Tuesday, September 21, 2010

எனக்கு சாருவை பிடிக்காது…

                                          - கோகுல்
ஆம். எனக்கு சாருநிவேதிதாவைப் பிடிக்காது. இன்றைக்கு நேற்றல்ல கடந்த 7 வருடங்களாக பிடிக்காது. ஆனாலும், என்ன செய்வது, இந்த எழுத்து சாத்தானை படிக்க நேர்ந்து 7 வருடங்கள் ஆகி விட்டதே! நானும் இன்றே இப்படம் கடைசி என்பதை போல இனி இவர் எழுத்தை படிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டு வேறு ஏதேதோ வேலைகளில் மூழ்கி விடுவேன். ஆனால் மூன்றாவது நாள் டாஸ்மாக்கை கடக்கும் குடிகாரனின் கை நடுங்குவதை போல எனது கை தானாக சாருஆன்லை வெப்சைட்டை ஓபன் செய்யும். தீபாவளி ரிலீஸுக்கு தலைவர் படம் பார்க்கும் ரசிகனைபோல மூன்று நாட்கள் அவர் எழுதிய அனைத்தையும் மூன்று மனி நேரம் படிப்பேன்.
ஆனாலும் எனக்கு சாருவைப் பிடிக்காது. ஏனென்றால் அவர் குடிப்பார். பெண்களைப் பற்றி பேசுவார். ஆம், நான் உத்தமன் தான். எனக்கு சினிமாவில் அரை நிர்வாணத்தில் வரும் பெண்களையும், குடித்து விட்டு பாட்டு பாடும் ஹீரோக்களையும் மட்டுமே ரசிக்க முடியும். எழுத்தாளர்களெல்லாம் குடிக்க கூடாது. அவர்கள் சமூக சீர்திருத்த வாதிகள். குடியையும் பெண்ணையும் பற்றி வர்ணிப்பதால் மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள் என்றெல்லாம் பல குற்றச்சாட்டை எனது மனமும் முன் வைக்கும். ஆனாலும், நன்பரிடமிருந்துதயாரா இரு, இன்னும் ஒரு மணி நேரத்தில கிண்டி வழியா நானும் சாருவும் வருவோம். அப்படியே .சி.ஆர் போகலாம்என்ற குரல் செல்ஃபோன் வழியாக வரும் வரைதான். அதற்குப்பிறகு இந்த யோக்கிய சிகாமணி , ”சாரு வேற செம காஸ்டியூம்ல வருவாரே, நாம இந்த புளூ ஜீன்ஸ் போடலாமா இல்ல அந்த கார்கோஸ் போட்டிட்டு போகலாமாஎன்ற ரேஞ்சில் தான் இருக்கும். அது குடிப்பதற்கான ஆர்வமோ அல்லது ஒரு பிரபலத்தை சந்திக்கப் போகும் ஆர்வமோ அல்ல. வேறொன்று….
                                
ஆனாலும் இன்னும் எனக்கு சாருவை பிடிக்காது. அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். எழுதும் அனைவருக்கும் பேசும் கலை அவ்வளவு எளிதில் வசப்படும். அவர்கள் பேச ஆரம்பித்தால் ஒன்று தூக்கம் வரும் , இல்லையேல் மூத்திரம் போக தோன்றும். ஆனால் இந்த சாத்தான் பேச ஆரம்பித்தால், வெறும் லெமன் மட்டும் அருந்தும் எனக்கே டேபிளில் உள்ளவற்றில் என்னுடைய லெமன் கோப்பை எங்கே என்னும் அளவிற்கு குழப்பம் வரும். அது காற்றில் கலந்திருக்கும் ஒயின் வாசனையால் மட்டுமல்ல பேச்சில் கலந்து வரும் போதையால்.
                             
என் மனசாட்சிக்கு இன்னும் சாருவைப் பிடிக்காது. எழுத்தை திறந்தாலே கெட்ட வார்த்தைகள். என்ன செய்வது ஒரு கெட்ட வார்த்தை கூட பேசாத எனக்கு சிக்னலில் காரை இடித்த படி வந்து நிற்கும் பைக் காரனையும், டிரெயினில் உரசிக் கொண்டு நிற்பவனையும் மட்டுமே, மனதுக்குள் ஆயிரம் கெட்ட வார்த்தைகளால் திட்ட தெரியும். அது நாம் நமக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடு. வெளியில் மட்டுமாவது நல்லவனாக காட்டிக் கொள்ள விழையும் மனதின் வெளிப்பாடு. அதனால்தான் எனக்கு சாருவைப் பிடிக்காது. இவர் எழுத்தெல்லாம் குப்பை. ராசலீலா ஒரு குப்பை. 655 பக்கங்களில் ஒரு நாவலாம். இதையெல்லாம் எவன் படிப்பான் என்றுதான் திட்டுவேன். ஆனாலும் ஹைதராபாத் 10 மணி நேரம் வேறு எந்த நாவலும் உருப்படியாக துணைக்கு வருவதில்லை என்று நினைக்கும்போது முற்று புள்ளி வைக்காமல் முப்பது பக்கம் எழுதும் எழுத்தாளர்களை நினைத்தால் ஒருவேளை எனக்கு சாருவைப் பிடிக்கிறதோ?..இல்லை..
இல்லை….எனக்கு சாருவைப் பிடிக்காது. இவர் உலக இலக்கியத்தைப் பற்றியெல்லாம் உளருகிறார். தேவையில்லாமல் பாரீஸை புகழ்கிறார். என்னவென்று யாருக்கும் சரியாக தெரியாத பின் நவீனத்துவத்தை போற்றுகிறார் என்றெல்லாம் நானும் விமர்சனம் செய்வேன். ஆனாலும் அவருடன் பேசும்போது ஒருநாள், அவர் டக்கீலாவையும், வழமை போல நான் லெமனும், அருந்தும்பொது நீட்ஷேவை பற்றி ஏதோ பேச்சு திரும்ப, அப்புறம் வழக்கம்போல அவர் டேபிளில் டக்கீலாவையும், லெமனையும் பார்த்து நம்ம சரக்கு எது என்ற குழப்பம்தான் வந்தது. எனக்குதான் சாருவைப் பிடிக்காதே. அதனால் அவரை எப்படியாவது மட்டம் தட்டம் வேண்டும் என்று லேப்டாப்பை என் பக்கம் திருப்பி அவர் பேசும்போது அவர் சொல்வதெல்லாம் உண்மைதானா என்று காண பேசிக் கொண்டே அவருடைய வார்த்தைகளை இண்டர்நெட்டில் கம்பேர் செய்து கொண்டிருந்தேன். போதை அதிகமானது தான் மிச்சம். அத்தனையும் உண்மை. அதைவிட அந்த பேச்சின் சாரம், ஒரு நிமிடம் திகைக்க வைத்தது, ஏனெனில் எனக்கு முன்னால் நீட்ஷேவின் வார்த்தைகள்…….நீட்ஷே தாக்கப்படும் காட்சியை அவர் விவரித்தது, ஒரு ஓரங்க நாடகம் பார்க்கும் விளைவை ஏற்படுத்தி விட்டது. அப்போதுதான் நினைத்தேன் இது விக்கிபிடியா பார்த்து பேசும் பேச்சல்ல. நீட்ஷேவின் எழுத்து ஆட்கொண்டதால் வரும் பேச்சென்று.
ஆனாலும் எனக்கு சாருவைப் பிடிக்கவில்லை. நான் இண்டர்நெட்டில் அவருடைய பேச்சை கம்பேர் செய்கிறேன் என்று அறிந்து சும்மா இருக்க வேண்டியது தானே. அவருக்கு பேச சுதந்திரம் இருக்குமளவிற்கு எனக்கு அவருடைய பேச்சை சந்தேகிக்கும் அளவிற்கு சுதந்திரம் இருக்கிறது தானே. ஆனால் என்னுடய லேப்டாப்பின் இண்டர்நெட் கனெக்டிவிடியை துண்டிக்க சொல்வதற்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அதனால்தான் எனக்கு சாருவை பிடிக்காது.
எனக்கு சாருவைப் பிடிக்காது, பிச்சாவரம் தீவை மதுவால் நனைத்தாரே அதனால் எனக்கு பிடிக்காது. தனது வாசகர்களுக்கு நம்மாலும் ஒரு இரவு லத்தீன் அமெரிக்க வாழ்க்கை வாழ முடியும் என்று காட்ட முடிந்ததற்காக எனக்கு சாருவைப் பிடிக்காது. முப்பது வருடமாக எழுதும் இவர் முப்பது நாட்களாக எழுதிவரும் என்னைப் போன்றவர்களின் பின்னூட்டத்திற்கெல்லாம் , தான் படித்த லத்தீன் அமெரிக்க எழுத்திலிருந்து மேற்கோள் காட்டி பக்கம் பக்கமாக எழுதுவதாலும் அவரை எனக்கு பிடிக்காது.
இப்படி பல காரனங்களுக்காக சாருவை எனக்கு பிடிக்காது. முக்கியமாக சாருவை எனக்கு பிடிக்கும் என்று நான் சொன்னாலே என்னை நீங்கள் அனைவரும் திட்டுவீர்கள் என்பதற்காகவேஎனக்கு சாருவை பிடிக்காது”. முக்கியமாக நன்பர் மயில்ராவணனுக்கு அவரைப் பிடிக்காது என்பதாலேயே எனக்கு சாருவைப் பிடிக்காது.

22 comments:

Mohan said...

ஒரே குழப்பமாக இருக்குதுங்களே!

PB Raj said...

மயில்,

அப்ப சாரு நல்லவரா கெட்டவரா?

மரா said...

First time charu

padithathil pdikathathu :)

http://charuonline.com/blog/?p=1016

My friend Gokul's blog link

கிருஷ்ண மூர்த்தி S said...

கோகுல், மயில் ராவணனுக்குப் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்பதற்காக மட்டுமில்லை, இப்படியெல்லாம் பதிவெழுதி சாரு மாதிரியே இம்சை செய்ய முடியும் என்பதால் எனக்கும் சாருவைப் பிடிக்காது!

இப்படியே பதிவெழுதிக் கொண்டு போனால் ஒன்று மட்டும் நிச்சயம் பிடிக்கும்...அது

......
......















......
.......

பைத்தியம் தான் பிடிக்கும்!

மரா said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

எவ்ளோ அடிச்சாலும் தாங்குறதால எனக்கு சாருவை பிடிக்கும்!

யுவா said...

mmm...

VISA said...

:)

ஜானகிராமன் said...

"எனக்கு மராவைப் பிடிக்காது..."

Giri Ramasubramanian said...

@ வால்பையன்

ஸேம் டயலாக்

Paleo God said...

மயிலு தோகை பத்திரம்! :)

No sense said...
This comment has been removed by a blog administrator.
காலிபோர்னியா ஊனிவர்சிட்டி said...

அவருடைய எழுத்துக்கள் பொன்னால் பொறிக்கப் படவேண்டியவை.

சாரு said...

அடிக்கறவன விட அடி வாங்கறவந்தான்யா வீரன்

DR.K.S.BALASUBRAMANIAN said...

எனக்கு சாருவை விட மயில்ராவணன் பிடிக்கும். சாருவை விட நல்லா எழுதுறார்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மரா said...

@ Mohan
ஏன் குழப்பம். நாங்க அப்பிடித்தான் அடிக்கடி குழப்புவோம் :)

மரா said...

@ ராயல் ராஜ்
கெட்ட நல்லவர் :)

மரா said...

@ கி.மூ சார்
நாங்க அல்ரெடி பிராந்து தான் சாரே :)

Anonymous said...

Don't be too excited about the 5000 hits you received after Charu put a link in his site. And Charu is not Socrates as you like to believe. He writings are interesting and simple compared to JeMo,SR and others. Beyond that initial curiosity there is not much to articles.

pichaikaaran said...

“சாரு ரசிகர்கள் அவர் எழுத்தை பற்றி எதுவும் பேசாமல், அவர் நடை, உடை, வீரபிராதபங்களை மட்டும் பேசி அவரை டென்ஷனாக்குவது ஏன்...

pichaikaaran said...

“சாரு ரசிகர்கள் அவர் எழுத்தை பற்றி எதுவும் பேசாமல், அவர் நடை, உடை, வீரபிராதபங்களை மட்டும் பேசி அவரை டென்ஷனாக்குவது ஏன்...