Sunday, April 4, 2010

குரக்கடைல் காய்ச்சல்

                                                                     மயில்ராவணன்


                        “என்னதான் முடிவா சொல்றே நாகராஜ்?” என்றான் ரகு. ஏனெனில் ரகுவும் நாகராஜும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ஒரே விசயத்தைத்தான் பேசிக் கொண்டேயிருந்தார்கள். சிகரெட் ஒரு பாக்கெட் காலியாகியும் விட்டது. ஒரு சிகரெட் பாக்கெட் என்று எடுத்துக் கொண்டீர்கள் என்றால் பத்து சிகரெட்டுகளை அது உள்வாங்கியிருக்கும். யாருக்கும் தெரியாத விசயத்தை புதிதாகத் தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் நீங்கள் எப்போதுமே சிகரெட்டை பாக்கெட்டாக குடிப்பதேயில்லை. 


                           தோன்றிய போது பெட்டிக்கடையில் ஒன்று மட்டும் வாங்கி அங்கேயே புகைத்து டிச்சில் சுண்டி எறிந்துவிட்டு விடுகிறீர்கள். யார் உங்களிடம் எந்த இன்டர்வியூவில் கேட்டாலும் தைரியமாகச் சொல்லுங்கள். பாக்கெட்டுக்கு பத்தே சிகரெட்டுகள் தான். புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு சுகமானது! புகை பிடிக்காமல் மனிதமூளை வேலை செய்வதில்லை. ரகுவிற்கு அப்படித்தான். புகை ரகுவின் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.


”ப்ளீஸ் ரகு...இந்த விஷயத்தில் நாம் அவசரம் காட்டவே கூடாது! அவசரப்பட்டால் காரியம் கெட்டுவிடும். அது உனக்கே தெரியும்.” என்றான் நாகராஜ்.


”சரி அவசரம் இல்லை.ஆனால் ரெண்டு மாதங்களாக இப்படி நடக்கிறது அப்படின்னு சொல்றே! அவள் பெயர் கோபிகா அப்படிங்கறே! அவளுக்கு கூடவே பிறந்தவர்கள் எத்தனை பேர்?அப்பா அம்மா உயிரோடு இருக்கிறார்களா? இல்லை நரகத்திற்கு சென்றுவிட்டார்களா? இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் கோட்டையில் ஓட்டை விட்டிருக்கிறேயே!” 


”ஆமாம் ரகு!அதைப்பற்றி எல்லாம் நான் யோசிக்கவேயில்லை. என் காதல் என் மூளையை மழுங்கடித்து விட்டது!கண்ணை மங்கலாக்கி விட்டது! காதுகளை கேட்காதவை களாக்கி விட்டது. ஆனா எனக்குள்ள அந்த உணர்ச்சி பத்திக்கிச்சு. கோபிகா என்னோட கையைப் பிடிச்சு தான் கூல்டிரிங்க்ஸ் தருவா, சில்லரை தருவா! அவ அழுத்தலே அவளோட காதலைச் சொல்லும்.அவ சில்லறை தரவேண்டுமென்பதற்காகவே நோட்டாக தான் தினமும் தருவேன்.”


”கங்காகௌரி” படத்துல வர்ற லியோனி மாதிரி கஞ்சப் பேர்வழியை விட மோசமா பைசா விசயத்தில் நடந்து கொள்கிற ஆட்கள் கூட காதல் என்று வந்தபிறகு விட்டுக் கொடுத்து தாராளமான மனசு உடையவர்களாக மாறிவிடுகிறார்கள். அந்தோ பரி பாரிதாபம்.


” நாகராஜ், நாளைக்கு உன்கூடவே அந்த சர்பத் கடைக்கு வர்றேன். அவ உன்னைப் பார்த்து நீ சொன்னாப்புல எல்லாம் சிரித்தமாதிரி நடந்துகொண்டாள் என்றால் உடனே உனக்கு ரிசல்ட் தான். இப்போ எனக்கு அவசரமா வேலை இருக்கு ...... நாளை சந்திப்போம்.” என்று கூறிவிட்டு ரகு புறப்பட்டுப் போனான். நாகராஜ் மீண்டும் கனவு உலகுக்கு போனான். கனவில் கோபிகா  குதிரை வண்டி ஒன்றில் டக்டக்டக் என்று குதிரையின் கடிவாள கயிற்றை பிடித்துக் கொண்டு வெள்ளை நிற ஜிகினா உடையில் வந்தாள். நாகராஜ் இரண்டு கைகளையும் உயரே விரித்துப் பிடித்தபடி...


                ராணியின் முகமே....ரசிப்பதில் சுகமே...பூரண நிலவோ....புன்னகை மலரோ... அமுதத்தை குடித்தேன் .....அணைக்கத் துடித்தேன்...... என்று இதழ் விரித்து பாடினான். ஆனால் கனவில் அவதார் நாயகனைப் போல் நீல வர்ணத்தில் காதுகள் நீண்டவைகளாக தனக்கு ஏன் இருந்தன என்று தெரியவில்லை.

அடுத்த நாள்---

குரோம்பேட்டை ஹைஸ்கூல் முன்பாகவிருந்த அந்த சர்பத் கடைக்குள் நண்பர்கள் இருவரும் நுழைந்தார்கள். மதியம் சரியாக பதினொன்று இருக்கும். கடைக்குள் ஈக்கள் தான் பறந்து கொண்டிருந்தன. கோபிகா விசிறி ஒன்றின் உதவியால் அவைகளை விரட்டிக் கொண்டிருந்தாள். நாகராஜை பார்த்ததும் புன்னகை ஒன்றை உதிர்த்தாள். வெண்பற்கள் வரிசையாக பளீரிட்டன! கருவிழிகள் அங்கும் இங்குமாய் சுழன்றன! ரகு அவள் கண்களில் காதல் என்ற விசயத்தை, ஓடுகிறதா? என்று தேடினான்.


          -இன்னைக்கு நேரத்துலயே வந்துட்டீங்க ரகு சார்! ஜோலி முடிஞ்சு போயோ? என்றாள்.


        -இல்லை...கோபிகா... ஒரு ஜோலியா நண்பனோட இந்தப்பக்கமா வந்தேன்.அதான் உன்னையும் பார்த்துட்டு ... ஒரு லெமன் ஜூஸ் அடிச்சுட்டு போலாம்னு வந்தோம்...என்றான் நாகராஜ். பேச்சு தடுமாற்றமாய் வெளிப்பட்டது! காதலில்,தடுமாற்றம் ஆகவே ஆகாது என்று ரகு சொல்கிறான். காதலில் என்றுமே பெண்கள் நேராக சொல்ல மாட்டார்கள் என்று வேறு வகுப்பு எடுக்கிறான். புன்னகையோடு கோபிகா  இரண்டு பூப்போட்ட கண்ணாடி டம்ளர்களில் இருவருக்கும் லெமன் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

  ” என்ன கோபிகா கடையில் கூட்டம் இன்று குறைவு போல?” என்றான் நாகராஜ்.  
        ” ஸ்கூல மதியம் விட்டாச்சுன்னா கூட்டமிருக்கும் ”
” அப்ப சும்மா இருக்க போர் அடுக்கும் இல்ல? ”
” போர் எல்லாம் இல்லங்க நாக... இதோ ஒயர்கூடை பின்னிக்கிட்டு இருக்கேன் ... அதுவும் வேலை தான். சாப்பாட்டு கூடை, புத்தக கூடைன்னு டிசைன் டிசைனா போடுவேன். உங்களுக்கு வேணுமா?” என்றவள் எழுந்து வந்து டம்ளர்களை எடுத்துப் போய் கழுவினாள். நாகு இருபது ரூபாய் நோட்டு கொடுத்தான். கோபிகா  கல்லாவில் சில்லறை கொண்டு வந்து நாகராஜ் கைக்குள் அழுத்தித் திணித்து விட்டு புன்னகைத்துச் சென்றாள். 
எந்தா நன்னாயிட்டுண்டோ? என்று சொல்லாமல் சொல்லியது அவள் முகம். ரகு விழிப்படைந்தான்.


” கோபிகா  நீங்க நாகராஜை விரும்புகிறீங்களா?” என்று எடுத்ததுமே குட்டை உடைத்தது போல கேட்டான் ரகு! கோபிகாவிற்கு உடனே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.சுதாரிக்கவே சற்று நிமிடம் ஆனது! ஒரு சின்ன அதிர்ச்சிதான்.

” நான் எதுக்கு நாகராஜ விரும்பணும்? நாகு என்ன அத்தை பையனா? ஏன் நீங்க தப்பா கேட்கிறீங்க? அதுவும் நாகு சார் கேட்கலை. நீங்க கேட்கிறீங்க? “ என்றான்.


             ” இல்ல...அவனுக்கும் கேட்க ஆசைதான். உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னான். நீங்களும் சில்லறையை அவன் கையில அழுத்தி குடுக்கறீங்க..சிரிச்சு பேசுறீங்க...அதான் கேட்டேன் ”.


              ” வியாபாரத்துக்கு லாபம் பாக்கறத்துக்கு தான் நான் கடைவெச்சு இங்க உட்கார்ந்திருக்கேன். புருஷன் பிடிச்சு கட்டிக்கிறதுக்கு இல்லை. நாகு சார் என் கடைக்கு டெய்லி கஸ்டமர். டெய்லியும் வர்றதால நான் சிரிச்சு பேசி பழகுவேன். டெய்லி கஸ்டமர் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா! எல்லார் கூடவும் சிரிச்சுதான் பேசுவேன். முகத்தை கொரங்கு மாதிரி வச்சுட்டு வியாபாரம் செஞ்சா கடைக்கு கூட்டம் வருமா? கையில காசு கொடுத்தா காதல் வந்துருமா? ஒரே அதிசியம் தான் நீங்க பேசுறது! “ என்று கூடை பின்னுவதில் மும்முரமானாள்.


              ரகு ‘சாரி’ கேட்டுவிட்டு எழுந்தான். பின்னையே நாகராஜும் முகத்தை தொங்க வைத்துக் கொண்டு கிளம்பினான். காதல் பின்னே எப்படி வரும்? என்று நாகராஜ் சாகும் காலம் வரை தெரிந்து பொள்ளவே இல்லை. குரக்கடைல் காய்ச்சல் வந்து அதன்பின் ஆறுமாதத்தில் நாகராஜ் செத்துப் போனான். பறவைக் காய்ச்சல், பன்னிக் காய்ச்சல் வரும்போது குரக்கடைல் காய்ச்சல் வராதா என்ன?

22 comments:

Chitra said...

முகத்தை கொரங்கு மாதிரி வச்சுட்டு வியாபாரம் செஞ்சா கடைக்கு கூட்டம் வருமா? கையில காசு கொடுத்தா காதல் வந்துருமா? ஒரே அதிசியம் தான் நீங்க பேசுறது! “ என்று கூடை பின்னுவதில் மும்முரமானாள்.

...... a practical lady with practical thoughts. :-)

அண்ணாமலையான் said...

வரும் வரும்...

geethappriyan said...

ஃபார்மாலிட்டிஸ் டன் வாத்யாரே

geethappriyan said...

"குரக்கடைல் காய்ச்சல்"
நல்ல காய்ச்சல் தான்
:))

சைவகொத்துப்பரோட்டா said...

"ஒரு மாதிரியான" காய்ச்சல்தான்!!!

கிருஷ்ண மூர்த்தி S said...

குரக்கடைல் காய்ச்சல், குரங்குக் காய்ச்சல் இப்படியே பரிணாமம் பேசிக் கொண்டே போனால் பரிணாமக் காய்ச்சலும் கூட வரும்! இப்போதெல்லாம் பகுத்தறிவுக் காய்ச்சல் ரொம்பப் பழசாகிப் போனதனால் இப்படி......!

துபாய் ராஜா said...

இயல்பான நிகழ்ச்சி. கோபிகா பிழைக்கத் தெரிந்தவள்.

முதலைக்கண்ணீர் போல முதலைக்காய்ச்சலா... :))

பனித்துளி சங்கர் said...

அதெல்லாம் வரும் முயற்சி பண்ணுங்க .

நிலாமதி said...

காதலும் கஷ்டமர சேர்விசும் என்று போடலாமோ? ....

மரா said...

@ சித்ரா
நன்றி.

மரா said...

@ அண்ணாமலையான்
விருது வாங்குனதுக்கு வாழ்த்துக்கள் சாரே..

மரா said...

@ கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
அடுத்து டினோசர் காய்ச்சல் தான்..

மரா said...

@ சைவகொத்துப்பரோட்டா
ஆமாங்க.

மரா said...

@ கிருஷ்ணமூர்த்தி
பகுத்தறிவுங்கிறதெல்லாம் பெரிய வார்த்தை...அதையெல்லாம் மானமிகு விளக்கெண்ணெய்கள் காப்பிரைட் வாங்கி வச்சுருக்காங்கெ..நானு உண்மைத்தமிழன் கோஷ்டி....முருகனுக்கு அரோகரா.....

மரா said...

@ துபாய் ராஜா
தங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி. இந்த கதையில் உங்க பங்கு முக்கியமானது.நன்றி.

மரா said...

@ பனித்துளி சங்கர்
அதான் வந்துருச்சேண்ணே நாகராஜ்க்கு.. :)

மரா said...

@ நிலாமதி
அடுத்த கதைக்கு பயன்படுத்திக்கிறேன் அந்த தலைப்பை..நன்றி தங்கள் வருகைக்கு.

Paleo God said...

அதானே சேச்சியா கொக்கா??

--

ஆமா அந்த சர்பத் கட குரோம்பேட்டையா? இடிக்கிதே..:)

ஈ பாலக்காட்டு மயில் ராவணன் நன்னாயிட்டுண்டு..:)

Paleo God said...

குடக்கடைல் காய்ச்சல் ..

பேரு, அசலாய்ட்டுண்டு.

:)

மரா said...

@ ஷங்கர்
வரி சேட்டன்.எந்த பரிவாடி?

Thenammai Lakshmanan said...

எதார்த்தம்தான் இருந்தாலும் உண்மையான அன்புக்கு மதிப்பு இல்லையோ மயில்

துபாய் ராஜா said...

//துபாய் ராஜா
தங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி. இந்த கதையில் உங்க பங்கு முக்கியமானது.நன்றி.//

ஏன் ரெஞ்சு சேச்சி ஓர்மையில எழுதுன கதையோ... :))