Friday, April 23, 2010

மரணம்

இது ஒரு வழிப்பயணம்
தாயின் கருவறையிலிருந்து பூமித்
தாயின்   கருவரை. இது
ஒரு வழி பயணம்!

கைப்பேசி, கணினி
இனி இவன் அறியான் !
பங்குசந்தை, பணவீக்கம்
இனி இவன் கவனியான் !

கனவுகளும் கற்பனைகளும் 
இனி இவன் காணான்!
வாசனைகளையும், வண்ணங்களையும் 
இனி இவன் பிரித்தறியான்!

ஊன் கொடுத்தவரையும், உயிர் கொடுத்தவரையும் 
இனி இவன் பாரான் ;
உறவுகளும் உற்றாரும் 
இனி இவன் எட்டான்; 

பிள்ளையும் பெண்டிரும்
நண்பர்களும்,நலம் விரும்பிகளும்!
யாரோ என்றே 
இவன் இருப்பான் !

மீளா துயலில்.
மிஞ்சிய வாழ்க்கை 
மட்டும். ஒரு 
வழிப்பயனமே!
                                                   - அருள் 

டிஸ்கி :
           என் யூசர் ஐடி, பாஸ்வர்ட்   எல்லாம் காணாமப்போயி 2 மணி நேரம் ஆச்சு!

15 comments:

VISA said...

enna aachu???

King Viswa said...

//என் யூசர் ஐடி, பாஸ்வர்ட் எல்லாம் காணாமப்போயி 2 மணி நேரம் ஆச்சு//

நான்கூட என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன். ஆனாலும்கூட இதுவும் ஒருவகை மரணமே. சமீபத்தில் மும்பையில் ஒருவர் தன்னுடைய உயிலில் தன்னுடைய மெயில், யூசர்நேம், பாஸ்வர்ட் போன்றவற்றை எல்லாம் தன்னுடைய மரணத்திற்கு பிறகு யார் யூஸ் செய்யவேண்டும் என்றே எழுதி இருந்தார். அந்த கண்ணோட்டத்தில் இது சரிதான்.

Chitra said...

கனவுகளும் கற்பனைகளும்
இனி இவன் காணான்!
வாசனைகளையும், வண்ணங்களையும்
இனி இவன் பிரித்தறியான்!


..... நல்லா எழுதி இருக்கீங்க.
user id, password ..... ????

Paleo God said...

ஓஷோ குப்புடு!

சலோமியா!!

:))

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

நல்லதொரு கவிதை.

யுவா said...

இந்த நண்பனுங்க தொல்ல தாங்க முடியலப்பா... இருந்தாலும் நல்லாருக்கு.

கருந்தேள் கண்ணாயிரம் said...

//சமீபத்தில் மும்பையில் ஒருவர் தன்னுடைய உயிலில் தன்னுடைய மெயில், யூசர்நேம், பாஸ்வர்ட் போன்றவற்றை எல்லாம் தன்னுடைய மரணத்திற்கு பிறகு யார் யூஸ் செய்யவேண்டும் என்றே எழுதி இருந்தார்//

இது நன்றாக இருக்கிறதே. ஆனால் இதில் ஒரே ஒரு சிக்கல் மட்டும் தான். நம் யூசர் ஐடியில் போய் பார்ப்பவர்கள், நாம் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் கில்மா மெயில்களைப் பார்த்து பயந்துபோய், இறந்தவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டுவிட்டாரேயானால், செத்தப்புறமும் மானம் போய் விடுமே .. . ஹி ஹி . . .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nallaa irukku

க.பாலாசி said...

நல்ல கவிதைங்க...

King Viswa said...

//இது நன்றாக இருக்கிறதே. ஆனால் இதில் ஒரே ஒரு சிக்கல் மட்டும் தான். நம் யூசர் ஐடியில் போய் பார்ப்பவர்கள், நாம் டவுன்லோட் செய்து வைத்திருக்கும் கில்மா மெயில்களைப் பார்த்து பயந்துபோய், இறந்தவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டுவிட்டாரேயானால், செத்தப்புறமும் மானம் போய் விடுமே .. . ஹி ஹி .//

தந்தை, மகனுக்கோ/மகளுக்கோ மெயில் பற்றிய உயில் எழுதினர். அதனால் அவர் அந்த கில்மா போன்றவைகளை கண்டிப்பாக டிலீட் செய்திருப்பார்.

மரா said...

@ visa
நண்பர் கவிதை போடனும்னார். அதான் கொடுத்தேன்.

மரா said...

@ கிங் விஸ்வா
ஆமாம் நானும் கேள்விப்பட்டேன்.

மரா said...

@ சித்ரா
நன்றி.

@ ஷங்கர்
பட ஷுட்டிங்லாம் எப்படி போகுது?

மரா said...

@ கனவுகளின் காதலன்
@ கருந்தேள் கண்ணாயிரம்
@ யுவா
@ ரமேஷ்
@ க.பாலாசி
நன்றி

அம்பாளடியாள் said...

உண்மையின் தரிசனம் அழகிய கவிதை உருவில் .
வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளம்பெற.
நன்றி பகிர்வுக்கு.