Saturday, January 23, 2010

Animals Are Beautiful People இயற்கை நேசி..

                                                                            -மயில்ராவணன்
மனுசப் பயலுங்களே இல்லாத படம் சொல்லுங்க காம்ரேட்னு நண்பர் கோகுல்கிட்ட சொன்னேன். கொஞ்சம் யோசித்துவிட்டு ‘Animals are beautiful people' பாருங்கன்னு dvd குடுத்தாரு. தென்மேற்கு ஆப்பிரிக்கப் பாலைவனமான Red Namib Desert பற்றியது. 


ஒரு பெரிய பாலைவனம்.எங்கும் பெரும் மணற்குன்றுகள்.மிகப் பழமையானதும்,வறண்டதுமான சுமார் 50,000 * 2 மைல்கள் வெறும் மணல் மற்றும் மணல் மட்டுமே.ஆனால் இப்படிப்பட்ட இடங்களிலும் வாழும் உயிரினங்கள் பற்றிய படமே இது.சிறிய வண்டுகள்,எறும்பு வகைகள் என படத்தின் ஒவ்வொரு காட்சியும் அப்பிடியே கன்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கும். ஒரே இடம்,அவ்விடத்தில் வசிக்கும் விலங்குகள் ஆனால்  கோடைகாலம், முன்பனிக்காலம், குளிர்காலம், கார்காலம் இப்படி வெவ்வேறு காலங்களில் எப்படி வசிக்கின்றன, என்னவெல்லாம் செய்கின்றன போன்றவனவற்றை அழகாக படம்பிடித்திருக்கின்றனர்.


படத்தை எல்லாரும் பாருங்க...the piratebay ல இருக்குன்னு சொன்னாப்ல. எனக்குப் பிடிச்ச சில பல காட்சிகளை மட்டும் வரிசையாச் சொல்றேன்.


மணல்பாம்பு தன்னை மணலில் புதைத்துக் கொண்டு வாலை மட்டும் வெளியே தெரியும்படி ஆட்டும்.இதைப் பார்த்த எறும்புகள் புல்லென நினைத்து அருகில் ஓட, அவற்றை சாப்பிட வரும் பல்லிகள்தான் பாவம் பாம்பிற்கு இறையாகின்றன.


ஒரு வண்டு போன்ற உயிரினம் (எண்ணிக்கையில ரொம்பக் குறைவாம்) எப்பப்பார்த்தாலும் புட்டத்தை(டிக்கியை) ஆட்டி சத்தம் எழுப்பிக்கிட்டே இருக்கு..என்ன காரணமுன்னா அவர்கள் வகையறா யாராச்சும் இருந்தா ‘அதுக்கு’ கூப்பிடுதாம்...இன்னும் ஒரு வகை இனப்பெருக்கம் கூட ஓடிக்கிட்டேதான் செய்யுது.மணல் சுடுமாம்....என்ன டெக்னிக்கு!
  
பன்றி போன்ற இன்னொருத்தரு கண்ணாலத்துக்கு முன்னாடி வீட்டை சுத்தம் செய்து ரெடி பண்றாரு.ஆனா என்னக் கொடுமையின்னா தங்கமணி வீட்டுக்கு வந்ததுலேருந்தே வீட்டைக் கலைக்குற வேலயத்தான் பாக்குறாப்ள.



நெருப்புக்கோழிப் பொழப்புதான் கஷ்டம்.பெண்ணினத்தைக் கவருவதற்கு பிரபுதேவா கணக்கா வளைஞ்சு வளைங்சு ஆடுறாப்ள. அப்புறம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சு முட்டைப் போட்டு அடை காக்குறதுக்குள்ள தாவு தீந்துபோவுது.மலைசாதி மக்கள் ஒருபக்கம் மெதுவாக வந்து முட்டையை தூக்கிட்டுப் போக முயல்கிறார்கள்.விரட்டுகிறது. குரங்குகளும் முட்டையத் தின்ன வருகின்றன விரட்டுகிறது. ஆண் பெண் என்ற வித்தியாசம் கிடையாது முட்டையைப் பாதுகாப்பதில்.யார் வேலையின்றி இருக்கிறார்களோ அவர்கள் முட்டையப் பாதுகாக்கவேண்டும்.


படத்தில் Grey Pied Hornbill என்றொரு வகைப் பறவையக் காண்பிப்பர்.எவ்வளவு பொறுப்புள்ள பறவை.தங்கமணி முட்டைகளை அடை காக்கிறதுக்கு தனியாக ஒரு உயர்ந்த மரத்தில் பொந்து அமைத்து,மண் எடுத்து வந்து, எச்சில் துப்பி துப்பி,குழைத்து ஒரே ஒரு ஓட்டை மட்டும் விட்டுவிட்டு முழுவதுமாக பூசி விடும்.’maternity leave' ல ஆணியேப் புடுங்க வேண்டாம்னு சொல்லி, ஆண்பறவை ஓவர்டைம் ட்யூட்டி பார்த்து பறந்து, பறந்து உணவு கொண்டுவரும். முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள் சிறிது காலம் கழித்து கூட்டைவிட்டு வெளியே வந்து விடும். இந்தக் காட்சிகள் அனைத்தும் படத்தில் மெய்சிலிர்க்க வைக்கும்.


இதேபோல் ஒரு குருவி commit ஆன தங்கமணிக்காக மெனக்கெட்டு வீடு கட்டும்..ஆனா அந்தப் பெண்பறவை தரம் பார்க்கிறேன் பேர்வழின்னு (கஷ்டப்பட்டு code அடிச்சா ’கருந்தேள்’ மாதிரி ஆட்கள் Q.C ன்னு சொல்லி ‘bug' போடுறமாதிரி!!) இப்படி அப்படித் தொங்கி சிலநேரம் கூட்டப் பிச்சுப்புடும்.பாவம் ஆண்பறவை பர்ஸ்ட்லேர்ந்து தொடங்கும்.  மான்கள் இனத்திலேயே அழகான oryx இங்கு அதிகம், புலிகள், சிங்கங்கள், யானைகள், விதவிதமானப் பறவைகள், தாவர வகைகள் என படத்தில் வரும் அனைத்துமே ரொம்ப அருமையான இயற்கைக் கொடைகள்.

  
இங்கு வாழக்கூடிய ஒரே மக்களினம் கலகரிப் பகுடியில் உள்ள சிலரே.தலையைக் கீழே வைக்காமல் இவர்கள் தூங்கும் அழகே தனி.கிழவர்கள் சிறு குழந்தைகளுக்கு செய்கையின் ஊடாகவும், சத்தங்கள் எழுப்பியும் வனவிலங்குகள் பற்றி போதிக்கும் காட்சி அடடா..



அதேபோல் இவர்கள் வேட்டைக்கு செல்லும்போதெல்லாம் ஒரு பறவை சத்தம் எழுப்பி விலங்குகளை உழார் படுத்திக் கொண்டே இருக்கும்.மேலும் தண்ணீர் தாகம் அதிகமாகி அவன் எப்படி குரங்கின் மூலம் நீர்நிலையை அறிகிறான் போன்ற காட்சிகள் சிரிக்க மர்றும் சிந்திக்க வைப்பவை.


 1974 ல் வெளியான இப்படத்தின் டிரைலர் கிடைக்கவில்லை.
                                                                             உங்களுக்காக இங்கே
 வழமை போல் இப்படத்தின் மேலதிக விவரங்கட்கு இங்கே
  
டிஸ்கி:
என்னதான் நாமெல்லாம் இணையம்,நானோ டெக்னாலஜி அது இதுவென எவ்வளவோக் கண்டுபிடித்தாலும், பயன்படுத்தினாலும் இம்மாதிரியான படங்களைப் பார்த்தால் புரியும்- கடவுள்தான் ஒரு அற்புதமான கிரியேட்டர்,இயற்கைதான் அவருடைய ஆகச்சிறந்தக் கண்டுபிடிப்பு என்று.இப்படத்தின் இயக்குனர் நாமெல்லோரும் ரசித்துப் பார்த்த ‘Gods Must Be Crazy' எடுத்த Jamie Uys.

20 comments:

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

சிறப்பான பதிவு. மனிதர்களைப் பார்த்தால் கடவுளின் கிரியேட்டிவிட்டியில் சந்தேகம் வருகிறதே :)

Paleo God said...

கலக்கல் மயில்..காட் மஸ்ட் பி க்ரேஸி பார்த்து மிரண்டு போயிருக்கேன்..இந்த படம் பார்க்கணம்..மிக்க நன்றி பகிர்வுக்கு..:))

மரா said...

@கனவுகளின் காதலன்

வருகைக்கு நன்றி.கடவுளே யோசிப்பாரு இவிங்கள ஏன் படைச்சோம்முனு..:)

மரா said...

@ பலா பட்டறை
அவசியம் பாருங்க குழ்ந்தைகளோடு.லிங்க் மெயில்ல தாட்டி உடுறேன்..நன்றி

அண்ணாமலையான் said...

மிக அழகான பதிவு.. மிருகங்கள் மனிதர்களை பாத்துதான் அதிகம் பயப்படுகிறது. நம்மை பற்றி ஏதும் தெரியாத மிருகங்களை பற்றி நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்?

மீன்துள்ளியான் said...

good post...link mail pannunga

மரா said...

@ அண்ணாமலையான்
சரியாகச் சொன்னீர்கள் பாஸ்.நன்றி.

@ மீன்துள்ளி
வாங்க..செந்திலுக்கு ஒரு torrent பார்செல். :)

கருந்தேள் கண்ணாயிரம் said...

//கஷ்டப்பட்டு code அடிச்சா ’கருந்தேள்’ மாதிரி ஆட்கள் Q.C ன்னு சொல்லி ‘bug' போடுறமாதிரி!!//

அடப்பாவிகளா . .கடசில நாந்தேன் மாட்டுனனா . . :) நம்ம வேலை டெஸ்டிங் இல்ல தலைவா . .தரக்கட்டுப்பாடு . . :-) எனிவே .. இப்பல்லாம் குத்தம் கண்டுபிடிச்சி வாழுறது தான் பாஸு வாழ்க்க . . ஹீ ஹீ . . விமரிசனம் டாப்பு . .காதலரை நான் ஆமோதிக்கிறேன் . .மனிதர்களைப் பார்த்தால் கடவுளின் கிரியேட்டிவிடியில் சந்தேகம் தான் வருகிறது . . :-) இந்தப் படத்த பார்த்தே தீருவேன் . . எதுக்கு இல்லேன்னாலும், பென்பாலக் கவர்ரதுக்கு நெறைய ஐடியா கிடைக்கும் போலயே . . ஹீ ஹீ ஹீ . . .

shortfilmindia.com said...

ஒழுங்கு மரியாதையா டிவிடியையெல்லாம் நம்ம கையில் கொடுக்கிறது.. சொல்லில்புட்டேன்

கேபிள் சங்கர்

மரா said...

@ கேபிள் சங்கர்
கண்டிப்பா கொண்டாந்து குடுக்குறேன்..ரீட்டாவக் கேட்டதாகச் சொல்லவும்.:)

இயற்கை நேசி|Oruni said...

good one. keep posting.

மரா said...

@ இயற்கை நேசி
வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி.

மரா said...

@ கருந்தேள்
//பென்பாலக் கவர்ரதுக்கு நெறைய ஐடியா கிடைக்கும் போலயே//

அண்ணே நீங்க ராமர்னு யாரோ சொன்னாய்ங்க....’காதல் பிசாசே’னு பாடிக்கிட்டே பைக்ல போனதப் பாத்ததா 'Buyukkokten' சொன்னாரு..பயபுள்ள பொய் சொல்லிருப்பான் போல..

மகா said...

I really like this movie review.....

மரா said...

@ மகா
நீங்க வருவீங்கன்னு என் உள்மனசு சொன்னுச்சு. வந்துட்டீங்க.நன்றி.

பாலா said...

//இப்படத்தின் இயக்குனர் நாமெல்லோரும் ரசித்துப் பார்த்த ‘Gods Must Be Crazy' எடுத்த Jamie Uys.///

இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்திருக்கீங்களா? நான் மூணு பாகமும் பார்த்தேன். கொஞ்சம் கூட சிரிக்க முடியலை.

ரசனை மாற்றம் எத்தனை வேகமா நடக்குது! :(

--

மனிதர்களே இல்லாத படம்னு சொல்லிட்டு, அப்புறம் ஆதிவாசிகள் வர்றாங்கன்னு சொல்லுறீங்க! :) :)

மரா said...

@ ஹாலிவுட் பாலா
நான் ‘Gods Must Be Crazy' 3 பாகமும் பார்த்து 10 வருசத்துக்கு மேலே இருக்கும். 1 பாகம் பெஸ்ட், 2 ம் பாகம் பெட்டர், 3 மொக்கை..

ஆதிவாசிகள் நல்லவங்கெண்ணே..நன்றி வருகைக்கு.

kailash,hyderabad said...

நல்ல அறிமுகம்.

மரா said...

@ கைலாஷ்
நன்றி கைலாஷ்.அடிக்கடி வாங்க...:)

நெய்வேலி பாரதிக்குமார் said...

அட நீங்களும் ஒரு பாலைவனத்தில் பயணித்திருக்கிறீர்கள் போலிருக்கே நல்ல படத்தை அறிமுகம் செய்தீர்கள் உங்கள் வழக்கமான கிண்டலும் கேலியுடன் சூப்பர் மரா