Sunday, December 5, 2010

......விளம்பரத்திலுமா?

கமல் செய்வது தவறு, மணிரத்தினம் செய்வது தவறு, சமீபத்தில் மிஷ்கின் செய்வது தவறு என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், நாம் நமது வாழ்வில் அன்றாடம் இந்த காப்பி சமாச்சாரம் நடந்து கொண்டிருப்பதை உற்று நோக்கி கொண்டிருப்பதில்லை. அதற்கு நமது கார்பரேட் கம்பெனிகளும் உடந்தையாகவோ, அல்லது அவைகளே இத்தகைய காப்பி வேலையை செய்து கொண்டிருப்பதையோ உணர்வதில்லை. இந்த சினிமாக்காரர்கள் சேர்ப்பதை விட , இத்தகைய காப்பி யால் கார்ப்பரேட் கம்பெனிகள் சேர்ப்பது அதிகம். போதும் இந்த பூடகப் பேச்சு. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். ஷேக்ஸ்பியர் இன் லவ் என்றொரு அற்புதமான திரைப்படம், காதலும் காமமும் பொங்கி வழியும். ஒவ்வொரு காட்சியும், அருமையான வசனத்தாலும், இசையாலும் நிரம்பி வழியும். ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலகட்டத்தை நம் கண்முன்னால் ஓட விட்டிருப்பார்கள்.
அந்த திரைப்படத்தை நானும் என் நண்பரும் வீட்டில் பார்த்து கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. அதில் வரும் இசையின் ஒரு சிறு பகுதியை கேட்டபோது, இருவருக்குமே அதை எங்கேயோ கேட்டது போன்ற ஞாபகம். காப்பி அடிப்பதை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் ரேஞ்சுக்கு கண்டுபிடிக்கும் கருந்தேளுக்கு உடனே ஃபோன் செய்து கேட்டோம். அவர் வேறொரு படத்தை துப்பறியும் வேலையில் பிசியாக இருந்தார். நாங்கள் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டோம்.
கடைசியில் அது ரிலையன்ஸ் விளம்பரத்தில் ஹிருத்திக் ரோஷன் வாசிக்கும் ஃப்ளூட் இசை என்பதை உணர்ந்தோம். டெம்போவை கொஞ்சம் மாற்றி அதே இசையை ஜிங்கிள்ஸாக போட்டு விட்டிருக்கிறார்கள். அந்த ஜிங்கிள்சின் ஸ்டோரி லைன் கூட சிறு வயதில் நாம் படித்த கதைதான். அந்த விளம்பரத்தின் லிங்கையும், ஷேக்ஸ்பியர் இன் லவ் திரைப்படத்தில் அந்த காட்சியையும் இசையுடன் கொடுத்திருக்கிறேன். நண்பர்கள் என் கூற்று சரிதானா என்பதை தெளிவு படுத்தினால் தன்யனாவேன்.

இது ஒரிசினல்:)இது தழுவல்(எடுத்தாண்டது) :(ரிலையன்ஸின் விளம்பரத்தை கம்போஸ் செய்தது யார் என்பதும் சரியாக தெரியவில்லை. இரண்டு மணி நேர திரைப்படம் என்றால் சில விநாடிகள் tribute அல்லது thanks கார்ட் போடலாம். சில விநாடிகளுக்கு பல கோடிகளை கொட்டி கொடுக்கும் விளம்பரங்களில் அதை எப்படி போடுவது. சன் டிவி ஃபிளாஷ் நியூஸ் போல ஸ்குரோல் போடலாமா? J

டிஸ்கி:
            காப்பி, டீ எல்லாம் எனக்கு பிடிக்கும்தான். நான் பெரிய உத்தமனெல்லாம் கிடையாது. இருந்தாலும் ஏதோ எழுதனும்னு தோணிச்சு..... எழுதிப்புட்டேன்.நன்றி.

21 comments:

இராமசாமி said...

ஆகச்சிறந்த புலனாய்வு :)

சரவணகுமரன் said...

//காப்பி அடிப்பதை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் ரேஞ்சுக்கு கண்டுபிடிக்கும் கருந்தேளுக்கு உடனே ஃபோன் செய்து கேட்டோம். அவர் வேறொரு படத்தை துப்பறியும் வேலையில் பிசியாக இருந்தார். //

:-)

கிருஷ்ணப்ரியா said...

கொடுத்தாச்சு "துப்பறியும் புலி" பட்டம்.... வாழ்த்துக்கள்..
காப்பி அடிப்பவர்களுக்கு தானே பணமும் பரிசும் கிடைக்கிறது? என்ன செய்ய ? அவிங்கவிங்க தும்பம் அவிங்கவிங்களுக்கு.....

butterfly Surya said...

நந்தலாலா வெளியான நேரத்தில எங்க பார்த்தாலும் ஒரே காப்பி டீயா இருக்கு..

மரா..நீயுமா..?

வழிப்போக்கன் - யோகேஷ் said...

எல்லாம் காப்பி மயம்......

பார்வையாளன் said...

புலன்விசாரணை அருமை

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

டிவில விளம்பரம் செய்யலாம்னு செய்யறதே காப்பி அப்புறமென்ன விளம்பரத்திலுமா?

Chitra said...

காப்பி - இதிலுமா?

சே.குமார் said...

நந்தலாலா வெளியான நேரத்தில எங்க பார்த்தாலும் ஒரே காப்பியா இருக்கு..

baba said...

நண்பர் அவர்களுக்கு வணக்கம்.

இதே போன்று ஒரு நாள் ஹாலிவுட் படம் ஒன்று பார்த்தேன் . டிவி யில் தான்.

படம் பெயர் Lord of war (2005 ). அதில் நிகோலஸ் கேஜ் ( Nicholas Cage ) ஒரு ஆயுத வியாபாரியாக நடித்திருப்பார் . ஒருமுறை ஆப்பிரிக்க நாடொன்றில் ஆயுதங்களுடன் விமானத்தில் செல்லும் பொழுது சர்வதேச போலீசினால் பிடிபட வேண்டி நேரும் . உடனடியாக விமானத்தை ஓர் வயல் வெளி போன்ற இடத்தில தரையிறக்கி , அதில் உள்ள ஆயுதங்களை எல்லாம் அந்த இடத்து மக்களை அழைத்து (வருவோர் போவோர் எல்லாம் ) எடுத்துக்க சொல்லுவர். அவர்களும் எடுத்து சென்றுவிடுவார்கள் . அப்பொழுது ஒரு பின்னணி இசை ஒலிக்கும் .

அதை கேட்ட பொழுது எனக்கு துக்கி வரி போட்டது. ஏனெனில் அந்த இசை நம்ம ARR இசை அமைத்த பாம்பே (BOMBAY ) படத்தின் பின்னணி இசை. அப்படியே காப்பி.

நேரமிருப்பின் பார்க்கவும்.

நன்றி

ஆனந்த்
பமாகோ, மாலி

மரா said...

@ இராமசாமி
ஹி ஹி...நன்றி.

@ சரவணகுமரன்
:))

மரா said...

@ கிருஷ்ணப்ரியா
வாங்க..வாங்க..’துப்பறியும் புலி’யா...நான் துப்பறியும் சாம்பு :) (சின்னப்புள்ளையா இருக்கும்போது படிச்சது)

மரா said...

@ வண்ணத்துப்பூச்சியார்
மீ டூ புரூட்டஸ் :(

மரா said...

@ வழிப்போக்கன்
காப்பி தப்புன்னு சொல்லலை.. அதுக்கப்புறம் பண்ணுற அலப்பறைதான் தாங்க முடில :)

மரா said...

@ பார்வையாளன்
நன்றி.

@ ஷங்கர்
கொஞ்சம் விளக்குங்க...ஒன்னியிம் பிரியலை :)

மரா said...

@ சித்ரா
நீங்க ஒருத்தர் தான் அக்கா நான் ப்ளாக் ஆரம்பிச்ச காலத்துலேர்ந்து எனக்கு பயங்கர ஆஆதரவு தர்றது... நன்றி.

மரா said...

@ பாபா
கண்டிப்பா பார்க்கிறேன்.நன்றி தகவலுக்கும்,வருகைக்கும்.

கருந்தேள் கண்ணாயிரம் said...

யாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.... யாருய்யா தூங்கிகிட்டு இருக்குற காட்ஸில்லாவ எழுப்புறது? நானே கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருக்கலாம்னு பார்த்தா, ஷெர்லாக் ஹோம்ஸ்னு சொல்லி என்னைப் பதிவு போட வெக்க சதி பண்றீரோ? அதெல்லாம் நடக்காது :-) .. பைதிவே, எப்புடிய்யா உங்களால முடியுது இதெல்லாம்? :-) வர்ரேன்.. இதோ சீக்கிரமே வர்ரேன்...

ajith said...

super

Anonymous said...

maraa......please write short stories

ajith said...

hi