Sunday, November 21, 2010

கருந்தேளின் நடனம் - மயில்ராவணன்

                                    நீங்கள் நினைத்து வந்த எந்த காரணமும் இந்த கட்டுரைக்கு கிடையாது. கவலைப்பட வேண்டாம். இயற்கை மீதும், உயிரினத்தின் மீதும் உள்ள ஈடுபாடும் அதை தொடர்ந்து நான் ”மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட் சொசைட்டி” யின் உறுப்பினரானதும் நண்பர்கள் நீங்கள் அறிந்ததே. இலக்கியத்தின் மீது கொண்ட அதே அளவு ஈடுபாடும் , ஆர்வமும் இயற்கையின் மீதும் எனக்கு உண்டு. ஹாலிவுட் சினிமாவிற்கு எப்படி ஸ்பீல்பெர்கோ , தமிழ் இலக்கியத்திற்கு “எஸ்ரா,ஜெயமோகன்” எப்படியோ, அதே போல இந்த இயற்கை பற்றிய ஆய்வுகளுக்கு பெயர் போனவர் “டேவிட் அட்டன்பரோ”. இவருடைய பல ஆய்வுகளை, இயற்கையை இவர் நேசிக்கும் விதத்தினை டிஸ்கவரி சேனல் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம், தாய்மொமியான தமிழிலேயே அருமையான பல விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

                                அண்மையில் இவரின் நூலான “Life on Earth” ஐ தமிழில் “பரிணாமத்தின் பாதை” என்ற பெயரில் டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மொழிபெயர்ப்பில் படிக்க கிடைத்தது. அருமை! பக்கத்திற்கு பக்கம், இயற்கையை பற்றிய செய்திகளை அள்ளி தெளித்துள்ளார். இந்த பூமியில் எண்ணிலா உயிரினங்கள் வாழ்ந்து , மறைந்து, உறுமறைந்து, சந்ததிகளை பெருக்கி, மற்றும் நினைத்து கூட பார்க்க இயலாத பல விஷயங்களை செய்து வரும் உண்மைகளை இந்த நூலின் மூலம் விளக்க முயன்றிருக்கிறார். United Writers வெளியீடாக வந்துள்ள இந்த நூலை படிக்கும்போது, நாம் காண இயலாத பல இடங்களுக்கு இவரது எழுத்தின் மூலம் அழைத்துச் சென்று அந்த காணகத்தை, பூமியின் அடி ஆழத்தை, ஏன் கடலடியை கூட நம் கண் முன் காட்சிபடுத்துகிறார். மேலும், மனித இனத்தால் சீரழிக்கப்பட்ட இயற்கை வரலாற்றையும், மனிதனின் அஜாக்கிரதையாலும், ஆர்வகோளாறாலும் அழித்தொழிக்கப்பட்ட பல உயிரினங்களைப் பற்றி எல்லாம் அழகாக விளக்குகிறார்.

                                பறவையியலில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய பகுதி ஒன்று “ஆகாயத்தின் அரசர்கள்” என்ற தலைப்பில் இந்த நூலில் உள்ளது. பறவைகள் தோன்றிய விதமும், அவை மரமேறும் உயிரினங்களின் வழி தொன்றலே என்ற உண்மையும், எனக்கு உண்மையில் புதிய செய்திதான்.
ஊர்வனவற்றை பற்றி விளக்கும்போது, தேள்களைப்பற்றிய ஒரு செய்தி மிக அருமை.
                      அவர் வார்த்தைகளில் “ தீவிரமான போர்க்குணத்தோடுதான் ஆண் தேள் பெண் தேளை அணுகுகிறது. இவ்விணைப்பில் பெண் தேளின் ஆயுதங்கள் சமபலத்துடன் அமைய, அந்த ஜோடி நடனமாட ஆரம்பிக்கிறது. வால்கொடுக்கை உயர்த்தியவாறு இரண்டும் முன்னும் பின்னும் நகர்ந்து ஆடுகின்றன. சில சமயன்களில் வால் கொடுக்குகள் கூட பின்னிக் கொள்வதுண்டு. சிறிது நேரத்தில், அந்த நடன அரங்கிலுள்ள குப்பைத் துணுக்குகள் தேள் ஜோடியின் நடனத்தால் பெருக்கித்தள்ளப்படுகின்றன. பின்னர் ஆண் தேள் தனது மார்புப் பகுதிக்குக் கீழிருக்கும் விந்துதுளை வழியே விந்துத் திரளை வெளிப்படுத்தி பூமியில் இடும். தன் முன்பக்கக் கொடுகுகளால் பெண் தேளப் பற்றி விருக்கென முன்னுக்கிழுத்து அதன் விந்து ஏற்கும் துவாரம் விந்த்துத்திரளின் மேல் படியுமாறு செய்யும். விந்த்துத் திரளை பெண் தேள் கிரகித்துக் கொண்டதும் ஆணும் பெண்ணும் பிரிந்து தன்வழிச் செல்லும். இறுதியாக, முதிர்ந்த முட்டைகள் பெண் தேளின் முட்டைப் பையிலேயே கருவுயிர்ட்த்து தேள்க் குஞ்சுகள் தம் முதல் தோல உதிர்த்ததும் சுதந்திரமாக வாழ ஆரம்பிக்கின்றன.”

                           இப்படியொரு கருவுறும் செயலை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை கண்டறிய எவ்வளவு பொறுமையும் நேரமும் தேவைப்பட்டிருக்கும் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இது போன்ற ஆயிரத்துக்கும் மேலான தகவல் களஞ்சியமாக, இயற்கையின்பால் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஒரு கையேடாக விளங்கும் இந்த புத்தகம், தங்கள் சேமிப்பில் இருக்கவேண்டியது என்றால் அது மிகை அல்ல(#கேபிள்க்கு நன்றி).

                          மேலும், இவருடைய பல ஆய்வுகள் இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. முக்கியமாக. ஆர்க்கிவ் என்ற இணையத்தளத்தில் காணலாம். இந்த தளமும் இவருடைய முயற்சியால் கட்டற்ற களைக் களஞ்சியமாக வளர்ந்துள்ளது.
                                                                    
டிஸ்கி:

   தலைப்பு(தேள்), எஸ்ரா, ஜெமோ ஆகியவை சுவாரசியத்திற்காக சும்மா கலந்து விட்டது. மற்றபடி உள்குத்து எதுவும் இல்லைங்க.(குமுதம் பண்ணா மட்டும் நியாயம் , நான் பண்ணால் தப்பா? சரி விடுங்க…நாம் இயற்கையை போற்றுவோம்!

11 comments:

க ரா said...

போற்றுவோம் மாம்ஸ் :)

geethappriyan said...

அடடே நண்பா
நீ புத்தக வாசிப்பில் இறங்கிவிட்டதால் தான் பதிவுகள் இடுவதில்லையா?மிக அருமையான புத்தக அறிமுகம் ,உன்னை அடுத்த முறை பார்க்கையில் வாங்கிக்கொள்கிறேன்.
கருந்தேளின் நடனம்-நல்ல பெயர் வைத்தாயடா.

எஸ்.கே said...

இயற்கையை போற்றுவோம்!

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி மயில்.

மரா said...

@ இராமசாமி கண்ணன்
@ கீதப்ரியன்
@ எஸ்.கே
@ சரவணக்குமார்.செ

அல்லார்க்கும் நன்றி வருகைக்கும், ஆதரவுக்கும்.

யுவா said...

நல்ல விமர்சனம். பதிப்பகம் யாரோ?

யுவா said...

அதாவது மேலதிக தகவல் வேண்டும்... ஹிஹி!

"உழவன்" "Uzhavan" said...

பதிவு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது..

pichaikaaran said...

ஒரு வித்தியாசமான புத்தக அறிமுகத்துக்கு நன்றி

கிருஷ்ணப்ரியா.. said...

அருமையான புத்தகம் பற்றிச் சொன்னதற்கு நன்றி நண்பரே.. எந்த பதிப்பகம் என்றும் சொன்னால் வாங்க வசதியாக இருக்கும்...

நெய்வேலி பாரதிக்குமார் said...

நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்தீர்கள் நன்றி ம.ரா. இயற்கை மட்டுமல்ல நீங்கள் வாசித்த அரிதான புத்தகங்களை இன்னும் அறிமுகம் செய்யுங்கள் தலைப்பில் உங்கள் குறும்பை ரசித்தேன்.