-மயில்ராவணன்
கல்யாணமான மறுநாளே புதுமணத் தம்பதி பென் மற்றும் ஜேன்ஷா டோக்கியோவிற்கு பயணிக்கின்றனர். பென் சிறந்த புகைப்படக் கலைஞன். டோக்கியோவில் வேலை கிடைக்கிறது. வீட்டிற்குப் போகும் வழியில் தெரியாத்தனமாக ஒரு இளம்பெண்ணின் மேல் காரை ஏற்றி இறக்கி விடுகிறாள், கார் ஓட்டிய ஜேன்ஷா. கார் தாறுமாறாக ஓடி வழக்கம்போல் ஒரு மரத்தில் மோதி நிற்கிறது. என்னமோ, ஏதோவெனப் பயந்து இறங்கி அப்பெண்னை தேடுகின்றனர், யாரும் இல்லை, ரத்தமும் இல்லை.போலீஸ் வருகிறது.யாரும் அடிபடவில்லை, ஏதோ விலங்காக இருக்கலாம் என்று சொல்லிச் செல்கின்றனர். இருப்பினும் ஜேன் அதே நினைப்பாகப் புலம்பிக் கொண்டு வருகிறாள்.பென் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை, ஆனால் ஜேன்ஷா ‘Spirit Photography’ பற்றி பெரிய ஆராய்ச்சியே நடத்துகிறாள்.கதையை முழுவதும் சொல்லக் கூடாது. டிவிடியில் பாருங்கள்.(நம்ம சோம்பேறித்தனத்த என்னமா சமாளிக்க வேண்டியிருக்கு :D ).இந்தப் படத்தைப் பேய்ப் படம் என்று சொல்வதைக் காட்டிலும் மர்மத்திகில் படம் என்று கூறுவதே சரி. ஏனெனில் படம் போகப் போக நமக்கு நிறைய விசயங்கள் புலப்படும். டோக்கியோவின் கட்டிடங்கள், ரயில்வண்டிகள், குகைகள் இன்னும் பல விசயங்களை அழகாகப் படம்பிடித்திருக்கிறார்கள்.
வழமைபோல் இப்படத்தின் டிரைலர் இங்கே
வழமைபோல் இப்படத்தின் விவரம் இங்கே
டிஸ்கி:
சிவனேன்னு இருந்த என்னை உசுப்பி விட்டு ராவோடு ராவாகப் பார்க்க வைத்து, விமர்சனம் எழுத வைத்த நண்பர் கைலாஷத்தான் தேடிக்கிட்டு இருக்கிறேன். ‘Polaroid' காமிராக்களக் கண்டாலேப் பயமாக உள்ளது.
14 comments:
இந்தப் படத்த பாதி பார்த்தேன் கொஞ்ச நாளு முன்னால . . பகீர்னு பயப்படுற மேரி இர்க்குமா ? நமக்கு அந்தமேறி படந்தான் வேணும் பாஸு . . . இருந்தா சொல்லுங்க. . பார்த்து பயப்பட்ருவோம் . . :-)
பயத்தோட பாத்துருவோம் (அப்புறம் நாம எப்ப வீரன் ஆவறது?)
@ கருந்தேள் கண்ணாயிரம்
வாங்க பாஸ். நீங்கெ பயப்படமாட்டீங்க. நிஜத்திலயே எம்புட்டு பேயோடு பழகுறீங்க... :)
@ அண்ணாமலையான்
சீக்கிரம் வீரனாகுங்க சார். நன்றி
நன்றி தல.கதைய சொல்லாம நிறைய தகவல்களோட நல்ல விமர்சனம் .
தமிலிஷ், தமிழ் மணம் ஓட்டு பட்டை நிறுவினிங்கன்னா பதிவு நிறைய பேரை சேரும்.
சாயந்தரம் வர்றேன் தல.
நண்பா நல்ல எழுதினீங்க
என்ன ஒரு மிரட்டலான படம் இல்லை?.
மெயின் ஐட்டமே அந்த போட்டோக்ராபரின் தோள் பட்டை வலி தான்.அங்க தான் வச்சார் சஸ்பென்ஸை.
செம படம் பார்ட்2 வந்தாலும் பார்க்கலாம்
தல .விமர்சனம் கதையை லீக் பண்ணாமலும் பாக்கணும்கிற ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் இருக்கிறது.
இந்த படம் ரொம்ப அருமையாக இருந்தது.இந்த படத்தை பாக்குறப்போ இருட்டுல தனியா பாத்ரூம் போகக் கூட பயமா இருந்தது.படம் முடிஞ்சப்புறம் இன்னும் வண்டியிலே போக பயம்,உடம்புல வலிச்சா பயம்,ஸ்டுடியோவில போய் போட்டோ எடுக்க பயம்,போலராய்டு கேமராவை பாத்தா பயம்னு கொஞ்சநாளக்கி நம்பளை தெனாலி டைப்-ஆக மாத்திருச்சு.
நான் orginal dvd இல பார்த்தேன் . ஆகவே படம் முடிந்த பிறகு இந்தப்படம் எப்படி ஷுட் பண்ணினகன்னு டைரக்டர்ஸ் விளக்கின பிலிம் பிட் ஓடிச்சி. .அதைபாக்கவும எல்லாம் செட்டுதாண்டா என்று கொஞ்சம் தைரியம் வந்துச்சு .
தொடர்ந்து அதே டைரக்டர்ஸ் இந்த மாதிரி ஷட்டர் -னு படம் எடுக்கிறோம்னு தெரிஞ்சவுடன் நண்பர்களும்,முன்பின்தெரியாத பலரும் கூட அவர்களிடம் இருந்த ( இறந்தவர்கள் முகம் தெரியும் ) போட்டோகளை அனுப்பினார்கள். அந்த orginal படங்களைத்தான் படம் முழுவதும் use பண்ணிருக்கோம் என்று வயிற்றில் ஜிலீர் என்று ஐஸ் கத்தியை இறக்கினார்கள் .
இதன்பிறகு பார்த்த பல த்ரில்லர்கள் மறந்து விட்டது .இந்த படம் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

(கமெண்ட் 2 தடவை விழுந்திருந்தால் ஒன்றை வெளியிட வேண்டாம் .
நெட் ப்ரோப்ளம் )
உருவினடதோட சரி இன்னும் பார்க்கல..:))
நல்ல விமர்சனம்ங்க தல சீக்கரம் பாக்கணும் அம்புட்டு பயமாவா இருக்கு அதையும் பாப்போம்.
”டிஸ்கி:
சிவனேன்னு இருந்த என்னை உசுப்பி விட்டு ராவோடு ராவாகப் பார்க்க வைத்து, விமர்சனம் எழுத வைத்த நண்பர் கைலாஷத்தான் தேடிக்கிட்டு இருக்கிறேன். ‘Polaroid' காமிராக்களக் கண்டாலேப் பயமாக உள்ளது.”
ஹாஹாஹா அய்யோ அய்யோ நீங்க பரவாயில்ல தல என்ன zeitgeist addendum பாக்க வச்சிட்டார் கைலாக்ஷ் அதுவும் இல்லாம அத பத்தி அறிமுகம் வேற எழுத வச்சிட்டார். மாட்னார்னா சொல்லுங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவர ஒரு வழி பண்ணிடலாம் :)
உங்ககிட்ட இருந்து இன்னும் ரொம்ப எதிர்பார்க்கிறோம் தல.
நல்ல படம். தனியாதான் உக்கார்ந்து இந்தப் படத்தையும் பார்த்தேன். அம்புட்டு பயப்படலைன்னாலும் அந்தப் பேய் கழுத்துல உக்கார்ந்திருக்குன்னு தெரிஞ்சுக்குற அந்த நிமிட திக்..திக்.. மறக்க முடியாத அனுபவம்..
@ கைலாஷ்
வாங்க நல்லவரே........தோள்பட்டையை தடவி தடவிப் பாத்துக்கிட்டிருக்கேன்.
@டுபாக்கூர் கந்தசாமி
அண்ணே கண்டிப்பாக கைலாஷ் சென்னை வந்தாருன்னா நல்லா கவனிச்சுருவோம்..நன்றி.
@ சென்ஷி
தனியாப் பாத்திகளா? ஒருவேளை துபாய்ல பேய் இல்லையோ என்னமோ? அடிக்கடி வாங்க பாஸ்.
உங்க விமர்சனமே பாக்கத் தூண்டுது கண்டிப்பா பாத்துடறேன் மயில்ராவணன்..நல்ல விமர்சனம்..
http://rameshspot.blogspot.com/
Post a Comment