்து ராவாதான் குடிக்கிறேன் வைரம் பாஞ்ச கட்ட இது தெரியிதா? ஹா ஹா என்ற சிரிப்பில் கையிலிருந்த் கோப்பையில் இன்னும் கொஞ்சம் உற்சாக திரவத்தை ஊற்றிக் கொண்டார்.
போதும் பரந்தாமா யூனிவர்சிட்டில, டாக்டர் பட்டம் வாங்கி இளையதலைமுறைக்கு நல்லது சொல்லிட்டு..இப்ப என்னடான்னா ஹாட்ட ராவா அடிச்சி ரவுசு பண்ற. உன் பொன்னு காமினிக்குத் தெரிஞ்சா என்னத்தான் கோவிச்சிக்குவா.
ஏன்யா குடிக்கற நேரத்துல வீட்ட ஞாபகப் படுத்தற. சரி. சரி மிச்சத்த கார்லயே வெச்சிக்கறேன் என்று எழுந்த பரந்தாமன். ட்ரைவருக்கு /போன் போடு இன்னிக்கு பெரிய வீட்டுக்குப் போகவேண்டாம் ஃபார்ம் அவுஸ் போனும்னு சொல்லு.
************************************************************************************************************************************************************
என்னடி இது?
திருஷ்டி சுத்திப் போடனும்க மொத மொத டாக்டராயிருக்கீங்க. இனிமே டாக்டர்னுதான் உங்கள கூப்பிடனும்னு வீட்ல எல்லாருக்கும் ஆர்டரே போட்டுட்டேன்.
ஆர்டி இவ? விட்டா வரிசையா எல்லாரையும் நிக்க வை. ஊசி போட்டு, மாத்தர கொடுக்கறேன். ஆனாலும் இந்த டீல் நல்லாதான் இருக்கு. கெக் கெக் என்ற சிரிப்பு காமினி ரூம் வரைக்கும் கேட்டது. சகிக்காமல் காதைப் பொத்திக் கொண்டாள்.
எங்க காமினி. என்ற பரந்தாமன் காமினி ரூமுக்குள் நுழைந்தார். என்னம்மா ஆச்சு என் பொண்ணுக்கு?
ஃபேஸ் மாஸ்க்குங்க. அப்பத்தான் முகம் பள பளன்னு இருக்கும்.
ஏண்டி இதெல்லாம் உன் வேலையா? இந்தக் கிரீமெல்லாம் தோல்ல எதுனா அலர்ஜி கொண்டுவரப்போகுது. இதென்ன சீக்கு பிடிச்சவன் மாதிரி ஒயர் எல்லாம் மாட்டி வெச்சிருக்க?
அட க்ரீமெல்லாம் இல்லீங்க இது துணிமாதிரி முகத்துல போட்டுகிட்டா போதும். பாட்டரி போட்டு இந்த ஒயர் வழியா ஏதோ லைட் மூஞ்சில அடிச்சா, கரும்புள்ளி எல்லாம் வராதாம்.
யார் சொன்னா?
டிவில அதுவும் ஒரு வெள்ளக்காரம்மா தமிழ்லயே பேசுதுங்க என்ற பெரிய நாயகியை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட டாக்டர் பரந்தாமன். இவ உண்மையிலேயே மண்டைல மசாலா இல்லாதவளா? இல்ல நடிக்கறாளா என்ற யோசனையுடன் காமினியின் அறையை விட்டு வெளியேறினார்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
மெதுவாய் காரேஜுக்கு சென்று ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஈசிஆர் ரோடில் முட்டுக்காடு நோக்கி விரட்டினாள்.
************************************************************************************************************************************************************
சாரி சிவா என்ற காமினியை அடுத்த வார்த்தை பேச விடாது முத்தமிட்டான் சிவா. எங்க உன்னை பார்க்காமலேயே போய்டுவேனோன்னு நினெச்சேன் என்ற சிவாவின் வாயை மூடி
ச்சு என்ன இது அபசகுனமா? என்ற காமினியை கண்களில் கலக்கத்தோடு பார்த்தான் சிவா. இல்ல காமினி இந்தவாட்டி சியாச்சின். நான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. போய் திரும்ப நாளாகும். அது மோசமான ஆபத்து நிறைஞ்ச இடம். உயிர் போவது கவலையில்ல ஆனா நீதான் என் கண்ல வர்ற கண்ணீருக்குக் காரணம்.
ச்ஸ்ஸ் ஏன் நெகட்டிவ்வா பேசனும். நீ ஒரு மிலிட்டரி மேன். நீ திரும்ப வருவ. அதுக்கு நீ இப்ப ஒரு விஷயம் பண்னனும்.
என்ன இந்த ப்ரிட்ஜ்லேர்ந்து குதிக்கனுமா?
நோ கல்யாணம் பண்ணு இப்பவே இங்கயே.
ஆர் யூ க்ரேஸி.
நோ சிவா டாம் சீரியஸ். எது என்னை விட உன்னோட நெருக்கமா இருக்கமோ அது சாட்சியா நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம். டூ இட் மேன்.
அப்ப என் துப்பாக்கிய சாட்சியா வெச்சித்தான் பண்ணிக்கனும். பட் காமினி..
வாவ் நைஸ் ஐடியா. துப்பாக்கி எங்க அது எடு, இப்படி நிக்க வை.
ஹும்ம் இப்ப உன் செயின எனக்குப் போடு. மெதுவாய் சிவா கீ கொடுத்த பொம்மையைப் போல காமினி கூறுவதை ஒவ்வொன்றாய் செய்து கொண்டிருந்தான்,
க்ரேட் நான் இப்ப மிஸர்ஸ் சிவா. தி கமாண்டோ.
நோ ஒன்னு பாக்கி இருக்கு
"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
ஓஹ் கமாண்டொ பயிற்சியில துப்பாக்கில பொட்டு வெக்கறதெல்லாம் சொல்லித்தர்றாங்களா?
ஏய் நாட்டி. என்றவனைப் பார்த்து நோ ஐ யாம் யுவர் பொண்டாட்டி என்றாள் காமினி. போதும். கிளம்பு சிவா நேரமாகுது.
அடிப்பாவி ஃபர்ஸ்ட் நைட் இல்லையா?
உண்டு பத்திரமா திரும்பி வந்ததுக்கபுறம்.
முத்தம் ஒன்றைப் பறக்க விட்டு வேகமாய் ஸ்கூட்டியில் செல்லும் காமினியை கனவா நினைவா என்று பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.
************************************************************************************************************************************************************
சப்த்தமில்லாது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வெளிப்புற படிகள் வழியாக. தன் அறைக்கு மெல்ல நடக்கும் போது டாக்டரின் ச்சே அப்பாவின் குரல் கேட்டது.
இந்த நேரத்தில் யாருடன் பேசுகிறார்.
எக்ஸலண்ட் பீதாம்பரம். கோவில்லேர்ந்து சிலை கடத்தறதுக்கு இது சிம்பிள் ரிஸ்க் இல்லாம பணம் பார்த்துடலாம். ஆமா இந்த வைரத்துக்கு என்ன பேரு வைக்கலாம். கோட் ரொம்ப முக்கியம். நிறைய பண்ணும்போது நமக்கும் அடையாளம் இருக்கும்.
காமினின்னு வெக்கலாம் தலைவ்ரே. ஆனா..இந்த வாட்டி கொஞ்சம் பார்த்து கவனிங்க ஏகப்பட்ட போலீஸ்.
"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன். கவனிப்புதானே செஞ்சிடலாம்.
திக் என்றது காமினிக்கு அடப்பாவிங்களா, கோவில்லயே கை வெச்சாச்சா? மெதுவாய் தன் ரூமுக்குப் போனாள். சிவாவுக்குப் போன் செய்தாள்,
சிவா
ஹே காமினி வீட்டுக்குப் போயிட்டயா?
ஆச்சு. ஒரு முக்கியமான விஷயம்.
சொல்லு..
எங்கப்பா.....
டாக்டர்.பரந்தாமனக்கு ஆப்பு ரெடியாகிக் கொண்டிருந்தது
************************************************************************************************************************************************************
31 comments:
மாமு இந்த சொற்சித்திரம் சூப்பர் :)
ஹய்யா நாந்தான் பஸ்ட் :)
நல்லா இருக்குங்க.. டக்குன்னு முடிச்சு போச்சு...
நல்லாக்கீது பா..
@ இராமசாமி கண்ணன்
நன்றி மாப்பி.
@ வினோ
நன்றி.பார்ட்-2 வேணுமின்னா போட்ரலாம் :)
@ முகிலன்
டேங்க்ஸ் பா.
இது , கமீனே படத்துக்கான விமர்சனம்னு நினைச்சேன் ;-) ... எனக்கு சிறுகதைகள்னாலே அலர்ஜி ;-) .. நெசம்மா ;-)
நல்லாருக்குங்க!...
பிரபாகர்...
//வைரம் பாஞ்ச கட்ட இது தெரியிதா? //
எனக்கு விவேக்கின் ஒரு பலான ஜோக் நியாபகம் வந்தது.அப்போ தாத்தா பேரு வைரமான்னு?!!!! முடியும்.ஹஹஹ்ஹா,என்ன் திடீர்னு சிறுகதை மாமு?:))
சிறுகதை
மிகவும் அருமை,என்ன நீ எழுதி ஸ்நேகசுகனில் வெளிவந்ததா?மறுபதிப்பா?
//நல்லா இருக்குங்க.. டக்குன்னு முடிச்சு போச்சு...//
டக்குன்னு முடிந்ததால் நல்லா இருக்காம்.என்ன உள்குத்து பார்:))
//இது , கமீனே படத்துக்கான விமர்சனம்னு நினைச்சேன் ;-) ... எனக்கு சிறுகதைகள்னாலே அலர்ஜி ;-) .. நெசம்மா ;-)//
ஹஹஹஹஹா
என்ன இன்னிக்கு கமென்டே குறைவா இருக்கு?
கதை ஜம்ப் ஆகி ஜம்ப் ஆகி போகுது. 70 -80 சினிமா பாத்த எபக்ட். நல்லாருக்கு தல.
இப்பதான் பரிசல் விதிகளை படிச்சேன். அதுக்கு உட்பட்டு அதே வரிகளை அதே வரிசையில் பயன்படுத்தி நல்லா
interest-ஆக எழுதி இருக்கீங்க தல.
இன்னும் shorta இருக்கனும் மயில்.. இன்னும் சீக்கிரமா கதை சொல்லனும்...
best of luck :)
இரட்டை அர்த்தக் கதையா தல
:)) இதுக்கு பேருதான் லேட்ரல் திங்கிங்-கா.. :))
நல்லாருக்கு ண்ணே.. பாதி படத்துல தொரத்தி விடாப்புல இருக்கு..
பார்ட் 2 வருமா.........?
@ karundhel
’கமீனே’ பின்நவீனத்துவ படம்ணே. அதப்பத்தி பின்நவீனத்துவ எழுத்தாளர்களான சாரு,கேபிள் சங்கர் எழுதியிருக்காங்க :)
நான் முன்நவீனத்துவவாதி :)
@ பிரபாகர்
நன்றிங்க.
@ கீதப்ரியன்
// //நல்லா இருக்குங்க.. டக்குன்னு முடிச்சு போச்சு...//
டக்குன்னு முடிந்ததால் நல்லா இருக்காம்.என்ன உள்குத்து பார்:)) //
துபாய்ல உக்காந்துகிட்டு என்னமா யோசிக்கிறாய்ங்க :)
@ கைலாஷ்
அண்ணே நல்லா இருக்கியளா? ஹாலிபாலி ப்ளாக் க்ளோஸ் பண்ணிபுட்டாரு. கேக்ககூடாதா?
@ D.R அசோக்
நன்றி பாஸ். காலேஜ்லாம் எப்புடி போகுது?
@ SUREஷ் (பழனியிலிருந்து)
ஆமாம் பாஸ் :)
@ Vidhoosh
ஆமாமாம். நன்றி.
@ Sivaji Sankar
ஏம்ல ஒடக்கியா? உம்மையா சொல்லுறியா?
இண்ட்ரஸ்டிங் மரா..:))
interesting BOSS ...
கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க
http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html
Post a Comment